Wednesday, May 28, 2008

எடியூரப்பா, கலைஞர், ஒகேனக்கல், ஆப்பு

முதன் முறையாக தென்னிந்தியாவில் கோலேச்சி உள்ளது பாஜக. வாழ்த்துக்கள்!
பெங்களூர் உள்ளூர் முன்னேற்றத்துல குமாரசாமி ஒரு வேகத்தை கொண்டுவந்தாரு. முடிஞ்ச வரைக்கும் அவர் கட்சியால தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்காரங்களுக்கு பிரச்சினை வராம பார்த்துட்டு இருந்தாரு. அப்பவும் வேதிகே, காட்டாளு, ரேணுகா எல்லாம் வந்துட்டு இருந்தாலும் கொஞ்சம் நாம மூச்சு விடற மாதிரி வெச்சு இருந்தாரு. இதை பாஜக காப்பாத்துமா?

இனி நம்ம மேட்டருக்கு வருவோம்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒத்திப்போட்டு தனது சாணக்கியத் தனத்தை மறுபடியும் நிலைநாட்டினார் தலைவர். காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டபடியால் கூட இருக்கலாம். ஆனால் வாட்டாள், காட்டாள் மாதிரி ஆளுங்ககிட்டே எல்லாம் மோதி மக்களை காயப் படுத்த வேணாம்னு நினைச்சு இந்தத் திட்டத்தோட செயலாக்கத்தை ஒத்தி வெச்சாரு. ஆனா கர்நாடக மக்கள் வாட்டாளுக்கும்,, காங்கிரஸுக்கும் சேர்த்தே ஆப்படிச்சுட்டாங்க. இதுல மண்டை காயறது வழக்கம் போல தமிழனுங்கதான். குறிப்பா தர்மபுரி மாவட்ட மக்கள். இனி கலைஞர் என்ன செய்வாரு?? விகடனுக்கு எடியூரப்பா சொன்ன விஷயம் கலைஞர் வயித்துல புளிய கரைச்சு இருக்கலாம்.

விகடன் கேள்வி: 'நிலையானஅரசு கர்நாடகத்தில் வரட் டும் என்றுதான் திட் டத்தை ஒத்தி வைத்தார் எங்கள் முதல்வர்.தர்மபுரி-கிருஷ்ணகிரி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?''

எடியூரப்பா: (கூர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டே) 'இந்தக் கேள்வியைத்தான் முதல்ல

கேட்பீங்கனு நினைச்சேன். ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்..! தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.

தமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பிரச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி... எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.''



ஆக மொத்தத்துல அம்மாவுக்கு அடுத்த தேர்தல்ல பேச அவல் கிடைச்சாச்சு, எப்படியும் கூட்டு வெச்சுக்குவாங்க. அப்புறம் என்ன? இந்த முறை நாடாள(!)மன்ற தேர்தலுக்கு ஒரு செம ட்ரம்ப் கார்ட் கிடைச்சாச்சே. அதுக்குள்ள இந்தப் பிரச்சினைய முடிக்க தலைவர் பார்ப்பாரு. பஸ் எரியாம, ரத்தம் பார்க்காம விடமாட்டாங்க போல இருக்கு. இந்த விளையாட்டுல வழக்கம் போல தோத்து போயி காய்ஞ்சு கருவாடா போறவங்க நாமதானுங்களே. ஒழுக்கமா வாழ விடுங்கப்பா..

3 comments:

  1. சரியா சொன்னீங்க. இந்த நேரம் பாத்து நிறைய சொகுசு பேருந்து எல்லாம் விட்டு இருக்காங்க.

    வட்டாளுக்கு டெபாசிட் கூட மிஞ்சலைனாலும் சப்ப மேட்டருக்கு எல்லாம் கொடி பிடிக்கறதுல கில்லாடி. :)

    நான் தான் ரவுடி! நான் தான் ரவுடினு நிறைய வேதிகே ஆளுக வேற திரியாறங்க.

    ஒரே மஸ்த் மஜா மாடி தான்! :p

    ReplyDelete
  2. நல்லா சொல்லி இருக்கீங்க!

    //அய்யா! இதை இப்ப ஒத்தி வச்சா அப்புறம் ஒகேனக்கல்ல அவனுக்கு ஒத்திக்கு வச்ச மாதிரிதான்.!

    அவன் என்னடான்னா ஒகே நக்கல் பண்ணிக்கிட்டிருக்கான்.

    நமக்கு பிரச்னை வேணும்! நியாயம் வேண்டாம்.! இன்னிக்கு பொழப்பு ஓடுச்சான்னு திரியிற அரசியல் வியாதிகளுக்கு மத்தியில் தீர்வு காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்.//


    இப்படித்தான் ஒரு பதிவில் நானும் எழுதி இருந்தேன்.
    http://surekaa.blogspot.com/2008/04/blog-post.html

    நம்மள்லாம் புலம்பி என்ன பண்ண?
    பாவம் தருமபுரி மக்கள்!

    ReplyDelete
  3. ஹ்ம்ம்ம்... என்ன ஆகப் போகுதோ ஒக்கேனக்கல் இனிமே. சரி, இந்த திட்டத்தால் பலனடையும் 50% பேர் தர்மபுரி, கிருஷ்னகிரி மாவட்டத்தில் இருக்கும் கன்னடர்கள் என்று கேள்விப்பட்டேனே? ஏனிந்த இன வெறி அவர்களுக்கு?

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)