எல்லாரும் சொல்லிடறாங்க, சுடுதண்ணிதான் வைக்கத் தெரியும் அப்படின்னு. எங்கே சுடுதண்ணியை பக்குவமா வைத்து இறக்குங்க பார்ப்போம்? சரியான சூடு என்று எப்படி கண்டு புடிப்பீங்க? ஆம்பிளைங்க அப்படின்னா, தண்ணீரை குண்டாவுல புடித்து வைத்துவிட்டு வேற வேலை பார்க்கப் போயிடுவாங்க. திடீர்னு ஞானோதயம் வந்து திரும்பவந்து பார்த்தால், தண்ணீர் மொத்தமும் ஆவியாகி, குண்டா கருகி இருக்கும், இல்லாட்டி அடுப்பை பற்ற வைக்க மறந்து இருப்பார்கள், எதற்கு சொந்த கதையெல்லாம். முதலில் தேவையான அளவு தண்ணீரை முடிவு செய்து அதற்கு ஏற்றார் போல குண்டாவை எடுத்து தண்ணீர் பிடித்து, அடுப்பை பற்ற வைத்து அதற்கு மேல் இந்த குண்டாவை வைக்க வேண்டும். எந்தளவுக்கு சூடு வேண்டுமோ அந்தளவிற்கு சூடு வரும் வரை, பக்கத்திலேயே இருந்து இறக்கி வைத்துவிட வேண்டும்.
பெண்களாக இருந்தால், அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்னால் குண்டா தெரியுமாறு ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளவும், சூடு ஆனவுடன் ஒரு செல்ஃபி, இறக்கியவுடன் ஒரு செல்ஃபி, இப்படி நிமிடத்திற்கு 1 செல்ஃபி வீதம் எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதியவும். இதற்கென்றே நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டிருக்கும் 30 மொள்ள மாறிகள், ச்சோ ச்சுவீட், அழகுங்க, எப்படிங்க உங்களால மட்டும் முடிகிறதென்று கமெண்ட்ஸ் போட்டு தனி மெஸேஜில் வந்து வழிவார்கள்.
ஆண்களாக இருந்தால், ஒழுங்காக வேலை பார்க்கப் போகவும். நீங்க படம் போட்டா ஒருத்தனும் சீண்டமாட்டான்.
#WorldPhotographyDay

:-)
ReplyDelete