Thursday, October 11, 2012

32/365 ராஜாவுமா காப்பியடிச்சார்?

ஒரு சமூக வலைதளத்துல இந்தப்படத்தை பகிர்ந்து "இது ரொம்ப தப்பு" , பெண் என்பவள் சிகரெட் பிடிப்பது தப்பு, கேவலம்,, அசிங்கம் அப்படின்னு எல்லாம் பேசிட்டு இருந்தாங்க.  உண்மைதான், புகைப்பழக்கம் என்பது தப்புதான். ஆனா அதைப்பத்தி அங்கே பேசலை.. பெண் சிகரெட் பிடிப்பதுதான் தப்பு அப்படிங்கிற மாதிரி பேச்சு இருந்துச்சு. பெண்கள் சூழ நிக்கும்போது ஆண்கள் சிகரெட் பிடிக்கிற மாதிரி  போஸ்டர் வந்தப்ப இதையே சொல்லியிருக்கலாமே?  என்ன மாதிரியான ஆணாதிக்க சமூகம் இது.

ஒவ்வொரு தெரு முக்குலையும் பொட்டி கடை வெச்சி ஆண்கள் பீடி, சிகரெட் குடிக்கலாம், ஆனா பெண்கள் குடிக்கக்கூடாது. பெண்கள் மது குடிச்சாலும் தப்பு. மதுவோ, புகையோ - எந்தப் பழக்கமிருந்தாலும் அந்தப் பெண்ணை ஆண்கள் பார்க்கும் பார்வை இருக்கே.. காமத்துலதான் முடியும். 

திருந்துங்க ஆண்களே.. கெட்ட பழக்கம், தப்புன்னு சொல்லுங்க. சரி. அது என்ன ஆண்களுக்கு மட்டும்தான் சிகரெட் பிடிக்கிறதுன்னு எழுதி வெச்சிருக்கா என்ன? தப்போ, சரியோ பெண்களை சரிசமமா நடத்துங்க..




டைம்பாஸ் விகடன்

விகடனின்  டைம்பாஸ் பற்றி சுரேஷ்கண்ணன் எழுதிய  பதிவு  பிடித்தது. அதுவும் இந்த வரிகள் நெத்தியடி


காந்தியை நினைவுப்படுத்தும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் தலையில் கொம்புடனும் இருக்கும் விகடன் தாத்தாவின் உருவத்தை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் கேலிச்சித்திரங்களில் உருவம் சிறிது சிறிதாக மாறி விபரீதமான அர்த்தத்தை தருவதைப் போன்று தாத்தாவின் தலையிருக்கும் கொம்பு நீண்டு 'டைம்பாஸ்' வடிவில் ஒரு சாத்தான் உருவமாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

டைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'


 ராஜாவுமா? 

ராஜாவுமா? அப்படின்னு கேள்வி கேட்க வெச்சது இந்த இசை. 20ம் நூற்றாண்டுல ஸ்பானியர்  Antonio Ruiz-Pipo - Danza No1. அப்படியே சுட்டிருக்காரு போல. இணையம் இல்லாததால, அந்தக் காலத்துல தெரியலை.. இன்னுமா தெரியாம இருக்கும்?




மின்சார கனவு
தமிழ்நாட்டுல(சென்னை தமிழ்நாடு இல்லையே, எப்பவுமே மத்த மாவட்டத்தை விட்டு தணிச்சுத்தானே இருக்கு) மின்சார நிறுத்தம் தொடர்பாக துணுக்குப் படம்








6 comments:

  1. நீங்க ரொம்ப லேட். இது இணையம் வர முன்பே பிரபலமான விடயம். இணையம் வந்த பின் சகல இடங்களிலும் அடிபட்ட விடயத்தை இருவது வருசத்துக்கு பின் இப்ப எதோ கண்டு புடிச்ச மாதிரி போடுறீங்க. 1995 ம ஆண்டு இணையத்தில் பார்த்திருக்கிறேன். அதற்கு முன் புத்தகங்களில் அடிபட்ட விடயம்.
    ராஜா முரட்டு காளை படத்தில் இந்த பூவுக்கும் வாசம் உண்டு என்ற பாடலின் பல்லவியில் முழுமையாக பயன்படுத்தியிருப்பார். சரணம் முற்றிலும் வேறாக இருக்கும்.

    இதே மாதிரி சில பாடல்களை மேற்கத்தைய இசையை தழுவி அமைத்திருப்பார்.
    எ பி சி நீ வாசி என்ற பாடல் சிறந்த உதாரணம். (அக்கரை சீமை அழகிலினிலே மனம் மாற கண்டேனே,

    இவர் மட்டுமல்ல மெல்லிசை மன்னர் இந்த விடயத்தில் குறைந்தவர் அல்ல. பல உதாரணங்கள் உண்டு.

    ரஹ்மானும் விதி விலக்கல்ல.
    ரஹ்மானும் விதி விலக்கல்ல.

    ReplyDelete
  2. சார் நீங்க நான் ராஜாசார் கடய எப்போ சார் தொரப்பிங்க

    ReplyDelete
  3. பெண்ணியவாதி இளா அவர்களே இப்படி எல்லாத்துலையும் போட்டி போட்டுத்தான் சரக்குவெல எக்கச்செக்கமாயிப்போச்சு...
    சிகரட்டையாவது விட்டுவைங்க சாமிகளா :-)

    எந்தப்பூவிலும் வாசம்முண்டு இந்தப்பாட்ட ஸ்பேனிஸ்ல பாடுனா எங்களுக்கு எப்படி பிரியும் ஜொள்ளுங்க.....

    ReplyDelete
  4. :-)

    #என்னோட கமண்டே இப்புடித்தான் இருக்கும்.... ஒண்ணியும் கவலைப் படாம தூங்கவும்...

    ReplyDelete
  5. காப்பி மன்னர்கள்.சரி நமக்கு தெரியாததை நமக்கு அறிமுக படுத்தினார்கள் என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete
  6. அண்ணே! இளையராஜா பத்தி சொன்னது ரொம்ப லேட். ஏற்கனவே இது பிரபலம்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)