Sunday, December 9, 2012

நவக்கிரகம் சுத்துறப்ப நீங்க என்ன பண்றீங்க?

  • மது அருந்தத் தொடங்கினாள் அவள், போதையேறத் தொடங்கியது, மதுவுக்கு 
  • சனிக்கிழமை ஆனாவே பகீருங்குது. வீட்டைச் சுத்தப்படுத்தனும், கழுவனும், துடைக்கனும் #புருசலட்சணம்


  • அந்த பத்திரிக்கை எனக்கு சம்பளம் எல்லாம் தரலை. ஆனா வாழ்க்கையைவே தந்துச்சு. அதான்பா கல்யாணப்பத்திரிக்கை

  • ராத்திரி அடிச்ச ’ரம்’மிடம் தோற்றுவிடுகிறது, காலையில் அடிக்கும் அலா’ரம்’

  • எனக்கெல்லாம் சிம்பொனியாக இருந்தது, தெருமுக்கு ஆர்கெஸ்ட்ராக்கள்தான்

  • நம்மையெல்லாம் மகிழ்வித்திருந்த ஆர்கெஸ்ட்ரா என்னும் மிகப்பெரும் கலை, கம்ப்யூட்டர் இசை(?!) வந்தபிறகே அழியத்தொடங்கியது

  • கள் இரு நேரங்களில் மிகவும் அழகாகயிருக்கிறார்கள். 1. ஒன்று கட்டும்போது. 2. கேட்கும்போது #சாரி

  • பேங்கைத்தவிர மற்ற எல்லாயிடத்திலும் அக்கவுண்ட் வைத்திருப்பவனை இந்த உலகம் மதிப்பதேயில்லை

  • இந்தியாவின் தற்போதைய மிகப்பெரிய சவால், தீவிரவாதமோ, ஊழலோ இல்லை. Its, Just Twitter and Facebook.

  • மாப்பிள்ளைக்கு Twitter & FB A/C இருக்காம். எதுக்கு பொண்ணைக் குடுத்து ரிஸ்க் எடுக்கனும். மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க

  • நவக்கிரகம் சுத்துறப்ப எல்லாம், சுத்துக் கணக்கைத்தான் எண்ணிட்டிருக்கேன். கும்புடுறதே மறந்துடுது. 1..2...3...4..

Saturday, December 8, 2012

யார் யாரெல்லாம் பரதேசி?




  • உலகத்துலியே பாதுகாப்பில்லாத ஒரே இடம் - இணையம்தான்
  • ”மாப்பிள்ளை, என் மகளோட சண்டை. கொஞ்சம் பேசி சமாதானப்படுத்துங்களேன். பேசனும் போலிருக்கு” எனும் மாமனார்- மருமகன் உறவு Blessed
  • இந்தியாவின் மிகப்பெரிய தூக்குத் தண்டனை கைதி IRCTC. தினமும் தொங்குகிறது.
  • நாம் விரும்பும் இரவுப்பொழுதையெல்லாம் உறங்கியே கழித்துவிடுகிறோம். அப்புறம், விரும்பி என்ன பிரயோஜனம்?
  • ஆமாம், அவள் வெட்டுக்கிளிதான். பார்ப்பவர்களின் மனங்களை எல்லாம் வெட்டி வெட்டி செல்வதால்
  • பரதேசிகள் என்றால் கூட்டமாக இன்னொரு ஊருக்குப் போய் தேயிலை பறிப்பார்கள் என்றில்லை. அமெரிக்காவிலோ, துபாயிலோ கூட இருக்கலாம்
  • என்முன் அவள். வேகமாக வீசத்தொடங்கியது காற்று. விலகத்தொடங்கியது..... என் கண்ணியம்
  • குழந்தைகள் எல்லாம் “இப்ப” ராமசாமிகளாகவே இருக்கிறார்கள். அப்புறம் என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. #இப்பவே வேணும், இப்பவே வேணும்
  • பரதேசி என்றால் ஊர் விட்டு பிழைப்பு தேடி பரதேசம் போகக்கூடியவர்கள் #அப்ப நானும் ஒரு வகையில பரதேசிதான்

Friday, December 7, 2012

அழகான பெண்ணுக்கு மேக்கப் தேவையா?



  • இத்தனை இன்வெர்ட்டர் பேட்டரிகளையும் Re-Cycle செய்யும் வசதி இருக்கிறதாயென யோசனை செய்யாத நாம்தான் சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கிறோமா?



  • வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டைப் பத்தி புதுசா கருத்துச் சொல்றதா நெனச்சுகிட்டு சொல்றது நேரங்களில் பழசாவே இருக்கு #அனுபவம்



  • குடும்பத்தலைவியாக உணர வைப்பது.. கணவன், குழந்தைகள், குடும்பம்னு நினைச்சா.. அது தப்பு ... அது பொம்மீஸ் நைட்டிகள்



  • ஆண்களே,பெண்கள் மாராப்பைச் சரி செய்யும்போது அவர்களது கண்களை கவனியுங்கள். அப்ப அவுங்க உங்க கண்களைத்தான் நோட்டம் விட்டுட்டு இருப்பாங்க



  • அழகாயிருக்கிற பொண்ணுங்களுக்கு மேக்கப் தேவையில்லை, அழகில்லாத பொண்ணுங்களுக்கு மேக்கப் போட்டாலும் தேறப்போறதில்லை - 1989ல் விவேக்



  • அட்ஜீஸ் பண்ணிக்கோ சார். - இது ஆட்டோக்காரர் சொன்னா மட்டும் கோவம் வருது. ஆனாலும் வாழ்க்கை முழுக்க அதைத்தான் பண்ணிட்டிருக்கோம்




  • இப்போதெல்லாம் ராமன்களை எந்தப் பெண்ணும் காதலிப்பது இல்லை #பழம்டீ அவன்


Thursday, December 6, 2012

லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் என்ன?


  • தொப்பை வளர்வதற்கு முன்னாடியே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் லட்சியமாக இருக்கிறது.




  • வாழ்க்கையின் லட்சியமென்ன? கல்யாணத்திற்கு முன் பட்டியல் பெருசா இருந்துச்சு. கல்யாணத்துக்குப்பின், இந்தக் கேள்விக்கு பதில் தெரியல




  • ஒரு காலத்துல விமர்சனம் படிக்க அலைவோம். இப்போ படத்தைப் பார்த்துட்டு விமர்சனத்தை Blog, Twitter, Facebookல போட அலைபாயறோம்



  • அம்மா இந்த ஆட்சியில் மக்களுக்கு அருளியிருக்கும் வரம் "சகிப்புத்தன்மை"



  • அதட்டலாக சொல்லிவிட்டேன் "நான் உனக்கு அடங்கித்தாண்டி போவேன், உன்னாலானதைப்பார்த்துக்கோ" அடங்கிப்போய்விட்டாள் பாவம் #இல்லறம்



  • அண்ணி கொண்டு வந்த வரதட்சனையை வெச்சி கடை ஆரம்பிச்சான் என் அண்ணன். அதான் அண்ணிய முதலீடு.



  • லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கொள்ளையடிச்சா தண்டனை கிடைக்கும், லஞ்சத்துக்கு கிடைக்கவே கிடக்காது

Wednesday, December 5, 2012

போவோமா ஊர்கோலம் Prelude -IR

சின்னத்தம்பி” படத்தில், வெளியுலகையே பார்த்திராத கதாநாயகி முதல்முதலாக நாயகனுடன் வெளியே வந்து சுற்றிப்பார்ப்பதுபோல ஒரு காட்சி. இந்தப் பாடலின் கம்போஸிங்கின்போது யாருமே உடனில்லை. ராஜா சார் மட்டும்தான் இருந்தார். நான் Situation சொல்லிமுடித்த அடுத்த நிமிடமே, உடனடியாக தனது ஆர்மோனியத்தில் பாடலின் மெட்டை வாசித்து, ஆர்மோனியத்திலேயே விரல்களால் தாளமும் போட்டுக்கொண்டு, ‘போவோமா ஊர்கோலம்…? என்று Lyric’ஆகவே ஆரம்பித்து’ முழு பாடலையும் Compose செய்து முடித்துவிட்டார். Recordingம் முடிந்தது. பின்னர் நான் பாடலை Picturise பண்ணிமுடித்தேன்.



கதாநாயகி முதன்முதலாக வெளியே வந்து பறவைகளைப் பார்ப்பதோ, சேற்றில் கால்வைப்பதோ… அவர் எனக்குக் கொடுத்த இசைக்கு நான் Shots எடுத்திருந்தேன் அவ்வளவுதான். பாடலைப் பார்த்தார்…!! ‘கதாநாயகி முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்..!! பறவைகளின் ஒலியுடன், Keyboard’ல் துவங்கி, புல்லாங்குழலுடன் பாடலின் Prelude பயணிக்கிறது. படமாக்கிக் கொண்டு சென்றிருந்த பாடலைப் பார்த்துவிட்டு…


 “இல்லை.. இவள் முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. அதற்கு இந்த Prelude  மட்டும் போதாது. இன்னும் கொஞ்சம் Extra’வாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்..!! நீ ஒரு 100 அடிக்கு ஏதாவது காட்சிகள் Add பண்றியா..?” என்றார்.

டனே நான் ப்ரசாத்தில் இருந்து, வாகினி ஸ்டுடியோவிற்குச் சென்று, இந்தப் பாடலின் நிறைய Shots’ஐ Edit பண்ணி ஒரு 80 அடிக்குக் காட்சிகளை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.





அப்படி நான் கொடுத்த காட்சிகளுக்கு அவர் ஒரு Violin Score எழுதி அமைத்துத்தந்தார். படத்தில், அந்த வயலின் இசை முடிந்து அதன்பின்னர் ’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude துவங்கும். பாடலின் முன்னர் வரும் அந்த வயலின் இசையுடன் அதைப் பார்த்தவுடன் எனக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.

- இயக்குனர் திரு. பி.வாசு அவர்கள் விஜய் டி.வி.யின் ”இதயம் தொட்ட இசைஞானி” நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது.

’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude’ஐயும், Prelude’க்கு முன்வரும் அந்த இசையையும் இதில் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கும் உடல் சிலிர்க்கும்.


Wednesday, October 17, 2012

33/365 "மின்"சாயம் வெளுத்துப்போச்சு

தமிழ்நாட்டுல மின்சாரம் இல்லையாம், அப்படியா?

சென்னை - இது தமிழ்நாட்டின் பால்கனி டிக்கெட். மீதியெல்லாம் தரை டிக்கெட் என்று வரையறுத்திருக்கிறது இந்த ஆட்சி. அதைவிடுங்க, ஈரோட்டு சூரம்பட்டிவலசு நால்ரோட்டுல நின்னு "ஏ! அமெரிக்க ஏகாதிபத்யமே" அப்படின்னு குரலுவுடற மாதிரி நானும் கொஞ்சம் ட்விட் போட்டேன். அதை அப்படியே இங்கே தொகுத்து தாரேன்




  • ஈரோட்டுக்காரனுக்கு கரண்ட்டே இல்லையாம், சென்னைக்காரனுக்கு ஏசி போடமுடியலைன்னு வருத்தமாம். ஜனநாயக நாடாயிது? 

  • சம்சாரம் அது மின்சாரம் - சம்சாரம் என்பது கடுப்படிக்கும் அப்படின்னு விசு சரியாத்தானே சொல்லிவெச்சாரு. 

  • பெட்ரோமேக்ஸ் லைட்டேத்தான் வேணுமான்னு கேட்கிறவங்களுக்கு "இருட்டுலயே எம்புட்டு நேரம்தான் இருக்கிறது?" #தநா #மின்சாரம் 

  • கேப்டன் அப்பவே பாட்டுப் பாடி வெச்சிட்டாரு "புன்னகையில் மின்சாரம்".. நாம சிரிச்சாலும் இந்தப் பெண்கள் சிரிக்கவே மாட்டேங்குறாங்கப்பா.. 

[இந்தப் பாட்டுக்கு நடனம் அமைச்சு சொன்ன போது என்ன நினைச்சிருப்பாரு நம்ம கேப்டன்னு நினைச்சிப்பாருங்க. இது நடனம் அமைச்சது யாராய் இருக்கும்?]

  • 2018 : மின்சாரம் - என்ற வார்த்தை கேட்டவுடன் ஷாக்கடித்துப்போனேன் நான். யாரது, பழையகாலத்தை நினைவூட்டுவது என..

  • வீட்டுல மின்சார தயாரிப்பது எப்படி? தெரியவேண்டுமா? எங்களிடம் வாங்க. ரூ. 19,999ல் ஒரு வார பயிற்சின்னு இன்னுமா ஆரம்பிக்கலை?

  • கருவறை இருட்டிலே உருவானோம், தமிழக இருட்டிலே வளர்ந்தோம், புதைகுழியின் இருட்டிலே அடங்குவோம். இதுக்கு நடுவுல எதுக்குடா மின்சாரம்?  

  • இயக்குனர்: தமிழ்நாட்டுல ஒரு ஊரு, 24 மணிநேரமும் மின்சாரம் இருக்கும். தயாரிப்பாளர்: செம கதை சார், மேலே சொல்லுங்க 

  • சென்னையிலிருக்கிறவனுக்கு மட்டும் என்ன ரெண்டாயிருக்கு? - இப்படித்தான் என் கிராமத்து நண்பன் கேட்டான் #மின்சாரம் 

  • ராஜீவ்மேனன் ஒரு தீர்க்கதரிசி, 1997லேயே "மின்சார கனவு" அப்படின்னு படம் எடுத்திருக்காரே.. 

Thursday, October 11, 2012

32/365 ராஜாவுமா காப்பியடிச்சார்?

ஒரு சமூக வலைதளத்துல இந்தப்படத்தை பகிர்ந்து "இது ரொம்ப தப்பு" , பெண் என்பவள் சிகரெட் பிடிப்பது தப்பு, கேவலம்,, அசிங்கம் அப்படின்னு எல்லாம் பேசிட்டு இருந்தாங்க.  உண்மைதான், புகைப்பழக்கம் என்பது தப்புதான். ஆனா அதைப்பத்தி அங்கே பேசலை.. பெண் சிகரெட் பிடிப்பதுதான் தப்பு அப்படிங்கிற மாதிரி பேச்சு இருந்துச்சு. பெண்கள் சூழ நிக்கும்போது ஆண்கள் சிகரெட் பிடிக்கிற மாதிரி  போஸ்டர் வந்தப்ப இதையே சொல்லியிருக்கலாமே?  என்ன மாதிரியான ஆணாதிக்க சமூகம் இது.

ஒவ்வொரு தெரு முக்குலையும் பொட்டி கடை வெச்சி ஆண்கள் பீடி, சிகரெட் குடிக்கலாம், ஆனா பெண்கள் குடிக்கக்கூடாது. பெண்கள் மது குடிச்சாலும் தப்பு. மதுவோ, புகையோ - எந்தப் பழக்கமிருந்தாலும் அந்தப் பெண்ணை ஆண்கள் பார்க்கும் பார்வை இருக்கே.. காமத்துலதான் முடியும். 

திருந்துங்க ஆண்களே.. கெட்ட பழக்கம், தப்புன்னு சொல்லுங்க. சரி. அது என்ன ஆண்களுக்கு மட்டும்தான் சிகரெட் பிடிக்கிறதுன்னு எழுதி வெச்சிருக்கா என்ன? தப்போ, சரியோ பெண்களை சரிசமமா நடத்துங்க..




டைம்பாஸ் விகடன்

விகடனின்  டைம்பாஸ் பற்றி சுரேஷ்கண்ணன் எழுதிய  பதிவு  பிடித்தது. அதுவும் இந்த வரிகள் நெத்தியடி


காந்தியை நினைவுப்படுத்தும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் தலையில் கொம்புடனும் இருக்கும் விகடன் தாத்தாவின் உருவத்தை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் கேலிச்சித்திரங்களில் உருவம் சிறிது சிறிதாக மாறி விபரீதமான அர்த்தத்தை தருவதைப் போன்று தாத்தாவின் தலையிருக்கும் கொம்பு நீண்டு 'டைம்பாஸ்' வடிவில் ஒரு சாத்தான் உருவமாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

டைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'


 ராஜாவுமா? 

ராஜாவுமா? அப்படின்னு கேள்வி கேட்க வெச்சது இந்த இசை. 20ம் நூற்றாண்டுல ஸ்பானியர்  Antonio Ruiz-Pipo - Danza No1. அப்படியே சுட்டிருக்காரு போல. இணையம் இல்லாததால, அந்தக் காலத்துல தெரியலை.. இன்னுமா தெரியாம இருக்கும்?




மின்சார கனவு
தமிழ்நாட்டுல(சென்னை தமிழ்நாடு இல்லையே, எப்பவுமே மத்த மாவட்டத்தை விட்டு தணிச்சுத்தானே இருக்கு) மின்சார நிறுத்தம் தொடர்பாக துணுக்குப் படம்








31/365 பண்ணையம் அக்-11

இந்தவாரம் வெளியான இன்னொரு டீசர்.. ஆமாங்க, போடா போடி, நீர்ப்பறவை, மற்றும் துப்பாக்கி.. 3 டீசர்கள் வெளிவந்துச்சு. அதுல செல்ஃப் எடுக்காம போன டீசர் இதுதான். மீது ரெண்டு அருமை. அதுவும் துப்பாக்கி டாப்-கிளாஸ் மாஸ் டீசர்


==00oo00==
போன வாரம் Ben & Jerry Icecream தயாரிக்கிற இடத்துக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம். அங்கே ஒரு படம் சிரிக்க வெச்சது. நமக்கு சங்கி மங்கி தெரியும், இது என்னமோ புதுசா சங்க்கி மங்க்கின்னு ஒரு Icecreamமாம்



==00oo00==
நான் விரும்பிய என்னுடைய ட்விட்டுகளில் சில
  • கலைஞர் சட்டையை மாத்தினார். இணையம் முழுக்கா அதே பேச்சு. Now you know who the Trend Setter is


  • ''அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல; இருவரும் தி.மு.க-தான்!'' #இந்த வசனம், ஃபெவிக்கால் விளம்பரத்துக்கா தலைவா?

  • நானெல்லாம் எதுவும் கலக்காமலே, தண்ணியை ஒரு ஆஃப் அளவுக்கு அடிக்கிறவன் #குடிக்காதவர்களின் பஞ்ச்


  • அதிமுகவுல சேர்ந்துட்டா, ஒரு முறையாவது.. ஒரு வாரமாவது அமைச்சாராகிடலாம்


  • அரசியல் இன்னும் முழுச்சாக்கடையாகவில்லை. நல்லகண்ணு, வை.கோ மாதிரி இன்னும் நல்ல தலைவர்கள், சிலர் இருக்கிறார்கள்

  • கெளதம் ஒரு படத்தைத்தான் காப்பியடிச்சாரு. ALவிஜய் எல்லாப் படமுமே அப்படித்தான் பண்றாரு. ஆனா மதிக்கவே மாட்டேங்குறாங்க


  •  வெளியாகும் பாதி குறும்படங்களில் சரக்கடிப்பதே முக்கிய நிகழ்வாக காட்டப்படுகிறது. அப்படி மாறிப்போச்சு நம்மோட சமுதாயம்.


  • பனியன் போட்டு, சட்டையை அதுக்கு மேல போட்டு "டக் இன்" பண்ணிட்டுப் போறதுக்கு எதுக்கு 6 பேக்? #முடியாதவன்பேச்சு


  • குவாட்டருக்கும், ட்விட்டருக்கு ஒரு நெருங்கிய சம்பந்தமுண்டு. ரெண்டுலேயும் உள்ளே இறங்கிட்டா உளறல் அதிகமா இருக்கும்


  • சோகமான தருணங்களில் தேநீர் அருந்துவது, கொஞ்சம் கொஞ்சமாய் கவலைகளைப் விழுங்கிக்கொண்டிருப்பதாய் தோன்ற வைக்கிறது.


  • இப்போதெல்லாம், சன் / கே டிவிக்களில் ஒளிபரப்பாகும் படங்களை பார்க்கவைப்பதில் இளையராஜாவே முக்கிய பங்குவகிக்கிறார்.



==00oo00== 

இந்த வாரம் நான்கு படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கு

  • ஆதிபகவன் - இயக்கம் - அமீர் / இசை - யுவன் / ஜெயம் ரவி, நீத்து சந்திரா
  • துப்பாக்கி - இயக்கம் - முருகதாஸ் / இசை - ஹாரிஸ்/  விஜய், காஜல் அகர்வால்
  • நீர்ப்பறவை -  இயக்கம் - சீனு ராமசாமி - /இசை- ரகுநந்தன் / விஷ்ணு, சுனைனா
  • போடா போடி - இயக்கம் - விக்னேஷ் சிவா/இசை - தரன்/ STR, வரலட்சுமி

==00oo00==  

ம்மணிதான் தினமும் என்னை வேலையிடத்துக்கு கொண்டு வந்து விடறதும், திரும்ப கூட்டிட்டுப் போறதும்.  வழக்கமா வர்ற கேள்விதான், இன்னிக்கும் வந்துச்சு " வேலை முடிஞ்சதா? வரலாமா?"

ஆனா, வழக்கமாயில்லாம நான் சொன்ன பதில்

தலையை லைட்டா ஆட்டி "I am waiting" அப்படின்னு சொன்னேன் #துப்பாக்கி

காரணம்???



==00oo00==

இந்த வாரம் மாற்றான் வெளியாகுது, பார்ப்போம். அது Stuck On youவா இல்லையான்னு.

Tuesday, October 9, 2012

30/365 ஜோக் மாதிரி

மின்சாரத் துறையில வேலை பார்க்கிறவரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்

ஏன்?

நாம் என்ன திட்டினாலும் கண்டுக்கவே மாட்டாங்க இல்லை?

==00o-o00==


தலைவர் ஏன் கோவமா இருக்கார்?

நாட்டுல இத்தனை ஊழல் நடக்குது, அதுல ஒன்னுல கூட அவரோட பங்களிப்பு இல்லையேன்னுதான்

==00o-o00==

தலைவரை விசாரிக்க வந்த CBIக்காரங்க ஏன் இவ்ளோ கடுப்பா இருக்காங்க?
தலைவர் அவுங்ககிட்ட"கல்லைத்தான் மண்ணைத்தான்.. காய்ச்சித்தான் குடிக்கத்தான்" அப்படின்னு வசனம் பேசினாராம்

==00o-o00==

தலைவருக்கு அவர் மனைவி மேல என்ன கோவம்?
கல்'லானாலும் கணவன் அப்படின்னு சொன்னாங்களாம்.
==00o-o00==

உங்க வீட்டுக்காரர்கிட்ட என்னடி பிரச்சினை?

உண்ணாவிரதத்துக்குப் போறேன், சமைக்க வேணாம்னார். 3 மணி நேரம் கழிச்சு வந்து சோறு போடுன்னு சொன்னா கோவம் வராதா?

==00o-o00==

முதலில் ஊறல் செய்தேன், கைது பண்ணினாங்க. இப்போ ஊழல் செய்தேன், அதற்கும் கைது செய்கிறார்கள். என்ன வாழ்க்கைடா இது.

==00o-o00==

சும்மா முயற்சி பண்ணின துணுக்குகள்.. 
Pic: Source Google Search

Monday, October 1, 2012

28/365 என்ன இங்க சண்டை

கணவன் - கணிணியில் வேலையாய் இருக்க, சமயலறையில் மகள், மனைவியிடையே ஏதோ வாக்குவாதம். 


கணவன்: என்ன இங்க சண்டை உங்க ரெண்டு பேருக்குள்ளேயும்?


மனைவி : அதான் இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்தோம்ல. அதான்.

கணவன்: ஏதோ புஸ்தகம்னு காதுல விழுந்துச்சு, அதுக்கும் மேல ஒன்னும் கேட்கலயே

மனைவி :  இவ்ளோ நேரம் அதைப் பத்திதானே பேசிக்கிட்டிருந்தோம். இப்ப வந்து என்னான்னு கேட்டா?

கணவன்: கவனிக்கலைம்மா.

மனைவி :  அதான, நாங்க பேசும் போது நீங்க எங்கே கவனிச்சிருக்கீங்க?

கணவன்: வேற வேலையா இருந்தேன்மா. அதான் கவனிக்கலை

மனைவி :  நாங்க பேசினா மட்டும் உங்களுக்கு வேற வேலை வந்திரும்ல?

கணவன்: சரி, விடு நான் கேட்கலை.

மனைவி :  அதான? வீட்டு மேல அக்கறை இருந்தா என்ன பேசியிருப்போம்னு கேட்டிருப்பீங்கள்ல?

கணவன்: அக்கறை இல்லாமத்தான் கேட்க வந்திருப்பேனா?

மனைவி :  அக்கறை இருந்திருந்தா முதல்லயே வந்திருக்கமாட்டீங்களா? அதான் இல்லைன்னு தெரியுமே.

கணவன்: ஷ்ஷ்ஷ், நான் கேட்டதுதான் குத்தமா?

மனைவி : ஓ, அப்ப நான் சண்டை போட்டதுதான் குத்தமா?

கணவன்: என்னான்னு தெரியாம நான் எப்படி குத்தம்னு சொல்லுவேன்.

மனைவி : எனக்கு வேறை வேலையில்லாம நாந்தான் உங்க ரெண்டு பேர் மேலையும் குத்தம் சொல்லிக்கிட்டிருக்கேனா?

கணவன்: சரி, விடு, எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம்  ....

[மறுபடியும் சிகப்பிலிருக்கும் வரியில இருந்து படிக்கவும்..]

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)