Friday, May 30, 2008
நான் கலங்கிய ஒரு தருணம்- Living Smile Vidhya
But நானும் ஒரு Human Being தானேன்னு வித்யா சொல்லும் போதும், 10 மணிநேரமாவது துக்கமாவே இருப்போம்னு தேவி சொல்லும்போதும்- கண்ணீர் விட வெச்ச சில தருணங்கள்.
பல வருஷம் ஆச்சு இப்படி ஒரு வெட்கத்தைப் பார்த்து- வாழ்த்துக்கள் வித்யா.
வித்யா என்கிற ஒரு பொண்ணுக்குள்ள இப்படி ஒரு தைரியமா? தெளிவா? இப்படியுமா ஒரு மனசு கல்லு மாதிரி... மன்னிக்கனும் ஒரு அற்புத சிலை மாதிரி இருக்கும். Hats Off வித்யா.
ஹேமா மாதிரி எல்லாருக்குமே ஒரு நல்ல வாழ்க்கை கெடைச்சிற கூடாதா ஆண்டவா..
Wednesday, May 28, 2008
எடியூரப்பா, கலைஞர், ஒகேனக்கல், ஆப்பு
பெங்களூர் உள்ளூர் முன்னேற்றத்துல குமாரசாமி ஒரு வேகத்தை கொண்டுவந்தாரு. முடிஞ்ச வரைக்கும் அவர் கட்சியால தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்காரங்களுக்கு பிரச்சினை வராம பார்த்துட்டு இருந்தாரு. அப்பவும் வேதிகே, காட்டாளு, ரேணுகா எல்லாம் வந்துட்டு இருந்தாலும் கொஞ்சம் நாம மூச்சு விடற மாதிரி வெச்சு இருந்தாரு. இதை பாஜக காப்பாத்துமா?
இனி நம்ம மேட்டருக்கு வருவோம்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒத்திப்போட்டு தனது சாணக்கியத் தனத்தை மறுபடியும் நிலைநாட்டினார் தலைவர். காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டபடியால் கூட இருக்கலாம். ஆனால் வாட்டாள், காட்டாள் மாதிரி ஆளுங்ககிட்டே எல்லாம் மோதி மக்களை காயப் படுத்த வேணாம்னு நினைச்சு இந்தத் திட்டத்தோட செயலாக்கத்தை ஒத்தி வெச்சாரு. ஆனா கர்நாடக மக்கள் வாட்டாளுக்கும்,, காங்கிரஸுக்கும் சேர்த்தே ஆப்படிச்சுட்டாங்க. இதுல மண்டை காயறது வழக்கம் போல தமிழனுங்கதான். குறிப்பா தர்மபுரி மாவட்ட மக்கள். இனி கலைஞர் என்ன செய்வாரு?? விகடனுக்கு எடியூரப்பா சொன்ன விஷயம் கலைஞர் வயித்துல புளிய கரைச்சு இருக்கலாம்.
விகடன் கேள்வி: 'நிலையானஅரசு கர்நாடகத்தில் வரட் டும் என்றுதான் திட் டத்தை ஒத்தி வைத்தார் எங்கள் முதல்வர்.தர்மபுரி-கிருஷ்ணகிரி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?''
எடியூரப்பா: (கூர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டே) 'இந்தக் கேள்வியைத்தான் முதல்ல
கேட்பீங்கனு நினைச்சேன். ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்..! தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.
தமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பிரச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி... எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.''
ஆக மொத்தத்துல அம்மாவுக்கு அடுத்த தேர்தல்ல பேச அவல் கிடைச்சாச்சு, எப்படியும் கூட்டு வெச்சுக்குவாங்க. அப்புறம் என்ன? இந்த முறை நாடாள(!)மன்ற தேர்தலுக்கு ஒரு செம ட்ரம்ப் கார்ட் கிடைச்சாச்சே. அதுக்குள்ள இந்தப் பிரச்சினைய முடிக்க தலைவர் பார்ப்பாரு. பஸ் எரியாம, ரத்தம் பார்க்காம விடமாட்டாங்க போல இருக்கு. இந்த விளையாட்டுல வழக்கம் போல தோத்து போயி காய்ஞ்சு கருவாடா போறவங்க நாமதானுங்களே. ஒழுக்கமா வாழ விடுங்கப்பா..
Saturday, May 24, 2008
Google Readerல் பின்னூட்டங்கள் திரட்டல்
முதல்ல ஒன்னு சொல்றேங்க. மாங்கு மாங்குன்னு பொட்டியத் தட்டி, விடிய விடிய கண்ணு முழிச்சி உருவாக்கின திரட்டியில இருக்கிற வசதிகளை எல்லாம் சுலபமா ரெண்டு நிமிஷத்துல பண்ணிட முடியாதுங்க. அதுக்கான வசதி இன்னும் வரலை. பிற்காலத்துல வரலாம்.
எல்லாருடைய பின்னூட்டங்களையும் படிப்பீங்க அப்படிங்கிறதுல எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்குன்னு சில பதிவர்களை பிடிச்சு இருக்கும். அவுங்க பின்னூட்டங்களை தொடர்ந்து படிச்சுட்டு வருவீங்க. அவுங்க பதிவுகளின் ஓடைகளை எடுத்து திரட்டலாம். உதாரணத்துக்கு நீங்க தொடர்ந்து 10 பதிவர்களின் பதிவுகளை படிச்சுட்டு வர்றீங்கன்னு வெச்சுக்கலாம். அவுங்க பின்னூட்ட ஓடையை சேர்த்துக்குங்க.
உதாரணத்துக்கு http://vivasaayi.blogspot.com/feeds/comments/default. இது என்னோட பின்னூட்ட ஓடை. http://*********.blogspot.com/feeds/comments/default இப்படி எந்த blogspotக்கும் பின்னூட்ட ஓடை இருக்கும். இதுல என்ன ஒரு வசதின்னா பின்னூட்டம் முழுசாவே படிச்சுக்கலாம்.
wordpressக்கு http://*******.wordpress.com/comments/feed/. திரட்டிகளை அலுவலகத்துல தடுத்து இருந்தாலும் ரீடர் மூலமாவே படிச்சுக்கலாம்.
Saturday, May 17, 2008
அவியல் - 1
- அரிசி விலை எல்லாம் கன்னாபின்னான்னு ஏறிப்போயிருச்சு. இதுக்கு எல்லாம் காரணம் வெளிநாட்டுச்சதிதான்(இந்தியா). ஏன்?
- மிதிவண்டி வாங்கப் போறேன். வாழ்க்கை எங்க ஆரம்பிச்சதோ அங்கேயே இருக்கேன். ஆமாங்க மிதிவண்டிதான் எனக்கு அப்பா குடுத்த முதல் வண்டி. அதையே நானே இங்கே வாங்கப்போறேன். முன்னேத்தம் தானுங்களே.
- தனியா இருப்பது கொடுமைங்க, எப்படித்தான் எல்லாரும் தனியா இருக்காங்களோ? நண்பர்கள் சூழ வாழ்த்து வந்த எனக்கு இது ரொம்பவும் புதுசு. ரொம்பக் கஷ்டங்க.
- எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தாச்சு. techsatishல இருந்து இப்போ TubeTamilக்கு மாறியாச்சு. இடையில aarampamம்.
- புதரகத்துல வெயில் காலத்துல கூட குளிருது, இந்த லட்சணத்துல மழை வேற. நம்ம ஊர்ல மழை எப்படா வரும்னு இருக்கு, இங்கேயோ தலைகீழ்.
- யாராவது பதிவுகள்பத்தி பேசினா கடுப்பா இருக்கு. பதிவர்கள் என்கிட்ட வேற என்னத்தை பேசுவாங்க. ஏன்?
- ஆஹா FM கேட்க ஆரம்பிச்சிருக்கேன். அதுல அடிக்கடி நமீதா நர்ஸரி ஸ்கூல்னு ஒரு வெளம்பரம் வருதே, அது என்னங்க?
- குருவி பார்த்துட்டு சேட்ல கிடைக்கிறவங்களை எல்லாம் திட்டிட்டு இருந்தேன்.
- புதுசா வந்த எந்தப் பாட்டையுமே கேட்கத் தோணலை, தசாவதாரம் உட்பட. தாம் தூம் பரவாயில்லை. வாரணம் ஆயிரம் பாதி பாட்டுகளும்கூட கடுப்பாவே இருக்கு.
- சன் தொலைக்காட்சியில் தமிழ் வெள்ளித்திரை 75வது வருசத்தை முன்னிட்டு போடுற பழைய படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா நடு ராத்தி ஆகிறதனால பாதியிலேயே தூங்கிடறேன்.
- எப்படா இந்தியா போலாம்னு இருக்கு. ஏன்?
- IPL வெளங்குமா? DIGITALipl.comதான் பார்க்கிறேன்.
- ரொம்ப நாளாச்சு ஊர் சுத்தி, அதுதான் கடுப்பா இருக்கு.
- பதிவுகளை விட டுவிட்டு பைத்தியம் சீக்கிரம் புடிச்சிருச்சு. பதிவுகளேயே கட்டிட்டி மாறடிக்க முடியல இது டுவிட்டும். அங்கேயும் பதிவர்கள்தான் விதை போட்டு தமிழ் வளர்த்துட்டு இருக்காங்க. வாழ்க தமிழ்!
அவியல் தொடரும்...
Wednesday, May 14, 2008
மூர்த்தி- உங்க போலி பேருதான் என்னங்க?
ரஜினியோட உண்மையான பேரு சிவாஜி ராவ். ஆனா சிவாஜி ராவ்னு கூப்பிட்டா திரும்பிப் பார்ப்பாராங்கிறது சந்தேகம்தான். ஆனா சொந்தப் பேர் வெச்சு கூப்பிட்டதால தன்னோட எதிர்த்த வீட்டுக்காரருக்கு ஒரு மதிய உணவு அளிச்சு சந்தோசப்பட்டாங்க ரம்பா. (சாப்பிட்டது ஜீரணமாகிருச்சுங்க). அப்போ அவுங்க சொன்னதுதான் இந்தப் பதிவோட சாராம்சமே. என்னதான் ரம்பான்னு லட்ச கணக்குல சொன்னாலும் ஒருத்தர் உண்மையான பேர் சொல்லிக் கூப்பிடும்போது ஒரு இனம்புரியா பாசம் வரும்னாங்க. சாப்பிட்டுகிட்டே ஆமாம்னு சொல்லி வெச்சேன்.
ஒரு புதிர் இவுங்க எல்லாம் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.
உதாரணம்:
சரவணன்=சூர்யா
சிவாஜி ராவ்= ரஜினி காந்த்
- மேரி=?
- ரேவதி
- சுகாசினி
- ரிஷி பாலா
- டயானா மரியம்
- பைரவி
- ரங்கராஜ்
- வெங்கட் பிரபு
- மூர்த்தி
- ஸ்வேதா கொன்னூர்
- உமா சங்கரி
- நக்மா கான்
- நக்கத்
- ஜோசப்
- கருணாநிதி
Sunday, May 11, 2008
சோடி போடலாமா சோடி
காட்சி-1:
பெண்ணீயம்- பாரதி, இதுக்குத்தானா ஆசைப்பட்டாய்.
நீங்க சாண்ட்ரோ வெச்சு இருக்கீங்க, எனக்கு வேகன் ஆர் வாங்கி குடுங்க. அதுதான் சமத்துவம். இல்லாட்டி என்னை அடிமையா வெச்சு இருக்கீங்கன்னு எழுதிடுவேன், ஜாக்கிரதை. வாடி, போடான்னு சொன்னா புகார் குடுத்துருவேன், ஆமா.
காட்சி-2
சமத்துவம்- பாரதியும் காணாத பெண்ணீயம்.
ஏண்டி, கூலிய குடுத்தேனே, அதுலதான பலசரக்கு வாங்கின?
இல்ல மச்சான், உன்னோட சம்பளத்துல உனக்கு வேட்டி எடுத்துட்டேன். எத்தினி நாளிக்கு அத்தையே கட்டுவே? என்னோட கூலில கருவாடு வாங்கி குழம்பு வெச்சிருக்கேன். வந்து துன்னுடா மச்சான்.
ஜோடியில் ஆண் பாதணியில் ஊக்கு போட்டு இருப்பது- ஆண் எவ்வளவோ சிரமத்துக்கு இடையில் பொருளீட்டுகிறான். தன்னை அலங்காரம் செஞ்சுக்க மறந்துட்டு குடும்பத்துக்காக உழைக்கிறாங்க. ஆனால் சில பொண்ணுங்க அதைப் புரிஞ்சிக்காம டாம்பீக வாழ்வு வாழ நினைக்கிறாங்க. இது வரட்டு கெளரவம்தானுங்களே. அதுக்கு அர்த்தம் வர மாதிரி பெண் பாதணி விலையுயர்ந்ததா பக்கத்துல வெச்சேன். அதாவது புது பாதணி, குதி
(high heel) பெரிசா. இது ஆணுக்கும் பொருந்தும், பொண்ணுக்கும் பொருந்தும். அதே போல இந்த ஜோடிய ஆணோ, பெண்ணோ போட்டுக்க முடியாது. இந்தமாதிரி சமமில்லாத ஜோடி உபயோகப்படாது அப்படிங்கிற அர்த்தம் தான் அந்தப் படத்துக்கு. இது என் மனசுல பட்டது. வேற அர்த்தம் கூட இருக்கலாமா?
Monday, May 5, 2008
OPMLம் ஈரவெங்காயமும்
நான் தொழில்நுட்பத்தை புரிஞ்சிகிட்டது OPML வெளியிட்ட ஒரு வாரத்துக்குப் பின்னாடிதாங்க. 4000 ஓடையயும் ரீடர்ல போட்டா சாவுது, தொங்குது,அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிட்டு இருந்த நேரத்துல ரவிசங்கர் ஒரு பிட்டை போட்டுட்டு போனாரு. அதாவது எல்லாத் தமிழ்ப் பதிவுகளையும் படிக்க ஒரே ஓடை இருந்தாப் போதும்னு. OPML, 4000 ஓடை எதுவுமே தேவை இல்லை. Google Readerல இந்த ஓடையச் சேர்த்துட்டா எந்தத் திரட்டிக்குமே வரத் தேவை இல்லைங்க. அந்த ஓடை இதோ...
http://www.google.com/blogsearch_feeds?as_q=.&lr=lang_ta&safe=active&q=.&ie=utf-8&output=rss
அடுத்தப் பதிவுல Google readerல எப்படி பின்னூட்டத்தையும் திரட்டுறதுன்னும் சொல்லிடறேன். திரட்டி செய்ய எந்த வழங்கியுமே தேவை இல்லை.. Google Readerஏ போதும்.
கூகில் ரீடர் இல்லாம கூட பதிவ படிக்கலாங்க, அதாவது ஒரு திரட்டி மாதிரி. அதுவும்கூட முடியும் எப்படின்னும் அடுத்தப் பதிவுலேயே சொல்றேன்..
Monday, April 21, 2008
சித்தர்களும் இரண்டும், நீங்க சொல்ற பதிலும்
எங்கேயோ எப்பயோ படிச்ச ஞாபகங்க. அதுக்கு அர்த்தமும் அப்போதான் தெரிஞ்சுகிட்டேன். இப்போ அதைச் சொன்னா சரியா இருக்கும்னு நினைக்கிறேன். வ.வா. ச போட்டிக்குச் சரியான நேரத்துல கேட்டுட்டா ஒரு பரபரப்பு வருமே.
இந்த மாதிரி சரியா பின்பற்றினா வாழ்நாள் கூடும்னு சொல்லி இருக்காங்க சித்தர்கள்(?!)
இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க.
- தினம் இரண்டு
- வாரம் இரண்டு
- மாதம் இரண்டு
- வருடம் இரண்டு
இப்ப இந்த "இரண்டு"களுக்கு என்ன அர்த்தம்? பதில் சொல்லுங்க, பார்ப்போம்.
Tuesday, April 1, 2008
தேடு பொறியும் குறிச் சொற்களும்
ஒரு உதாரணம்: போன பதிவுக்கு நான் வெச்ச தலைப்பு பாருங்க : என்னையே எல்லாரும் பார்க்குறாங்க. அதுக்கு ப்லாக்கர் குடுத்த உரல் பாருங்க -http://vivasaayi.blogspot.com/2008/03/blog-post_31.html
மேலே இருக்கிற உரலில் என்ன குறிச்சொல் இருக்கு?அதாவது உங்க பதிவோட பேரு, வருஷம், மாசம், அப்புறம் உங்க இடுகையின் தலைப்பு அப்படின்னு வரனும். ஆனா தமிழ்ல தலைப்பு வெக்கும்போது ப்லாக்கர்ல நீங்க தர்ற தலைப்பு வரது இல்லே. இப்போதைக்கு இந்த வசதி இல்லே. அதனால blog post-தேதின்னு வந்துரும். தேடு பொறிகள் எல்லாமே இந்த உரலை மையமா வெச்சு தான் தேடுது. அதனால நம்ம இடுகைகள் ஆங்கிலத்துல பேர் குடுத்து தேடினா கிடைக்கிறது இல்லை. தமிழ்ல தேடுற மக்களும் ரொம்ப குறைச்சலாவும் இருக்கு. ஆங்கிலத்துல தலைப்பை வெச்சா மக்கள் தேடும் போது உங்க பதிவுகள் கவனிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அப்போ தமிழ்ல தேடினா கிடைக்காதேன்னு கேட்டா? அதை உங்க பதிவே தேடல்ல சிக்கிக்கும். அதனால மக்கள் ஆங்கிலத்துல தலைப்பு வெச்சு எழுதிட்டு Publish பண்ணிடுங்க. பிற்பாடு தலைப்பை மாத்திருங்க. ஒரு நிமிசத்துல பண்ற வேலை இது.
உதாரணத்துக்கு இந்தப் பதிவோட உரல் பாருங்க. http://vivasaayi.blogspot.com/2008/04/tamil-blogs-easy-search.html.
Tamil Blogs அப்படின்னு தேடினா http://binarywaves.blogspot.com/2007/04/tamil-blogs.html இந்தப் பதிவு முதல் பக்கத்துல வந்துரும். இதுக்கும் இது என்னோட ஆங்கிலப்பதிவு. நேத்துதான் இந்தப்பதிவையும் போட்டேன் அதுவும் 50க்குள்ள இருக்கு. சூட்சுமமே இதுதான்.
இந்த விஷயத்துல Wordpress கொஞ்சம் முன்னேறி இருக்கு. அதாவது தமிழ்ல தேடினா கிடைகிற வசதி ப்லாக்கரை விட wordpressல கொஞ்சம் அதிகம். அந்தக் காரணமாவே wordpressக்கு போற மக்கள் அதிகம். ப்லாக்கர்லயும் இந்த மாதிரி விளையாடினா நிறைய பேர் பார்க்குற வாய்ப்பு அதிகமாகும்.
Monday, March 31, 2008
என்னையே எல்லாரும் பார்க்குறாங்க
ஒடம்புக்கு சரியில்லாம ஒருத்தர் கூட வந்து இருக்கோம்னு கூட ஒரு தயவு தாட்சயண்மே இல்லாம தங்கமணி "மாமா, அங்கே பாருங்களேன். அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா நகத்தை வெச்சு(ஒட்டுதான்) இருக்கு?"ன்னு சொல்ல, கட்டாத கண்ணு அப்பத்தான் கட்டுச்சு. இனிமே நின்னா வேலைக்கு ஆவாதுன்னு மூலையில போட்டு இருந்த நாற்காலியில போயி உக்காந்துகிட்டேன்.
கொஞ்ச நேரம் தலை குனிஞ்சுகிட்டே ஆசுவாசப்படுத்திகிட்டேன். பணிவு எல்லாம் இல்லீங்க, நோவுதான். சித்த நேரம் கழிச்சு சுத்தி உக்காந்து
இருக்கிறவங்கள பார்த்தேன். 2 இந்தியக் குடும்பங்க, 3 வெள்ளைக் குடும்பங்க,1 கருப்பு பொண்ணு மட்டும். இந்தியக் குடும்பத்துல இருந்தவங்க என்னையே பார்த்துட்டு இருந்தாங்க, லேஸா சிரிக்கவும் செஞ்சாங்க. அம்மணிகிட்ட திரும்பி"பார்த்தியா, ஐயாவுக்கு என்னிக்குமே மவுசுதான்".
"உலகத்துல முட்டாள்னா அது நான் மட்டும்தான். வேற எல்லாம் இல்லே. இது வேற கதையா இருக்கும். ஆமா இந்த நேரத்துல கூட கிளுகிளுப்பு கேக்குதோ?".
இந்த பன்னு நமக்குத் தேவையா? இந்த ஊரு கலாச்சாரம் ஆச்சே.. அவுங்கள பார்த்து நானும் சிரிச்சேன். அந்த ஆம்பளையும் சரி, பொம்பளையும் சரி என்னை பார்த்துகிட்டே இருக்காங்களே தவிர ஒரு பதில் சிரிப்பும் இல்லே.
"சே, சிங்கத்த சேதாரம் பண்ணிட்டாங்களே"ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு வெள்ளைக்காரியப் பார்த்தேன். அதுவும் என்னையே பார்க்குது, அதுவும் விடாம. எல்லாரும் என்னையே பார்க்குறாங்கன்னா ரெண்டு விஷயம் தான் இதுல இருக்கு. ஒன்னு நான் ரொம்ப அழகா இருக்கனும், இல்லாட்டி போடக்கூடியதை(இருபல் இணை) மறந்து போடாம இருந்து இருக்கனும். அப்படியே சுத்தி பார்க்குற மாதிரி கொஞ்சம் நேரம் ஜன்னலைப் பார்த்தேன், அப்படியே எதிர்த்தாப்புல இருக்கிற படத்தைப் பார்த்தேன், நைஸா குனிஞ்சு பார்த்ததுக்கப்புறம்தான் பெரு மூச்சு விட்டேன். போட வேண்டியதை எல்லாம் சரியாத்தான் போட்டு இருக்கேன்.
அப்புறம் என்ன? சரி ஒரு புத்திசாலிய எல்லாரும் அப்படித்தான் பார்ப்பாங்கன்னு மனச தேத்திகிட்டேன். எவ்வளவு நேரம்தான் உக்காந்தே இருக்கிறது, கொஞ்சம் உலாவலேம்னு எந்திருச்சு மக்களைப் பார்த்தேன். இப்பவும் எல்லாரும் என்னையத்தான் பார்க்கிறாங்க, ஆனா சலிப்பா, கோவமா. நாம அசந்து இருந்த நேரத்துல, நாம புத்திசாலி இல்லீங்கிறத அம்மணி சைகையாலே அவுங்களுக்கு சொல்லிருப்பாங்களோ? இருக்காது.
வேற என்னவா இருக்கும், இப்பவும் அந்த மக்களை பார்த்தேன், அதே கடுப்பு, கோவம்.
"என்னவா இருக்கும்?"
திரும்பி பார்த்தா சத்தமில்லாம ஒரு தொலைக்காட்சி ஓடிட்டு இருக்கு. அடப் பாவிகளா இதைத்தான் இவ்வளவு நேரம் பார்த்துகிட்டு, சிரிச்சுகிட்டு இருந்தீங்களா?
"தலைக்கு மேல இவ்வளவு பெரிசா படம் ஓடிட்டு இருக்கு நமக்கு இது
தெரியாம போச்சே. என்னமோ என்னையதான் பார்த்துகிட்டு இருந்தீங்கன்னு இல்லே அம்மணிகிட்ட சவடால் விட்டுகிட்டு இருக்கேன். இதுக்கு மேலையுமா ஒரு கேவலம் வேணும்?"இப்போ இருக்கிற நோவ விட இந்தக் கேவலம் கடுப்படிக்க மறுபடியும் நான் அவுங்கள பார்க்க ஆரம்பிச்சேன், அவுங்க என்னைய பார்க்க ஆரம்பிச்சாங்க.
Saturday, March 29, 2008
நீ என்னான்ற... ஏய் இப்போ என்னான்ற
RC New Boys and Girls - இவுங்க யாரு? எந்த ஊர்ல இருக்காங்க?
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
-
'சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது...' & பிரமிளின் புகழ்பெற...


