பல்பு
முந்தியெல்லாம் படைப்புகளை எழுதி காசு குடுத்து கவரிலோ போஸ்ட் கார்டிலோ எழுதிப் போட்டா 'வருந்துகிறோம்' அப்படின்னு காசு குடுத்து கவர் வாங்கி திருப்பி அனுப்புவாங்க. இப்போதெல்லாம், நாமளும் ஈமெயிலுல அனுப்புறோம். ஆனா, வருந்துகிறோம் அப்படின்னு கூட பதில் ஈமெயில் வருவது இல்லை. படைப்பு வெளியானாத்தான் தெரிய வருது. இதுதான் புது வகையான பத்திரிக்கை தர்மம் போல.
இப்பவெல்லாம் பல்பு வாங்கினா கூட தெரியறதே இல்லை
ஓவராத்தான் போயிட்டு இருக்காங்க
எட்வர்ட் ஸ்நோடன் அப்படிங்கிறவந்தான் விக்கிலீக்ஸுக்கு விசயங்களை ததவரு அப்படிங்கிற செய்திதான் போன வாரயிறுதி பரபரப்பு. அவருதான் சொல்லியிருக்காரு NSA(அதாவது லோக்கல் மொழியில சொன்னா அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு வாரியம்(?!)) தொலைபேசி, Skype, Facebook, Twitter இன்னும் எது எது எல்லாம் தொலைதொடர்புகளுக்காக உபயோகப்படுத்துறோமோ, அதை எல்லாத்தையும் NSA ஒட்டுக்கேட்பதா அவர் சொன்னாரு. இது பலரை கொந்தளிக்க வெச்சிருக்கு. இதை ட்விட்டர், ஃபேஸ்புக் அப்படின்னு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, பலரோ அப்படியெல்லாம் இருக்காதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.
இது போன வாரம் ஹூஸ்டன் பண்பலையில வந்த ஒரு நகைச்சுவை இல்லாட்டி நக்கல் அப்படின்னு எடுத்துக்கலாம். போன வாரம்ஒபாமாவின் மகளோட பிறந்தநாள், அவருக்கு என்ன ஒபாமா என்ன பரிசளிச்சிருப்பாரு அப்படின்னு ஒரு கேள்வி கேட்டாங்க அதுக்கு வந்த ஒரு பதில் இது "Justin Bieber's Cell Phone Call records".
இனிமே தந்தி அடிக்காது
என் முதல் அலைபேசியை 2001ல் வாங்கினேன். அப்ப பேச, நான் மத்தவங்களுக்கு அழைச்சா ரூ.4(Outgoing), வேற யாராவது என் அலைபேசிக்கு அழைச்சா நிமிசத்துக்கு ரூ.2(Incoming). காசை விடுங்க, அதைவிட பெரிய சிக்கல் Charger. 10 நிமிசம் பேசினாவே Charge போயிடும். அதுக்காக Charger கையிலேயே தூக்கிட்டுப் போவனும். நோக்கியா வந்தபிறகு கொஞ்சம் இது மாறியது. 2013லும் Charger எடுத்துட்டுதான் போக வேண்டியிருக்கு, அப்ப Ericscon இப்ப iPhone, ஒன்னும் வித்தியாசமில்லை.பேச மட்டுமே iPhone வெச்சிருந்தா தாங்குது, ஆனா 4g/LTEன்னு போட்டு விளையாண்டோம், முடிஞ்சோம். 3 மணிநேரத்துக்காவது தாங்குறாப்ல ஃபோன் குடுங்க டிம்மு

==000==

கடந்த 160 ஆண்டுகளாக நமக்காக சேவை செய்த "தந்தி" ஜூலை 15 முதல் தன்னோட சேவையை நிறுத்திக்கொள்ளப் போகிறதா தபால் துறை அறிவிச்சிருக்கு. தொழில்நுட்ப வளர்ச்சியில் அழிந்துப் போகிறது இன்னொரு தொழில் நுட்பம்,. வல்லவன் வாழ்வான் என்பதுதான் நியதியும் கூட. ஆனாலும் தந்தி பல தலைமுறைகளாக நம்மோக சமூகத்தில் ஒரு அங்கமாகிட்டே வந்திருக்கு. தந்தி வந்தா பயப்படறது , "பயத்துல பல்லெல்லாம் தந்தியடிச்சுது" அப்படின்னு சொல்றது, ஏன் தினத்தந்தி அப்படிங்கிற ஒரு நாளிதழ் அப்படின்னு நம்மோடவே பயணித்திருக்கிறது தந்தி.இன்றைய செல்போன் யுகத்துல தந்தி என்பது செல்லாக்காசு.
போய்(வா) தந்தி!
போய்(வா) தந்தி!
==000==
நடுத்தெருவில்
அடிபட்டு இறந்துகிடந்தது
நாயொன்று
நன்றியில்லாமல்
கடந்து போயின
மனித மிருகங்கள்..
==000==
அடிபட்டு இறந்துகிடந்தது
நாயொன்று
நன்றியில்லாமல்
கடந்து போயின
மனித மிருகங்கள்..
==000==
சினிமாவுல அடிச்சுக்கொல்றதுக்கு மூக்கு லாரியைத்தான் வில்லன்கள் உபயோகப்படுத்துவாங்க. அதனால சின்ன வயசுல மூக்கு லாரின்னாலே பயம்தான். இப்பவும் அந்த பயம் இருக்கத்தான் செய்யுது.
==000==
இணையம் மூலம்
உலகம் முழுக்க பேசுவோம்
பக்கத்துவீட்டுக்காரன்
யாரென்று தெரியாமலேயே
==000==
என் முதல் அலைபேசியை 2001ல் வாங்கினேன். அப்ப பேச, நான் மத்தவங்களுக்கு அழைச்சா ரூ.4(Outgoing), வேற யாராவது என் அலைபேசிக்கு அழைச்சா நிமிசத்துக்கு ரூ.2(Incoming). காசை விடுங்க, அதைவிட பெரிய சிக்கல் Charger. 10 நிமிசம் பேசினாவே Charge போயிடும். அதுக்காக Charger கையிலேயே தூக்கிட்டுப் போவனும். நோக்கியா வந்தபிறகு கொஞ்சம் இது மாறியது. 2013லும் Charger எடுத்துட்டுதான் போக வேண்டியிருக்கு, அப்ப Ericscon இப்ப iPhone, ஒன்னும் வித்தியாசமில்லை.பேச மட்டுமே iPhone வெச்சிருந்தா தாங்குது, ஆனா 4g/LTEன்னு போட்டு விளையாண்டோம், முடிஞ்சோம். 3 மணிநேரத்துக்காவது தாங்குறாப்ல ஃபோன் குடுங்க டிம்மு
4g/LTEன்னு போட்டு விளையாண்டோம், முடிஞ்சோம். 3 மணிநேரத்துக்காவது தாங்குறாப்ல ஃபோன் குடுங்க டிம்மு.............. Indha 4G/LTE laam vachu enna pannuveenga sir?
ReplyDelete// Indha 4G/LTE laam vachu enna pannuveenga sir?//
ReplyDeleteஎன்ன வழக்கம் போல, பாட்டு கேட்கிறது, எதாச்சும் முக்கியமா படிக்கிறது(twitter/FB,G+) அறிவுச் சார்ந்த படங்கள் பார்க்கிறதுன்னு நிறைய இருக்குங்களே
Sathyarajkumar Krishnasamy -->> எப்போதுமே அவர்கள் காசு கொடுத்தெல்லாம் திருப்பி அனுப்ப மாட்டார்கள். திரும்பப் பெற நாம்தான் போதிய தபால் தலையுடன் சுய விலாசமிட்ட கவர் வைக்க வேண்டும்.
ReplyDelete