Wednesday, July 20, 2016

கபாலி (முந்திரிக்கொட்டை) விமர்சனம்


படம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை
1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக்காமல் படம் வந்திருக்கிறது
2. வழக்கமாக ரஜினி படங்களில் சோகமான முடிவுகள் இருக்காது. இப்படம் அதில் விதி விலக்கு
3. ராதிகா ஆப்தேவிற்கு விருது கிடைக்கும்
4. பின்னணி இசை அமைத்ததிலேயே இந்தப் படம்தான் டாப்
5. தர்மதுரை, படையப்பாவிற்குப் பின் ரஜினி அவர்களுக்கு வயதான வேடத்தில் சிறப்பாக அமைந்த படம் இது
{படத்தின் செய்தித் துணுக்குகளை வைத்து பட்டி பார்த்து டிங்கரிங் செய்தவை, மேலே சொன்னவை உண்மையாகக் கூட இருக்கலாம்}

கதை: மலேசியாவில் கொத்தடிமைகளின் காலத்தில் போராடும் ரஜினிகாந்த் பெரிய டான்'ஆக மாறுகிறார். இதனால் அவருக்கு தமிழ் அல்லாத சில மக்களால் தொல்லை. எதிரிகளால் அவரது சில குடும்ப நபர்களின் உயிரிழப்புகளின் காரணமாக பொது வாழ்க்கையிலிருந்து மறைந்து வாழ்கிறார். சுமாராக அவரது 55 வயதில் மீண்டும் இருட்டுலகில் இருந்து வெளி வந்து அதே எதிரிகளை எதிர்க்க வேண்டி வருகிறது. மீண்டும் அவருடன் இணைகிறார்கள் பழைய நண்பர்கள். எதிரிகளை ரஜினிகாந்த் பழி வாங்கினாரா இல்லையா என்பதே இறுதிக்காட்சி.

Wednesday, May 11, 2016

Whatsapp விவாதங்கள்

அமெரிக்காவில் வாழ் மக்களின் whatsapp குழுக்களில் ஒன்று. தினமும் காலை எழுந்தததிலிருந்து இரவு படுக்க போகும் வரை பெரிய அடிதடி நடந்துகொண்டே இருக்கும். அதுவும் எதற்கு தெரியுமா? அடுத்து அம்மா ஆட்சி வேண்டுமா? ஐயா ஆட்சி வேண்டுமா? இல்லை கேப்டன் ஆட்சி வேண்டுமா என்று.  இதில் கொடுமை என்னவென்றால் இணையத்தை விட கேவலமா எதிர் கட்சியைத் திட்டிக்கொள்வதுதான், குழுவில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்கள் என்பது வேறு விசயம். இதில் குறிப்பிடத்தக்க இன்னோர் விஷயம், குழுவில் இருக்கும் பாதிபேருக்கு இந்தியாவில வாக்குரிமை இல்லை, அதாவது அமெரிக்க வாசிகளாக மாறி பல ஆண்டுகள் ஆனவர்கள். மீதி பாதிப் பேர் வாக்களிக்க எக்காரணம் கொண்டும் போக மாட்டார்கள். இவர்கள்தான் தமிழகத்தின் அடுத்த ஆட்சியைப் பற்றி விவாதிப்பவர்கள்.

காலையில் அந்தக் குழுமம் போனவுடன் ஒன்றே ஒன்றுதான் தோன்றும், அதையும் நடிகர் கமல் அவர்கள் சொல்லி வைத்துவிட்டார் "போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா"

Wednesday, January 13, 2016

சல்லிக்கட்டு ஒரு சப்பைக்கட்டு

நாங்கள் க்ரிக்கெட், இறகுப் பந்து என்று விளையாடிக் கொண்டிருக்கையில் "விளையாட்டுன்னா அது  கபடி மாதிரி வீரமா இருக்கனும்டா, அதை விட்டுட்டு இது எல்லாம் விளையாட்டா?" என்று சொல்லுவான் என் நண்பன் செந்தில். இது கொங்கு வட்டாரம் என்பதால் கபடியே வீரமான விளையாட்டாக சொல்லிக்கொண்டான். இதே மதுரைப் பக்கமாக இருந்தால் சல்லிக்கட்டு என்று சொல்லியிருப்பானாக இருக்கும்.

சல்லிக்கட்டு, இன்று பலவாறான பரபரப்புகளை பரப்பிக்கொண்டிருக்கிறது இணையத்தில். இது தான் தமிழன் வீரமென்றும், பண்டைய தமிழர்களுக்கான விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. அப்படியா? முதல்வன் படத்தில் சம்பந்தமேயில்லாமல் "எங்க ஜாதி ஆளை அடிச்சி போயிருவானா?" என்று திடீரெனக் கூவும் போக்குவரத்து ஊழியர் மாதிரி , ஒரு சாதிக்காரர்கள் இது எங்கள் விளையாட்டு இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று போராட்டம் வேறு. அப்ப மத்த சாதிக்காரனுக்கு அது வீரமில்லையா? இதில் மாடுகளைக் காப்பாற்ற வழக்குகள் வேறு. அடப்பாவிகளா, மாட்டு மேல பரிதாபப் பட்டுதான் வேணாம்ங்கிறீங்களா? மனுசனுக்கு அடிபடுமே அதைப் பத்தி கவலைப் படலையா? மாடு முட்டி சாவறானே அவனுக்கு இழப்பீடு என்ன கிடைத்துவிடும்? எந்த காப்பீடு திட்டமாவது இதற்காக இருக்கா? இருக்காது. ஏனெனில் இதற்கெல்லாம் காப்பீடு கிடைக்காது. அடிபடுறானே, அவனை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? உங்க ஒரு நாள் கூத்துக்கு செத்துப்போறவனுக்கும், கால், கை போறவனுக்கும் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? மாட்டை கொடுமை படுத்துகிறார்கள் என்று போராடும் மக்களை விட்டுவிடுவோம். அவர்களுக்கு மாட்டுக்கறி விற்கும் கடைகளுக்கான முகவரி தெரியாமல் இருந்திருக்கும். வீரம் வீரம் அப்படின்னு சொல்லிட்டு செத்துப்போறவனுக்காக யார் போராடப்போறாங்க? விவேக் தெளிவாகவே ஒரு படத்தில் சல்லிக்கட்டை எதிர்த்து பேசியிருப்பார். மனுசன் தெரிஞ்சு தான் போராடுறான், அப்ப என்ன வேண்டுமென்றாலும் ஆகட்டும் என்பது எல்லாம் முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.

வீரமென்றால் அடுத்த வருடம் காளைகளை விட்டுவிட்டு சிங்கம், புலி போன்ற விலங்குகளை வீரம் என்ற பெயரில் அடக்கிக்கொள்ளுங்கள்.  மதுரை வட்டாரங்களைத் தவிர்த்து வேறு எங்கும் நடைபெறாத இந்த விளையாட்டை தமிழர்களின் பண்பாடு என்று பொதுமைப் படுத்தாதீர்கள்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)