Tuesday, June 1, 2010

காதல் ஜூரம்-1

(தமிழ் பதிவுலகத்தில் காதல்)

இவன் எழுதும் பதிவுக்கு பின்னூட்டம் விழுந்தது இதுதான் முதன் முறை. இதுவரைக்கு 26 பதிவு எழுதியாச்சு. யாரும் கண்டுக்கலே. பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவனுக்கு எவன் பின்னூட்டம் போடுவான். இதையெல்லாம் எழுதினாத்தா பிரபலம் ஆவோம்னு இவனுக்கும் தெரியல. Onsite வந்ததுல இருந்து தமிழ் மேல இவனுக்கு இருக்கிற பற்று அதிகமாக.. அதிகமாக எழுத ஆரம்பிச்ச போதுதான் கவிதை எழுத ஆரம்பிச்சான். அப்புறம் பிலாக் பண்ண ஆரம்பிச்சு உருப்படாத போனவன் இவன். தமிழ் ஆரவாரமே இல்லாத இடம், பணி புரியும் இடத்திலும் ஹிந்தி இப்படி தமிழுக்கு அப்பால் இருக்கிறவங்களுக்குத்தானே தமிழ் மேல இனம்புரியா ஆர்வம் வரும். . சொந்தப்பேரில் எழுத, இவன் படம் போட்டுக்க விருப்பமில்லாமல், எழுதும் பதிவர்களில் இவனும் ஒருவன்.

இவன் எழுதும் கவிதையை யாரும் படிப்பதே இல்லை. இதற்கும், எல்லாத்திரட்டிகளின் பட்டையயும் போட்டு ஒரு பின்னூட்டமும் வரலை. அப்படியே வந்தாலும் ஜப்பான்காரி குச்சி எழுத்தை மடிச்சு வெச்சிட்டுப் போவாள். அன்னிக்குன்னு பார்த்து ஒரு பின்னூட்டம் வந்திருந்தது, அதுவும் அனானியாய்.

”உங்கள் கவிதையை ரசித்தேன்”.
அட, ஆச்சர்யமா இருந்துச்சு.நமக்கும் பின்னூட்டம் வருதேன்னு. ஹ்ம்ம், இருக்கட்டுமேன்னு ”உங்க பின்னூட்டத்துக்கு நன்றி”ன்னு ஒரு பின்னூட்டம் போட்டு எண்ணிக்கையில் இன்னொன்னையும் சேர்த்து தமிழ்மணம் வந்து பார்த்தான். சோத்தாங்கை பக்கம் அவன் இடுகை தெரிஞ்சது. அடுத்த நிமிஷம் இன்னும் பின்னூட்டங்கள் வந்ததா ஜிமெயில் அறிவிப்பான் வந்து சொல்லிட்டு போனார்.

Anonymous Said
You are welcome.


Anonymous Said
"DONT PUBLISH"


Please add my id so that we can chat in this weekend. "***@********.com".

அட, நமக்கும் ஒரு ரசிகப் பட்டாளம் போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு weekend எப்படி என்ஜாய் பண்றதுன்னு பட்டியல் போட ஆரம்பிச்சான் ரகு.

விதி சொன்னது: அடப் பாவி இனிமே உனக்கு வீக் எண்ட் எல்லாமே பதிவுலகம் தான், அதனால கடேசி வாரம் என்ஜாய்!


Onsite வந்துட்டா மட்டும் நமக்கு எங்கிருந்தோ மொழி மேல அப்படி ஒரு வெறி வந்துரும். காரணம் வேற ஒன்னும் இல்லீங்க, வெள்ளையும் கருப்பையும் பார்த்து பார்த்து, அவங்க என்ன பேசறாங்கன்னு தெரியாம உதட்டையே உத்து உத்து பார்த்து, பாதி அர்த்தம் புரிஞ்சி, மீதிக்கு நாமே fill in the blanks பண்ணினா... வரத்தானே செய்யும். ரகுவுக்கும் அப்படித்தான் வந்துச்சு, தமிழார்வம். அதனாலயே நெறைய படிச்சு, blogs எழுத ஆரம்பிச்சான்.

வாரக் கடேசிக்கு எங்கே போலாம்னு யோசனை பண்ணினான். ஒரு பட்டியலே போட்டான் ரகு.



  • பாலா வீட்டுக்கு போயி அவனுக்கு ஒரு சலாம் போட்டு ”பாகுன்னாரா?” அப்படின்னு அவன் வூட்டுக்காரம்மாகிட்ட கேட்டாவே, உச்சில முடி நிக்கிற மாதிரி காரமா கோழிச் சாப்பாடு கிடைக்கும்.

  • விஜிய இங்கே கூப்பிட்டு ரெண்டு படத்த பார்த்துட்டே, கரோனாவை(பீர்) தள்ளி flat ஆகலாம்.

  • வடக்கத்து ஜிகிட்டுக்கு போனப் போட்டு “அயாம் ஃபைன் யார்? யூ கம் ஹியர்னா” அப்படின்னு குச் குச் ஹோத்தா பண்ணலாம். ஆனா ரெண்டு நாளைக்கு வழிய முடியாதே... அதுக்காக ஞாயித்துக்கிழமை செம தூக்கம் போடனும்.

இப்படி பட்டியல வெவரமா வேகமா போட்டுட்டு இருக்கும் போது “டொங்க்”. எவனோ ஜிடாக்ல கூப்பிடறான்னு நினைச்சுகிட்டே போனா பூ படம் போட்டு தெரியாத பேர்ல சேட்ல ஒரு ஆளு. ஒரு வேளை பேர மாத்தி விளையாடுற வ.வா.ச மக்களா இருப்பாங்களான்னு கூட நினைச்சான்.

"Hi, How are You?" அப்படின்னு முதல் வரி.

ID பார்த்தான் ”traehteews_sruoy”. என்ன எழவுடா இது. ஏதோ ஒன்ன விக்க வர பொம்பளைங்க ID மாதிரியே இருக்கு. சரி நமக்கும் நேரம் போவலை என்ன நடக்கும்னு பார்க்கலாம்.

“I am fine, whatzup"

"This is my New ID, whn is your next blog" ஆஹா அதுவா இது. தூள்டா.

"In a day. What is your name? where are you from? how did u get my blog? do you like it? ho..."

"ஹல்லோ நிறுத்துங்க, எதுக்கு இத்தனை கேள்வி? என் பேரு ராஜி, உங்க பாஷையில் சொன்னா புதரகம்தான். உங்களை மாதிரி Onsite எல்லாம் வரலை. இந்தியாவுல பொறந்து, இங்கே படிக்க வந்தேன். அப்படியே வேலை தேடி, செட்டிலாகிட்டு இருக்கேன். இப்போ உங்க ஊருக்குப் பக்கம்தான். போதுமா? உங்களைப் பத்தி நானும் விசாரிச்சுட்டேன். Tamil பதிவு எழுதறவங்களை விசாரிக்கிறது கஷ்டமா என்ன? உங்கள பத்தி விவரத்தை நாஞ்சொல்லவா?”

”ஆஹா. இவ்வளவு தூரம் ஆகிப்போயிருச்சா? சரிங்க உங்க நம்பர் கொடுங்க. கூப்பிடறேன்”.


“அதுக்குள்ளேயே சந்தேகமா? நான் பொண்ணுதான். கலாய்க்க எல்லாம் இல்லீங்க. உங்க புரொபல் பார்த்தேன், பக்கத்து ஊர்தான்னு தெரிஞ்சு போயிருச்சு. அதான் சேட்டிங். எப்படியும் வாரக் கடேசி சும்மாதானே இருப்பீங்க. மொக்கைப் போட ஆள் இல்லைன்னு கவலைப்பட வேணாம். நான் சேட்டுவேன், நாள் முழுக்க”

“சரி நீங்க பதிவ படிக்கிறீங்களே. நீங்க பதிவெல்லாம் எழுதுவீங்களா?”

“ஓ எழுதுவேனே. ஆனா வேற பேர்ல. உங்களால கண்டுபிடிக்க முடியாது”

“அடச்சொல்லுங்க”


“நீங்க கண்டிப்பா படிச்சிருப்பீங்க”

“அப்படியா. அப்போ தெரிஞ்ச முகம்தான்னு சொல்லுங்க”

“படிச்சா அதிர்ச்சியாகிர மாட்டீங்களே”

இருதயத்துடிப்பு அதிகமாக ஆச்சு “என்னாங்க, நக்கலா. பதிவச் சொல்லுங்க, நான் நீங்க யாருன்னு சொல்லுறேன். பதிவெல்லாம் கம்மியாத்தான் போட்டிருக்கேன். ஆனா எல்லாப் பதிவர்களையும் தெரியும். 80 பேர்க்குமேல சேட்டுல சேர்த்து வெச்சிருக்கேன். தெரியுங்களா?”

”பதிவோட பேர அப்புறம் சொல்றேன். இப்போ கூப்பிடுங்க” எண் திரையில வந்து விழுந்துச்சு.

“9 மணிக்கு மேல கூப்பிடறேனே, இன்னும் 45 நிமிஷம்தானே இருக்கு”

“ஓஹ், free minutesக்காகவா? சரி கூப்பிடுங்க”

மனசு 45 நிமிசத்துக்கெல்லாம் காத்திருக்க மாட்டேன்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சது. தொடர்ச்சியான 3 வது தம்ம அடிக்கும் போதுதான் ஒரு கேள்வி வந்துச்சு.



”லவ்வு வந்துருச்சா?” பொண்ணு சேட் பண்ணினாவே லவ்வுன்னு நினைக்கிற அளவுக்கு இருக்கிற சாதாரண பையன் நம்ம ரகு இல்லேன்னா கூட, அவனும் பையந்தானே.

9 மணி ஆனவுடன் எண்ணைத் தட்டினான். ஒரு ரிங்லேயே ”சொல்லுங்க ரகு”ன்னு ஒரு வீணை பேசிச்சு. அசடு வழிஞ்சே 30 நிமிஷம் பேசினான் ரகு. வழக்கமான விசாரிப்பு முடிஞ்சு, வழக்கமான குடும்ப கதை முடிஞ்சு, என்ன சமைக்கத்தெரியும் பேசி, சுறா, சிங்கம், ராவணன் பாடல்கள்னு ஆரம்பிச்சி ஒரு படம் விடாம, புடிச்ச சீன், புடிக்காத பாட்டு அப்படின்னு அபூர்வ சகோதரர்கள் வரும் போது மணி 3:20.

ரெண்டு பேருக்கும் மனசே இல்லாம தூங்கப் போனாங்க. ஆனா ரகு தூங்கல.

காலையில 6:10 மணிக்கு மணி அடிச்சது.

“தூக்கமே வரலேடா. நீ தூங்குனியா?” முதன் முறையா டா போட்டு ’பேசினாள். டா போட்டுட்டா பசங்க அங்கேயே முடிவு பண்ணிற மாட்டாங்க? ‘ போன்ல பேசிகிட்டே காபி முடிஞ்சு, உச்சா போயி, ** போயி 9 மணி வரைக்கும் போச்சு. அன்னிக்கு நல்லா தூங்கல ஆனா ராத்திரி 10 மணிக்கே போன் பேசுறத நிறுத்திட்டாங்க. இப்படியே சனிக்கிழமை, போனும்,. சேட்டும்னு ஓடிப்போக, ஏதோ ஒன்னு ரெண்டு பேர் மனசிலேயும் ஓடி வந்து உக்காந்துகிச்சு.

ஞாயிறு, காலை 7:20 மணிக்கு.

”டொங்க்”

“ஹேய் உன்னோட பதிவென்னென்னு சொல்லவே இல்லியே”

”சொன்னா சிரிப்பேடா. வேணாம்”

“அடச்சொல்லுன்னா”



“உன்ன மாதிரி எல்லாம் கவிதை எல்லாம் எனக்கு வராது”

”அப்போ என்னோடது எல்லாம் கவிதைங்கிறியா?”



”பின்னே? நீ கவிஜன். நான் மனசில பட்டத எழுதறவ”, ஆர்வத்தைத் தூண்டிக்கிட்டே போனா.



“சொல்றியா? இல்லாட்டி போவட்டுமா?”



”சொல்றேன், சொல்றேன்”




”டொங்க்” பதிவோட முகவரி வந்துச்சு.




“பகுத்தறிவாளர்கள் வாழ்க” அப்படின்னு பெரியாரைப் புகழ்ந்தும், பிராமிணர்களைச்சாடியும், அதேசமயம் செம நாகரிகமா எழுற ஒரு ஆம்பளைப் பதிவரின் பதிவு அது.

“எதுக்குடி இதத்தர்றே. இத நான் படிக்கிறது இல்லே”

“நாந்தான் இத எழுதறேன், நம்பலைன்னா ஒரு பின்னூட்டம் போடு. நான் வெளியிடறேன்.”

ஒரு பதிவுக்கு “நல்ல பதிவு" அப்படின்னு பின்னூட்டம் போட்டான். “போட்டாச்சு”


“இப்போ பாருடா” பின்னூட்டம் வெளியாகிருந்தது.

மனசுக்குள்ளே ஏதோ இனம் புரியாத கிலி வந்துச்சு. எப்போ பார்த்தாலும், தினமலர், பாஜக, பிராமிணர்கள்ன்னு தாக்கு தாக்குன்னு தாக்கி, எப்பவுமே சூடா இருக்கிற பதிவு அது. பாதி பேருக்கு மேல அந்தப் பதிவர் மேல செம காண்டுல இருந்தாங்க. எல்லாரும் ஆம்பிளைன்னு நினைச்சு இருக்க ”இது ஒரு பொண்ணா?”.

“என்னடா சத்தத்தையே காணோம்”

“அதிர்ச்சியா இருக்கு”

“ஏன்?இந்தப் பதிவ எழுதறது ஒரு பொண்ணான்னுதானேன்னா? நாந்தான் எழுதறேன். ஏன் எழுதக்கூடாதா?”

“எழுதலாம். தப்பே இல்லே”

“அப்புறம்?”

“ “

“என்ன சத்தத்தையே காணோம்”



“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

”என்னத்தைப் பேசச்சொல்றே” என்றான் பூணூலை அழுத்தி பிடித்தப்படி...



விதி: காதலுக்கு, அவா வீடு, பெரியவா வீடுன்னெல்லாம் தெரியாது.

7 comments:

  1. ***இவன் எழுதும் பதிவுக்கு பின்னூட்டம் விழுந்தது இதுதான் முதன் முறை. இதுவரைக்கு 26 பதிவு எழுதியாச்சு. யாரும் கண்டுக்கலே. பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவனுக்கு எவன் பின்னூட்டம் போடுவான்.***

    பவர்களுக்குள்ள குழாயடி சண்டைதான் பெஸ்ட் வே! :)))

    ReplyDelete
  2. //பவர்களுக்குள்ள குழாயடி சண்டைதான் பெஸ்ட் வே//
    ஆமாங்க, ஸ்ம்- அவும் அடிச்சிக்கிறாங்க, அதைதானே சொல்றீங்க?

    கார்த்தி- நன்றி

    நசரேயன் - நீங்க பதிவுலகத்துக்குவரதுக்கு முன்னாடியே ஆரம்பிச்ச தொடர். கதைநாயகி மாதிரியே ஒரு பதிவர் வர.. தள்ளிப்போட்டு 3 வருசம் ஆகிருச்சுங்க

    ReplyDelete
  3. பின்னிட்டீங்க மக்கா...

    இனி எவனும் பிளாக் படிச்சி, பிரெண்ஷிப் புடிச்சு கடலை போட மாட்டான்...

    ReplyDelete
  4. இந்த‌ சேட்லாம் க‌தையில‌ ம‌ட்டும்தான் ந‌ட‌க்குமா :(

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)