Tuesday, November 15, 2011

வாழ்த்துகளா? வாழ்த்துக்களா?

இதுவும் திரும்பத் திரும்ப வர ஒரு கேள்வி.  வாழ்த்துக்கள் என்பது சரி இல்லை.

 வாழ்த்துகள் என்பதுதான் சரி.

அதே மாதிரிதான் எழுத்துகள், சொத்துகள், முத்துகள் என்று சொல்லறதுதான் சரி. இதுக்கு என்ன ரூல் இருக்குன்னு சிலர் கேட்கலாம். இன்னும் சிலர் வந்து நீ எழுதின கொத்தனார் நோட்ஸ் படிச்சேன். அதுல கூட வன்தொடர்க் குற்றியலுகரம் வந்தா வலி மிகும்ன்னு இருக்கே. பாட்டுப் பாடு, தேக்குப் பலகைன்னு சொல்லிக் குடுத்துட்டு இப்போ வாழ்த்துக்கள்ன்னு மாத்திச் சொல்லலாமான்னு கேட்கறாங்க.


ராசாக்களா, நீங்க அம்புட்டு தூரம் நோட்ஸ் படிச்சு இருக்கீங்கன்னு சந்தோஷமா இருக்கு. ஆனா அதே நோட்ஸ்ல நான் இந்த வாழ்த்து மேட்டரும் சொல்லி இருக்கேனே. சரியாச் சொல்லணும்ன்னா அந்த வன்தொடர்க் குற்றியலுகரம் ரூல்தான் இங்கவும் மேட்டர். புணர்ச்சி விதிகள்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா ரெண்டு தனித் தனி வார்த்தைகள் புணரும் பொழுதுதான் அந்த விதிகள் சரியா வரும்.

அப்போ எழுத்து + கள், இதை எடுத்துக்கிட்டோம்ன்னா எழுத்துக்கள் அப்படின்னு வரும். இதுக்கு அர்த்தம் என்ன? கள் போன்ற எழுத்துன்னு அர்த்தம். இல்லையா? ஆனா ஒன்றுக்கு மேற்பட்டன்னு சொல்ல வரும் பொழுது பன்மை விகுதியா கள் அப்படின்னு சேர்க்கறோம். இது விகுதி. இது தனியான சொல் இல்லை. இதைச் சேர்க்கும் பொழுது நம்ம புணர்ச்சி விதிகள் வேலைக்காகாது. பன்மை விகுதியா கள் சேரும் பொழுது வலி மிகுமா மிகாதான்னு விதிமுறைகள் எதுவும் எனக்குத் தெரிஞ்சு கிடையாது. ஆனா அர்த்தம் ஆகுது அனர்த்தம் ஆகுதான்னு பார்த்து போடச் சொல்லி இருக்காங்க.

கல்கியின் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும்.

கல்கியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.

நாம முன்னாடி பார்த்தா மாதிரி, கள் போன்ற எழுத்து என்பதைக் குறிக்கும் எழுத்து+கள் என எழுதினால் அது எழுத்துக்கள் அப்படின்னு புணரும். அதனால ரெண்டாவது வரியோட பொருள் என்ன ஆகுதுன்னா கல்கியின் எழுத்து கள் போன்றது. அது எனக்குப் பிடிக்கும்ன்னு ஆகுது. நீங்க அதைத்தான் சொல்ல வந்தா எழுத்துக்கள்ன்னு போடுங்க. இல்லையா எழுத்துகள்தான் சரி.

இனிப்புகள் எல்லாருக்கும் தரலாம் ஆனா இனிப்புக்கள் எல்லாருக்கும் தரலாமா? த்ரக்கூடாதுன்னு சட்டமே இருக்குய்யா!

அதே மாதிரி ஒருத்தருக்கு பிறந்த நாள் விருந்துன்னு அம்சமா சியர்ஸ் சொன்னா அது வாழ்த்துக்கள். மனம் நிறைய வாழ்த்தினா அது வாழ்த்துகள்தான்.

முத்து, சொத்து, வித்து - இதை எல்லாம் என்ன சொல்லணும்? இருக்கிறதை எல்லாம் வித்து’க்’கள் வாங்கினா என் சொத்து’க்’கள், அதுவும் முத்து’க்’கள்ன்னு வேணா சொல்லலாம். பன்மையைக் குறிக்க சொல்லணும்னா முத்துகள் சொத்துகள் வித்துகள்தான். முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் அப்படின்னு கவிஞர் ஒருத்தர் எழுதி இருக்காரேன்னு கேட்டா அது சந்தத்துக்கு எழுதறது. இன்னும் சிலர் கூட இந்த மாதிரி பன்மை விகுதி சேர்க்கும் பொழுது வலி மிகுந்து எழுதி இருப்பாங்க.

இதுக்கு தனியா விதிமுறைகள் ஒண்ணும் இல்லை. அதனால நான் இப்படித்தான் எழுதுவேன்னு சொன்னா ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. ஆனா எழுதினா அனர்த்தம் வரக் கூடாதுன்னு பார்த்துக்கணும். அவ்வளவுதான்

Copied From இலவசம்

31 comments:

  1. வாழ்த்துகள் தான் சரி! இப்போ உங்களுக்கு சவால்ல ஜெயிச்சதுக்கு வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  2. சிறுகதை போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. சீமான் மாதவனை வச்சி ஒரு படமெடுத்தாரே... அதுக்கு கரெக்டா தலைப்பு வச்சாரா...?

    ReplyDelete
  4. இளா,

    சிறுகதை போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்.

    //நம்ம புணர்ச்சி விதிகள் வேலைக்காகாது// இது அந்த மாதிரி பதிவா?

    ReplyDelete
  5. சீமான் மொதல்ல வாழ்த்துக்கள்னுதான் வெச்சிருந்தாப்ல.. ஆனா கலைஞர் சொன்னதுனால மாத்திட்டாங்க...

    ReplyDelete
  6. இளா,

    யுடான்ஸ் சவாலில் வென்றமைக்கு வாழ்த்துகள் +வாழ்த்துக்கள்(சியர்ஸும் சொல்வேன்ல)

    அப்படியே பாடம் எடுத்த கையோட என்னோட இணையத்தால் தமிழ் வளர்கிறதா தேய்கிறதாவும் பார்த்துடுங்க!

    ReplyDelete
  7. காலை வணக்கம் ஐயா !

    (குட் மார்னிங் டீச்சர்ர்ர்ர்ர்)

    ReplyDelete
  8. @ஷைலஜா --> நன்றிங்க
    @பிரபாகரன் --> நன்றிங்க. சரியாத்தான் தலைப்பு வெச்சாங்க.
    @அமரபாரதி --> நன்றிங்க. புணர்ச்சின்னாவே அதுதானா? முருங்கக்காய் மாதிரியில்ல ஆயிட்டுது
    @வவ்வால் --> நன்றிங்க.
    @கவிதா --> வணக்கம்(எதுக்காக இந்தப் பின்னூட்டம், புரியலைங்களே)

    ReplyDelete
  9. ஒன்றுக்கு மேற்பட்ட பசு எனில் எப்படிக் குறிப்பிடணும் இளா ?

    பசுக்கள் அல்லது பசுகள்

    ReplyDelete
  10. தமிழ் மிகவும் பாடாய் படுத்துகிறது.

    மிக்க நன்றி. சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அருணையடி --> இலவசத்தைக் கேட்கவும்(இன்னுமா அருணையடி)

    V.Radhakrishnan --> நன்றிங்க

    ReplyDelete
  12. //@கவிதா --> வணக்கம்(எதுக்காக இந்தப் பின்னூட்டம், புரியலைங்களே)/

    தமிழ் பாடம் எல்லாம் யார் நடத்துவா? சொல்லித்தர வாத்தி’க்கு ஒரு வணக்கம் போட்டேன்.. ! :)

    ReplyDelete
  13. வாழ்த்துகள்.
    நன்றி. திருத்திக் கொண்டேன்.

    ReplyDelete
  14. //சொல்லித்தர வாத்தி’க்கு //
    வாத்தி- இலவசம்தான். நான் காப்பி வாத்தியார்தான். (எங்களுக்கும் புரியறா மாதிரி சொல்லுங்களேன். உங்களவுக்கு நானெல்லாம் படிக்கலை)

    ReplyDelete
  15. நிறைய வாழ்த்துகள் சேர்த்து சொல்வதற்காக பன்மைல வாழ்த்துக்கள்னு சொல்லலாமா?

    ReplyDelete
  16. //பன்மைல வாழ்த்துக்கள்னு //

    வாழ்த்துகளே பன்மைதாங்க.

    ReplyDelete
  17. //நான் காப்பி வாத்தியார்தான்.//

    காப்பி அடிச்சாச்சும் மத்தவங்களுக்கு சொல்லித்தரனும்னு நினைக்கிற உங்கள மாதிரி ஒரு வாத்தி' கிடைப்பாரா?

    //(எங்களுக்கும் புரியறா மாதிரி சொல்லுங்களேன். உங்களவுக்கு நானெல்லாம் படிக்கலை)//

    ரைட்டு... அப்ப நான் கிளம்பறேன்.. உங்க பதிவு பக்கம் இனி வரக்கூடாது அவ்ளோதானே.. .வரலைங்க.

    ReplyDelete
  18. ஆமா, துளசி டீச்சரை எங்கே காணோம்? இந்தப்பதிவே அவங்களுக்குத்தான்னு தோனுது :)))

    ReplyDelete
  19. ***ரைட்டு... அப்ப நான் கிளம்பறேன்.. உங்க பதிவு பக்கம் இனி வரக்கூடாது அவ்ளோதானே.. .வரலைங்க.

    Thursday, November 17, 2011 10:28:00 AM EST**

    என்ன சண்டை இங்கே? ஒரு வாழ்த்து(க்)கள் பிரச்சினையை சரி செய்யப்போயி இப்படி வம்புல மாட்டிக்கிட்டீங்களே இளா? :)))

    ReplyDelete
  20. இப்போவும், எப்போவுமே, எனக்கு வாழ்த்துக்கள்னு தப்பா எழுதினால்தான் சரியாத் தோனுது. வாழ்த்துகள்னு எழுதினா ஏதோ தப்பா எழுதுறமாதிரி இருக்கு. இவ்வளவு நீங்க சொல்லியும் நான் திருந்தமாட்டேங்கிறேன் பாருங்க. :(

    ReplyDelete
  21. //அவ்ளோதானே.. .வரலைங்க//

    வருண்,

    எல்லாம் பெண்ணீயம் பேசுறவங்க. அப்படித்தான்ருப்பாங்க. மண்டையை மண்டைய ஆட்டிக்கனும். பதிலோ, எதிர் கேள்வியோ, ஏன் புரியலைன்னா கேட்டுற கூடாது.

    ReplyDelete
  22. இந்தப் பதிவு இலவசக்கொத்தனார் எழுதியது. இன்னும் பலரை சென்றடையும் நோக்கிலேயே நான் மறுபதிவிட்டிருக்கிறேன்

    ReplyDelete
  23. ////அவ்ளோதானே.. .வரலைங்க//

    வருண்,

    எல்லாம் பெண்ணீயம் பேசுறவங்க. அப்படித்தான்ருப்பாங்க. மண்டையை மண்டைய ஆட்டிக்கனும். பதிலோ, எதிர் கேள்வியோ, ஏன் புரியலைன்னா கேட்டுற கூடாது.//

    வாத்தி, என் பதிலு புரியல சரி.. ஆனா இதுல பெண்ணீயம் பெருங்காயம் எல்லாம் எங்கருந்துங்க வந்தது...??

    ReplyDelete
  24. @ வருண் - சண்டையெல்லாம் இல்லைங்க...

    ”வாழ்த்துகள் “ சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு.. ஒரு வணக்கம் வச்சேன்.. திரும்பி ஸ்டூண்ட்க்கு ஒரு வணக்கம் சொல்லிட்டு மேட்டரை முடிக்காம, புரியல புரியல ந்னு, பெண்ணீயம் வரைக்கும் இழுத்துட்டு வந்துட்டாருங்க.

    அவ்ளோ தான்..

    இதுவும் புரியாட்டி, வாத்திய 2 ஹவர் நீ டவுன் பண்ண வைக்க வேண்டியது தான்...

    ReplyDelete
  25. பெண்ணியம் இளா பேச ஆரம்பிச்சதுமே கவிதா திரும்பி வந்து முடிவுரை ஒண்ணு கொடுப்பாங்கனு எனக்கு நல்லாவே தெரியும்! நான் வாயைத் திறப்பேனா? ஆமா, நானும் பெண்ணியவாதியாச்சே- அபலைப்பெண்களுக்கு மட்டும்தான்!:)

    எனிவே, இளா: பேசாமல் outstanding "மாணவி கவிதாவை" இன்னைக்கு "செமினார்" கொடுக்கச் சொல்லிட்டு நீங்களும் மாணவரா உக்காந்து வேடிக்கை பாருங்க! :) என் பக்கத்துல ஒரு இருக்கை இருக்கு பாருங்க, இங்கே உக்காருங்க!

    ReplyDelete
  26. அபலைப்பெண்களுக்கு//

    அப்படீன்னா?

    //"செமினார்" கொடுக்கச் சொல்லிட்டு //

    ஏன் வருண்...... :)

    (மனசுல பட்டதை சொல்ல சுதந்திரம் இல்லை.. சொன்னால் பெண்ணியவாதி ன்னு சம்பந்தமே இல்லாம பேரு வைக்கறாங்க.. எகொச! )

    ReplyDelete
  27. ***மனசுல பட்டதை சொல்ல சுதந்திரம் இல்லை.. சொன்னால் பெண்ணியவாதி ன்னு சம்பந்தமே இல்லாம பேரு வைக்கறாங்க.. எகொச! ***

    பதிவுலகில், தவறுதலாகப் புரிந்து கொள்வது, அதனால தவறுதலா எதையாவது சொல்லிவிடுவது எல்லாம் சகஜம்தானங்க!

    "என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?" னு கண்ணதாசன் சொன்னதை ஞாபகப்படுத்திக் க்கொள்வோம்! :)

    ReplyDelete
  28. "என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?//

    சூப்பர் பாட்டில்ல.. :)

    ReplyDelete
  29. //பதிவுலகில், தவறுதலாகப் புரிந்து கொள்வது, அதனால தவறுதலா எதையாவது சொல்லிவிடுவது எல்லாம் சகஜம்தானங்க!//

    இளா, வருண் உங்களை தான் சொல்றாரு :)))

    ஏன் இப்படி தப்புத்தப்பா புரிஞ்சிக்கிட்டு தப்புத்தப்பா பேசறீங்க... :)

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)