தமிழ்ல என்னதான் மாங்கு மாங்குன்னு பதிவு போட்டாலும் தேடு பொறியில நம்ம பதிவு வர மாட்டேங்குதேன்னு புலம்புறீங்களா? அப்போ இந்தப் பதிவ படிக்கலாம். மொதல்ல ப்லொக்கர் பார்ப்போம். ப்லொக்கர்ல தலைப்பை தமிழ்ல வெக்கும்போது அதனோட தலைப்பு உருவாகுறது எப்படின்னு பாருங்க.
ஒரு உதாரணம்: போன பதிவுக்கு நான் வெச்ச தலைப்பு பாருங்க :
என்னையே எல்லாரும் பார்க்குறாங்க. அதுக்கு ப்லாக்கர் குடுத்த உரல் பாருங்க -http://vivasaayi.blogspot.com/2008/03/blog-post_31.html
மேலே இருக்கிற உரலில் என்ன குறிச்சொல் இருக்கு?அதாவது உங்க பதிவோட பேரு, வருஷம், மாசம், அப்புறம் உங்க இடுகையின் தலைப்பு அப்படின்னு வரனும். ஆனா தமிழ்ல தலைப்பு வெக்கும்போது ப்லாக்கர்ல நீங்க தர்ற தலைப்பு வரது இல்லே. இப்போதைக்கு இந்த வசதி இல்லே. அதனால blog post-தேதின்னு வந்துரும். தேடு பொறிகள் எல்லாமே இந்த உரலை மையமா வெச்சு தான் தேடுது. அதனால நம்ம இடுகைகள் ஆங்கிலத்துல பேர் குடுத்து தேடினா கிடைக்கிறது இல்லை. தமிழ்ல தேடுற மக்களும் ரொம்ப குறைச்சலாவும் இருக்கு. ஆங்கிலத்துல தலைப்பை வெச்சா மக்கள் தேடும் போது உங்க பதிவுகள் கவனிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அப்போ தமிழ்ல தேடினா கிடைக்காதேன்னு கேட்டா? அதை உங்க பதிவே தேடல்ல சிக்கிக்கும். அதனால மக்கள் ஆங்கிலத்துல தலைப்பு வெச்சு எழுதிட்டு Publish பண்ணிடுங்க. பிற்பாடு தலைப்பை மாத்திருங்க. ஒரு நிமிசத்துல பண்ற வேலை இது.
உதாரணத்துக்கு இந்தப் பதிவோட உரல் பாருங்க. http://vivasaayi.blogspot.com/2008/04/tamil-blogs-easy-search.html.
Tamil Blogs அப்படின்னு தேடினா http://binarywaves.blogspot.com/2007/04/tamil-blogs.html இந்தப் பதிவு முதல் பக்கத்துல வந்துரும். இதுக்கும் இது என்னோட ஆங்கிலப்பதிவு. நேத்துதான்
இந்தப்பதிவையும் போட்டேன் அதுவும் 50க்குள்ள இருக்கு. சூட்சுமமே இதுதான்.
இந்த விஷயத்துல Wordpress கொஞ்சம் முன்னேறி இருக்கு. அதாவது தமிழ்ல தேடினா கிடைகிற வசதி ப்லாக்கரை விட wordpressல கொஞ்சம் அதிகம். அந்தக் காரணமாவே wordpressக்கு போற மக்கள் அதிகம். ப்லாக்கர்லயும் இந்த மாதிரி விளையாடினா நிறைய பேர் பார்க்குற வாய்ப்பு அதிகமாகும்.