Saturday, May 17, 2008

அவியல் - 1

 1. அரிசி விலை எல்லாம் கன்னாபின்னான்னு ஏறிப்போயிருச்சு. இதுக்கு எல்லாம் காரணம் வெளிநாட்டுச்சதிதான்(இந்தியா). ஏன்?
 2. மிதிவண்டி வாங்கப் போறேன். வாழ்க்கை எங்க ஆரம்பிச்சதோ அங்கேயே இருக்கேன். ஆமாங்க மிதிவண்டிதான் எனக்கு அப்பா குடுத்த முதல் வண்டி. அதையே நானே இங்கே வாங்கப்போறேன். முன்னேத்தம் தானுங்களே.
 3. தனியா இருப்பது கொடுமைங்க, எப்படித்தான் எல்லாரும் தனியா இருக்காங்களோ? நண்பர்கள் சூழ வாழ்த்து வந்த எனக்கு இது ரொம்பவும் புதுசு. ரொம்பக் கஷ்டங்க.
 4. எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தாச்சு. techsatishல இருந்து இப்போ TubeTamilக்கு மாறியாச்சு. இடையில aarampamம்.
 5. புதரகத்துல வெயில் காலத்துல கூட குளிருது, இந்த லட்சணத்துல மழை வேற. நம்ம ஊர்ல மழை எப்படா வரும்னு இருக்கு, இங்கேயோ தலைகீழ்.
 6. யாராவது பதிவுகள்பத்தி பேசினா கடுப்பா இருக்கு. பதிவர்கள் என்கிட்ட வேற என்னத்தை பேசுவாங்க. ஏன்?
 7. ஆஹா FM கேட்க ஆரம்பிச்சிருக்கேன். அதுல அடிக்கடி நமீதா நர்ஸரி ஸ்கூல்னு ஒரு வெளம்பரம் வருதே, அது என்னங்க?
 8. குருவி பார்த்துட்டு சேட்ல கிடைக்கிறவங்களை எல்லாம் திட்டிட்டு இருந்தேன்.
 9. புதுசா வந்த எந்தப் பாட்டையுமே கேட்கத் தோணலை, தசாவதாரம் உட்பட. தாம் தூம் பரவாயில்லை. வாரணம் ஆயிரம் பாதி பாட்டுகளும்கூட கடுப்பாவே இருக்கு.
 10. சன் தொலைக்காட்சியில் தமிழ் வெள்ளித்திரை 75வது வருசத்தை முன்னிட்டு போடுற பழைய படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா நடு ராத்தி ஆகிறதனால பாதியிலேயே தூங்கிடறேன்.
 11. எப்படா இந்தியா போலாம்னு இருக்கு. ஏன்?
 12. IPL வெளங்குமா? DIGITALipl.comதான் பார்க்கிறேன்.
 13. ரொம்ப நாளாச்சு ஊர் சுத்தி, அதுதான் கடுப்பா இருக்கு.
 14. பதிவுகளை விட டுவிட்டு பைத்தியம் சீக்கிரம் புடிச்சிருச்சு. பதிவுகளேயே கட்டிட்டி மாறடிக்க முடியல இது டுவிட்டும். அங்கேயும் பதிவர்கள்தான் விதை போட்டு தமிழ் வளர்த்துட்டு இருக்காங்க. வாழ்க தமிழ்!

அவியல் தொடரும்...

18 comments:

 1. என்ன ஓய் பொலம்பல் அதிகமா இருக்குற மாதிரி இருக்கு?

  சீக்கிரம் ஊருக்கு வாரும். எல்லாம் நல்லாப் போயிடும் :)

  ReplyDelete
 2. அவியல்னு தலைப்பு வெச்சதுக்கு அலம்பல்னு வெச்சிருக்கலாம் ;) அமெரிக்கான்னு போறது.. அங்க போயிட்டு இந்தியான்னு அழுகுறது. அதுக்குக் காரணம் நீங்க அன்பு வெச்சிருக்குறவங்க இந்தியாவுல இருக்காங்கன்னு நெனைக்கிறேன்.

  அமெரிக்காவுல புது நண்பர்கள் உருவாக்கிக்கோங்க. பொழுது போகும்.
  மேயரு சௌக்கியமா? :D

  ரொம்பக் கஷ்டமாயிருந்தா ஆம்ஸ்டர்டாம்ல வேலையத் தேடீட்டு வந்துருங்க. அலுப்பே தட்டாது :-P

  இங்கயும் இன்னைக்கு நேத்து மழைதான். திரும்பவும் குளிரத் தொடங்கீருச்சு. அதுவும் நல்லாத்தான் இருக்கு.

  ReplyDelete
 3. வீட்டுல யாரியாச்சும் கூட கூப்பிட்டு போயிருக்கலாமில்ல. எப்படியோ, ஞாயித்துக்கிழமை ஜிரா பிரியாணி, இளா அவியல்னு நல்லாவே போகுது

  ReplyDelete
 4. .I enjoyed reading your post.

  /சன் தொலைக்காட்சியில் தமிழ் வெள்ளித்திரை 75வது வருசத்தை முன்னிட்டு போடுற பழைய படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா நடு ராத்தி ஆகிறதனால பாதியிலேயே தூங்கிடறேன்./

  We have Dish DVR (Digital Video Recorder).If you have already did not have this option.This can be order thru Dish Network. This DVR service cost us only $5.99.You can record any program like movies and view it at your convenience.You can check with Dish Network for more info. DVR itself is normally free.You only pay for the service.It is really worth it.I hope this info. helps.

  Ramya  Ramya

  ReplyDelete
 5. @தஞ்சாவூரான் -> பொட்டி எல்லாம் தயார், விட்டா போதும்

  @கப்பி- தெய்வீக சிரிப்பையா உமது.

  @ராகவன் -> உங்க பிரியாணிக்கும் நம்ம அவியலுக்கும் பெரிசா வித்தியாசம் இல்லை. வெளிநாடு போனாலும் அடிப்படை அரிசி பிரச்சினை தீரல பார்த்தீங்களா? நீங்க அரிசில சமைச்சதை எதுவும் சாப்பிடறது இல்லைன்னு கேள்விப்பட்டேனே, உண்மையா?

  ReplyDelete
 6. //தனியா இருப்பது கொடுமைங்க, எப்படித்தான் எல்லாரும் தனியா இருக்காங்களோ? நண்பர்கள் சூழ வாழ்த்து வந்த எனக்கு இது ரொம்பவும் புதுசு. ரொம்பக் கஷ்டங்க//

  எனக்கும் அப்படி தான் இருந்தது அப்புறம் பழகி விட்டது !!!

  //சன் தொலைக்காட்சியில் தமிழ் வெள்ளித்திரை 75வது வருசத்தை முன்னிட்டு போடுற பழைய படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா நடு ராத்தி ஆகிறதனால பாதியிலேயே தூங்கிடறேன்//

  நானும் பழைய படங்கள்னு ரொம்ப ஆர்வமா இருந்தேன், ஆனால் சிங்கப்பூர் ல் (தாமதமாக) வருவது எல்லாம் ஓரளவு புதிய படங்கள், எதோ ஒரு வாரம் பழைய படங்கள் போட்டாங்க அப்பா எனக்கு இரவு ஷிபிட் ஆக போய் விட்டது :((.. இந்த K TV இல்லாம பழைய படங்கள் பார்க்கவே முடியலை.

  ReplyDelete
 7. கோபி & பிரபா - > நன்றி.

  இந்த மாதிரி எல்லாம் ரெண்டு ஸ்மைலி போட்டா என்னங்க அர்த்தம்? மின்சார கனவுல வர்ற மன்சூர் அலிகான் அல்லக்கைங்க ரியாக்ஷன் மாதிரியே இருக்கு.

  ReplyDelete
 8. //குருவி பார்த்துட்டு சேட்ல கிடைக்கிறவங்களை எல்லாம் திட்டிட்டு இருந்தேன்//

  இது பரவாயில்லை. குருவி பாத்துட்டு மாடி மேலேர்ந்து குதிச்சு ரயிலை பிடிக்க முயற்சி பண்ணலையே!!!...:-))))

  ReplyDelete
 9. அவியல் இல்லை சுயபுலம்பல். அப்புறம் நண்பர்களோட தொலைபேசினா இவ்வளவு அழுத்தம் இருக்காது! :))

  ReplyDelete
 10. இதையே பினாத்தலாருக்கு ஒரு பின்னூட்டம் அல்லது கொத்தனாருக்கு ஒரு கடிதம்னு பெயர் வெச்சு இருந்தா பிச்சுகிட்டு போயிருக்குமில்ல? :))

  நான் பின்னூட்டத்தை சொன்னேன். :p

  ReplyDelete
 11. எல்லாம் ஒரு phase ங்க...passing cloud .மாதிரி...சரியாப்போகும்...
  நல்ல படம் பாருங்கள்

  cheers

  ReplyDelete
 12. //# அரிசி விலை எல்லாம் கன்னாபின்னான்னு ஏறிப்போயிருச்சு. இதுக்கு எல்லாம் காரணம் வெளிநாட்டுச்சதிதான்(இந்தியா). ஏன்?
  # மிதிவண்டி வாங்கப் போறேன். வாழ்க்கை எங்க ஆரம்பிச்சதோ அங்கேயே இருக்கேன். ஆமாங்க மிதிவண்டிதான் எனக்கு அப்பா குடுத்த முதல் வண்டி. அதையே நானே இங்கே வாங்கப்போறேன். முன்னேத்தம் தானுங்களே//

  சூப்பரு.. ஹிஹி.. :))

  ReplyDelete
 13. ////தனியா இருப்பது கொடுமைங்க, எப்படித்தான் எல்லாரும் தனியா இருக்காங்களோ? நண்பர்கள் சூழ வாழ்த்து வந்த எனக்கு இது ரொம்பவும் புதுசு. ரொம்பக் கஷ்டங்க//

  நீங்களாவது பரவால்ல.. அமெரிக்கால இருந்துட்டு தனியா இருக்கிங்க.. நான் கோவைல இருந்துட்டே தனியா இருக்கேன்.. :(

  ReplyDelete
 14. ரொம்ப சோகமா இருக்கீங்க போல. புலம்பல் னு தலைப்பு வச்சிருக்கலாம்

  ReplyDelete
 15. Hi..anybody from Helsinki,Finland.
  Me too doing the same thing exactly as Ila...i am staying alone here... :-((((((((((

  - Nagesh

  ReplyDelete

WhatsApp DP - சிறுகதை

கா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (3) காதல் (14) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)