Tuesday, March 19, 2013

திமுக விலகல் - ஒரு அலசல்

காங்.  கூட்டணியிலிருந்து திமுக விலகியது.


அதிமுகவுக்கு, இது பெரும் சங்கடத்தை கொண்டு வந்து தந்திருக்கிறது. ஏற்கனவே மாணவர்கள் போராட்டம், இதில் இவர்களும் இன்னொரு பக்கம் செய்லபட, வரும் பாராளமன்ற கூட்டணியில் குழப்பத்தை தாராளமாகச் திமுக செய்யும் என்பது இன்னொரு கவலை. இது நாள் வரையில் அமைதி காத்து வந்த முதல்வரே  "இது ஒரு நாடகம்" என்று அறிக்கை விடுமளவுக்கு  மாற்றியிருக்கிறது. அதிமுகவுக்கு கையறுநிலையை கொண்டு வந்ததில் கலைஞர் மீண்டும் அரசியல் சாணக்கியன் என்று நிரூபித்திருக்கிறார்.

காங். இது பெரும் பின்னடைவே, தமிழகம் மட்டுமல்லாமல், தேசியளவிலும். ஆட்சியிலிருந்தாலும், திமுகவின் விலகல் ஒரு தர்ம சங்கடத்தை அளித்துவிட்டது.

தமிழகளவில், மக்களுக்குத் தெரியும் இந்த விலகல் எந்த விதமான பயனும் இல்லையென. சதுரங்க ஆட்டத்தில் வெட்டு நடந்துகொண்டிருக்கும் இடத்திற்கு அப்பால், சம்பந்தமேயில்லாமல் ஒரு மூவ் நடக்குமே அதுபோலத்தான் என்பது தமிழக மக்களின் பார்வை. காரணம் மாணவர்களின் முன்னெடுப்பு, டெசோவை அசாதாரணமாக கீழே தள்ளியது.

சோ, சுப்ரமணிய சாமி போன்றவர்களுக்கு வேலைக்கான நேரம் வந்துவிட்டது. டீ பார்ட்டி, அரசியல் கலந்தாலாசோனைகள், செவ்விகள் என இனி தேர்தல் வரைக்கும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பல லாபியிஸ்ட்டுகள் தமிழகம் நோக்கி வர விமானத்திற்கு சீசன் டிக்கெட் எடுத்திருப்பார்கள்.

இந்தியளவில், திமுகவிற்கு இது பெரிய வெற்றி, CNN ஆரம்பித்து விட்டது,. இன்னும் 2 நாட்களுக்கு TRP Rating இறங்காமல் திமுகவின் விலகலை வைத்து நிகழ்ச்சிகள், செவ்விகள் என ஒப்பேற்றிக்கொள்வார்கள்.


யாருக்கு எப்படியோ திமுக தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. இறுதிக்கட்ட ஈழப்போரின் போது கையறுநிலையிலிருந்தவர்கள் திமுக தொண்டர்கள்தான். இனிமேல் கொஞ்சம் சுவாசித்துக்கொள்வார்கள்.

Monday, March 18, 2013

ஈழப் போரில் திரு.கருணாநிதியின் பங்கு -எனது சாட்சியம் ம.செந்தமிழன்

முன்னுரை: இணையத்துல வந்த ஒரு சேதிதாங்க இது. நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

ஈழப் போரை இலங்கையும்,இந்தியாவும் இணைந்து நடத்தியதை அறிவோம். தமிழகமும் நடத்தியதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி, சிங்களப் படையின் தமிழகப் பிரிவு பிரிகேடியராகத்தான் நடந்து கொண்டார்.

எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
மாவீரன் முத்துக்குமார் இறுதி நிகழ்வில் கூடிய கூட்டம் வரலாற்றில் குறிக்கத்தக்கது. ஆயினும், அச்செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவராமல் தடுக்கப்பட்டது.

மாணவர் போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. அவற்றின் தாக்கம் பொதுமக்களைத் தாக்கிவிடாமல், திரு.கருணாநிதி பல்வேறு நாடகங்களை நடத்தினார்.
திரு.கருணாநிதியின் முதுகுவலி, முல்லைத்தீவில் கொல்லப்பட்ட மக்களின் கதறலைக் காட்டிலும் வேதனைமிக்கதாக பெரிதுபடுத்தப்பட்டது. ’கொத்துக் குண்டுகள் வீசப்படுகின்றன’ என நாம் கதறியபோதெல்லாம், அவர் ‘சகோதர யுத்தம் நடத்தியவர்கள்தானே விடுதலைப் புலிகள்’ என்று அறிக்கை மேல் அறிக்கையாக வாசித்தார்.

அந்த நாட்களில் அவரால் ஏவப்பட்ட ஒடுக்குமுறைகள் இன்னும் கூட முழுமையாக வெளிவரவில்லை.
அந்த ஒடுக்குமுறைகளுக்கு நான் ஒரு சாட்சி.

திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில், படுகொலைகளுக்கு எதிரான ஊர்வலம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. நானும் கலந்து கொண்டேன். ஊர்வலத்தின் இறுதியில், இன துரோகம் செய்யும் காங்கிரஸ் தலைவர்களின் உருவம் பொறித்த பதாகைகளை நானும் சில இளைஞர்களும் சாலையில் வைத்துக் கொளுத்தினோம். அப்போது, காவல்துறை மீதிருந்த அச்சத்தினால் சலனப்பட்ட தம்பி ஒருவர் தவறுதலாக, என் கால்களில் பெட்ரோலை ஊற்றிவிட்டார். பதாகையில் எரிந்த தீ என் கால்களில் எரிந்தது. இடது கால் கடுமையாக தீயில் வெந்த நிலையில் அங்கேயிருந்த கடையில் படுத்திருந்தேன்.

தஞ்சையிலிருந்து வந்த அதிரடிப் படையினர், சாலையில் நின்ற பொதுமக்களை எல்லாம் அடித்து நொறுக்கி வேனில் ஏற்றினர். ’தீ வைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ எனக் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர். எங்கள் இடத்திற்கு மிக அருகில் அவர்கள் வரும்போது, நானும் க.மாதவன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சில நண்பர்களும் அவ்விடத்தின் பின்னே இருந்த கழிவுநீர்க் குட்டையில் ஒளிந்துகொண்டோம்.

அதன் பின்னர், எங்களால் வீடு திரும்பவே இயலவில்லை. எல்லா வீடுகளிலும் சோதனைகள், கைதுகள். மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இயலாமல், வெந்து தசை கிழிந்த காலுடன் இரவெல்லாம் அலைந்து திரிய வேண்டி இருந்தது.

என் மனைவி அப்போது கருவுற்றிருந்தார். என் வீட்டில் தங்கினால், என்னால் அவரது உடல் நலத்துக்கும், மன நலனுக்கும் தொல்லை வரும் என்பதால், வேறொரு கிராமத்தில் தலைமறைவாகத் தங்கிக் கொண்டிருந்தேன்.

செங்கிப்பட்டியைச் சேர்ந்த திரு.குழ.பால்ராசு, அவர் மகன் திரு.ஸ்டாலின், திரு.ரெ.கருணாநிதி ஆகியோரைத் தேடி ஏறத்தாழ இருபது கிராமங்களில் காவல்துறை சுற்றித் திரிந்தது. நள்ளிரவு வேளைகளில்,ஆண்கள் இல்லா வீட்டின் கதவைத் தட்டி, பெண்களிடம் ‘சோதனை’ என்ற பேரில் முறையற்று நடந்து கொள்வது காவல்துறையின் அன்றாட நடவடிக்கை ஆகிவிட்டது.

திரு.குழ.பால்ராசு, அப்பகுதியின் த.தே.பொ.க தலைவர். அவர் காடுகளுக்குள் பதுங்கி இருந்தார். திரு.ஸ்டாலின், 18 வயது இளைஞர் அவர், காடு காடாகத் திரிந்து, உணவின்றி வாடிக் கொண்டிருந்தார்.

இவ்விருவரும் கிடைக்கவில்லை என்பதால், திரு.பால்ராசுவின் இளையமகன் அப்புவைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். அப்பு அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்! ‘உன் அப்பாவும் அண்ணனும் சரண்டர் ஆனாத்தான் உன்னை விடுவோம்’ என்று அவனிடம் மிரட்டல் விடுத்தது காவல்துறை.

ஏறத்தாழ ஒருவார காலம். செங்கிப்பட்டி சுற்று கிராமங்களில், மக்கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை, உறங்க முடியவில்லை, உண்ண முடியவில்லை. எந்நேரமும் காவல்துறை மற்றும் ஆள் காட்டிகளின் கண்காணிப்பிலேயே உழன்றனர் மக்கள்.
நான் வெகுதொலைவில் ஒரு கிராமத்தில், தங்கிவிட்டேன். ஏறத்தாழ 60விழுக்காடு தீக்காயம். முறையான மருத்துவம் பார்க்க இயலாததாலும், ஒளிந்துகொள்வதற்காக கழிவு நீர்க் குட்டையில் பதுங்கியதாலும் காலிலிருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியது.

ஊடகங்களில் இந்த நெருக்கடி நிலையைப் பதிவு செய்தால், ஓரளவு தளர்வாக இருக்கும் என்றெண்ணி, எனது ஊடக நண்பர்களுக்குப் பேசிக் கொண்டே இருப்பேன். எல்லோரும் பதற்றமடைந்தார்கள், வருந்தினார்கள். ஆனால், எவராலும் இச்சம்பவங்கள் குறித்த ஒரு துண்டுச் செய்தியைக் கூட கொண்டுவர முடியவில்லை.

அப்படி ஒரு நெருக்கடியை திரு.கருணாநிதி அரசு ஊடகங்கள் மீது தொடுத்திருந்தது நண்பர்களே!
வழக்கில் தொடர்புடைய போராட்டக்காரர்களைச் சரிவரக் கைது செய்யவில்லை என்பதற்காக, ஒரு காவல்துறை ஆய்வாளர் மீது துறைவாரி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.

அதாவது, அவரது இவ்வளவு கெடுபிடிகளும் போதாது, மேலும் ஒடுக்குமுறையை ஏவ வேண்டும் என்று பொருள்!

அதன் பின்னரும், அவர்கள் முகாமையாகத் தேடிய எவரையும் அவர்களால் கைது செய்யவே இயலவில்லை. இறுதியாகப் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது காவல்துறை. திரு.ஸ்டாலின், திரு.ரெ.கருணாநிதி, திரு.மாதவன் உள்ளிட்ட சிலர் ஒப்படைக்கப்பட்டனர். தேடுதல் வேட்டையைக் காவல்துறை நிறுத்திக் கொண்டது.

நான், தஞ்சைக்குத் திரும்பினேன். சீழ் பிடிக்கும் நிலையில் இருந்த கால், மெல்ல மெல்ல குணமானது. ஏறத்தாழ இரு மாதங்களுக்குப் பின், மீண்டும் நடக்கத் துவங்கினேன்.

அதன் பின்னர், காங்கிரஸ் – தி.மு.கவிற்கு எதிரான ஆவணப்படம் ஒன்றை இயக்கினேன். இளந்தமிழர் இயக்கம் சார்பில் அப்படத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல முற்பட்டபோது, மீண்டும் தேடுதல் வேட்டை, சோதனை, கெடுபிடிகள்.

என் வீட்டில் ஏறத்தாழ 40 காவல்துறையினர் சோதனை செய்தனர். தெரு முழுக்க காவல்துறைப் படை நின்றது. இவ்வாறு அவர்கள் செய்வது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே. இந்தச் சோதனை நடந்தபோது, நான் வேறொரு இடத்தில் ஏறத்தாழ 5000 குறுவட்டுகளுடன் இருந்தேன். என்னுடன், மு.நியாஸ் அகமது இருந்தார்.

சோதனையிட்ட காவலர்கள் என் அம்மாவிடம் விசாரணை செய்தனர்.
வீடு முழுதும் சல்லடைபோட்டு விட்டு, எதுவும் கிடைக்காமல் திரும்பினர். அன்று இரவே, நாங்கள் மீண்டும் ஓடத் துவங்கினோம். இம்முறை நண்பர்கள் க.அருணபாரதியும், வெ.இளங்கோவனும் இணைந்து கொண்டனர்.

அந்த நேரத்தில், சென்னை ரிச்சி தெருவில் கூட ஒரே நேரத்தில் 10 குறுவட்டுகள் வாங்க முடியாது. எங்கள் தேவையோ ஏறத்தாழ 50,000 குறுவட்டுகள். வெளியே சொல்லவே இயலாத உத்திகளை எல்லாம் கையாண்டு, பக்கத்து மாநிலத்துக்குச் சென்று, குறுவட்டுகள் வாங்கி, ஊர் ஊராக அலைந்து தங்கி, அந்த ஆவணப்படத்தை ஆயிரக் கணக்கில் படிகள் எடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பினோம்.

ஈரோட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். நான் தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறேன். விடுதி வரவேற்பறையில் காவல்துறையினர் விசாரணை செய்துகொண்டிருக்கின்றனர். ஸ்லீவ்லெஸ் பனியன், பெர்முடா கால்சட்டையோடு தப்ப வேண்டியிருந்தது. அருணபாரதியோ, அறையின் உள்ளே இருக்கிறார். அவரது மடிக் கணினியில், போர்க் காட்சிகள் அடங்கிய ஒளிப்படங்கள் இருந்தன.
அலைபேசியில் அவருக்குத் தகவல் கூறி, சில நொடிகளில் தப்பினோம்.

இப்படியாக நாங்கள் ஓடிக் கொண்டே இருந்தோம். நாங்கள் மட்டுமல்ல, எம் போன்ற ஆயிரக் கணக்கானோர் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருந்தோம்.

இவை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஏனெனில், அப்போது ஊடகங்களில் திரு.கருணாநிதி நடத்திய ‘ஒருவேளை உண்ணாவிரதம், அவரது முதுகு சிகிச்சை, அவரது போர் நிறுத்தக் கடிதங்கள், போர் நிறுத்தப்பட்டது என்ற வெற்றிச் செய்தி, மழைவிட்டும் தூவானம் விடாததுபோல இன்றைக்கு சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற உவமை நயமிக்க அறிவிப்பு’ போன்ற செய்திகள் மட்டுமே பதிவாகிக் கொண்டிருந்தன.

நானும் அருணபாரதியும், வெ.இளங்கோவனும், நியாஸ் அகமதுவும் இன்னும் சில தோழர்களும் சில சாட்சிகள் மட்டுமே. நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் வெகு சாதாரணமானவை என்னுமளவுக்கு, நாட்டில் ஒடுக்குமுறை நிலவியது. எண்ணற்றோர் பிழைப்பிழந்து, குடும்பம் இழந்து, நிம்மதி தொலைத்துப் போராடிக் கொண்டிருந்தனர். 19 பேர் தீக்குளித்தே இறந்தார்கள் எனும்போது, அப்போதைய மனநிலையை உணர முடிகிறதல்லவா!

எத்தனை வழக்குகள், எத்தனைக் கைதுகள், எவ்வளவு அடி,உதைகள்! கணக்கிலடங்காதவை அவையெல்லாம் நண்பர்களே.

இந்தச் சூழல்களில், எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் பலர். அவர்களில், நண்பர்கள் பா.ஏகலைவன், வெற்றிவேல் சந்திரசேகர், இளையராஜா, எனது உதவியாளர் ரஞ்சித், ஓசூர் வினோத் மற்றும் விமல் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

அந்த நேரத்தில், பேருந்தை மறித்தவர்கள் கூட, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

’சிங்களப்படைக்கு ஆயுதம் ஏற்றிய ராணுவ வண்டிகள் சேலம் வழியாக கோவை வருகின்றன’ என்று குறுஞ்செய்தி அனுப்பியது மாபெரும் குற்றமாக அறிவிக்கப்பட்டது நண்பர்களே! அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நாங்கள் கோவைச் சிறையில் சந்தித்தோம்.

ஈழப் போர்க் காட்சிகள் அடங்கிய ஆவணப்படக் குறுவட்டுகள் வைத்திருந்தால் கைது, அப்படங்களைக் கேபிளில் ஒளிபரப்பினால் கைது, ராஜபக்சே கொடும்பாவி கொளுத்தினால் கைது, தங்கபாலு கொடும்பாவி கொளுத்தினால் கைது, ஊர்வலம் போனால் கைது, ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது, தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே கைது, ஈழப் போர் குறித்த துண்டறிக்கைகளை அச்சிட்டுக் கொடுத்த அச்சக உரிமையாளர்களுக்கு மிரட்டல், ஃபிளக்ஸ் பதாகைகள் அச்சிடுவோருக்குக் காவல்துறையின் எச்சரிக்கைகள், கண்காணிப்புகள் இன்னும் என்னென்னவோ நடந்தன!

ஆகவேதான், சொல்கிறேன், போர் தமிழகத்திலும் நடந்தது!

திரு.கருணாநிதியின் இந்த அணுகுமுறைகளைப் பற்றிய நூல் ஒன்றை வெற்றிவேல் சந்திரசேகர் எழுதியுள்ளார். மிகச் சிறந்த ஆவணம் அது. ’ஈழப் படுகொலையில் கருணாநிதி’ என்பது அந்த நூல்.

ஹிட்லர் தனது ஊடக அணுகுமுறைகள் மற்றும் போர் உத்திகள் குறித்து கூறியவற்றில் சில:
’பெரிய பொய்யர்கள், பெரிய மந்திரவாதிகளுக்கு ஒப்பானவர்களே’
’தாங்கள் ஆட்சி செய்யும் மக்கள் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பது அரசுகளின் அதிர்ஷ்டம்தான்’
’உண்மை ஒரு விஷயமே இல்லை; வெற்றிதான் முக்கியம்’
’பொய்யைப் பெரிதாகச் சொல்லுங்கள், அதை எளிமைப்படுத்துங்கள், அதேபொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள், நிச்சயமாக மக்கள் அதை நம்பிவிடுவார்கள்’

இவை எல்லாவற்றையும், திரு.கருணாநிதி கடைப் பிடித்தார்; தேர்தலில் வெற்றியும் பெற்றார். இப்பொழுதும் இதே உத்திகளுடன்தான் அவரது தமிழீழ ‘அரசியல்’ நடக்கிறது.

இவ்வாறெல்லாம் அவரை விமர்சிப்பதால், நான் வேறு ஏதேனும் கட்சியின் ’அரசியலை’ ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். இதுவரை, என் விரல்களில் கறை படிந்ததே இல்லை; இனியும் படியப்போவதில்லை.

வரலாற்றில் அக்கறை கொண்டவன் என்பதால், இந்த நேரத்தில் இந்தப் பதிவு ஆவணமாக வேண்டும் என்ற கடமைக்காக இதை எழுதுகிறேன். இது எனது சாட்சியம். அவ்வளவே!

எங்களது இந்த அனுபவங்களிலிருந்து எதையேனும் உணர்ந்துகொண்டு, ஈழ விடுதலைக்கு உங்களால் பங்களிக்க முடியும் என்றால், மனநிறைவடைவோம்.

Source: http://www.twitlonger.com/show/lbdnc4

முடிவுரை: ஒரு படம் மட்டும்தாங்க..

Sunday, March 17, 2013

டேய் காதலா-1

என்னை நேசித்த காதலிக்காக
அவள் பார்வையிலேயே
ஒர்
கவிதை!


                                                         


ன்னைப் பார்த்து
கண்சிமிட்டியபடி தெரு விளக்கு
விரல் நீட்டி மிரட்டிச்சென்றாய்
கோளாறு விளக்கிலா? உன்னிலா?






ன் காதுக்கும் இதழுக்கும்
இடையே பாலமாய் அலைபேசி,
யாரோ ஒரு சக்களத்திதான்
மறுமுனையில் சிரித்து,
கொஞ்சி,
பேசிக்கொண்டிருக்கிறாள்
கோவம்தான் - ஆனால்
நீ கொஞ்சுவதை
நான் எப்போதுதான் பார்ப்பதாம்
நீ என்னைக்
கொஞ்சும் போதுதான்
என் கண்கள்
திறக்கவே மாட்டேன் என்று
அடம்பிடித்து
தொலைக்கிறதே.


















பூவைத்து
என்னை அழகு பார்த்தபின்,
பூவோடு
என்னையும் சேர்த்து
கசக்கி போடுவதே
உனக்கு
வழக்கமாகிவிட்டது.
நீ என்ன குரங்கா? இல்லை
நான்தான் பூமாலையா?




ன் தீவிரவாதப்பார்வையால்
பார்த்தும் கொல்கிறாய்,
வேண்டாமென்றாலும்
அஹிம்சாவாதியைப்போல்
பார்க்காமலேயும் கொல்கிறாய்
இரண்டுமல்லாமல்
மூன்றாவதுக்கு
எங்கே போவேன்?



காதலிக்கும்போது
மனைவியாகச்சொன்னாய்,
மனைவியான போது
காதலியாகச் சொன்னாய்,
போடா லூசு,
உனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா?




(தொடரும்)

Thursday, March 14, 2013

இணையவாதிகளுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?

"இணையவாதிகள் கொதிக்கிறாங்க, இவுங்க சமூகத்துல இருந்து தனியாத் தெரியறாங்க. சமூகத்துக்கும் இவுங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை
அப்படின்னு ஒரு நண்பர் சொன்னாரு. அதுக்காகத்தான் இந்தப் பதிவு.


தினமும் நமக்கு பேச, எதாச்சும் ஒன்னு புதுசு புதுசாக் கிடைக்கனும். அதாங்க, ஏதாவது ஒரு வீட்டுக்கு முன்னாடி, விசாலமான திண்ணையில் பெருசுங்க உக்காந்துகிட்டு, வெத்தலை இடிச்சிகிட்டே ஊர்க்கதை பேசுவாங்க இல்லை.. அட, அதுவுமில்லைன்னா, ஓசியிலோ இல்லை கடன் வெச்சோ டீ குடிச்சாலும், ஒரு பத்தி விடாம பத்திரிக்கையைப் படிச்சிட்டு வம்பளப்பாங்களே டீக்கடை பெஞ்ச், இப்படி இருக்கிற இன்னொரு இடம்தாங்க இந்த இணையத்துல இருக்கிற சமூக வலைதளங்கள். சினிமா விமர்சனமோ, கவர்ச்சி நடிகைகளின் கல்யாணமோ, ஈழப்பிரச்சினையோ, ஏதாச்சும் ஒன்னைப் பேசிக்கிட்டே இருப்பாங்க. தினமும் எதாவது ஒன்னு சூடாகிடும். மாணவர்கள் பிரச்சினையைப்பத்தி ரத்தம் கொதிக்கிற மாதிரி பேசிட்டே இருப்பாங்க. பாலாவோட பரதேசி டீசர் வந்தவுடனே, அதை மறந்துட்டு பாலாவை திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் புதுசா வந்த போப் பத்தி, இப்படி தடம் மாறிட்டே இருக்கு இணையவாதிகளின் பேச்சு.


" Loneseoவின் Rhinocerros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகத்துக்கு வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் முக்கியமான ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருக்கும்போது, முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும் திடும் என்று புழுதியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் incongruity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா, ஆப்ரிக்க வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!"

மேலே இருக்கிறதைச் சொன்னது, கணையாழியின் கடைசிப் பக்கங்கள்ல - ஆகஸ்ட் -1973ல் சாட்சாத்  வாத்தியார் சுஜாதா சொன்னதேதான். அப்ப இருந்த நிலைமைக்கு அவர் சொன்னது, திண்ணைப்பேச்சாளர்களுக்கோ, டீக்கடை பெஞ்ச் தேய்ச்சவங்களுக்கோ. ஆனா இன்னிக்கு அதே இணையவாதிகளுக்கும் பொருந்துது. இதுல இருந்து என்ன தோணுது... இருங்க இருங்க இன்னொன்னையும் சொல்லிடறேன்.

எஸ்.வி. சேகர் ஒரு நாடத்துல சொல்லியிருப்பாரு, "பரபரப்பான செய்தின்னா, முதல் ரெண்டு நாள் முதல் பக்கத்துலையும், அப்புறம் ரெண்டு நாளைக்கு 2ம் 3ம் மூன்றாம் பக்கத்துலயும், ஒரு வாரங்கழிச்சுப் பார்த்தா கடைசிப்பக்கத்துலேயும், அடுத்த வாரம் அந்தச் செய்தியே இல்லாமையும் போயிடும்"னு நாளிதழ்களை பத்தி கிண்டலாச் சொல்லியிருப்பாரு.


தையேத்தான் இணையவாதிகளும் செய்யறோம். இதுல ஒரு வித்தியாசமும், இல்லை. அதனால Moral of the Story is நாம மாறவே இல்லை. பேசுறதுக்கான இடம்தான் மாறியிருக்கோ ஒழிய, முறை மாறவேயில்லை.

Thanks: Img From Dinamalar- Tea Kadai Bench

Tuesday, March 12, 2013

Cloud Computing என்றால் என்ன? கொளுவுக் கணிமை

முதலில் வருவது cloud computing. சட்டென்று இதற்கான கலைச்சொல்லைச் சொல்லாமல் விளக்கம் தந்தே சொல்லுகிறேன். முதன்முதலில் இது போன்ற கலைச்சொற்களைத் தரும்போது விளக்கமும் கொடுத்துச் சொற்களைத் தந்தால் நன்றாக இருக்கும். ஏதொன்றையும் தமிழில் முதலில் எழுதும் போது, புதுச் சொற்கள் பயிலவேண்டிய கட்டாயத்தில் இதுபோன்ற விளக்கமும் கொடுத்து ஆக்கத்தை எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

-------------------

ஒவ்வொரு கணிப்புதிரியின் (computing problem) சிக்கலான தன்மையைப் பொறுத்து அதைத் தீர்ப்பதற்கு கணித்திறன் (computing capacity) தேவைப்படும். கணித்திறன் கூடக் கூடக் கணியின் விலையும் கூடும். ஒவ்வொரு கணிப்புதிரிக்காகப் கணித்திறன் கூடிய புதுப்புதுக் கணிகளை உருவாக்கிக் கொண்டிருக்க முடியாது.



பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அதிகப்பட்ட கணித்திறன் தேவைப்படும், கணிப்புதிரிகளைச் சுளுவ (to solve) வேண்டும் போது, கணியாளர்கள் தங்களிடம் இருக்கும் ஒருசில குறைதிறன் கணிகளைச் சரஞ்சரமாகவோ (series), இணையாகவோ (parallel) கம்பிகளாலும் (wires), வடங்களாலும் (cables) பிணைத்து புதிரிகளின் தீர்வுகளைக் காண முயலுவார்கள்.



சரி, இது போன்ற பிணைப்புக்களால் ஓரளவுக்குப் பெரும்புதிரிகளைச் சுளுவியெடுக்க (to solve) முடியும் என்றாலும், அதிலும் சிக்கல் ஏற்படுகிறது. பலநேரங்களில் இந்தக் கணிகளை ஒரேயிடத்தில் ஒன்றுசேர்க்க முடிவதில்லை. அவை பல்வேறு இடங்களில், ஏன் பல்வேறு நாடுகளில், கூட இருக்கக் கூடும். அவற்றை ஒன்று சேர்த்து ஓரிடத்திற்குக் கொண்டுவந்து பிணைத்துக் கணிப்பது என்பது மிகப் பெருமாண்டமான செலவைக் கொண்டுவருகிறது. மாறாக இந்தக் காலத்தில் உலகெங்கும் இருக்கும் பல்வேறு கணிகளை (அவை 100, 1000, 100000 என்று எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். அவை எல்லாவற்றையும்) “இணையம்” என்ற வலையால் ஒன்றிணைக்க முடியும். பூதியல் (physical) முறையில், கம்பி, வடங்கள் வழி கணிகளை இணைப்பதற்குப் பகரி(substitute)யாக, ஒரு கணியை இணைய வலையில் (internet web) பிணைத்து எங்கெங்கோ இருக்கும் கணிகளையும், நம் கணியையும் ஒரு கூட்டுப் பொதியாக்கி, கூட்டுறவு முறையில், ஒரு கணிப் புதிரியைச் சுளுவுவதையே cloud computing என்று சொல்கிறோம்.



சரியான கணிக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் (computer control protocols) இருந்தால் ஒரு கணியின் இயக்கக் கட்டகம் (operating system) இந்த வலையின் மூலம் எண்ணற்ற கணிகளை இயக்க முடியும். அதே போல 4, 10 கணிகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய இயக்கக் கட்டகங்களை ஒருங்குறச் செயற்பட வைத்து 10000 கணிகளைக் கூடச் செயற்பட வைக்கமுடியும். பலநேரம் எந்தக் கணி கட்டுறுத்துகிறது (which is controlling), எந்தக் கணி கட்டுப்படுகிறது (which is getting controlled) என்று சொல்ல முடியாதபடி அவை மாறி, மாறிச் செயற்படலாம்.



இந்தக் கணிகளின் இணைப்பு இந்த முறையில் தான் ஏற்பட்டது என்று கணுவலை அடவுகளைக் (network design) காட்ட முடியாதபடி கணிகள் முனைகளாக (nodes) ஒருங்கிணைந்து செயற்படும். எப்படி ஒரு மேகத்தினுள் மழைக்கருக்கள் (condensation droplets) சேர்ந்து பஞ்சுபோல் உருக்கொண்டு புதுப்புது உருவம் எடுத்துச் சூழ்நிலைக்கு ஏற்ப பெருகிச் சுருங்கி விரிகின்றனவோ, அது போல இந்த கணி முனைகளும் (கணிக் கருக்களும்) தமக்குள் ஒன்றிணைந்து இயங்கி, கொடுத்திருக்கும் கணிச்சிக்கலைச் சுளுவித் தருகின்றன என்பதால் கணித் திரளைச் சுட்டுவதற்கு மேகத்தை உருவகமாக்கிக் காட்டுவார்கள்.



தமிழில் கொண்டல் என்ற சொல் மேகத்தைக் குறிக்கும் சொல். மழைக்கருக்கள் திரண்டு இருப்பதைக் கொள்ளுதல் என்று சொல்லுவார்கள். குள்>கொள்>கொண்டு>கொண்டல் என்று அந்தச் சொல் உருவாகி, மழைக்கருக்கள் பொருந்திய மேகத்தைக் குறிக்கும். கொண்டல் குளிரும் போது மழை பொழியும். குள்ளுதல் என்பது திரளுதல். குள் என்னும் வேரில் இருந்து பிறந்த கூட்டச்சொற்கள் தமிழில் ஏராளம். இங்கே கொண்டல் என்பது இயற்கையில் வலையும் இல்லை, இணைப்புமில்லை, பிணைப்புமில்லை. அது ஒரு திரள். தாமாகவே திரளும் கூட்டம்.



இப்படித் திரள்வதை agglutination என்றும் ஆங்கிலத்தில் சொல்லலாம். குள்>கொள்>கொளுவு>கொளுவதல் என்பது தமிழில் agglute என்பதைக் குறிக்கும். நம்முடைய கணித் திரளில் வலை இருக்கிறது; இணையம் இருக்கிறது. ஆனால் ஒரு புதிரியைச் சுளுவ, எந்தக் கணி எத்தனை கணிகளோடு பிணைந்தது என்பது குறிப்பிட்டுச் சொல்ல முடியாததால் அது திரள் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. திரளுதல் என்பதை கொளுவுதல் (agglute) என்றும் சொல்லலாம். Tamil is an agglutinative language - தமிழ் ஒரு கொளுவு நிலை மொழி என்று சொல்லுவார்கள். கொளுவுக்கும் கொண்டலுக்கும் அடியில் இருக்கும் கருத்துத் திரளுதலே. இங்கே கொண்டல் என்ற சொல்லை அப்படியே நேரடியாகப் புழங்காமல், பின்னால் ஏற்படக்கூடிய கூட்டுச் சொற்களுக்கு வாய்ப்பாகக் கொளுவு என்பதை முன்சொல்லாக்கிக் cloud computing என்பதைக் ”கொளுவுக் கணிமை” என்று சொல்லலாம். கொளுவு என்ற சொல்லிற்குள் ”திரள், எங்கெங்கோ இருக்கும் கணிகள், இணையம், பிணைப்பு” என எல்லாமே உள்ளூற அடங்கி விடும்.

--------------------



அடுத்தது On line [learning, resources] இதைச் சிறிது காலமாகவே எடுகோடு என்ற சொல்லாற் குறித்து வருகிறேன். எடுத்துக் கொள்ளும் நிலையும் இருக்கும் கோடு. He is always online = எப்பொழுதும் அவர் எடுகோட்டில் இருப்பார். [எங்கெல்லாம் ஆங்கிலத்தில் online வருகிறதோ அங்கெல்லாம் எடுகோடு என்பது சரியாகவே பொருந்துகிறது. பல்வேறு வாக்கியங்களை வைத்துப் பாருங்கள். ஏதேனும் விதிவிலக்கு இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்.



எடுகோட்டுப் படிப்பு = online learning. எடுகோட்டு ஊற்றுகைகள் = online resources. மூலங்கள் என்ற சொல்லை resources என்பதற்கு இணையாக நான் பயன்படுத்துவதில்லை. முளை, மூலம் என்ற சொற்கள் roots என்பதை ஒட்டிவரும் மெய்யியற் சொற்களுக்கே பயன்படுத்துகிறேன். ஊற்று/ ஊற்றுகை என்பது ஊறிவரும் நீர்ப்பொருள் என்பதால் அறிவுப் பொருளைக் குறிக்கமுடியும்.



அன்புடன்,

இராம.கி.
 
 
http://valavu.blogspot.com/2010/03/cloud-computing.html இதனுடைய நகல்தான் இந்தப் பதிவு. பலரைச் சென்றடையும் என்ற எண்ணத்தில் . நன்றி இராமி.கி ஐயா அவர்களுக்கு

Tuesday, March 5, 2013

கணேஷ்குமார் மோகன் - குறும்படங்களின் குறுநில மன்னன்

நாளைய இயக்குனர்,  இந்தளவுக்குப் பிரபலமாகாத காலம்னு நினைக்கிறேன். தமிழ் குறும்படங்கள் வெகு சொற்பமாய் இருந்த காலம் அப்படின்னு நினைக்கிறேன். அப்பத்தான் இவரோட குறும்படம் ராமசாமியை யூட்யூப் மூலமா பார்க்கிற சந்தர்ப்பம் கிடைச்சது. அடடே, நல்லாயிருக்கே அப்படின்னு பலரும் இவர் பக்கம் திரும்பிப் பார்த்த சமயம் அதுதான்னு நினைக்கிறேன்.

ராமசாமி - வி.கே.ராமசாமியின் ஒரு காட்சியை அடிநாதமா வெச்சி சிரிக்க வெச்ச படம் அது. வெங்கட் சுந்தரோட அபாரமான நடிப்பு இல்லை, இல்லை  அசால்ட்டான நடிப்புதாங்க படத்துக்கே பலம். இதுக்கும் பெரிய தொழில் நுட்பமில்லாத, பெரிய பட்ஜெட் எதுவுமில்லாத, இசைக்குன்னு தனியா ஒரு ஆள் கூட இல்லாம, பின்னி எடுத்த படம்.வசனம், நடிப்பு, காட்சி இவ்வளவுதான் இந்தப் படத்துக்கு ஆதாரம்.

இராமசாமி - குறும்படம்




====0oo0=====

அப்புறம் கொஞ்ச நாளிலேயே வந்துச்சு ஒரு பாட்டு.  அதிபுதிரியாக ஹிட் அடிச்சுது, அதுதான் இவரின் அடுத்தக் குறும்படத்தின் பாடல் - அது ஊருக்கு 4 பேரு. சுருக்கமாக O4P. அந்த பாட்டுக்கு இசையமைச்ச பாலமுரளிக்கு செம திருப்பு முனையா இருந்துச்சுன்னு சொல்லிக்கலாம். படத்தை திரையரங்கத்துல எல்லாம் வெளியிட்டு, அதாங்க Screening [ஒன்னு ரெண்டு காட்சிகள் மட்டும் ஓடும்]. தொழில்நுட்பத்துல ஒரு திரைப்படத்துக்கான அத்தனை அம்சங்களும் இருந்துச்சு

னக்கோ ஆச்சரியமான, ஆச்சர்யம், இந்தச் செய்திகளை எல்லாம் Facebook வழியாத்தான் தெரிஞ்சிகிட்டேன். இதற்காக இவர் செலவு செய்த  பணமும், நேரமும் அதிகமா ஆகியிருக்கும். என்னமோ திட்டமிருக்கு.

====0oo0=====

குறும்படம் ஊருக்கு 4 பேரு



ருக்கு 4 பேரு, பெரிய ஹிட் ஆச்சு. அபிநவ் (படத்தொகுப்பு) அவரோட அந்தப் படத்தோட லெவலே வேற மாதிரி ஆகிருச்சு. சினிமா மக்களெல்லாருமே இந்தப் படத்தை கண்டிப்பா பார்த்திருப்பாங்க. அதுவும் MLMஐ வெச்சி, நல்ல நோக்கத்தோட வந்ததால உண்மையாலுமே அதிரிபுதிரியா ஹிட்டடிச்சுது. பல விவாத மேடைகளில படத்தோட சாரம்சத்தைப் பத்தி பேசினாங்க.உண்மையாகவே MLM பத்தி பலருக்கும் இருக்கும் கேள்விகளை வெளிச்சம் போட்டு கேட்டாங்க. பதில் இல்லைங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அதுவும் இணையத்துல 10 நிமிசத்துக்கு மேல குறும்படம்னாவே ஓட்டிவிட்டு பார்க்கும் காலத்துல சற்றேறக்குறைய 30 நிமிசத்துக்கு படமெடுக்கிறதுக்கும் ஒரு தில் வேணும்

இவுங்க குழுவுல, ஆரம்பத்தில இருந்தே ஒளிப்பதிவுல கலக்கிட்டு இருக்கிறார். KB Prabhu.


====0oo0=====

ஆனா இதுக்கெல்லாம் முன்னாடியே(?!) 536 அப்படிங்கிற குறும்படத்தை எடுத்திருக்காங்க அப்படிங்கிறது பலரும் அறிந்திராத செய்தி. அது உங்களுக்காக

குறும்படம் - 536




ஒரு சமயம் இவுங்களோட பேட்டி கோவையில தனியார் சேனல்ல ஒளிபரப்பாச்சு. அதுலதான் தெரிஞ்சது இயக்குநர் ஷங்கர் அழைச்சதையும், இவர்னால அவரிடம் உதவியாளரா சேரமுடியாத நிலையையும் இதுல சொல்லிருந்தாரு. ஆனா சரியான முடிவை கணேஷ் எடுத்திருக்காருன்னு நான் நினைக்கிறேன்.  

அப்புறம் மஞ்சள் வெயில் அப்படின்னு ஒரு படம்னாங்க, அது என்னாச்சின்னே தெரியலை(???!).



====0oo0=====

வெங்கட் வேற ரெண்டு குறும்படத்துல படத்துல நடிச்சாப்ல. நாளைய இயக்குனர்ல கூட வந்தாப்ல. வெங்கட்டுக்கு ஷங்கர் படத்துல வாய்ப்பு கிடைக்கவும் இது உதவுச்சுன்னா பாருங்களேன். நண்பன் படத்துல விஜய்க்கு சீனியரா நடிச்சிருப்பாப்ல.

YesKay தனியா படம் செஞ்சிருந்தாரு. (http://www.youtube.com/watch?v=kqxA_9hUCi0).

பாலமுரளி- பல குறும்படங்களுக்கு இசையமைச்சிருக்காரு.  சமீபத்துல வெளியான புத்தகம் திரைப்படத்துக்கும் சில காட்சிகளுக்கு இசையமைச்சிருக்கிறதா கேள்வி.

அபிநவ்வோட பேரை பல குறும்படங்களில் பார்த்தேன். நாளைய இயக்குனர்ல வந்த பல படங்களில், இவுங்களோட பங்களிப்பு கண்டிப்பா இருக்கு.

====0oo0=====

2012ல் குட்டீம்மா படத்தைப் பத்தி சொன்னாங்க, படத்தோட trailer வந்திச்சு, அதுவும் சமீபமாத்தான். படத்தைப் பல இடத்துல  Screening பண்ணியிருக்காங்க. பெரிய வெற்றின்னு வேற சொல்றாங்க. படம் Youtubeல வரும்னு காத்திட்டு இருக்கேன்.



B.லெனின், பாலு மகேந்திரா, அம்ஷன் அப்படிங்கிறவங்க எல்லாம் 1980/90களிலேயே இந்தக் குறும்படம்/Documentary எல்லாம் செய்த முன்னோடிகள். 

====0oo0=====
திரைப்படத்திற்காக குறும்படங்களை ஒரு Profile ஆ செய்வாங்க. அதுல கணேஷ் மாபெரும் வெற்றி பெற்றிட்டாரு. குறும்படங்கள் மூலமா பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வெச்ச கணேஷுக்கு வாழ்த்துகள். குறும்படங்களுக்காக இருந்த பல பார்வைகளையும் மாத்தினதுல கணேஷூக்கு முக்கிய இடமுண்டு. இப்பவும் பலர் குறும்படம் எடுத்தா அது Youtube/Vimeoவுல வந்தாப் போதும்னு நினைக்கிறாங்க. இல்லைன்னா நாளைய இயக்குனர். இதுதான் இன்னிக்கு இருக்கிற தமிழ் குறும்பட சூழல்.



கூடிய சீக்கிரம் நாங்க உங்களை ஒரு திரைப்பட இயக்குநராப் பார்க்கனும் பாஸூ.

இப்படிக்கு

இதுநாள் வரைக்கும்  வெகுதொலைவிலிருந்து உங்களைத் தொடரும் ஒரு ரசிகன்

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)