சரி, அப்படி என்னதான் அந்தப் பாட்டுக்களிலும், trailerலும் கேட்குறீங்களா. நீங்களே பார்த்துக்குங்க.
இப்பொழுது கேரளாவில் ரிங் டோனாக வலம் வரும் பாடல் இது
படத்தின் Trailer
நம்மூர் அஷ்டாவதானி டீ.ஆர் எல்லாம் தூரமா போய் நிக்கச் சொல்லுங்க. படத்துல இவரோட பங்களிப்பு என்னென்னு பாருங்க.
- பாடல்கள்
- இசை
- சண்டைப் பயிற்சி
- கலை
- படத்தொகுப்பு
- பிண்ணனி இசை
- Grapics
- Effects
- பாடியது
- கதை
- வசனம்
- திரைக்கதை
- உடைகள்
- Title Graphics
- Pro. Desgining
- இயக்குனர்
- தயாரிப்பு.
தீபாவளிக்கு தமிழ் படங்கள் (வேலாயுதம், 7ம் அறிவு) வெளியாகுதுங்கிறதனால மலையாளப் படங்கள் எதுவுமே வெளியாகலை. அந்தளவுக்கு நம்ம படங்களைப் பார்த்து பயந்து போய் இருக்காங்க, கேரளத்து அச்சன்கள். ஆனா துணிஞ்சு படத்தை வெளியிட்டாரு சந்தோஷ் பண்டிட். முதல்ல எர்ணாகுளத்துல 3 திரையரங்கத்துல வெளியாச்சு படம், எல்லாக்காட்சிகளும் ஹவுஸ் ஃபுல். உடனடியா இன்னும் ப்ரிண்ட் போட்டு 12 திரையரங்கத்துல வெளியிட்டாங்க. எல்லா திரையரங்கத்துலேயும் ஹவுஸ் ஃபுல்.
மண்டை காய்ஞ்சு போயிட்டாங்க கேரள திரையுலக மக்கள். உடனடியா, ஒரு விவாதம் ஏற்பாடு பண்ணினாங்க, அதுல சந்தோசும் பங்கேற்க, காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி எடுத்துட்டாங்க மக்களும், திரையுலக மக்களும். Negative Promotion அப்படின்னாங்க, லூஸுத்தனமுன்னு கூட சொன்னாங்க. அப்போ சந்தோஷ் சொன்னதுதான் எல்லாருக்குமே அதிர்ச்சி. அதாவது ”நான் கேரளத்து சூப்பர் ஸ்டாரானது புடிக்காம பொறாமையில் பேசுறாங்க” அப்படின்னு குண்டைத் தூக்கிப் போட்டுட்டாரு. கஷ்ட காலம் வரும் போது ஆண்டவன் அவதரிப்பான், அப்படி அவதரிச்சவன்தான் இந்த சந்தோஷ் கூட சொன்னாங்க, அதாவது கிண்டலா.
அந்த விவாதத்தின் காணொளிகள்
மலையாள சினிமாவே நொடிஞ்சி போயிருக்கிற இந்த நேரத்துல, இப்படி ஒரு மலையாளப் படம் வெற்றிகரமா ஓடுறதை பார்த்துட்டு, திரையுலக ஜாம்பவானான மது, ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி ஒரு விருதும் குடுத்தாரு. வாய்பிளந்துட்டாங்க கேரளா மக்கள். அதன் காணொளி இதோ.
இதே நிகழ்ச்சியில சந்தோஷ் பண்டிட் சொன்னது இது ”மக்கள் ISD call போட்டு கூப்பிட்டு திட்டுறாங்க. அதாவது 3 நிமிசம் முதல் 15 நிமிசம் வரைக்கும் திட்டுறாங்க. ஆனா, நானா எந்த callயும் cut பண்றது இல்லை. அவுங்களாத்தான் cut பண்ணிட்டுப் போறாங்க. இது எல்லாம் என்னோட வெற்றி” அப்படின்னும் நேரடியாவே சொல்லிட்டாரு. படத்தோட மொத்த செலவு 5 லட்சம், வசூல் எவ்ளோ ஆச்சு தெரியுங்களா? மனசை திடப்படுத்திக்குங்க மக்களே. ஒரு கோடியைத் தாண்டிருச்சாம். அடுத்தப் படத்திற்கான ஆங்கிலப் பாட்டும் இப்போ hit. இதுக்கும் இவரு போற இடமெல்லாம் செம கூட்டமா வந்து திட்டிட்டுப் போறாங்க.
கேரளா மக்கள் எல்லாம் இவரை கேணைன்னு சொல்லிகிட்டே படம் பார்க்க, இப்போ இவர் கோடீஸ்வரர் ஆகிட்டாரு. இப்போ சொல்லுங்க பாஸூ, யாரு கேணைன்னு? இதுக்கும் இவர் எந்த promotionக்குன்னு எந்தச் செலவும் பண்ணலை. எல்லாம் Youtubeல பண்ணின promotionதான்.
கேரளாவின் talk of the Townஆ,இல்லே இல்லே talk of the Stateஆ மாறியப்போயிட்டாரு இந்த கேரளத்து சூப்பர் ஸ்டார் சந்தோஷ் பண்டிட். படம் வெளியானதுல இருந்து செய்திகள், மக்கள் பார்த்தா பேசிக்கிறது, பதிவுகள் எல்லாமே சந்தோஷ் பண்டிட்தான்.
என்ன கொடுமைன்னா, இனிமே இது மாதிரி எத்தனை லூஸுங்க இந்த மாதிரி கெளம்பி வரப்போறாங்களோ தெரியலை. ஆனாலும், கேரளாவுக்கு வந்த இந்த நிலைமை வந்திருக்கூடாதுடா குருவாயூரப்பா.
பவர் ஸ்டாரெல்லாம் காசு குடுத்து படத்தை ஓட்டும் போது.. ஒவ்வொரு ஸ்ட்டேட்லையும் ஒரு சந்தோஷ் பண்டிட் தேவை மச்சான்
ReplyDelete@NattAnu-->Ppl will also get bored with suchy guys very soon..
ReplyDeleteஇந்தப்படத்தில் இவர் லாபம் அடைஞ்சது நல்லதுதான். அடுத்த படத்துக்கு இவர் அறிவிப்பு கொடுத்தவுடனேயே டிஸ்டிரிப்யூட்டர்ஸ் பணத்தைக் கொட்டுவாங்க நிச்சயமாக. அந்தப்படத்திலும் இவர் ஜெயிச்சருன்னா அவர் அந்த ஊரு டி.ராஜேந்தர்தான்.
ReplyDeleteஇளா,
ReplyDeleteஎப்பவுமே நம்ம ஊரு சரக்க விட அசலூரு சரக்குனா மதிப்பா தான் தெரியும்!
ஆனாலும் மொத்தமா 12 பிரிண்ட் போட்டு கேரளாவில 1 கோடிக்கும் மேல வசூல்னு சொல்றது கொஞ்சம் ஓவரா தெரியுதே? ஆனால் இப்படியானவர்கள் வெற்றிப்பெறனும் அப்போ தான் பேராநார்மல் ஆக்டிவிட்டி போல படங்கள் பரிட்சார்த்தமாகவாது நம்ம ஊர்ல எடுக்கப்படும்.
நம்ம ஆட்கள் சரியா தப்பா புரிஞ்சுக்கிட்டு இம்சை பண்றாங்க , உ.ம்.டி.ஆர்
;)
ReplyDelete//அந்த ஊரு டி.ராஜேந்தர்தான்//
ReplyDeleteடீஆர் உண்மையாலுமே சரக்குள்ள பார்ட்டிங்க. அந்தக்காலத்துல அவர் ட்ரெண்டுக்கு செட் ஆனார். இந்தக் காலத்துல செட் ஆவலை, இதை அவர் புரிஞ்சிக்கலை அதுதான் பிரச்சினை. வாமில்லா மலரிது - பாட்டு ஒன்னே போதும் சொல்ல.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteவீடு மன்னிக்கவும். ஒரு மறுமொழியை நீங்க அழிச்சீங்க. பதிவுக்கு சம்பந்தமில்லாம இருந்ததால இன்னொன்னை நான் அழிச்சிட்டேன். மன்னிக்கவும்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteயாரு இது, இவன் தான் ஹீரோவா?. சாமீ, இவந்தான் ஹீரோனா யாரும் நம்ப மாட்டாங்க. - எங்க அக்கா பையன்(8 வயசு) சொன்ன கமெண்ட் இது.
ReplyDeleteமன்னிக்கவும், வீடு உங்க பதிவுகள்ல தேடிப் பார்த்துட்டேன். சந்தோஷ் பத்தின பதிவே கிடைக்கலை. பகிர்ந்துக்க முடியுங்களா?
ReplyDeleteஇளா,
ReplyDeleteஏன்..ஏன் இந்த கொல வெறி ,ஏதோ ஆஹா ஓஹோனு சொல்லவே டிஃபெரண்டான படம் போலனு பேராநார்மல் கூட கம்பேர் பண்ணிட்டேன், இப்போ தான் வீடியோ பார்த்தேன் இன்னொரு சாம் ஆண்டர்சன் உருவாகிடார். இன்னிக்கு ஏப்ரல் 1 கூட இல்லை இப்படி பண்ணிடிங்களே!
இதுக்கு பாரட்டு விழா வேறயா? சுத்தம்! இது என்ன கல்யாணராமன் தமிழ் படம் மலையாள ரீமேக்கா?
//இன்னொரு சாம் ஆண்டர்சன் உருவாகிடார்/
ReplyDeleteஅட நீங்க வேற. இங்கே தான் இப்படி கேரளாவுல தலை மேல வெச்சி கொண்டாடுறாங்க(எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?)
//அட நீங்க வேற. இங்கே தான் இப்படி கேரளாவுல தலை மேல வெச்சி கொண்டாடுறாங்க(எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?)//
ReplyDeleteயோவ் ,, அப்பாலிக்கா கெட்ட வார்தைல திட்டிப்புடுவேன், கேரளாவுக்கு எப்பய்யா போனீர், அந்த ஆளும் தேங்க்கா துறுவி பல்லும், எனக்கு நெட் சுலோவ் என்பதால் வீடியோ பார்க்காம இளா பாரட்டுரார்னு பதில் சொன்னேன்.
இவன விட பவர் ஸ்டார் கேவலமா அப்போ? கொய்யாலே 12 பிரின்ட் போட்டு 1 கோடினு சொல்லும் போதே டவுட் ஆனேன் !
ஏந்தான் இவங்களெல்லாம் இப்படி ஒரு வெறியோட அலையிறாங்களோ
ReplyDeleteதல நாம சேம வெச்சு இந்த பார்முலாவ பயன்படுத்தி ஒரு ஹிட் குடுக்கலாமா சொல்லுங்க...
ReplyDelete