படத்தோட ஆரம்பமே “புடிக்கலை”.. அதாங்க ’புடிக்கலை மாமு’ பாட்டு. கேட்பதை விட பாட்டை பார்க்க பிடித்தது. சமந்தாவின் அறிமுகத்தில் சந்தானத்தின் Counterஅபாரம். முதல் 20 நிமிடம் சந்தானத்தின் Counter மற்றும் 'அவளைப் பார்த்தேன், அழகாயிருந்தா’ வகையறாக்களும் GVM டிபிக்கல் டச்.
படத்தில் பாராட்டப் படவேண்டியவர் சமந்தா.. அண்ணனிடம் மாட்டிவிட்டது நீதான் என்று சொல்லுபோது சமந்தாவின் நடிப்பு, அழகு.. போதும்டா குடுத்த காசு தீர்ந்து போச்சு, அந்த இடத்தில் மொட்டையின் பின்னணி குரல்..(ராஜாவின் பின்னணியை பாராட்டி பாராட்டி சலிச்சுப் போச்சு)
சில பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்த, வெளியே சொல்ல முடியாத விசயங்களை திரையில் காணும் போது நம்மை அங்கே பொருத்திப்பார்க்கவே தோணும். அப்படியாப்பட்ட காட்சிகள்தான் இந்தப் பள்ளிப்பருவ காட்சிகள். ராஜாவின் ஒற்றை வாத்தியம், Has driving through the whole segment. பள்ளிக்காலங்களில் நாமும் ஒரு கதாநாயகனாத்தான் இருந்திருக்கிறோம் என உணர்த்தும் சில காட்சிகள். அதுதான் படத்திற்கான பலமும்.
காதலித்த தருணங்களை நினைத்துப்பார்க்கும் விதமாக மீண்டும் அந்த இடங்களுக்கு போவதெல்லாம் சுகந்தம். எல்லா காதலர்களும் நினைப்பதுதான்..
”போகாதன்னு சொல்லு வருண்”, ”எனக்காக சந்தோசமா இருக்கிறா மாதிரி நடிக்கலாம்ல?”. இதெல்லாம்தானே பெண்கள் மனசை கண்ணாடி மாறி காட்டுது, எல்லோருக்குமான ஒரு வாக்கியம்.
இருவரும் தொலைபேசி, அலைபேசியில் பேசிக்கொள்ளும் லைட்டிங்ஸ் அருமை(எந்த கேமராமேன் யாருன்னு தெரியல)
VTV remix - சந்தானத்துக்கு சரியா ஒத்துவருது. அதே சமயம் அவுங்களுக்கு ராஜா போட்ட அந்தப் பாட்டை எப்படியும் யாராவது ஒருத்தர் ரீ மிக்ஸ் பண்ணிடுவாங்க, 2 வருசம் கழிச்சு முழுப்பாட்டையும் கேட்டுக்குவோம் விடுங்க.
ராஜாங்கம்: இருவரும் சந்திக்க வருகையில் பின்னணி இசை எதுவுமில்லாமல் மெளனமாக்கிவிட்டு பிறகு கோரஸ்ஸை ஒலிக்கவிட்டது, சமந்தாவின் முதல் வெட்கம், சத்தமேயில்லாம நம்மை அந்த வசனங்களூடே நம்மை அழைத்துச் சென்றது என்றது என எங்கெங்கு காணினும் ராஜாங்கம்.
பள்ளிக்கூட பகுதியில் ஜீவாவின் குரல் பல மாற்றங்கள். எதுல பிரச்சினைன்னு தெரியல. ஆனா ஒரு Consistencyஏ இல்லை. சமந்தாவின் குரலும் பல இடங்களில் பிசிறடிக்குது, அதுவும் அழும் தருணங்களில். ரவிச்சந்தருக்கும் பின்னணி குரல் சரியா பொருந்தி வரலை.
நானியின் ஒரு காட்சி, சந்தானம் சொல்லும், ’டேட் தான் பிரச்சினை, நானில்லாம இனிமே நிறைய சீன் வரும்’, ’ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் பாடுறேன்’ என்று சொல்லிப்பாடுவது, Trailerஐ இடையில் இணைத்தது எனப் பல insider சமாச்சாரங்கள். எல்லோருக்கும் புரியுமா என்றுதான் தெரியவில்லை. கெளதம்(இயக்குனர்) பாடிய நீதானே என் பொன் வசந்தம் பாடலை ஏன் CDயில் சேர்க்கவில்லை என்பது சிதம்பரம் ரகசியம் :).
படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது. அந்தத் தனிமையும், காதலும், அதை உணர்ந்தவர்களுக்கானது. மீண்டும் ஒரு முறை அந்த இனிமையான காலங்களுக்கே பயணிப்பது போன்றதோர் உணர்வு.
I love You Gautham Sir!