அந்த பெண்ணிற்கு சுமாராக 42-45 வயதிற்குள் இருக்கலாம்.. அந்தக் கால பெண்கள், 40 வயதுகளில் மகளிர் சபாக்களுக்குப் போவார்கள். வீட்டுக்காரரும் வேலைக்குப் போய்விட, பசங்களும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போய்விட நேரத்தை தள்ள முடியாமல் கிளப்பு கடைக்குள் தஞ்சம் புகுவார்கள். அதுவரைக்கு வராத பெண்ணியம் வரும், கை வைக்காத ஜாக்கெட்டும், பொருத்தமே இல்லாத உதட்டுச்சாயமும், நுனிநாக்கு ஆங்கிலமும் வரும். இதுவெல்லாம் 80களின் சினிமாவில் நடப்பதாக எண்ணிக்கொள்ளவும்.
சரி, நடந்த விசயத்திற்கு வருகிறேன். புது வேலையிடம், அறிமுகங்கள் ஆகும் நேரம் இது. என் தலை ஒரு ஆள் சொல்லி சந்திக்கச் சொல்லியிருந்தார். அது நம்மூர் வடக்கத்து அம்மணி என்று பேரைப் பார்த்தவுடனே தெரிந்தது. சில பல ஈமெயில்களுக்குப் பிறகு அம்மணி என்ன சந்திக்க வருவதாகச் சொன்னார். சொன்ன மாதிரியே அம்மணி நேராக என் இடத்திற்கே வந்தார், என் பெயரைச் சொல்லி நாந்தானா என உறுதி செய்துகொண்டார். பிறகு ஆரம்பித்தார், சரியா 10-12 நிமிடங்களுக்கு இடைவிடாத பேச்சு அதுவும் பூராவும் ஹிந்தியில், வேலை பற்றி சொல்ல ஆரம்பித்தார். இடை இடையே ஆங்காங்கே சிரிப்புகள் வேற. கண்ணை உருட்டி உருட்டி வேறு பேசிக்கொண்டே இருந்தார். எதுக்கும்மா இந்த ஜோதிகாத்தனம் என்று கூட கேட்க நினைத்தேன். நினைத்ததோடு சரி.. பேசி முடித்து ஒரு பெரிய மூச்சை வாங்கிவிட்டு சரியா என்று ஆங்கிலத்தில் கேட்டார். நானோ, சொல்வதற்கு 2 இருக்கிறது என்றேன்.
அவை 1. யார் பேசினாலும் அவரை இடை மறித்துப் பேசும் பழக்கம் எனக்கில்லை, அவர் பேசி முடிக்கும் வரை காத்திருப்பேன்.
2. எனக்கு ஹிந்தி தெரியாது என்று சொன்னேன்.
எங்கேயோ பல்பு உடைந்த சப்தம் கேட்டது, மனதிற்கு ஒரு இனம் புரியாத வன்மம்.
பாவம் நேத்து போன அம்மணிதான், நான் போட்ட ஈ-மெயிலுக்கு கூட இன்னும் பதில் போடவே இல்லை.

Hope she is not your boss :-D
ReplyDeleteamas32
Fortunately, She is not
Deleteபொதுத் தேர்தல் சமயம். 96 அல்லது 98/99 ன்னு ஞாபகமில்லை. அப்ப NDTV la சிறப்பு பேட்டிகள், அரசியல் ஆய்வுகள், கருத்துக் கணிப்பு, பெரிய தலைகளுடன் பேட்டி என்று பட்டைய கிளப்புவார்கள்.
ReplyDeleteபிரணாய்ராய், வினோத் துவா எல்லாம் பெரிய தலைகள்// பர்க்கா தத், சர்தேசாய், அர்நாப் எல்லாம் அல்லக்கைகள்.
அப்படி ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு பி.சிதம்பரம் வந்திருந்தார். ராய் எப்போதும் ஆங்கிலம். வினோத் துவா, ஆங்கிலம் தெரியுமென்றாலும் எப்பவும் ஹிந்தி. சிறப்பு விருந்தினராக வந்திருந்த சிதம்பரத்திடம், துவா, பட படவென்று ஹிந்தியில் பொரிந்து தள்ளி, நீளமாக எதையோ கேட்டார்.
துவா பேசும் வரை பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, பின்னர் சிதம்பரம், " எனக்கு ஹிந்தி புரியாது. தயவு செய்து உங்கள் கேள்வியை, ஆங்கிலத்தில் திருப்பிக் கேட்க முடியுமா' என்று நிதானமான ஆங்கிலத்தில் கூறினார். வினோத் துவா முகத்துல அப்படி ஒரு எக்ஸ்பிரஷன். இதுக்காகவே இந்தாளைச் (ப.சி) தமிழ்நாட்டோட சி எம் ஆக்கணும்னு அப்ப நினைச்சேன்.
நல்ல வேளையா அதிகாரம் என் கைல அப்ப இல்லை :)
Comment by @icarusprakash
அச்சா என்ற ஒரு வார்த்தை கூட உங்களிடம் இருந்து வராம இருக்கும் போதே அந்த அம்மணி முழிச்சிட்டு இருக்கனும்.
ReplyDeleteநான் இடையே But you know.. அப்படின்னு ஆரம்பிச்சேன். இருங்க முடிச்சிடறேன் அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பேசிட்டே இருந்தாங்க
Deleteஇனிமே அந்த லேடி உங்க கிட்ட "ஜோதிகாத்தனம்" பண்ணவே மாட்டாங்க. சரியான பல்பு போங்க!!!
ReplyDeleteஹிந்தி திணிக்கிறாங்க அப்படினு தமிழ்நாட்டு செய்திதான் இன்று படித்த ஞாபகம் , அது அமெரிக்கா வரை வந்திருச்சினு இப்பத்தான் தெரிஞ்சு கிட்டேன்.
ReplyDeleteஉங்களைப் போலத்தான் நானும் சேல்ஸ் வேலையில் இருப்பதால் கஸ்டமர் பேசுவதை மறுத்து பேசாமல் கேட்பேன் அவர்கள் பேசி முடித்ததும்தான் பதில் சொல்லுவேன். இங்குள்ள தேசிகள் என்னை பார்த்ததும் கடகடவென் ஹிந்தியில் பேசுவார்கள் அவர்கள் பேசி முடித்ததும் நோஹிந்தி என்று சொல்லி அவர்களை வெறுபேற்றுவேன்..
ReplyDelete