Monday, October 31, 2011

சவால் சிறுகதை-2011

  • மொட்டை மாடியின் தொட்டியின் சின்ன இடுக்கில் ஒளிந்திருந்தான் கிருஷ்.
  • மாடிப்படிக்கட்டின் அடியில் ஒளிந்திருந்தான் கோ.
  • மொட்டை மாடியின் இன்னொரு மூலையில் கீற்றுகளை அடுக்கி வைத்திருந்தார்கள், சுவற்றிக்கும் கீற்றுக்கும் இடையில் ஒளிந்திருந்தான் ராஜ். சத்தமே இல்லாமல் தன்னுடைய படுக்கையின் அடியில் ஒளிந்திருந்தாள் ராஜி.

கண்டிப்பாக இந்த மூவரும் மாட்டிக்கொள்வார்கள், காரணம் வி (எ) விஷ்ணு. அவந்தான் இப்போழுது போலிஸிடம் மாட்டிக்கொண்டவன்.(இனிமேல் போலீஸ்=போ) informerஆக மாறிவிடுகிறேன் என்று கெஞ்சியதின் அடிப்படையில் விஷ்ணுவை போ, தன்னுடைய இடத்திற்கு கொண்டு சென்றது. விசாரணையில் அவர்கள் ஒளிந்திருந்த இடத்தை சொல்லிவிட்டான் விஷ்ணு. விஷ்ணு சொன்னது உண்மைதானா என அறிய முதலில் தேடலைத் தொடங்கியது போ.

ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்துவைத்து ராஜி இந்த அறைக்கு வந்தது, கூடவே விஷ்ணுவும். ராஜி கொரில்லா தாக்குதல் நடத்தக் கூடுமென முதலே அறிந்திருந்த போ, எதற்கும் தயாராகவும் அதே சமயம் அவள் தப்பித்துக்கொள்ளாதவாறு முன்னேற்பாடும் செய்யப்பட்டது. அதிக எதிர்ப்பு எதுவுமில்லாமலும், சத்தமே போடாமலும் போ’விடம் தஞ்சமடைந்தாள் ராஜி. தன்னுடைய அணியிலிருந்தே காட்டிக்கொடுத்த வி மீது கடும் கோபம் கொண்டாள்.


அடுத்து யார் எனக் கேட்டபோது, விஷ்ணு மொட்டை மாடியில் இருக்கும் மூவரையும் சைகயாலே சொல்ல ஆரம்பிக்கும் போதே, தாக்க ஆரம்பித்தாள் ராஜி. இதனை சற்றும் எதிர்பாராத வி, நிலை தடுமாறி கீழே விழுந்தான் “காட்டிக்கொடுக்கிறியே நீ எல்லாம் மனுசனா? உன்னை நாங்க எவ்ளோ நம்பினோம். என்னிக்குடா உன்னை விட்டுட்டு நாங்க சாப்பிட்டு இருக்கோம்? சொல்லுடா? மனசாட்சியே இல்லாம காட்டிக்கொடுத்திட்டியே? போலீஸ் தேடிட்டு வரது புதுசா என்ன? மத்தவங்களை விடுடா கிருஷை எப்படிடா காட்டிக்கொடுக்க மனசு வந்துச்சு” என கடும் சீற்றத்துடன் வந்து விழுந்த வார்த்தைகள்.

தலை குனிந்தபடியே யார் யார் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என சொன்னபோதே ஊகித்துவிட்டாள், வி'ன் விளையாட்டை. மனசுக்குள் சிரித்தபடியே, அவர்களுடன் நடக்க ஆரம்பித்தாள்.

மொட்டை மாடி,
மாலை 5:48. சூரியன் இறங்குமுகமாய் இருந்தாலும் இலைகள் சடசடவென படபடக்க ஆரம்பித்ததாலும், வெக்கை மட்டும் சிறிதும் குறையவில்லை. கால அட்டவணையின் படி பார்த்தால் சரியாக இன்னும் 12 நிமிடங்கள் தப்பித்து விட்டால் போதும். ஆனால் இந்த 12 நிமிடத்தை எப்படி சமாளிப்பது, போ’வோ வேகமாய் தேட ஆரம்பித்தது. தேடலின் அடுத்த கட்டமாய் கோ. மாடிப்படிக்கட்டின் அடியில் ஒளிந்திருக்கிறான் என்பதை சரியான கணக்குப் போட்டு, அவன் தப்பிக்காதவாறு, தகுந்த நேரத்தில் வளைக்கப்பட்டான். முடிந்தது, ராஜிக்கு கவலை எல்லாம் கிருஷ் மீதுதான். அவன் தப்பித்தாலோ, மாட்டினாலோ போதும்.

அதே சமயம்
கிருஷ், எப்பொழுதும் தன்னுடைய ESP மூலம் நடப்பதை அறிந்து கொண்டு இந்த மாதிரி சிக்கலிலிருந்து தப்பிவிடும் ஆற்றல் பெற்றவன். அப்பொழுதுதான் வி’ விளையாடிய விளையாட்டு அவனுக்குத் தெரிந்தது, தப்பான குறியீடு அது-SWH26F. அதனால கண்டிப்பாய் ராஜ் தப்பிவிடுவான் என புரிந்துகொண்டான். எந்நேரமும் விஷ்ணு தன்னை அழைக்கலாம் என அவன் பாக்கெட்டில் இருந்த போனை தொட்டு உறுதி செய்து கொண்டான். சபதம் வராமிலிருக்க Silent mode ஆக்கிக்கொண்டான்.

அதே சமயம்,
மொட்டை மாடியின் இன்னொரு மூலையில் கீற்றுகளை அடுக்கி வைத்திருந்தார்கள், சுவற்றிக்கும் கீற்றுக்கும் இடையில் ஒளிந்திருந்தான் ராஜ். கீற்றுக்குள் 5அடி நீளத்தில் நெளிந்து கொண்டிருந்தது கருநாகப்பாம்பு. நேற்று தின்ற எலி இன்னும் ஜீரணமாகாமல் பாடாய் படுத்தியது. இது தெரியாமல் மூச்சைக்கூட சப்தமில்லாமல் விட்டுக்கொண்டிருந்தான் ராஜ்.

அதே சமயம்,
கிருஷ் மெதுவாக நகர்ந்து கட்டிடத்தின் மேலேறி முன்பக்கமாய் ஜன்னலுக்கு மேலே இருக்கும் தடுப்புக்கு வந்தான்.கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த ஜன்னலோ எந்த நேரத்திலும் இடியலாம் என்ற நிலையில் இருந்தது. சிமெண்ட் கூட இன்னும் காயவில்லை.



இன்னும் 3 நிமிடமே, போ’ வேகமாய் தேட ஆரம்பித்தான். கிருஷ் மொட்டை மாடியின் தொட்டியின் இடுக்கில் இல்லாதது கண்டு அனைவரும் திடுக்கிட்டார்கள்.

டேய், ”கிருஷ் எங்கே?” என போ கேட்க, வி’ற்கு ஒன்றும் புரியவில்லை. ராஜி பதட்டமானாள். இப்படித்தான் இவன் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து தப்பிக்கும் நோக்கில் மாட்டிக்கொள்வான். இது ஒன்றும் புதுசில்லை.

அதே சமயம்,
கீற்றுக்குள்ளிருந்த பாம்பு ஆள் அரவம் கேட்டு நெளிய ஆரம்பித்தது. மனித வாடை கண்டு எச்சரிக்கையாய் தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது.

அதே சமயம்,
விஷ்ணுவிடமிருந்து போன் வர, ஜோப்பிலிருந்து போன் எடுத்து பார்த்தான்.

டன் டன் டன் டன் டன் டன் டன் டன் டன்..

மணி அடித்தது.

பிராத்தனைக்கு நேரமாச்சு என்று சொல்ல அனைவரும் கூடம் நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.

பிராத்தனைக்கு ஓடியவர்களின் போலீஸ்(விக்கி), வி(விஷ்ணு), ராஜ் அகியோருக்கு வயது முறையே 12,8,6. SP.கோகுலுக்கும் வயது 8தான். வயது அதிகமானதால் விக்கியை அது, இது எனவே அழைப்பார்கள் இந்த நண்பர்கள்.


கற்பனை வியாதியில் உள்ள கிருஷ்க்கு மட்டும் இது கேட்கவே இல்லை. பாம்பு மீண்டும் தூங்க ஆரம்பித்தது.

கட்டப்பட்ட செங்கல் ஒவ்வொன்றாக தன்னுடைய பிடிப்பை விட ஆரம்பிக்கும் போது பிராத்தனை ஆரம்பித்தது.
கோகுல் இன்னும் பிராத்தனை கூடத்திற்கு வராததை அறிந்த விஷ்ணு, விக்கி, ராஜ், ராஜி அனைவருமே. ”சார்” என ஒரே நேரத்தில் அலறினார்கள்.

அந்த ஆதவற்றோர் இல்லத்திருலிருந்த அனைவரும் ஒன்று கூடி தேட ஆரம்பித்தார்கள். இவனுக்கு இதே பொழப்பாப் போச்சு என வார்டன் கூறிக்கொண்டே மாடிப்படிக்கட்டில் தாவி ஏறிலானார். மற்ற இரு வார்டன்களும் கிணற்றுள் எட்டிப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள்.

போன் வருமா எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருந்த கிருஷை லாவகமாய் தூக்கிக்கொண்டு போனார் வார்டன்.
பிராத்தனை ஆரம்பித்தது.

கிருஷ் ஏன் அப்படி கற்பனை செய்து கொண்டிருந்தான் எனவும், Day Dreaming பற்றியும் அறிய

பட உதவி: இந்த அட்டவணையை ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து  படமாக எடுத்தது @VickyTamil.  ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு 7:30 மணி நேரமே தூங்க அனுமதிக்கப்படுகிறது.

11 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. அட! ஒரு crime கதைக்கான களனை வைத்துக்கொண்டு இப்படியும் எழுத முடியுமா? சூப்பர்! :)

    ReplyDelete
  3. கதை ஆரம்பமே காட்டி கொடுத்துவிட்டது கதைக்களத்தை. நன்றாகவே எழுதி இருக்கீங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. கருத்துக்கு நன்றிங்க நடராஜன்.

    V.Radhakrishnan --> நாம் நினைக்கிறது எல்லாமா நடந்துருது? :))

    ReplyDelete
  5. வெற்றிபெற வாழ்த்துக்கள் இளா! நீங்க போட்டியில கலந்துக்கிட்டதால நான் பெருந்தன்மையா ஒதுங்கிக்கிட்டேன்! :)))

    ReplyDelete
  6. அட அட இளா என்ன இது ரொம்பப்புதுமையா ஆராம்பிச்சி அருமையா முடிச்சிருக்கீங்க....பேரே சவால்னு வச்சி அசத்தல்....வெற்றிக்கு வாழ்த்து!

    ReplyDelete
  7. புதுமையான கதை வி! (அதாங்க விவசாயி) வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. குழந்தைகளின் உலகம் என்றும் ரசனைக்குரியது என மூன்றாமிடம் பிடித்து வெற்றி பெற்றதன் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள்! வெற்றிக்கு இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வித்தியாசமாய் எழுதியிருக்கும் கதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)