Facebook, twitter எல்லாவிடத்திலேயும்
தேடிவிட்டேன்.
எனக்கானவள் மட்டும் இன்னும்
கிடைக்கவேயில்லை..
கிராமத்தில்
காத்துக்கொண்டிருக்கிறாள்
என் அத்தை மகள்!
--00--
நாள் தோறும்
என் தேவதை
என் கண்ணில்!
என் தேவதை
என் கண்ணில்!
வாசல் கடக்கையில் சென்ற
கோதுமை குதிரையைப்பார்த்தப்பிறகு
தேவதை முகம் மட்டும்
நினைவிற்கு
நினைவிற்கு
வந்துத்தொலையமாட்டேன்
என்கிறது!
என்கிறது!
--00--
உடன்பாடு ஏற்படுவதேயில்லை.
கூட்டணி ஆட்சிதான் என்றாலும்,
அதிகார வர்க்கமெல்லாம் உன்னிடமே,
சட்டசபையிலே உன் குரல் மட்டுமே
என்றுமே கேட்கிறது,
எதிர்கட்சியாகவே உணர்கிறேன் என்றும்,
எனக்காக தருணம் வருவதேயில்லை.
வந்தாலும் இடைமறுப்பு செய்துவிடுகிறாய்,
என்ன ஆனாலும் ஆட்சி மட்டும்
சிறப்பாகவே நடக்கிறதாம்
நம் இல்லமெனும் அரசியலில்!
----00----
பேருந்துலயிருந்து இறக்கிவிடற
கண்டக்டரும்
நல்லா இருந்ததே
சரித்திரமே இல்லை!
--------------------------------------------
ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. ஒரு நாள் கங்கை நதியில் பயணிகள் படகில் சென்றுகொண்டிருந்தனர். இரவு நேரம். திடீரென்று மற்றொரு படகில் வந்த கொள்ளையர்கள், பயணிகளின் படகில் ஏறினார்கள். அந்தப் பயணிகளின் விலையுயர்ந்த ஆடைகளையெல்லாம் கொள்ளையர்கள் கவர்ந்துகொண்டார்கள். யாராவது எதிர்த்தால் அவர்களைக் கொல்லக்கூடத் தயங்காதவர்கள் அவர்கள்.
கொள்ளையடித்த பிறகு கொள்ளையர்கள், தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் பயணிகளின் முகங்களைக் கூர்ந்து பார்த்தார்கள்.இதைப் பார்த்த பயணிகளில் ஒருவர், மற்ற பயணியிடம் சொன்னார்:
""துர்க்கையை வழிபடுகின்ற கொள்ளையர்கள் இவர்கள். எல்லா வருடமும் இவர்கள் ஒரு இளைஞனை துர்க்கைக்குப் பலிகொடுப்பார்கள்!''
மற்றொரு பயணி சொன்னார்:
""இந்த முறை பலிகொடுப்பதற்கான ஒரு ஆளைத்தான் நம்மிடையே தேடுகிறார்கள்!''
இந்த நேரத்தில், படகின் ஒரு புறத்தில் இருந்த அழகான ஒரு இளைஞனைக் கொள்ளையர்கள் தேர்வு செய்தார்கள். அவன் வெளி நாட்டுக்காரன்.
கொள்ளையர்களில் ஒருவன், ""ம்...இவன்தான் பலி கொடுப்பதற்கு ஏற்றவன்!'' என்று சொல்லி அந்த இளைஞனைப் பிடித்து நிற்க வைத்தான். அப்போது இளைஞன் சொன்னான்:
""நீங்கள் என்னைக் கொல்லலாம். ஆனால் உங்களின் இந்தச் செயலால் உங்களுக்குத் துர்க்கையின் அருள் கிடைக்காது. ஏனென்றால் மிகவும் தொலை தூரத்தில் உள்ள நாட்டிலிருந்து, புத்தரைப் பற்றி நேரடியாக அறிந்து கொள்வதற்காக வந்த பயணி நான். என் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை!''
இதைக் கேட்ட மற்ற பயணிகளுக்கு அந்த இளைஞனின் மீது அன்பும் இரக்கமும் ஏற்பட்டது. இளைஞனைச் சும்மா விட்டுவிட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகத் தங்களில் ஒருவரைப் பலி கொடுப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படியும் அவர்கள் கொள்ளையர்களிடம் சொன்னார்கள். ஆனால் கொள்ளையர்கள் அதைக் கேட்கவில்லை. அந்த இளைஞனையே பலி கொடுப்பது என்று முடிவு செய்தார்கள்.
"நான் பலியாகத் தயாராக இருக்கிறேன்! ஆனால் நான் பிரார்த்தனை செய்வதற்கு எனக்குச் சற்று நேரம் அவகாசம் தரவேண்டும்'' என்று இளைஞன் சொன்னான்.
கொள்ளையர்கள் சம்மதித்தார்கள்.
இளைஞன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். ஆச்சரியம்! அப்போது ஒரு பயங்கரமான புயல் காற்று வீசியது. கங்கை நதி கொந்தளித்தது. அலையில் படகு ஆடியது.
பயணிகளும் கொள்ளையர்களும் பயந்துவிட்டார்கள். துர்க்கா தேவி தங்கள் மீது கோபம் கொண்டுவிட்டாள்போலிருக்கிறது என்று நினைத்த கொள்ளையர்கள் இளைஞனை விடுதலை செய்தார்கள். பிறகு பயணிகள் தங்கள் படகை கரைக்குச் செலுத்தி தப்பினார்கள்.
அந்த நேரத்தில் அப்படியொரு புயல் வீசவில்லையென்றால் "யுவான் சுவாங்' என்ற பெயருடைய அந்த இளைஞனின் வாழ்க்கை முடிந்திருக்கும். ஆமாம், உலகப் புகழ் பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங்தான் அந்த இளைஞன்.
யுவான் சுவாங் (602 - 664)
இந்தியாவில் 14 வருடங்கள் பயணம் செய்தவர் யுவான் சுவாங். இவர் சீன நூலாசிரியர். 1300 வருடங்களுக்கு முன்பு 5000 கிலோ மீட்டர் நடந்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்தார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் படித்தார். கி. பி. 645 - ஆம் ஆண்டு சீனாவிற்குத் திரும்பினார்.
----00-----
இப்படியும் கயமைத்தனம் பண்ணி வெச்சிட்டீங்களே :(
ReplyDeleteயுவான் சுவாங் குறிப்புகளிலிருந்து தான் நிறைய வரலாற்று உண்மைகள் கிடைத்து உள்ளது.அவரை பற்றிய செய்தி புதியது.
ReplyDelete//.அவரை பற்றிய செய்தி புதியது// எங்கேயோ படிச்சதுங்க. எங்கேன்னு ஞாபகத்துக்கு இல்லே
ReplyDelete