Monday, October 3, 2011

Indli- இண்ட்லி-சொந்த செலவில் சூன்யம்

இண்ட்லியின் புதிய அம்சம் என்ன தெரியுங்களா? மேலே இருக்கிற படம்தான். இண்ட்லியில் நான் யாரையும் பின்தொடர்வது இல்லை. அதன் காரணமாக இனிமே எனக்கு எந்த பிரபலமான இடுகைகளும் தெரியாது. என்னாங்கடா டகால்டியா இருக்கு. எத்தனை இடத்துலதான் தொடர்வதாம், Buzz, reader, Twitter, Facebook. இப்படி பல இடங்களில் தொடர்ந்து தொடர்ட்ந்தே சலிச்சுப்போவுது.
(இதுக்கும் எந்த பொண்ணையும் வாழ்க்கையில பின்தொடர்ந்து போனது கிடையாதென்பது இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத சுய அறிமுகம்) 

 இதற்கு என்னுடைய கண்டங்கள். இந்த புதிய வசதி பலரை தன்னுடைய பயணர் பகுதியில் இருந்து இழக்க நேரிடும். ஏற்கனவே போட்டி பலமா இருக்குற நேரத்துல சொந்த செலவுல சூன்யம் வெச்சிட்டிருக்காங்க. நான் யாரையும் பின் தொடர போவதில்லை என்பதே என் நிலைப்பாடு.

நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்? பின்னூட்டத்துல சொல்லிட்டுப்போங்க. இதையே ஒரு கண்டனப்பதிவாவும் நீங்க நினைக்கலாம் இல்லாட்டி இந்த வசதிக்கு ஆதரவாகவும் நீங்க நினைக்கலாம். இதற்காக நீங்க பண்றது எல்லாம் ஒன்னே ஒண்ணுதான். சோத்தாங்கை பக்கம் பாருங்க ஒரு வாக்குப்பட்டை இருக்கும். அதுல உங்க பொன்னான வாக்குகளை செலுத்திட்டு போங்க பாஸூ.

16 comments:

  1. சரியா சொன்னீங்க. நான் ஒருத்தரையும் பின் தொடர்வதில்லை. அதனால் இன்ட்லி எனக்கு ஒத்து வராது. தமிழ் மணம் மட்டுந்தேன்.

    ReplyDelete
  2. நான் இப்பல்லாம் அவ்வளவ்வா இலக்கியம் படைக்கிறது கிடையாது இளா.. அதுனால இண்ட்லி பக்கமே போறது கிடையாது.. இப்பல்லாம் கூகுள் ப்ஸ்ஸே நமஹ... :)))))

    ReplyDelete
  3. என்னவோ சொல்றீங்க, நமக்கு இந்த திரட்டி விஷயமெல்லாம் இன்னும் குழப்பமா தான் இருக்கு

    ReplyDelete
  4. ****இண்ட்லியின் புதிய அம்சம் என்ன தெரியுங்களா? மேலே இருக்கிற படம்தான். இண்ட்லியில் நான் யாரையும் பின்தொடர்வது இல்லை. அதன் காரணமாக இனிமே எனக்கு எந்த பிரபலமான இடுகைகளும் தெரியாது.***

    நானும் யாரையும் பின்தொடரவில்லை! உங்க இடுகை பிரபலமானால் மற்றவருக்குத் தெரியுமா?

    யாரு இது மாதிரி ஐடியாவெல்லாம் இவங்களுக்கு கொடுத்து இவங்கள ஒழிக்கிறாங்க??

    ReplyDelete
  5. வணக்கம் நண்பரே..

    இது எனது முதல் வருகை.

    பதிவுகள் இடுவதே நம்முடைய எண்ணங்கள்,கருத்துக்கள் மற்றவரை சென்று சேர வேண்டும் என்பதே..

    அந்த பணியை திரட்டிகள் செய்து கொண்டிருக்கின்றன.

    பின்தொடரும் வசதி நல்லது என்றே எனக்கு படுகிறது.

    முதல் கருத்தினையே மாற்றுக்கருத்தாக இட்டதிற்க்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    சம்பத்குமார்
    (என் வலையில் இதுவரை வந்த பேஜ்வியுஸ் பார்வையாள்ர்களில் சுமார் 3000 பேர் இன்ட்லி மூலமே வந்துள்ளார்கள்)

    ReplyDelete
  6. சம்பத்குமார்:

    இண்ட்லி ஆரம்பிக்கும்போதே இதை செய்திருந்தால் இண்ட்லியே இருக்காதுனு இண்ட்லிட்ட சொல்லுங்க. புதுசா வருகிற விசிட்டர்களுக்கும் எதுவும் தெரியமாட்டேன்கிது. இதெல்லாம் அழிவுக்குத்தான்! பேசாமல் இண்ட்லியைகழட்டிவிட்டுட்டுப் போக வேண்டியதுதான். உங்களை மாதிரி "பக்தர்கள்" மட்டும்தான் இண்ட்லியை காப்பாத்தனும்!

    I am saying if someone is new, just visiting for the first time, they dont see anything ( I dont see anythng when I am not logged in). How would they (new person) know what the hell is going on in intli unless they read???

    ReplyDelete
  7. //பின்தொடரும் வசதி நல்லது என்றே எனக்கு படுகிறது/
    வருண் சொன்னதையும் பாருங்க

    ReplyDelete
  8. //இண்ட்லி ஆரம்பிக்கும்போதே இதை செய்திருந்தால் இண்ட்லியே இருக்காதுனு இண்ட்லிட்ட சொல்லுங்க. புதுசா வருகிற விசிட்டர்களுக்கும் எதுவும் தெரியமாட்டேன்கிது. இதெல்லாம் அழிவுக்குத்தான்! பேசாமல் இண்ட்லியைகழட்டிவிட்டுட்டுப் போக வேண்டியதுதான். உங்களை மாதிரி "பக்தர்கள்" மட்டும்தான் இண்ட்லியை காப்பாத்தனும்!//

    மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  9. புகு பதிகை செய்து தான் இடுகைகளை பார்க்கணும் என்பது தப்பான அணுகுமுறை. வாக்கு போட அந்த முறை சரி ஆனா பார்க்க. சம்பத் அவங்ககிட்ட சொல்லுங்க.

    ReplyDelete
  10. //நான் ஒருத்தரையும் பின் தொடர்வதில்லை//
    நானும்தாங்க. இப்ப யாருன்னு தேடி, கண்டுபுடிச்சு தொடருவது? அதான் கடுப்பே. இனிமேல் பதிவை இணைக்க மட்டுமே indli படிக்க வேறிடம்தான்

    ReplyDelete
  11. குழப்பமாத்தான் இருக்கு புதிய ரூல்ஸ்..

    ReplyDelete
  12. பரிந்துரை tabல் மற்ற எல்லா இடுகையையும் வழக்கம் போல படிக்கலாம். இன்ட்லி செய்த தவறு பரிந்துரை tabயை இரண்டாவதாக வைத்ததுதான் புதியவர்களை குழப்புகிறது

    ReplyDelete
  13. இளா, இன்னொரு விசயம். தமிழ்10ல நீங்க உங்க இடுகையை இணைக்கனும்னா, குறைந்தது மூன்று இடுகைக்கு ஓட்டு போடுருக்கணும். அப்பத்தான் இணைக்க முடியும். புடிச்சிருந்தா நாமளே ஓட்டு போட மாட்டோமா? ஏன் இப்படி கமபெல் செய்யறாங்கன்னு தெரியலை.

    ReplyDelete
  14. இன்ட்லி ஓட்டுப் பட்டையை என்னுடைய பிளாக்கில் காணோம். மீண்டும் நிறுவ முடியவில்லை.

    *****************

    இப்படிச் சொல்றேன்னு கோபித்துக் கொள்ளாதீர்கள்!

    எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!

    நன்றி.

    ReplyDelete
  15. உண்மைதான் ஒரே குழப்பமாத் தான் இருக்கு..

    வந்தேமாதரம் சசி கூட இது தொடர்பாக ஒரு இடுகை வெளியிட்டிருக்கிறார்..

    ReplyDelete
  16. /இப்பல்லாம் கூகுள் ப்ஸ்ஸே நமஹ//
    கரா--> புரியுதுங்க. அங்கேயும் ஒரு 30-40 பேர் இருக்காங்கள்ல

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)