நமக்கு ரொம்ப நாடக பைத்தியங்க. எங்க ஊர்லயும்தான் நாடகம் போடுவாங்க. கிட்டதட்ட ஒரு காபரே ரேஞ்சுக்கு இருக்கும். விடலைப் பசங்க தகிரியமா மேடையில நடிகைங்கள கட்டிப் புடிக்கிற கருமம் எல்லாம் எங்க ஊர்லதான். ஆனாலும் நமக்கு வானொலியில் போடுற நாடகங்கள் ரொம்ப புடிக்கும். அப்புறம் DDல வந்த பஞ்சு பட்டு பீதாம்பரம், Flight 172 இதெல்லாம் நாடக உலகத்துக்கு நம்மள லைட்டா இழுத்துச்சு(பார்க்க மட்டும்தாங்க). சரி என்னாத்துக்கு நம்ம வரலாறு.. நேரா மேட்டருக்கு வரலாமே.
மூணு வாரத்துக்கு முன்னாடி இந்த ஊர்ல(இந்த ஊர்லன்னா 50 மைல் தள்ளி, நாக்குத் தள்ள... தள்ள கார் ஓட்டிட்டு போவனும்) Stage Friendsன்னு ஒரு குழு நாடகம் போட்டாங்க. இந்த ஊர்ல என்ன கூட்டம் வரப்போவுதுன்னு போனா திருவிழாவாட்டம் இருந்துச்சுங்க கூட்டம். இந்த நாடகம் போட்டவங்களைப் பத்தி எங்க சொந்தக்காரர் சொன்னது ஒரு வருசத்துக்கு முன்னாடி சொன்னாரு "தமிழுக்கு பாடுபடற சில மக்கள் இருக்காங்க. அவுங்க நாடகம் எல்லாம் போடுவாங்க"ன்னு சொன்னாரு.
கிரேஸி மோகனுடைய நாடகத்துல இவுங்க நடிச்சாங்க. Tenant Commandments. நாடகம் ஆரம்பமே அசத்தல். அதிலேயும் மோகன்னு ஒருத்தர் பின்னி பெடலெடுத்தாரு. அங்கே நிமிந்து உக்காந்தவங்க, பின்னாடி இருக்கவங்க குனிஞ்சு உக்காருடா பனைமரம்னு சொன்னப்புறம்தான் இறங்கினேன். வழக்கமான நாடகத்துல வர்ற இசை மட்டும் மிஸ்ஸிங்(BGM). மத்தபடி அருமை. நாடகத்தோட ஹைலைட்டே ஒரு வசனம் கூட தப்பில்லாம பிசிறு தட்டாம நடிச்சதுதான். யாரும் திரைக்குப் பின்னாடி திரும்பி பார்த்து வசனம் மறந்துருச்சுன்னு சொல்லல. அவ்ளோ ஒத்திகைப் பார்த்திருக்காங்கன்னு தெரியுது. ஒருத்தர் கூட ஒரு தப்பும் பண்ணாம நாடகம் நடிச்சது அவுங்களோட உழைப்பை காட்டுது. அதிலேயும் குரு, சாமியாரா நடிச்ச அம்மா, நாரதமுனி வேசத்துல நடிச்சவரு, வீட்டு முதலாளி(ஆர் எஸ் மனோகரை ஞாபகப் படுத்தாரு) சீனிவாசன், வாடகைக்கு வர்ற குடும்பத்தலைவரு ரமணி , கனீர் குரல்ல நடிச்ச வீடு புரோக்கர் எல்லாரும் பட்டைய கெளப்பிட்டாங்க. நாடகத்துக்காக மொட்டை போடுறவரோட தியாகத்தை என்னான்னு சொல்ல.. அவ்ளோ dedication.
மோஹன்கிறவரு ஒரு வசனம் பேசினது செம நச். அதுவும் கோவை நெல்லை slangல அடுத்தடுத்து பேசின வசனம் எந்தக்காலத்துக்கும் மறக்காது. கொஞ்சம் Current topic சேர்த்துட்டா செமையா இருக்கும். Intervalல பஜ்ஜி, போண்டா, புதினா சட்னின்னு பழக்கப்பட்ட நமக்கு 2 மணிநேரம் ஒரே இடத்துல உக்காந்து கொஞ்சம் கஷ்டம் கூட. ஒரு இடைவேளை தரலாம். பொடிப்பசங்க தொல்லைதான் கொஞ்சம் கஷ்டம். அவுங்கள பார்த்துக்கிறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணினா இன்னும் செளகரியமா இருக்கும்.
ஊரா ஊரா போயி நாடகம் போடுறாங்க. கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு வர்ற கலைகள்ல நாடகமும் ஒன்னு (TV Serial எல்லாம் நாடகம்னா ..தா நாடகம் அழிஞ்சே போவலாம்டா). பிராமணர்களோட ராஜ்ஜியம் நாடகம்னு சொல்றது எல்லாம் சென்னை மக்களுக்குத்தான். எங்க ஊர்ல வருசா வருசா நாடகம் போடுவாங்க. இயக்குனர்க்கு 350ரூபாய் குடுப்பாங்க. 2 குயர் நோட்டுல வசனம் எழுத வேண்டியது அவரோட முதல் கடமை, கதை செம மொக்கையாத்தான் இருக்கும். ஆனா நேர்ல பார்கும்போது அது வேற மாதிரி போவும்.
எப்படியோ அமெரிக்காவோ, முனியப்பன் கோவிலோ அவுங்க அவுங்க ரேஞ்சுக்கு நாடகம் போட்டாத்தான் இந்தக் கலை தப்பிக்கும், அப்படி தப்பிக்க வெக்கிற Stage Friendsமக்களுக்கு என்னோட நன்றி. அமெரிக்காவுல நாடகம் போடுறது ரொம்ப சுலபம் இல்லே. 30 மைலாவது ஓட்டிட்டி போயி குளுரோ, வெயிலோ ஒரு இடத்துல சேர்ந்து ஒத்திகை பார்த்து.. விளம்பரம் பண்ணி.. டிக்கெட் வித்து..கூட்டம் வந்து... மேடையேறி ஒழுங்கா வசனம் மறக்காம நடிச்சு.. இத்தனை விசயத்தையும் சரியாப் பண்றாங்க இவுங்க, அதுவும் வெற்றிகரமா. நாடகம் மூலம் வர்ற பணத்தை இலங்கை வாழ் தமிழருக்கு தந்திருக்காங்க. இப்படி பல சேவைகள் இவுங்க செய்யறாங்க. ஒரு கலையா மட்டும் நினைச்சு இதை சிறப்பா செய்யறாங்கன்னு நினைக்கும் போதே இவுங்கள மாதிரி ஒன்னு இருந்தாவேப் போதும் நாடகம் செழிக்கும் நினைச்சுகிட்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
நம்ம ஊருக்கு எப்ப வாராக ?
ReplyDeleteநம்ம ஊர்லதான் இந்த நாடகமே..Njல
ReplyDeleteநாடகத்தை சிறப்பான முறையில் நடத்தியவர்களுக்கு பாராட்டுக்கள். சிறப்பா நடித்தவர்களுக்கு இரட்டிப்பு பாராட்டுகள்.
ReplyDelete\\கிரேஸி மோகனுடைய நாடகத்துல இவுங்க நடிச்சாங்க.\\
கதை வசனம் கிரேஸி மோகன் என்று இருக்கு அவர் குழு இதுல நடிச்சுதா? இல்ல கதை வசனம் மட்டும் தான் அவரோடதா?
//கதை வசனம் மட்டும் தான் அவரோடதா//
ReplyDeleteகதை வசனம் கிரேஸியோடதுதாங்க. காப்புரிமை வாங்கி நாடகம் போடறாங்க.
இது இருபது வருடத்திற்கு முன்னால் SV Sekar ட்ரூப்பால் நடத்தப்பட்ட நாடகம்...
ReplyDeleteநான் சில குறைகளையும் சொல்லியிருப்பேன். காரணம். They were very very sincere and dedicated.
Please click Here
மிக நல்ல முயற்சி. அவர்களுக்கு என் பாராட்டுகளும் :)
நல்ல முயற்சி. பாராட்டத்தக்கது
ReplyDeleteவருகைக்கு நன்றி வெட்டிப்பயல், முரளிகண்ணன்
ReplyDeleteநல்ல முயற்சி.
ReplyDelete