தீவிரவாதத்துக்கு அர்த்தமே இன்னும் நமக்கு விளங்க மாட்டேங்குது. ஒரு குக் கிராமதுல ரெட்டை ஜடை போட்டு இருக்கிற ஒரு 16 வயசு புள்ள பண்றது கூட தீவிரவாதம்னு அந்த பொண்ணை டாவடிக்கிற பையன் சொல்லும்போது இதுக்கெல்லாம் அர்த்தம் கண்டுபுடிக்க முடியாது.
இப்போ 2 நாளைக்கு முன்னாடி உலகமே ஹீத்ரோ விமானநிலையத்தைத்தான் தொலைக்காட்சியில பார்த்துகிட்டு இருந்துச்சு. ஏன்? எதுக்கு ? எப்படி? அப்படிங்கிற விஷயமெல்லாம் நமக்கு வேணாம். அப்போ செயப்பாட்டுவினை பார்ப்போமா? நம்ம ஊர்ல வெக்கிற செய்வினைக்கும் இதுக்கும் பெரிசா வித்தியாசமில்லை.
லண்டன் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களை திரவ வெடி பொருட்களைக் கொண்டு தகர்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியை தாம் கண்டு பிடித்துள்ளதாக லண்டன் காவல்துரை(ற) தெரிவித்துள்ளனர். அதேசமயம் திரவ வெடிபொருட்கள் என்னான்னு தெரிஞ்சிக்கலாமா?
ஒரு விமானத்தில் வெடிக்கும் உபகரணத்தினை கடத்தி செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு திரவ வடிவிலான வெடிகுண்டு ஒரு சரியான மாற்று வழியாகும்.
திரவ வடிவிலான வெடிகுண்டினை சுலபமாக மறைச்சுடலாம். பிளாஸ்டிக் வெடிப்பொருட்களை தேடுவதற்கு பயன்படும் மிக உயர் நுட்பம் கொண்ட இயந்திரத்தினால் கூட இவற்றை கண்டு பிடிக்க முடியாமல் போகலாம்.(இன்னும் தெளிவாகாத விஷயம் இது)
நன்கு தெரிந்த திரவ வடிவிலான எரிபொருள் என்றால், அது நைட்ரோகிளிசரின் ஆகும்.(இதப்பத்தி என்கிட்ட என்னான்னு கேட்காதீங்க, என்னோட வேதியியல் ஆசிரியர்க்கு எனக்கும் எப்பவுமே ஆவாது) இது ஒரு சிறு நகர்விலும் வெடிக்க கூடிய நிறமற்ற திரவம்'ன்னு சொல்லிக்கிறாங்க.
நிறமற்ற தன்மையினால், விமானங்களை அழிக்க வேண்டும் என்று நினைப்பவங்களுக்கு இது ஒரு சுலபமான் வழியா தெரிநஞ்சாலும், வெடிகுச்சிகள் இல்லாமல் இவை வெடிக்காது என அறிவியல் பெரியசாமிங்க சொல்றாங்க.
உண்மையில், பெரும்பாலான திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க, வெப்பம் அல்லது மின்சார உந்துதல் வேணும். அதனால திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க காமிராக்களில் இருக்கும் ஃபிளாஷ் அல்லது பேட்டரியினால் இயங்கும் உபகரணம் தேவை.
சாதாரண வீட்டில் பயன்படும் பெரும்பாலான பொருட்களில், உதாரணமாக நகப் பூச்சினை எடுக்க பயன்படும் திரவம், கேசத்திற்கு நிறம் கொடுக்கும் திரவங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை கொண்டு கூட திரவ வெடிப்பொருளினை உருவாக்கலாம்.
ஆனால் இதில் கடினமான் விஷயம் என்னென்னா, இவற்றினை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஏழாம் ஆம் திகதி தாக்குதல் நடத்திய குண்டுத்தாரிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரைஅசிடோன் ட்ரைபெராக்சைட் என்ற வெடிப்பொருளினை பயன்படுத்தியதாக லண்டனில் இருக்கும் காவல்துறையினர் நம்புகின்றனர்.
இந்த வெடிப்பொருளை கூட திரவ வடிவில் தயாரிக்க முடியும். ஆனால் சரியான விகிதத்தில் கலவையினை உருவாக்குவதற்கு நிபுணத்துவம் தேவை. இந்த பொருட்களை கொண்டு, வெடிப்பொருட்களை உருவாக்க முயலும் அனுபவம் அற்றவர்கள், பெரும்பாலும் வெடிக்குண்டு தயாரிக்கும் போது பொருட்கள் வெடித்து கொல்லப்படுகின்றனர்.
இது போன்று வெடிப்பொருளாக செயற்பட கூடிய மேலும் பல திரவங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நைட்ரோமீதேன் – இது மாதிரி விமானங்களில் எரிபொருளாக பயன்படுகின்றது. இது தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது.
அதே போன்று நைட்ரோ ஈதேன் மற்றும் மீதேல் நைட்ரேட்டும் இருக்கின்றது.
இந்த இரசாயன பொருட்களை பெறுவதற்கு கடினம் அல்ல, ஆனால் இவற்றை வெடிக்க வைக்க கூடிய சரியான பொருளினை கண்டுபிடிப்பதற்கு, அறிவும், அனுபவமும் தேவை.
முக்கியமாக, திரவப் வெடிப்பொருட்களால் மிகுந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாராவதில்லை. ஆனால் விமானங்கள் என்று பார்த்தால், சக்தி வாய்ந்த குண்டுகள் தேவை இல்லை. ஏனென்றால் சிறிய வெடித்தாக்குதல் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த வல்லது.
காற்றழுத்தம் செய்யப்பட்ட விமானத்தின் அறைகள், வானில் உயரமாகவும், வேகமாகவும் பறக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் போன்றவை, ஒரு சிறிய வெடித்தாக்குதலின் பாதிப்பினை கூட பூதாகரமாக்கும், அதன் விளைவாக விமானம் முற்றாக நாசம் அடையும்.
நன்றி பிபிசி:
நம்ம திரவ தீவிரவாதிய உள்ளே போட்டாதான், நாம சரியாவோம், அட தேனீரை சொல்றேங்க.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
நல்ல தகவல், அழகான தமிழில் தந்துள்ள இளா வுக்கு ஒரு "ஓ"
ReplyDelete:-)
கெட்டது செய்யறதுக்கும் மக்களைக் கஷ்டப் படுத்தறதுக்கும் எப்பவுமே ஒரு கும்பல் இருந்துக்குட்டு தான் இருக்குதுங்க. இதுக்கெல்லாம் தீர்வே இல்லயான்னு சில சமயம் ஏக்கமா கூட இருக்குங்க. மனுசனை மனுசன் அழிக்க இருக்குற ஆயுதம் எல்லாம் போதாதுன்னு இப்ப திரவ குண்டு வேற வந்துடுச்சாக்கும். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?
ReplyDeleteநன்மனம்: ஏதாவது புதுசா வந்துச்சுன்னா கத்துக்கனும் அப்படிங்கிறது நம்ம கொள்கை, அதான். புதுத்தகவல். இத எழுதும்போதுகூட யோசிச்சேன்.. ஏதாவது முத்திரை குத்திருவாங்களேன்னு. நல்ல வேளை அப்படி ஒன்னும் நடக்கல.
ReplyDeleteகாலத்திற்கேற்ற தகவல். அப்பாவி மக்களை பணயம் வைத்து ஆடும் இந்த ஆட்டம்தான் என்று முடியுமோ ?
ReplyDeleteதிரவ தீவிரவாதம் அப்படின்னு டைட்டில் பாத்து அழுது சாதிக்கிற அம்மணிங்க பத்திப் பேசற மீட்டிங்குன்னு நினைச்சு வந்த இப்படி சீரியஸா குண்டு வைக்க சொல்லித் தரயேப்பூ.
ReplyDeleteஉலகத்துலயே மிகப்பெரிய தீவிரவாதம் அதுதான். கத்தியின்றி, ரத்தமின்றி உயிரு போயிரும்ல
ReplyDeleteநல்ல தகவல்கள் இளா.
ReplyDeleteபுதுசா அவிங்களும் கண்டு பிடிச்சுகிட்டு தான் இருக்கானுங்க.
அதை தடுக்க நாமுலும் புதுசு புதுசா யோசிக்க வேண்டியது இருக்கு.
ஹும் என்னத்த பண்ண.
என்று தான் ஒழியுமோ இந்த பயங்கரவாதம்.
தீவிரவாதி என்பது சரியான சொல் இல்லை என்பது என் கருத்து. தன் கருத்தில், செயலில் தீவிரமாக இருப்பவனை தான் அந்த வார்த்தை குறிக்கும்.
காலத்திகேற்ற பதிவு இளா.
ReplyDeleteநல்ல தகவல் உள்ள பதிவு.
ReplyDeleteஇப்படியெல்லாம் வேற இருக்கா!
ReplyDeleteநல்ல தகவல்.
நன்றி
அன்புடன்
தம்பி
அருமையான தகவல்...விவசாயிக்குள்ள இப்படி ஒரு அறிவாளியானு அசந்து போய்டேன், நன்றி பிபிசி பார்த்தப்புறம் தான் நிம்மதி வந்தது...திரவ தீவிரவாதி சூப்பர்...
ReplyDelete