மனதளவில், இன்னும் இந்தியனாய் வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியனுக்கும் சமர்ப்பணம்
Dedicating to All Non Resident Indians(Still Considering them as Indians)
போன வருசமும் இதே போல புலம்பியது
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Nice one....
ReplyDeleteநன்றிங்க அகில்!
ReplyDeleteஇளா,
ReplyDeleteஎன்னமோ பொங்கி இருக்கிங்க ஆனா எனக்கு ஏதோ ஒரு கட்டம் மட்டும் தான் தெரியுது.
ஆங் தீவாளி வட்டா வட்டம் வருதுள்ள அப்போ பதிவும் அப்படி தான் போட்டாகணும் சலிச்சுகலாமா?
நாம எல்லாம் பொங்கலுக்கு டப்பாசு வெடிக்கிற பார்ட்டி!(ஒரு பெரிய பார்சல் ஓசில வந்துச்சு சேமகட்டி வச்சுருக்கேன்)
வவ்வாலண்ணே, தீவாளிக்கு தீவாளிதான் வர்றீங்க :)
ReplyDeleteEla,
ReplyDeleteSame blood :-( ...
இளா தவறாக நினைக்க வேண்டாம். நாம் இங்கே விருப்பப்ப்பட்டு தானே வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவரும் கட்டாயத்தின் பேரில் இங்கு இருப்பதில்லையே?
ReplyDeleteநான் சந்தித்த ஒரு சில ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், வங்காள தேசத்தவர்கள் பலரும் கட்டாயத்தின் பேரில் இங்கே வாழ்பவர்கள். அவர்கள் நினைத்தாலும் அவர்களால் நிம்மதியான வாழ்க்கையை தங்கள் தேசத்தில் பெற முடியாது. இவ்வளவு ஏன்? ஈழத் தமிழர்களும் அவ்வாறே.
ஆனால் இந்தியர்களுக்கு அப்படி இல்லையே. இந்தியா சென்றாலும் நம்மால் நன்றாக வாழ முடியுமே.
நாம் தேவைகளின் அடிப்படையில் இங்கே வந்து விட்டு ஒவ்வொரு நாளும் பெரு மூச்சுடன் வாழ்வதை விட, மனதளவில் ஒன்று அமெரிக்கனாக மாற வேண்டும். இயலாதென்றால், இந்தியா செல்ல வேண்டும். புலம்புவதனால் யாது பயன்?
தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்.
தீபாவளி வாழ்த்துகள்.
?/இங்கே விருப்பப்ப்பட்டு தானே வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்//
ReplyDeleteஇல்லைன்னு சொல்லலீங்க சத்யன், ஆனா வருத்தப்படாம இருக்கோமா? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க, பார்ப்போம்?
இளா,
ReplyDelete//வவ்வாலண்ணே, தீவாளிக்கு தீவாளிதான் வர்றீங்க :)//
அப்படினா நான் எம்மாம் பெரிய பஞ்ச பரதேசினு புரிஞ்சுக்கோங்க :-))
என்னால இப்போ பிராட்பேன்ட்/வைபி/வயர்லெஸ் யுஸ்பி எதுக்குமே காசு கட்டி மாளலலை, 900 ரூ வா ஒரு ஃபுல்லா எது வேணும்னா என் வோட்டு ஃபுல்லுக்கு தான், அப்போ நெட் கட்டிங்க் தான்.
இப்போலாம் மொபைல நெட் வரத பொறுத்து தான், அப்போ அப்போ செல்லுல செல்லுமிடம் எல்லாம் பதிவு படிப்பேன், அவ்வளவு தான், இப்போ சுலோவ் நெட்ல முடிஞ்சா பதிவு போடலாம்னு போடுறேன். உங்க பதிவுல வெறும் கட்டம் தெரிய காரணமும் என் ஸ்லொவ் நெட் தான் அது உங்க பிழை இல்லை!
//நாம் தேவைகளின் அடிப்படையில் இங்கே வந்து விட்டு ஒவ்வொரு நாளும் பெரு மூச்சுடன் வாழ்வதை விட, மனதளவில் ஒன்று அமெரிக்கனாக மாற வேண்டும். இயலாதென்றால், இந்தியா செல்ல வேண்டும். புலம்புவதனால் யாது பயன்?//
ReplyDeleteஎவ்வளவு எளிதாக சொல்லிவிட்டீர்கள்! தனி மரமாக இருந்தாலே பிடுங்கி வேறிடம் நட்டு வளர்ப்பது கடினம். அது வளர்ந்து தோப்பானபிறகு பிடுங்கி வேறிடம் நடுவது எவ்வளவு கடினம்? அப்படித்தான் இருக்கிறது நம் நிலையும்!
//மனதளவில் ஒன்று அமெரிக்கனாக மாற வேண்டும்///
ReplyDeleteஉண்மையாகத்தான் சொல்றீங்களா சத்யன்? மாறிட முடியுதா?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteமதம் சாயம் பூச வேணாம்னு என்னுடைய பதிவுல பூசிட்டீங்க :) நல்லா இருங்க ..
ReplyDeleteநான் சொல்ல வந்தது சரியாக புறிந்து கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன். என்னால் மாறிவிட முடிந்தது என்று கூறவில்லை. நானும் உங்களை போலவே புலம்பிக் கொண்டு தான் இருக்கிறேன்.
ReplyDeleteஆனால் நான் இப்படி புலம்புவதை தவிர்க்க விரும்புகிறேன்.
மேலும் புளம் பெயர்வது என்பது இன்று நேற்று நடக்கும் செயல் அல்ல. லத்தீனத்திற்கும், அரபிக்கும், சமஸ்க்ரிதத்திற்கும், தமிழிற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. எப்படி? மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டம் விட்டு கண்டம் சென்றதால் தானே.
இது வாழ்வியல் நியதி. ஒருவரும் பிறந்த இடத்திலேயே வாழ் நாள் முழுவதும் இருக்க முடியாது. வாழ்வின் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
இருந்தாலும் எனது அந்திம காலமும், மரணமும் திருச்சியில், நான் பிறந்து வளர்ந்த உடையாண்பட்டி கிராமத்தில் நடந்தால் எனக்கு மகிழ்ச்சி. நடக்குமா என்று தெரியவில்லை.
//ஆனால் நான் இப்படி புலம்புவதை தவிர்க்க விரும்புகிறேன்/
ReplyDeleteமனசு பாடு படும்போது, புலம்புவதை தவிர்த்துதான் என்ன பயன்? இதுதான் என் கேள்வியும்.
இது எல்லாம் ஒரு தலைமுறைக்குத்தாங்க. அடுத்த தலைமுறைக்கு(வாரிசுகள்) இல்லையே..
//பிறந்து வளர்ந்த உடையாண்பட்டி கிராமத்தில் நடந்தால் எனக்கு மகிழ்ச்சி/
ReplyDeleteஎன் கருத்தும் இதுவே!