Thursday, June 27, 2013

பர்ஃபி செய்வது எப்படி?

இது அரசியல் பதிவு அல்ல:




முதலில் பெரிதாய் 40 தேங்காய்களை வாங்கித் தந்துவிட வேண்டும். கூட்டாளியே அதைத் துருவி தந்துவிடுவார்கள் என்பதுதான் பேசப்படாத ஒப்பந்தம். தராவிட்டால் கூட்டாளியின் வீட்டுக்கே விமானம் ஏறிப் போய் துருவித்தர நிர்பந்திக்க வேண்டும். கூட்டாளி துருவித்தர ஒப்புக்கொண்ட பிறகு நாம் இங்கே பர்ஃபி செய்ய ஆயத்தமாக வேண்டும். கூட்டாளி தேங்காய் வாங்கியதில் பிரச்சினை என்று நம் மேலேயே பிராது கொடுக்க, சர்க்கரை வாங்க அனுப்பிச்ச ஆளை திரும்ப வரச்சொல்லிவிட வேண்டும். பிராதை, அதோ இதோ என்று இழுவையில் இருக்கும் போது, உங்க பர்ஃபியே வேண்டாம், குடுத்த தேங்காய்களைத் திரும்ப குடுங்க என்று கேட்டு திரும்ப வாங்கி வந்துவிட வேண்டும். கூட்டாளியே ரெண்டு பேரை டெம்போ வைத்து நம் வீட்டு வந்து பர்ஃபி செய்யச் சொல்லி கேட்பார்கள்.அப்பொழுதும் மசியாமல் பர்ஃபி செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட வேண்டும். அதற்காக கூட்டாளியிடத்தில் துருவ சென்ற நமது ஆட்களையும் திரும்ப வரச்சொல்லி விடவேண்டும்.

திடீரென்று மகளுக்கு பர்ஃபி சாப்பிட ஆசை வந்தவுடன், மறுபடியும் தேங்காயை வாங்கி கூட்டாளியிடமே திரும்ப தந்துவிட வேண்டும்.

அப்புறம்?

அப்புறமா, முதல் வரியிலிருந்து ஆரம்பிக்கவும்..

==00==
பர்ஃபியை மைய்யமாக வைத்து சமீபத்தில் வந்த நகைச்சுவை காணொளி இங்கே 1:02லிருந்து பார்த்துக்கொள்ளவும்


பி.கு: இந்தப் பதிவு எந்த வித அரசியல் சம்பவங்களையும் குறிப்பது அல்ல. நீங்களாகவே ஒப்பிட்டுக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

Friday, June 21, 2013

தலைவா - கதை என்ன?

சமூக பொறுப்பு எதுவுமின்றி கூத்தும் கும்மாளமுமாய், வெளிநாட்டில் படித்து வரும் கதாநாயகன், அங்கேயே காதலும் கொள்கிறார். உள்நாட்டில் ஒரு ஊரில் பெரிய மனிதராக, எல்லோராலும் மதிக்கப்படும் மனிதராக இருக்கிறார் கதாநாயகனின் அப்பா. ஜாதிப் பிரச்சினையால் தகப்பனாரை கொன்றுவிடுகிறார்கள் வில்லன்கள். இதனால் உள்ளூருக்கு வரும் கதாநாயகன் அப்பாவைப் போலவே தலைவனாக உருவெடுக்கிறார், வில்லன்களை பழிவாங்கி தகப்பனாரைவிட பெரிய சக்தியாக உருவெடுக்கிறார். இது தான் தலைவா’வின் கதை.

தலைவா - துண்டிப்படம்



இருங்க, தேவர் மகன் கதை மாதிரியே இருக்குல்ல?

Monday, June 17, 2013

பண்ணையம் June-17-2013

பல்பு 

முந்தியெல்லாம் படைப்புகளை எழுதி காசு குடுத்து கவரிலோ போஸ்ட் கார்டிலோ எழுதிப் போட்டா 'வருந்துகிறோம்' அப்படின்னு காசு குடுத்து கவர் வாங்கி திருப்பி அனுப்புவாங்க. இப்போதெல்லாம், நாமளும் ஈமெயிலுல அனுப்புறோம். ஆனா,  வருந்துகிறோம் அப்படின்னு கூட பதில் ஈமெயில் வருவது இல்லை. படைப்பு வெளியானாத்தான் தெரிய வருது. இதுதான் புது வகையான பத்திரிக்கை தர்மம் போல.

இப்பவெல்லாம் பல்பு வாங்கினா கூட தெரியறதே இல்லை


==000==

ஓவராத்தான் போயிட்டு இருக்காங்க

ட்வர்ட் ஸ்நோடன் அப்படிங்கிறவந்தான் விக்கிலீக்ஸுக்கு விசயங்களை ததவரு அப்படிங்கிற செய்திதான் போன வாரயிறுதி பரபரப்பு. அவருதான் சொல்லியிருக்காரு NSA(அதாவது லோக்கல் மொழியில சொன்னா அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு வாரியம்(?!)) தொலைபேசி, Skype, Facebook, Twitter இன்னும் எது எது எல்லாம் தொலைதொடர்புகளுக்காக உபயோகப்படுத்துறோமோ, அதை எல்லாத்தையும் NSA ஒட்டுக்கேட்பதா அவர் சொன்னாரு. இது பலரை கொந்தளிக்க வெச்சிருக்கு. இதை ட்விட்டர், ஃபேஸ்புக் அப்படின்னு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, பலரோ அப்படியெல்லாம் இருக்காதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.

இது போன வாரம் ஹூஸ்டன் பண்பலையில வந்த  ஒரு நகைச்சுவை இல்லாட்டி நக்கல் அப்படின்னு எடுத்துக்கலாம். போன வாரம்ஒபாமாவின் மகளோட பிறந்தநாள், அவருக்கு என்ன ஒபாமா என்ன பரிசளிச்சிருப்பாரு அப்படின்னு ஒரு கேள்வி கேட்டாங்க அதுக்கு வந்த ஒரு பதில் இது "Justin Bieber's Cell Phone Call records".

==000==

இனிமே தந்தி அடிக்காது


டந்த 160 ஆண்டுகளாக நமக்காக சேவை செய்த "தந்தி"  ஜூலை 15 முதல் தன்னோட சேவையை நிறுத்திக்கொள்ளப் போகிறதா தபால் துறை அறிவிச்சிருக்கு. தொழில்நுட்ப வளர்ச்சியில் அழிந்துப் போகிறது இன்னொரு தொழில் நுட்பம்,. வல்லவன் வாழ்வான்  என்பதுதான் நியதியும் கூட. ஆனாலும் தந்தி பல தலைமுறைகளாக நம்மோக சமூகத்தில் ஒரு அங்கமாகிட்டே வந்திருக்கு. தந்தி வந்தா பயப்படறது , "பயத்துல பல்லெல்லாம் தந்தியடிச்சுது" அப்படின்னு சொல்றது,  ஏன் தினத்தந்தி அப்படிங்கிற ஒரு நாளிதழ் அப்படின்னு நம்மோடவே பயணித்திருக்கிறது தந்தி.இன்றைய செல்போன் யுகத்துல தந்தி என்பது செல்லாக்காசு.

போய்(வா) தந்தி!


==000==


நடுத்தெருவில் 
அடிபட்டு இறந்துகிடந்தது
நாயொன்று
நன்றியில்லாமல் 
கடந்து போயின
மனித மிருகங்கள்..

==000==





சினிமாவுல அடிச்சுக்கொல்றதுக்கு மூக்கு லாரியைத்தான் வில்லன்கள் உபயோகப்படுத்துவாங்க. அதனால சின்ன வயசுல மூக்கு லாரின்னாலே பயம்தான். இப்பவும் அந்த பயம் இருக்கத்தான் செய்யுது.






==000==


இணையம் மூலம்
உலகம் முழுக்க பேசுவோம்
பக்கத்துவீட்டுக்காரன் 
யாரென்று தெரியாமலேயே


 ==000==

ன் முதல் அலைபேசியை 2001ல் வாங்கினேன். அப்ப பேச, நான் மத்தவங்களுக்கு அழைச்சா ரூ.4(Outgoing), வேற யாராவது என் அலைபேசிக்கு அழைச்சா நிமிசத்துக்கு ரூ.2(Incoming). காசை விடுங்க, அதைவிட பெரிய சிக்கல் Charger. 10 நிமிசம் பேசினாவே Charge போயிடும். அதுக்காக  Charger கையிலேயே தூக்கிட்டுப் போவனும். நோக்கியா வந்தபிறகு கொஞ்சம் இது மாறியது. 2013லும் Charger எடுத்துட்டுதான் போக வேண்டியிருக்கு, அப்ப Ericscon இப்ப iPhone, ஒன்னும் வித்தியாசமில்லை.பேச மட்டுமே iPhone வெச்சிருந்தா தாங்குது, ஆனா 4g/LTEன்னு போட்டு விளையாண்டோம், முடிஞ்சோம். 3 மணிநேரத்துக்காவது தாங்குறாப்ல ஃபோன் குடுங்க டிம்மு

Thursday, June 6, 2013

அப்பாடக்கர் என்றால் என்ன? Meaning of Appatakkar

What is the Meaning for Appatakkar/Appatucker

இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. 


 அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)

இதைச் சொன்னவர் M.m. Abdulla

Wednesday, June 5, 2013

அழிந்துவரும் விவசாயம்

தமிழ்நாட்டு விவசாயிகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரிய​வந்துள்ளது. 

கடந்த 2001 தொடங்கி 2011-ம் ஆண்டுவரை​யிலான 10 ஆண்டு காலத்தில் வேளாண் தொழிலை விட்டு நகரங்களை நோக்கி இடம்​பெயர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, 8 லட்சத்து 67 ஆயிரம் பேர் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.

''விவசாயிகள் மட்டுமல்ல... விவசாயமும் சேர்ந்து வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கம், அதை அழித்துவருகிறது'' என்று ஆதங்கப்பட்டார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.


''ஒரு காலத்தில் விவசாயம் மரியாதைக்குரியதாக இருந்தது.  ஆனால்,உணவுப் பயிர் விவசாயத்தை அழித்துப் பணப் பயிர் விவசாயத்தைக் கொண்டுவந்து விவசாயிகளிடம் திணித்ததன் விளைவு, அவர்களைக் கிராமங்களைவிட்டே ஓடவைத்துவிட்டது. அரசாங்கம் விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. விளைபொருளுக்கான விலையை வழங்காமல், அதை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது.
செலவு இல்லாத பாரம்பரிய விவசாயம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்துவந்த நம் விவசாயிகளை, பசுமைப் புரட்சி என்ற பெயரில் பணப் பயிர் சாகுபடிக்கு விரைவாகத் தாவவைத்து வீரிய விதைகளை அவன் தலையில் கட்டியது. உரம், பூச்சிமருந்து என்று ரசாயனங்களைக் கொடுத்துக் கடனாளி ஆக்கியது.
ராகி, சோளம், கம்பு, தினை, கொள்ளு, பாசிப் பயறு, தட்டை என்று உணவுப் பயிர்கள் செய்து 'வரவு’ விவசாயியாக இருந்தவனுக்கு, பணக்கார நாடுகளின் வேளாண் முறைகள்  செலவை அதிகரித்ததுதான் மிச்சம்.


1970-களில் நான்கு மூட்டை நெல் விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்று ஒரு மூட்டை நெல் 6,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, நான்கு மூட்டை நெல்லைப் போட்டு பவுன் தங்கம் வாங்க முடியும். ஆனால், ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய்கூட விற்பது இல்லை. அன்று ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கினோம். இன்று டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ அதே 5 ரூபாய்தான். விவசாயப் பொருட்களின் விலையை யாரும் கண்டுகொள்வதே இல்லை. கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, காணாமல்போன மானாவாரி விவசாயம் போன்ற பல காரணங்கள்தான் விவசாயிகளை 'டவுன் பஸ்’ ஏறவைத்தது'' என்றார் நம்மாழ்வார்.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வேளாண் பொருளாதார வல்லுனரும் அமெரிக்காவின் கார்வெல் விவசாயப் பல்கலைக்கழகத்தின் இப்போதைய ஆலோசகருமான முனைவர் சி.ராமசாமியிடம் கேட்டபோது, '40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் யாரும் விவசாயத்தில் இப்போது இல்லை. அடுத்த தலைமுறை விவசாயக் குழந்தைகள் படித்து நிரந்தர ஊதியம் கிடைக்கும் பணிகளுக்குச் சென்றுவிட்டனர். குறைவாகப் படித்தவர்கள் பஞ்சாலை, பனியன் கம்பெனி, பட்டாசுத் தொழிற்சாலை போன்ற சிறுதொழில் கூடங்களின் தினக்கூலியாகிவிட்டனர். சிறு விவசாயிகள் பலரும் விவசாயக் கூலிகளாகவும் கட்டட வேலையாளாகவும் மாறிவிட்டனர். பல்லாயிரக்கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்கள் கல்லூரிகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிவிட்டன. முப்போகம் விளைந்த பூமியில் ரியல் எஸ்டேட்காரர்களின் கலர் கொடிகள் பறக்கின்றன. வாழ்வாதாரத்துக்குக் கைகொடுத்துவந்த கால்நடைகள் மேய்வதற்கு இடமின்றிப் போய்விட்டன. விவசாயம் செய்வதைவிட விவசாயக் கூலியாக இருப்பது நிரந்தர வருமானத்தைக் கொடுக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.


ஆட்கள் பற்றாக்குறைகளைப் போக்கிட சிறுசிறு வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். துண்டுதுண்டாக இருக்கும் விவசாய நிலங்களை ஒன்றாக்கி, பல ஏக்கரில் ஒரே பயிர் சாகுபடியை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் கிராமங்கள்தோறும் அமைக்க வேண்டும். பாரம்பரிய விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் ராமசாமி.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் தர்மபுரி சின்னசாமி, ''கஷ்டப்பட்டு நஷ்டப்படுகிற தொழிலாக விவசாயம் மாறிவருகிறது. கட்டுப்படியாகாத விலை, கடுமையான வறட்சி, பயிர்களைத் தாக்கும் மர்ம நோய்கள் போன்ற இடர்பாடுகள் விவசாயிகளைக் கடனாளியாக்குகிறது. சொகுசு கார் வாங்க உடனே கடன் கொடுக்கிற பல வங்கிகள், விவசாயி ஒரு கறவைமாடு வாங்க கடன் தரத் தயங்குகிறது. பல கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் பெரும் தொழிலதிபர்களின் கடன்தொகை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்கிறது. 1,000 ரூபாய் கடன் வைத்திருக்கும் விவசாயி வீட்டுக் கதவில் 'ஜப்தி’ நோட்டீஸ் ஒட்டுகிறது'' என்றார் சின்னசாமி.

ஏர் நடந்தால் பார் நடக்கும் என்றாள் ஒளவை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டில் 'பார்’ மட்டும்தான் நடக்கும்போலும்!
- ஜி.பழனிச்சாமி 

படங்கள்: தி.விஜய், ரமேஷ் கந்தசாமி

விகடனில் வந்த கட்டுரை. ஒரு கோப்புக்காக இங்கே பதிவிட்டுள்ளேன். நன்றி விகடன்

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)