Tuesday, June 2, 2009

மகசூல்- ஜூன் - 2

ஆஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவுல இந்தியர்களுக்கு எல்லாம் பிரச்சினையாம். அடிக்கிறாங்களாம். ஆமாம் தன் மாநிலத்தை தாண்டின எல்லாத் தமிழனுக்கு நடக்கிறதுதானே. 80 கிமீ தாண்டி இருக்குற பெங்களூருலயே சாத்து சாத்துன்னு சாத்துறாங்க. அங்கே நடக்குறது தெரிஞ்ச விசயம்தான், இன்னிக்கு தண்ணிக்கு வெளியே வந்திருக்கு. இங்கிலாந்துல சில்பாவுக்கு ஆனப் பொறவு தானே தெரிஞ்சது.


தனித்தன்மையை இழந்துவரும் தமிழ்மணம்
தமிழ்மணம்-இது ஒரு சுகந்தம் மாதிரி இருந்துச்சுங்க. அலுவலவத்துக்கு போனோமா தமிழ்மணத்தை திறந்தோமான்னு காலத்தைத் தள்ளிட்டு இருந்தோம். சாப்பாடு மறந்து தமிழ்மணம் பார்த்த காலம் எல்லாம் உண்டு. தமிழ்மணத்த ஒரு தொழில்நுட்பம் சார்ந்த இடமா இல்லாம உணர்வுபூர்வமாத்தான் இன்னிக்கும் பார்க்குறேன். காரணம், அதனால கிடைச்ச உறவுகள். தமிழிஸை பார்த்து சூடு போட்டுகிட்டே போறாங்க. வேணாங்க மக்களே, தமிழ்மணம் தமிழ்மணமாவே இருக்கட்டும்.

கந்தசாமி:
எனக்கு என்னமோ கந்தசாமி பாட்டு எல்லாம் புடிச்சது. 3 நாள் விடுமுறையில கந்தசாமி, முத்திரை, தோரணை பாட்டு மட்டுமே காருல கேட்கிட்டே போனோம், 1000 மைலுதூரம். என்ன ஸ்பானிஸ் கொஞ்சம் தூக்கலா இருக்கு. மெக்சிகோன்னு முடிவு பண்ணியாச்சி இல்லே.. ரஜினி மன்னன்ல பாடின மாதிரி இல்லாம கொஞ்சம் சுமார் ரகம், விக்ரம். இத்தோடு நிறுத்திக்குங்க சீயான் சார், வேணாம். அழுதுறுவோம். "கந்தசாமிதான் டாப்பு" பாட்டு செம டாப்பு. கட்டுடைத்தல்ன்னு சொல்ற ரகம். பல்லவி, சரணம்னு இல்லாம சும்மா கலக்கலா ஒரு பாட்டு.

12 comments:

 1. சங்கமம் அப்படிங்கிற திரட்டி நடத்துறதால இந்தப் பதிவுக்கு நான் கொஞ்சமும் லாயக்கி இல்லைன்னு யாராவது சொல்லலாம். சொல்லிட்டுப்போங்க. தாய்வீட்டுக்கு பிரச்சினைன்னா எந்தப் புள்ளையும் சும்மா இருக்காது.

  ReplyDelete
 2. க்ளாசிக்கா ஒரு கேள்வி கேட்டு , க்ளாசிக் டச்சா பதில் சொல்லிட்டீங்க தல.

  உங்களை நினைவு கூர்கிறேன். நீங்கள் தான் எனக்கு முதல் பின்னூட்டம் போட்டு ஆதரவளித்தீர்கள்.

  எனக்கு முதல் பாலோயர் - திரு . அருண் தி ஹீரோ @ வால்பையன். உங்கள் இருவருக்கும் நன்றிகள்

  ReplyDelete
 3. தமிழிஸ் என்ற குப்பை தளத்துடன் தமிழ்மணத்தை ஒப்பிடாதீர்கள். எதிலும் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது முக்கியம். அதனை தான் தமிழ்மணம் செய்து வருகிறது.

  தமிழ்மணத்தின் ஆரம்ப நிலைக்கும் இன்றைய நிலைக்கும் காலத்திற்கு ஏற்ப அதிகம் மாறுபாடுகள். அதுவே அதன் வெற்றிக்கு காரணம்.

  ReplyDelete
 4. தமிழன் அடி வாங்குறதுக்குக் காரணம் இருக்கு. போனா போன இடத்திலே அந்தமொழிக்கான கவுரவத்தைக் கொடுக்காம, 'கல் தோன்றி மண் தோன்றா' ன்னு ஆரம்பிச்சு, எங்கே கேப் கெடைச்சாலும் 'வள்ளுவர் சிலை' வக்கறேன்னு கெளம்பிடுவாங்க. கர்னாடகாக் காரனுக்கு அவனுடைய நீதி நூல்களைப் படிக்கவே நேரம் இல்லையாம். இதில் திருக்குறள் / திரு வள்ளுவர்னு அவனுக்கு டார்ச்சர் கொடுத்தா சாத்தாம என்ன பண்ணுவான்?

  ஒரு இடத்தில் புகுந்தா அந்த இடத்தில் சங்கமமாயிடனும். ரோமில் இருக்கும் போது ரோமனாய் இருன்னு தெரியாமலா சொன்னாங்க?

  தமிழர்களக்கு ஒத்துமைன்னா சுட்டுப் போட்டாலும் வராது. ஒரு தெலுங்கு ஆள் 10 பேருக்கு H1 பண்ணுவான். ஒரு மலயாளி இன்னும் 4 பேருக்கு டீக்கடை வக்க உதவி பண்ணுவான். ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு ஆப்பு வப்பான். (இலங்கைத் தமிழர்களுக்கு நாம் அது தானே செஞ்சோம்?).

  கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு - அந்தக் காலம்

  தமிழனுக்கு இருக்கும் இடமெல்லாம் ஆப்பு - இந்தக் காலம்.

  ReplyDelete
 5. //தமிழிஸ் என்ற குப்பை தளத்துடன் தமிழ்மணத்தை ஒப்பிடாதீர்கள். //
  அனானி, தெரியாத்தனமா பொட்டிய தொறந்து வெச்சுட்டேன். சாமீகளா இது உணர்வு ரீதியான விசயம். சூடான இடுகைய எடுக்கிறாங்க, வெக்கிறாங்க, பின்னூட்டம் 40 வருது, இல்லைன்னு ஆவுது. ஆனா தமிழிஸ் போட்டி வந்தப்புறம் நெறைய மாறுதல்கள் செய்யறாங்க. வேணாம்னு சொல்லலை. இது சூடான இடுகைய தூக்கினதுக்கு சொல்றேங்க.

  ReplyDelete
 6. என்ன விவாஜி... விடுங்க. இன்னமும் என் கண்ணு முன்னாடி அப்பப்ப அந்த பழைய்ய கிளாசிக் வந்துட்டுத்தான் இருக்குது. என் செய்ய :-(

  ReplyDelete
 7. // ILA said...

  சங்கமம் அப்படிங்கிற திரட்டி நடத்துறதால இந்தப் பதிவுக்கு நான் கொஞ்சமும் லாயக்கி இல்லைன்னு யாராவது சொல்லலாம். சொல்லிட்டுப்போங்க. தாய்வீட்டுக்கு பிரச்சினைன்னா எந்தப் புள்ளையும் சும்மா இருக்காது./

  :-))

  கலக்கல்!

  ReplyDelete
 8. //சங்கமம் அப்படிங்கிற திரட்டி நடத்துறதால இந்தப் பதிவுக்கு நான் கொஞ்சமும் லாயக்கி இல்லைன்னு யாராவது சொல்லலாம். சொல்லிட்டுப்போங்க. தாய்வீட்டுக்கு பிரச்சினைன்னா எந்தப் புள்ளையும் சும்மா இருக்காது.//

  உங்க பாசம் புல் அரிக்குது.. மாடு கீடு கொண்டு வந்து மேய விடவேண்டாம்

  ReplyDelete
 9. //தமிழிஸ் என்ற குப்பை தளத்துடன் தமிழ்மணத்தை ஒப்பிடாதீர்கள்//

  :-))))

  ReplyDelete
 10. \\தனித்தன்மையை இழந்துவரும் தமிழ்மணம்
  தமிழ்மணம்-\\

  \\கட்டுடைத்தல்ன்னு சொல்ற ரகம். பல்லவி, சரணம்னு இல்லாம சும்மா கலக்கலா ஒரு பாட்டு.
  \\

  ரெண்டுமே ரைட்டு ;)

  ReplyDelete
 11. //
  ரெண்டுமே ரைட்டு ;)//
  அது சரிங்க. நன்னி.

  புலி, சிரிப்பு என்ன வேண்டி கிடக்கு? நாங்க குமுர்றது உங்களுக்கு சிரிப்பா?

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)