பதிவுகளால் சம்பாரிக்க முடியாதுன்னு சொல்றவங்களுக்கு ஒரு சவால்...
புதுசா ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அதில் சேர்ந்தால் 6-12 மாதங்களில் கண்டிப்பா லட்சாதிபதி ஆகிடலாம். எப்படின்னு கேட்குறீங்களா?
இதுக்கு அடிப்படைத் தேவை
1. கண்டிப்பாக ஒரு பதிவாவது வைத்திருக்க வேண்டும்.
2) குறைந்தது 3 இடுகைகள் (செய்திகளை ஒட்டி வெட்டியாவது).
3) குறைந்தது 3 திரட்டிகளில் இணைத்திருக்க வேண்டும்.
4) குறைந்தது 5 பின்னூட்டங்கள் (அடுத்தவர்களின் பதிவில்) இட்டிருக்க வேண்டும்.
அவ்வளவுதான். இது உங்களால முடியாதா? இதைக் கூட செய்ய முடியாத சோம்பேறிப் பதிவர்கள் இந்தத் திட்டத்தில் சேர அருகதையற்றவர்கள். வாழ்வில் உழைக்கவேண்டும், நிறைய காசு பார்க்கவேண்டும் என வாழ்வில் உயர்ந்த லட்சியம் கொண்டவர்களால மட்டுமே முடியும், திட்டமிது. சும்மா பதிவு போட்டோமா கிளம்பினோமா என்றிருக்கும் ஏனோதானோ பதிவர்கள் மன்னிக்க.
திட்டத்தில் சேர,
1. ஆளுக்கு ரூ 5,000 கட்டி உங்களது பதிவில் எங்களது Badge/Widget இணைத்துக்கொள்ள வேண்டும். Badge/Widget இணைத்துவிட்டு எடுத்துவிடும் பதிவர்களுக்கு கண்டிப்பாக பணம் வாபஸ் தர இயலாது.
2. நீங்க ஆளுக்கு 3 பதிவர்களை இதில் உறுப்பினர்களாக சேர்த்துவிட வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டியது.
உங்களின் மூலம் 10வது உறுப்பினர் சேரும் போது உங்களுக்கு அவரது தொகையிலிருந்து ரூ.1500 அளிக்கப்படும். அதன்பிறகு வரும் அனைத்துப் பதிவர்களுக்கும்/உறுப்பினர்களுக்கும் ரூ1,500 வந்துகொண்டே இருக்கும். தமிழில் சுமார் 9000 பதிவர்கள் இருக்கிறார்கள்.
உங்களின் மூலம் 10% மக்கள் இணைந்தாலும் அதனால் உங்களுக்கு ரூ.1,35,500 கிடைக்கும். இது 10 நாட்களுக்குள்ளும் நடக்கலாம். இதனால் குறைந்த நாட்களில் லட்சாதிபதி ஆகிவிடலாம்.
எல்லாம் உங்கள் கைகளில், நம்பிக்கையை மூலதனமாக வையுங்கள், உழைப்பை முன்னிறுத்துங்கள்,.
வாருங்கள் லட்சாதிபதி ஆகலாம்.
இவண்
பதிவர்கள் Pvt Ltd.
Friday, August 31, 2012
Thursday, August 30, 2012
7/365 ஏமாற்றமளித்த சென்னை பதிவர் சந்திப்பு
பதிவர் வட்டம், பதிவுலகம் பற்றிய பதிவுகளை தவிர்த்தே வந்தேன். 1.அயர்ச்சி 2.என் பதிவால் சூழல் கெடுவது, என இரண்டே காரணங்கள்தான். ஏற்கனவே "அதைப்" பற்றிய பேச்சுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதாலே இந்தப் பதிவு.
ஒரு நிகழ்ச்சி நடத்துவதென்பது பெரிய காரியம், அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய விழா குழுவினருக்கு வந்தனங்கள். விழாவில் அளிக்கப்பட்ட விருந்து பற்றி இதுவரையில் யாரும் குறை சொல்லாதவண்ணம் பார்த்துக்கொண்டது மிகப்பெரிய விசயம்.
இப்போ பதிவு...
தாமிரா மற்றும் அதிஷா : உங்களை அழைக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை, அவர்கள் எந்தப் பெயரையும் வைத்துக்கொள்ளலாம், அதுக்கான அங்கீகாரம் பெறப்படவேண்டிய ஆட்கள் நீங்கள் இல்லை, அதே போல அவர்களால் செய்து கொள்ளும் செலவிற்கு நீங்கள் கவலைப்படுவதன் அர்த்தமும் புரியவில்லை. இது போல இங்கே(அமெரிக்கா) வாரா வாரம் சந்திப்பு நடக்கிறது. உங்களை எல்லாம் அழைக்க வேண்டிய கட்டாயம் எனக்கில்லை, நீங்களாக வந்து கலந்துகொண்டால் வேண்டாமென நானும் சொல்லவில்லை. அமெரிக்கா, பெங்களூர், ஈரோட்டில் நடைபெற்ற சந்திப்புக்கு எல்லாம் நான் உங்களை அழைத்ததில்லை.பரந்துப்பட்ட உலகில் அதுவும் சமூக வலைதளங்கள் தலைமுறையில் ஆங்காங்கே குழுவாக இருப்பது சகஜம்தான். அவரவர்க்கு அவரவருடைய சுற்றமே உலகு.
பதிவே எழுதாத பதிவர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ் அனுப்பவேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவேண்டும்? திண்ணை காலியாக்க வேண்டாமா?
2007 - பதிவர் பட்டறையின் போது அதனை ஒருங்கிணைத்த நண்பர்களின் பங்கு/அருமை, அனைவரையும் அரவணைத்துச் சென்ற பாங்கும், அதன் அருமையும் இப்போது புரிகிறது. விழாவை நடத்தும் தலைமை மற்றும் செயலாற்றுபவர்களின் செயல்களிலிருந்தும் நடந்து கொள்ளும் விதத்திலேயும் அதன் வெற்றி இருக்கும். இந்தச் சத்திப்பும் அவ்வாறே அதனை பிரதிபலிக்கிறது.
ஒரு சந்திப்பை பலரும் கேள்வி கேட்பார்கள், அதற்குப் பதில் சொல்லும் உரிமை அதனை நடத்துபவர்களுக்கே உண்டு. சிலர் பதிலளிப்பார்கள், சிலர் மறுக்கலாம், அது அவரவர் உரிமையும், நேரமின்மையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
அதனால் கேள்வி கேட்காதீர்கள், கேட்டு, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமிருந்து இப்படியானதொரு பதில் வந்தால் அதிர்ச்சி அடையாதீர்கள்.
Source- Thanks: http://pattikattaan.blogspot.com/2012/08/blog-post_29.html
பதிவுலகம் ஒரு கட்டுக்குள் அடங்காத காட்டுக் குதிரை, அதற்கு கடிவாளமிட்டு பெயரிட்டு, முதலாளியாக ஆக விரும்புபவர்களுக்கு வெட்டிப்பயல் இட்ட பதிவே காலத்திற்கும் போதுமானது.
2006 வரைக்கும் தமிழ் பதிவுகளின் வீச்சு இந்தியை விட அதிகமாக இருந்தது. இப்பொழுது நாம் அனுபவிக்கும் இந்த வசதி இல்லாத காலத்தில் அதற்காக பாடுபட்ட உமர்தம்பி, காசி, மதிகந்தசாமி மற்றும் தமிழ்மண அன்பர்களை (பெயரை உபயோகப்படுத்துவதற்கு மன்னிக்கவும்) நாம் ஒவ்வொரு சின்ன சின்ன சந்திப்பிலும் நினைவு கூர்தல் தேவையானது இல்லை.
சென்னை பதிவர் சந்திப்பைப் பற்றிய என்னுடைய வருத்தம் இதுதான்:
சந்திப்பு நடந்து முடிந்து பலநாள் ஆகியும், நிகழ்ச்சி நடந்த விதம் பற்றிய ஒரு முழுமையான பதிவையும் இன்னும் நான் படிக்கவில்லை/என் கண்ணில் படவில்லை. சந்திப்பில், என்னைக் கிள்ளிட்டான், முடியை புடிச்சி இழுத்துட்டான் என்கிற பாங்கிலேயே அனைத்துப் பதிவுகளும் என் கண்ணில் படுகின்றன. ஏன் முழுமையான ஒரு பதிவும் இன்னும் வரவில்லை. சுரேகா ஆரம்பித்திருக்கிறார் என நினைகிறேன். பட்டிக்காட்டான் கணக்குக் காட்டிய பதிவை மட்டுமே ஒரு முழுமையான பதிவாக எண்ணுகிறேன். (பி.கு: மேலே இருக்கும் ஒரு படம் இந்தப் பதிவின் ஒரு மறுமொழியிலிருந்து எடுத்ததே).
இதனால் என்னைப் போல வெளியூரில் இருக்கும் ஒவ்வொரு பதிவருக்கும், இந்த சந்திப்பில் என்ன நடந்தது என இதுவரையில் முழுமையாக அறிந்திராத வகையில், இந்தச் சந்திப்பு ஏமாற்றமே அளிக்கிறது
மற்றபடி நண்பர்கள் குழுமமாக ஒரு நிகழ்ச்சி நடத்தியதற்கு வாழ்த்துகள்!
Wednesday, August 29, 2012
6/365 அபியின் அப்பாவும் அம்முவின் அம்மாவும்
நாம் காதலித்தோம்,
ஆயிரம் ஆயிரம் கனவுகள்,
நாமே செய்துகொண்ட
கற்பனையில் பிறந்த குழந்தைகள் வளர்ந்திருக்குமா?
பள்ளிக்கூடம் சென்றிருக்குமா?
அவை,
நமக்காக முதல் நாளில் ஏங்கியிருக்குமா?
தம்பியோ, தங்கையோ வேண்டுமென கேட்டிருக்குமோ?
....
....
தெரியவில்லை...
ஆனால் இன்று,
என் குழந்தைகளும், உன் குழந்தைகளும்
ஒன்றாகத்தான் விளையாடுகின்றன!
அவர்களால் அப்பா, அம்மா என்று விளிக்கப்படவேண்டிய
நாம்தான்,
அபி அப்பா என்றும்,
அம்மு அம்மா என்றும் தனித்தே அழைக்கப்படுகிறோம்,
சில நேரங்களில்
"மாமா" என்று உன் மகள் அழைக்கும்போதுதான்
தெறித்துவிடுகிறது மிச்சமிருந்த காதலும்!

Tuesday, August 28, 2012
5/365 பள்ளிக்கூடம் போகலாமா? அதுக்கு..
என்னோட பள்ளிக்கூடத்து முதல்நாள் எப்படி இருந்துச்சுன்னு இன்னிக்குத்
தெரியல(நாளைக்குள்ள எப்படியும் வீட்டுல கேட்டுருவேன்னு வைங்க). ஆனா, பல
பொடுசுங்களைப் பார்த்திருக்கேன், முதல் நாள் பள்ளிக்கூடம் அனுப்புறதுக்குப்
பெரிய போரே நடக்கும். அம்மாவும் அப்பாவும் பள்ளிக்கூடம் வரைக்கு
கூட்டிட்டுப் போய் விட்டுட்டு, அப்புறமா வாசல்லையே நின்னு கொஞ்சம் நேரம்
பார்த்துட்டு இருப்பாங்க. ஆசிரியர் வந்து "நீங்க போங்க, அப்பத்தான் பசங்க
அடம் புடிக்காம இருப்பாங்க" அப்படின்னு சொல்ல அப்பா சோகமாவும், அம்மா கண்ணை
கசக்கிட்டுப் போவாங்க. இந்தக் காட்சியை பள்ளிக்கூடத்து முதல் நாளுல தவறாம
பார்க்கலாம்.
அமெரிக்காவுல, இது பள்ளிதொடங்கும் நேரம். பொதுவா Labour Day(செப்-4-2012)
முடிஞ்சோ, இல்லைன்னா ஒன்னு ரெண்டு நாள் முன்னாடியோ ஆரம்பிக்கும்.
பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பசங்களை
வரவழைக்க இப்படி ஒரு வழி செஞ்சிருக்காங்க செல்சி வில்லியம்ஸ்
பள்ளிக்கூடத்துக்காரங்க(இது அரசு பள்ளிதான், தனியார் இல்லை).அதுக்குப் பேரு Back-toSchool Celebration.
- ஆமா, நம்ம ஊர்ல மாதிரி முதல் நாள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற "காட்சிகள்" அமெரிக்காவுல பார்க்க முடிவதில்லையே, ஏன்?
அப்புறம், பொடுசுங்க பாடுறாப்ல இருக்கவேண்டிய "பள்ளிக்கூடம் போகலாமா?" பாட்டை கேப்டன், கனகாவோட சேர்ந்து எப்படி கெடுத்துவெச்சிருக்காரு பாருங்க.. சே :(
(காணொளி எங்கேயா? இது குழந்தைகள் நிகழ்ச்சிங்க, மிட்நைட் மசாலா இல்லை)
Monday, August 27, 2012
4/365 1.2.3.4.5. முடிஞ்சிபோச்சேய் @vivaji
அண்ணாச்சி கடை படியில், கூமாச்சியாக்கி அரிசி அளந்து வாங்கிய சந்தோசம் இப்போதில்லை சூப்பர் மார்க்கெட்டில் கிலோ கணக்கில் வாங்கும்போது.
புல்ஸ்கேப் நோட்டை பெண்கள் மாரோட அணைச்சுட்டு வர்ற அந்த அழகை இனிமேல் பார்க்க முடியாது போலிருக்கே (Only iPad, Laptops)
ஒன்னா SMS கட் பண்ணுங்க. இல்லாட்டா கரண்ட் கட் பண்ணுங்க. உங்களுக்கு "கட்" பண்றதைத் தவிர வேற வேலையே இல்லையா?
அமெரிக்க குடிமகன்களிடம் இந்திய குடிமகன்கள் பெருமையா சொல்லிக்கலாம் "பார்த்தியா? எங்காளுக எவ்ளோ அடிக்கிறாங்கன்னு?" #ஊழல்
லவ் பண்ணுங்க சார், லைஃப் நல்லா இருக்கும் - இது பழைய மொழி. லைக் பண்ணுங்க சார், லைஃப் நல்லா இருக்கும் - இது இணைய மொழி
நான்தான் எதுவும் செய்யவில்லை;நீங்கள் அப்போது என்ன செய்தீர்கள்?: கலைஞர் #உங்களைப் போலவே முத்துக்குமார் இறந்ததை வேடிக்கைப் பார்த்தோம்
"சே" பத்தி தெரியாம டீ-சர்ட் போடுறவங்களைப் பார்த்தால், சே அப்படின்னுதான் சொல்லத் தோணுது
பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக நாங்க இணையத்தில் பலரால் இகழப் படுகிறோமே- ஒரு பிராமிணர் சொன்னது
வார்த்தைய காப்பாத்துங்க.. வீட்ல காத்திருப்பாங்க. - என்ன வொரு விளம்பரம்..?
(போன வாரம்தான் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன், சட்டுன்னு மனசுல பதிஞ்சிருச்சு. அதானே விளம்பரத்தின் வெற்றி)
பழைய படத்துல வில்லன் சுடும்போது தோட்டாவை எண்ணும் கதாநாயகன் மாதிரியே எண்ண வேண்டியிருக்கு, SMSஐயும். #1.2.3.4.5. முடிஞ்சிபோச்சேய்
--------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா சோத்தாங் கை பக்கம் X இருக்கும் பாருங்க, அதைத் தட்டுங்க. இல்லாட்டி Twitterல் தொடர்ந்தும் நீங்க மகிழலாம்(?!)
புல்ஸ்கேப் நோட்டை பெண்கள் மாரோட அணைச்சுட்டு வர்ற அந்த அழகை இனிமேல் பார்க்க முடியாது போலிருக்கே (Only iPad, Laptops)
Thanks vsocio.com
ஒன்னா SMS கட் பண்ணுங்க. இல்லாட்டா கரண்ட் கட் பண்ணுங்க. உங்களுக்கு "கட்" பண்றதைத் தவிர வேற வேலையே இல்லையா?
அமெரிக்க குடிமகன்களிடம் இந்திய குடிமகன்கள் பெருமையா சொல்லிக்கலாம் "பார்த்தியா? எங்காளுக எவ்ளோ அடிக்கிறாங்கன்னு?" #ஊழல்
லவ் பண்ணுங்க சார், லைஃப் நல்லா இருக்கும் - இது பழைய மொழி. லைக் பண்ணுங்க சார், லைஃப் நல்லா இருக்கும் - இது இணைய மொழி
நான்தான் எதுவும் செய்யவில்லை;நீங்கள் அப்போது என்ன செய்தீர்கள்?: கலைஞர் #உங்களைப் போலவே முத்துக்குமார் இறந்ததை வேடிக்கைப் பார்த்தோம்
"சே" பத்தி தெரியாம டீ-சர்ட் போடுறவங்களைப் பார்த்தால், சே அப்படின்னுதான் சொல்லத் தோணுது
பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக நாங்க இணையத்தில் பலரால் இகழப் படுகிறோமே- ஒரு பிராமிணர் சொன்னது
வார்த்தைய காப்பாத்துங்க.. வீட்ல காத்திருப்பாங்க. - என்ன வொரு விளம்பரம்..?
(போன வாரம்தான் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன், சட்டுன்னு மனசுல பதிஞ்சிருச்சு. அதானே விளம்பரத்தின் வெற்றி)
பழைய படத்துல வில்லன் சுடும்போது தோட்டாவை எண்ணும் கதாநாயகன் மாதிரியே எண்ண வேண்டியிருக்கு, SMSஐயும். #1.2.3.4.5. முடிஞ்சிபோச்சேய்
--------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா சோத்தாங் கை பக்கம் X இருக்கும் பாருங்க, அதைத் தட்டுங்க. இல்லாட்டி Twitterல் தொடர்ந்தும் நீங்க மகிழலாம்(?!)
Sunday, August 26, 2012
3/365 முதன் முதலில் அண்ணாவைச் சந்தித்ததைப்பற்றி கலைஞர் எழுதியது
(அறிஞர் அண்ணாவை முதன் முதலில் சந்தித்ததைப்பற்றி முதலமைச்சர் கலைஞர் திரு.மு.கருணாநிதி எழுதியது)
"தம்பி, சேதி தெரியுமா? நபிகள் நாயகம் விழா வில் கலந்துகொள்ள அண்ணா அவர்கள் திருவாரூருக்கு வரப் போகிறார்" என்றார் திரு டி.என்.ராமன். இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர்களில் தலை சிறந்தவர் இவர்.
இந்தச் செய்தி என் செவிகளில் தேனாகப் பாய்ந்தது. 'அண்ணா வரப்போகிறார். எனது இதயங் கவர்ந்த இலட்சியத் தலைவர் வரப்போகிறார்’ என்று என் உள்ளம் மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ளியது.
அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தேன். 1938-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தீவிரமாக நடந்தபோதே, நான் என்னையத்த சிறுவர்களுக்குத் தலைமை தாங்கி இந்தி எதிர்ப்பு முழக்கங்களுடன் ஊர்வலம் நடத்தியவன்.
மேலும் 'முரசொலி’ என்னும் துண்டுத் தாளை அவ்வப்போது வெளியிட்டு என் எண்ணங்களை எழுத்துக் களாக்கி, என் பணியைத் தொடங் கியவன். 1940-ம் ஆண்டில் திருவாரூரில் நடைபெற்ற நீதிக் கட்சி மாநாட்டில்கூட அண்ணாவை அருகில் இருந்து காணும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது, இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு நெருக்கமாகி இருந்ததால், அண்ணாவைக் கண்டு மகிழலாம் எனப் பேராவல்கொண்டு இருந்தேன்.
'விடுதலை’ ஏட்டில் அண்ணாவின் எழுத்துக்கள் என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு இருந்தன. பின்னர், அவர் காஞ்சியில் இருந்து 'திராவிட நாடு’ இதழைத் தொடங்கியதும் 'இளமைப் பலி’ என்ற தலைப்புடன் 'திராவிட நாடு’ இதழுக்கு ஒரு கட்டுரை தீட்டி அனுப்பினேன். அதுவும் விரைவில் அண்ணா அவர்களால் வெளியிடப்பட்டது. அண்ணாவின் இதழில் என் எழுத்துக்கள் இடம்பெற்றதும் என் உற்சாகம் கரை புரண்டது. என் எழுத்துக் களை அண்ணா அங்கீகரித்து விட்டார் அல்லவா?
இந்தச் சமயத்தில்தான் அண்ணா திருவாரூர் வரும் செய்தி தித்திப்பாக எனக்குத் தரப்பட்டது. என் இயல்பிற்கேற்றவாறு கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளில் நானும் முனைந்தேன். விளம்பரத் தாட்கள் விநியோகித்தல், சுவரொட்டி ஒட்டுதல், கொடி தயாரித்தல், மேடை அமைத்தல் போன்ற சிறு சிறு ஆக்க வேலைகளில் ஈடுபட்டேன்.
''கருணாநிதி! உன்னை அண்ணா அழைத்து வரச் சொன் னார்'' என்று வந்தார் ஒருவர்.
''அண்ணாவா?''
''ஆமாம், ஆமாம். 'திருவாரூரில் கருணாநிதி என்பவர் யார்? அவரை நான் பார்க்க வேண்டும்’ என்றார். நமது இயக்கத்தில் நீ ஒரே ஒரு கருணாநிதிதானே!'' என்றார்.
கையைத் துடைத்துக்கொண்டு உடனே புறப்பட்டேன். என் உள்ளத்தில் அச்சம் ஒரு பக்கம், ஆனந்தம் ஒரு பக்கம், வியப்பு ஒரு பக்கம், திகைப்பு ஒரு பக்கம், மகிழ்ச்சி பாதி, பயம் பாதி. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு புறப்பட்டேன்.
வக்கீல் வெங்கடாச்சாரியார் வீட்டின் மாடியில் அண்ணாவைத் தங்கவைத்து இருந்தார்கள். அண்ணாவைச் சூழ்ந்து திருவாரூரின் இயக்கப் பிரமுகர்களான திரு டி.என்.ராமன், டி.என்.லட்சப்பா, ரங்கராசு, சிங்கராயர் போன்றோர் அமர்ந்து இருந்தனர்.
அண்ணாவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, ''அழைத்தீர்களாமே?'' என்றேன். வார்த்தைகள் தெளிவாக வரவில்லை.
''நீதான் கருணாநிதியா?'' - வெண்கல மணி ஒலித்தது.
''ஆமாம், அண்ணா!''
''என்ன செய்கிறாய்? படிக்கிறாயா தம்பி!''
'ஆமாம்.''
'' 'இளமைப் பலி’ எழுதியது நீதானே?''
''நான்தான் எழுதினேன்!''
''சரி, கட்டுரை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், உனக்கு இப்போது அந்த வேலை தேவை இல்லை. படிப்பை முடித்துப் பட்டம் பெற்ற பிறகு எழுதத் தொடங்கலாம். கவனமாகப் படி!'' என்றார் அண்ணா.
என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எழுத்துப் பணியை நிறுத்தச் சொல்கிறாரே! என்னால் இயலுமா?
''வருகிறேன், அண்ணா!'' என்று மட்டும் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
அந்த முதல் சந்திப்பு இன்று என்னைத் தமிழகத்தின் முதல் அமைச்சராக உயர்த்தி இருக்கிறது. ஏறத்தாழ 26 ஆண்டுகள் அண்ணாவுடன் இணைந்துவிட்ட நான், அவர் கிழித்த கோட்டைத் தாண்டியதில்லை. ''படிப்பில் கவனம்கொள்'' என்றாரே, அந்த ஆணையை மட்டும்தான் மீற நேர்ந்திட்டது.
''இன்று கருணாநிதி நான் சொல்வதை அப்படியே நூற்றுக்கு நூறு கேட்டு நடக்கும் நல்ல பழக்கம் அன்றே அவருக்கு இருந்திருக்குமானால், இன்று அவர் ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரியாக இருந்திருப்பார்!'' என்று அண்ணா பலமுறை வேடிக்கை யாகச் சொல்லியிருக்கிறார்.
அந்த முதல் சந்திப்பை எண்ணி எண்ணி 1969 ஜனவரி வரையில் நான் ஆனந்தக் கண்ணீர் சிந்தினேன்.
அந்தோ, அதற்குப் பிறகு வேதனைக் கண்ணீர் கரை புரள்கிறது!
18-1-1970- விகடனில் வெளியான பத்தி இது. -நன்றி: விகடன்

Saturday, August 25, 2012
2/365 நான் பல்பு வாங்கின கதை
பல்பு வாங்குவதில் பல விதம் இருக்குங்க.
(பல்பு வாங்குறது என்னான்னு தெரியும்தானே? அதாங்க பன்னு வாங்குறது, அட அதுவும் தெரியலைன்னா அவமானப்படுறதுன்னு இலக்கியத்துல சொல்லியிருக்காங்க)
முன்னாடியொரு காலத்துல பல்பு வாங்கின கதை
எங்க அலுவலகத்துல ஒரு சின்ன வயசுப்பொண்ணு(25-30 வயசுக்குள்ள இருக்கலாம்) அடிக்கடி பக்கத்து அறைக்கு வந்துட்டுப் போவும். நான், இந்த அலுவலகத்துக்கு வந்து 3 மாசம்தான் ஆச்சு. அதுவும் 20 நாள் இந்தியா போயிட்டு வந்துட்டேன். இந்தப்பொண்ணை யாரும் அறிமுகம் பண்ணியும் வெக்கலை. அதனால அது மனிதவளத் துறையா(HR) இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். இது நம்ம ஊர்ல பழகினதோசம்னு வெச்சிக்கலாம், அழகா, நயமா உடை உடுத்தின 25-30 பெண்கள், அப்பப்ப வந்து கட்டளை போட்டுட்டு போற பெண்கள் HRஆத்தான் இருக்கனும். அப்படித்தான் இன்னிக்கு வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன்.
இன்னிக்கு மதியம் பக்கத்து Cubicleக்கு வந்த அந்தப் பொண்ணு, "பக்கத்து Cubicle ஆள் வந்தா நான் வந்துட்டு போனேன்"னு சொல்லிட்டுப் போயிருச்சு. "ஹலோ, உங்க பேர் என்னான்னு கேட்க நினைக்கிறதுக்குள்ளே 'மின்னல்' மாதிரி போயிருச்சு. சரி, நானும், HR பொண்ணுதானே, வந்தாச் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். பக்கத்து Cubicle ஆள் வந்தவுடனே, இப்படி HR அம்மணி வந்துட்டு போச்சுன்னு சொன்னேன். அவர், யாரு, அம்மணி எப்படி இருக்கும், எங்கே உக்காந்து இருக்கும்னு எல்லாம் கேட்டாரு. நானும் விலாவாரியாச் சொன்னவுடனே அவர் பயங்கரமா சிரிச்சாரு. அதுவுமில்லாம இன்னொரு பக்கத்து Cubicle ஆள்கிட்டேயும் அந்தப் பொண்ணைப் பத்தி நான் சொன்னதைச் சொன்னதும், அவரும் பயங்கரமா சிரிச்சாரு. சிரிக்கமாட்டாங்களா?
ஏன் சிரிச்சாங்களா? அந்த அம்மணிதான் எங்க Department Director ஆம்.
[Image Thanks: http://truthworks.org]
இதுலயிருந்து என்ன தெரியுது?

1) ஆளை வெச்சி பதவியை எடை போடக்கூடாது
2) யூகத்தின் அடிப்படையில் எடுக்கப்படுற முடிவுகள் தப்பாகலாம்
3) அறிமுகத்தப்பவே அவுங்க துறையயும் பதவியையும் ஒழுக்கமா தெரிஞ்சிக்கனும்
(கருத்து சொல்றாராம்)
Friday, August 24, 2012
1/365 பதிவுலகத்தில் எட்டு ஆண்டுகள்
இப்ப இந்த 365 பிரபலமாகிட்டு வருது. (இதையே ஒரு தனிப்பதிவா போடணும்). சொக்கன் அவர்கள்தான் ஆரம்பிச்சார்ன்னு நினைக்கிறேன்.
அதனால நானும் ஒன்னை ஆரம்பிக்கிறேன். அதாவது தொடர்ந்து 365நாளும் பதிவு எழுதுறது. முடியுமான்னு தெரியல. சும்மா முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். எதைப் பத்தி எழுதுவேனா? நிஜமாத் தெரியலங்க. என்னை சுத்தி நடக்கிறது, ஓடுறது, பறக்கிறது பத்திதான் எழுதப்போறேன். பதிவுலகம் பத்தி எழுதுவதை நிறுத்தி பல வருசம் ஆனதால, அதைப் பத்தியும் கூட வரலாம். ஒரு காணொளி போட்டுட்டு போறது மாதிரி மொக்கைகளை தவிர்த்துட்டு எழுதறதா எண்ணம். அதாவது சொந்த புலம்பல், பெருமைபீத்தல் இப்படி ஏதாவது ஒரு வருசத்துக்கு எழுதறது. அட இதுவே ஒரு தற்பெருமை பதிவுங்கிறதால, இதுல இருந்தே ஆரம்பிக்கிறேன். 1/365
பதிவுலகம் வந்து இன்றோடு 8 ஆண்டு காலம் ஆகிருச்சு. ஏற்கனவே பல முறை ஒத்த அலைவரிசை நண்பர்கள் கிடைச்சாங்க, நேரம் போவுது, எங்கே போனாலும் ஒரு நண்பன் அங்கே இருக்காங்க, பொதுவா எங்கேயாவது கூட்டத்துக்குப் போனா ஒருத்தர் வந்து "நீங்கதான் விவசாயியா" அப்படின்னு கேட்கிறாங்க, அப்படின்னு எழுதியாச்சு.
அதனால ஒரே ஒரு நன்றி மட்டும் சொல்லிட்டு அடுத்த வருசத்துக்குப் போயிடறேன்.
என் காலத்திலிருந்தே எழுதும் பதிவர்கள் ரொம்ப கம்மியாகிட்டாங்க. கானா பிரபா, கோவி கண்ணன், லக்கி, பெனாத்தல் சுரேஷ், இட்லிவடை, துளசி டீச்சர் இப்படி வெகுசொற்பமே. இன்னும் கொஞ்சம் பேர் அங்கொன்றும் இங்கொன்றுமா பதிவு போடுறாங்க. அப்படித்தான் ஆகும் என்பது நியதி.
அமெரிக்கா வந்தப்புறம் பதிவுலகம் தாண்டி அதிக நண்பர்கள் கிடைக்கலை என்பதே நிஜம். போனவாரம் கூட பதிவுலக நண்பர்களைச் சந்திச்சேன். இந்த வாரமும் ஒருவரை சந்திக்கப்போறேன். அப்படி பதிவுலக நண்பர்களே என் வாழ்க்கையில சுத்தி இருக்கிறா மாதிரி ஆகிருச்சுங்க.
இத்தனை நாள் கூடவே இருக்கும் நண்பர்களை [2010ல் ஒரு நண்பர்கள் வட்டம் போட்டேன்(உ.த - அண்ணாச்சி மறந்துட்டேன்) ] அதுக்கு அப்புறம் ஒரு பதிவர்கூட நண்பனா மாறவே இல்லை. இல்லை, பிரமிப்பூட்டும் எழுத்துக்கள் கண்ல படவே இல்லை. ரொம்ப வருத்தம். மூத்தப் பதிவர்கள் எல்லாம்(2009க்கு முன்) கூகிள் +, ட்விட்டர் அப்படின்னு ஒதுங்கிட்டாங்க.
பதிவுலகம் நீர்த்துப் போகலாம், ஆனா இந்தளவுக்கு என்பது ரொம்ப கஷ்டமா இருக்கு. சமூக வலைதளங்கள் வந்தபிறகு, பதிவுலகம் மொக்கைகளை தவிர்த்திடுச்சுன்னே சொல்லலாம். ஆனால் பதிவுகளுக்கே சொந்தமான "அனுபவ" கதைகள் ரொம்ப கம்மியாகிருச்சு. கதை, கவிதைகள் கம்மியாகிருச்சு. தொடர்கதைகள் ரொம்ப சொற்பம். சரி விடுங்க, காலம் மாறிட்டே இருக்குல்ல.(நானும் ஒன்னுத்தையும் எழுதலைங்கிறது வேற கதை)
ஆம், 8 ஆண்டுகள் இந்தப் பதிவுலகம், எனக்கு பல நன்மைகளைத் தந்திருக்கு, அதுக்கு நன்றி சொல்லிட்டு 9வது ஆண்டுல அடியெடுத்து வைக்கிறேன். நன்றி நண்பர்களே!

--00--

Wednesday, August 22, 2012
முதல் முத்தம் @vivaji update-22-Aug-2012
- "_____ இருந்திருந்தா படிச்சு டாக்டர் ஆகி இருப்பேன். அப்படின்னு மத்தவங்க சொல்லும்போது, இப்ப டாக்டராயிருக்கிறவங்க என்ன சொல்லுவாங்க?
--00--
- கல்யாண ஆல்பங்களில் அவுட்- ஆஃப் ஃபோகஸில் இருக்கும் பெண்களுக்குத்தான் உண்மையில் அதிக ஃபோகஸ் இருந்திருக்கும்
--00--
- இன்று, பலரின் உறவுகளை, செல்ஃபோன் நெட்வொர்க்குகளே தீர்மானிக்கின்றன #Reachable and Not reachable
--00--
- நீ என்னை விட்டு விலகியதைப் போல பெய்துவிட்டுப் போனது இடி, மின்னல், சத்தம் எதுவுமில்லாமல் பெய்துவிட்டுப் போகும் மழை
--00--
- ரோஜாப்பூக்களை வருடுகையில் ஞாபகம் வருகிறது, “முதல் முத்தம்”
--00--
- வண்ணத்திரை நடுப்பக்கம் போல் ஆனவுடன் கிழிந்துவிடுகிறது, காதல்.
--00--
- பல கண்ணாடிகள் பொய் சொல்கிறது போலும்.மொக்கை ஃபிகரெல்லாம் சமந்தா ரேஞ்சுக்கு பில்ட்அப் குடுக்குதுங்க.
--00--
- முதல்ல "நான் ஈ" வந்துச்சு, அப்புறம் "நான்" வந்துச்சு, ஏன் தெரியுமா? கூட்டம் அதிகம் வந்ததால ஈ பறந்ந்ந்து போயிடுச்சு
--00--
- ஆண்கள் சுயநலமாகவும் பெண்கள் பொதுநலமாகவும் கவலை கொள்கிறார்கள்.#ஆண்கள் பக்கத்துவீட்டு ஆண் வாங்கியதைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை
--00--
- லூசுத்தனமான நாயகிக்கு ரெளடித்தனமான கதாநாயகனே காதலனாக அமைவது சினிமாவில் மட்டுமே. ரெளடியின் மனைவியும் 75% ரெளடியாக இருப்பதே நிஜம்
--00--
- மஞ்சளுக்கும், பச்சைக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது, தமிழகம் #வறுமையின்_நிறம்_சிகப்பு
--00--
- கூடவே சுத்தும் செவ்வாழைகள் அதிகம் கொண்டவை இணையம்.
--00--
- வாரமலர் மூலம்தான் சாருநிவேதிதா என்று ஒருவர் இருக்கிறார் என்றே தெரியவந்தது #கிராமம்
--00--
"ஒரு ஜான் வயித்துக்காக" அப்படின்னு இனிமே சொல்ல முடியாது. தொப்பையை அளந்தா ரெண்டு, ரெண்டறை ஜான் கூட வருது
Monday, August 20, 2012
ஒரே வார்த்தையில் மனைவியைக் கட்டுப்படுத்த..@vivaji Updates Aug-21-2012
- ''சத்யராஜ் சொன்னதால பணம் போட்டோம்!'' : ஈமு கோழியில் முதலீடு செய்தவர்கள் #சத்யராஜ்,
சாமி இல்லைன்னுகூடத்தான் சொன்னாரு, நம்புனீங்களா, என்ன, காசுன்னவுடனே ஆசைப்பட்டுட்டு, இப்ப சத்யராஜ்ஜுக்கிட்ட இருந்து பணத்தை எதிர்பார்க்கும் ஜென்மங்களை என்னவென்று சொல்வது?
--00--
- சேகுவேரா பற்றி பேசும் போராட்டவாதிகளுக்கு சுபாஷ் சந்திரபோஸ் மீது அவ்வளவு நாட்டமில்லை. அங்கேயும் வெளிநாட்டு மோகம்
--00--
- சமைக்கிறதா?. ஹாஹஹ்ஹாஹ, நானா? ஹஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹாஹ் #பெண்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்
- பிரபலம், பிரபலத்துக்கு முத்தம் குடுத்த புகைப்படம்தான் பிரபலமாகும் - உலக நியதி!
- ஒரே புகைப்படத்தின் மூலம் டெசோவை சுக்கு நூறாக்கிய அனிருத் - ஆண்ட்ரியா. இப்ப தெரிஞ்சுக்குங்க நாட்டுக்கு எது அவசியம் என்று
--00--
- இணைய விவாதங்களில் இறுதியாக எடுக்கப்படும் முடிவுகளின் கடைசி வரி, இப்படியாகத்தான் இருக்கும் ":)"
- அழக்கூட கெளரவம் இடம் கிடைக்காமல் சோகத்தை மனதினுள் அடக்கும் ஆணின் கண்ணீர் பரிதாபத்துக்குரியதே!
--00--
- இனி எப்போதும் கூட்டணி இல்லை: விஜயகாந்த் #இராமதாஸோடு கூட்டணி வெச்சி நம்மையெல்லாம் பார்த்து கேப்டன் சிரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை
--00--
- என்னதான் பெரிய சண்டையாய் இருந்தாலும், என்னுடைய ஒரே வார்த்தைக்குக் கட்டுப்பட்டுவிடுவாள் என் மனைவி. #மன்னிப்பு
--00--
- தருமத்துக்கு கலாய்க்கப்பட்டு வேற வழியே இல்லாம, சரண்டர் ஆக நினைக்கும்போது சொல்லும்வார்த்தைதான்
"என்னைக் கலாய்சிட்டாராம்"
---------------------------------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் எழுதியது. ஏற்கனவே என்னை
Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த
மொக்கைகளை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.
Friday, August 10, 2012
இம்சை அரசன் 23 புலிகேசியின் கரடி கதை
தமிழ்ல எழுதினா ஆபாசக்கதையா மாறிடும், அதனால ஆங்கிலத்துலயே இது இருக்கட்டும். இந்தக் கதையை படிச்சி முடிங்க, இன்னொரு விசயம் இருக்கு இதுல...
கதையை படிச்சவுடன் எதாவது ஒரு தமிழ் திரைப்படக் காட்சி மனசுக்கு வரனும். இல்லாட்டினா இந்த நகைச்சுவை காணொளியை பாருங்க.
கொஞ்சமாவது பொருந்தி வருதா?
So this hunter goes into the woods to hunt a bear and takes with him his trusty 22-gauge rifle.
After a little while, he spots a very large bear, takes aim, and fires. When the smoke clears, though, the bear is gone.
A moment later the bear taps this guy on the shoulder and says, "No one
shoots at me and gets away with it. You have two choices: I can either
rip your throat out and eat you alive, or you can drop your trousers,
bend over, and I'll do you in the ass."
The hunter figures that anything is better than death, so he drops his
trousers, bends over, and the bear delivers on his promise.
After the bear leaves, the hunter pulls up his trousers and staggers into town vowing revenge.
He buys a much larger gun and returns to the forest. He sees the same
bear, takes aim, and fires. When the smoke clears, the bear once again
is gone. A moment later, the bear taps him on the shoulder and says,
"You know what to do."
Afterwards, the hunter pulls up his trousers and crawls back into town. Now he's really mad, so he buys himself a bazooka.
He returns to the forest, sees the bear, aims, and fires.
When the smoke clears this time, the bear taps him on the shoulder and says, "You're not REALLY here for the hunting are you?"
--00--
கதையை படிச்சவுடன் எதாவது ஒரு தமிழ் திரைப்படக் காட்சி மனசுக்கு வரனும். இல்லாட்டினா இந்த நகைச்சுவை காணொளியை பாருங்க.
கொஞ்சமாவது பொருந்தி வருதா?
Subscribe to:
Posts (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...