பிடித்தமான பெண்கள் : (மனைவி தவிர்த்து)
இதை தமிழில் சொல்வது என்றால் "சைட் அடித்தல்" . பார்த்தவுடன் பிடிக்கும் காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது, 30 களில் காலம் ஓட்டும் எனக்கெல்லாம் ரசிப்புத் தன்மை போய்விட்டதோ என்று எனக்கே சில காலம் தோன்றியது உண்டு. பதின்ம காலங்களில் எல்லாப் பெண்களையும் எப்போது பார்த்தாலும் பிடித்தது. 20 களில் சில வரைமுறைகள் வந்தது, இப்படி இருக்க வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என்று demand வைத்தது மனது. சைட் அடிப்பதற்கா என்று கேட்கலாம். மனது அப்படிதான் செய்யும். அதுவும் 30களில் எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை, உலக அழகி படம் பார்த்தாலே கண்டுக்காமல் போவதுதான் நடக்கிறது. 30களிலே இப்படியென்றால் 40 களும், 50களும் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. பெண்கள் மீதான ரசிப்புத்தன்மை அற்று போய்கொண்டே இருக்கிறது. இது எனக்கே எனக்கான குணம், பலர் இந்த கருத்தில் மாறுபடலாம்.
இவ்வாறாக குணம் கொண்ட நான், நாள் தோறும் 500 முதல் 700 பெண்களை வரை கடந்தாலும் ஒருத்தரையும் நின்று ரசிக்க நேரமிருப்பதில்லை, மனசும் இருப்பதில்லை. ஆனால் இன்று நடந்ததோ வேறான கதை. சுரங்கப்பாதை புகைவண்டியில் ஏறியவுடனே சட்டென பிரகாசமாகியது என் மனது. மீண்டும் பதின்ம காலத்திற்கே சென்றது போல ஒரு கணம் தோன்றியது. பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் என்னை ரசிக்க வைக்கும் அழகு அவளிடம் இருந்தது. அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று நினைக்கையில் சட்டென என்னைப் பார்த்துவிட்டாள் அழகி, வழக்கம் போல் ஒரு சிறு புன்னகையை பரிமாறிக்கொண்டோம். அமெரிக்க பழக்கம் இது. இதுவே நம்மூராக இருந்தால் வேறு கதையாகி இருக்கும். ஆனாலும் ரசிக்க நேரம் தந்தால், அந்தப் பயணம் சற்றேறக்குறைய 7 நிமிடங்கள் மட்டுமே.
அவள் தன்னுடைய ஒப்பனை பெட்டி அதாங்க, Handbag எடுத்தார், நிறைய பூச்சுகள் செய்து கொண்டார். ஓர் அழகே அழகைப் பார்த்து அழக்கேற்றிக்கொண்டதை இன்று கண்டேன். அவளுக்கு நல்ல உடல், சரியாக உடை அணிந்திருந்தார். அந்த உடைக்கு அவளுக்கு அழகாக பொருந்தியிருந்தது. பார்த்து பார்த்து ஒப்பனை செய்து கொண்டாள். தும்பைப் பூ போன்ற வெள்ளை உடை, அவ்வளவு பாந்தமாக இருந்தாள், ஓர் அழுக்கும் இல்லை. நான் இறங்கும் நிலையம் வந்தவுடனே அவளும் எழுந்திருத்தாள், நான் இறங்கும் இடத்தில்தான் அவளும் இறங்குகிறாள் போலும். என் முன்னே படியேறினாள், அவளின் வெள்ளை உடம்பிற்கு வெள்ளை உடை அப்படியே ஒத்திருந்தது. முன்னழகைப் போலவே பின்னழகும் அழகு, வெள்ளைக்காரிக்கு வெள்ளை உடை இவ்வளவு அழகாக இருக்குமா என மீண்டும் வியந்தேன். பின்னே சும்மாவா? கல்யாணத்திற்கு வெள்ளை உடை அணியும் ரகசியம் இன்று அறிந்தேன். பல படிக்கட்டுகள் ஏறி நிலையம் வெளியே வர வேண்டும். கடைசி படிக்கட்டு ஏறும் நேரத்தில் படிக்கட்டின் ஓரத்தில் அவள் எச்சிலை துப்பி விட்டு சென்றாள். 10 அடி தள்ளி குப்பைத்தொட்டி தெரிந்தது.
இதுவரைக்கும் அழகாக தெரிந்த அவள் அருவருப்பாக மாறிப்போனாள். நிலையம் வெளிவந்து அவளைக் கடந்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன், அவளின் நினைவுகள் எல்லாம் அந்த எச்சிலில் தெறித்துப் போயிற்று.

என்ன பண்ணுவது சில சமயம் இப்படித்தான் ஆகிவிடுகிறது.
ReplyDeleteவிதி வலியது :)
Deleteம்ம்ம்ம்.... (புரியுது)
ReplyDeleteஆனா சைட் அடிக்கறது .. மனசு..விதின்னு எல்லாம் சொல்றளவு சீரியஸான விசயமா?
ஓருவேள அந்தம்மா எச்சி துப்பாம இருந்திருந்தால்/ எச்சிய குப்பை தொட்டியில் துப்பியிருந்தால் என்ன செய்திருப்பீங்க?