போனவாரம் இராவணன், Super Singer Junior வாரம்னே சொல்லலாம், இருந்தாலும் அதையும் தாண்டி பல பதிவுகள் வந்திருக்கு. இந்த வாரம் ஒரு பெரிய பதிவுகளோட பட்டியல். பொறுத்துக்குங்க மக்களே.
- ஹாலிவுட்பாலாவின் Toystory3 விமர்சனம் - எதிர் பார்த்தது மாதிரியே பதிவ போட்டுட்டாரு பாலா.
http://www.hollywoodbala.com/2010/06/toy-story-3d.html
- சித்ரன் எழுதின அனுபவம், பல விசயங்களை சொல்லாமல் சொல்லியிக்கும் ஒரு பதிவு. மனிதர் மனதளவில் எவ்வளவு சிறுத்துப் போயிட்டாங்க.
http://chithran.blogspot.com/2010/06/blog-post.html
- அட்டகாசமான ஆரம்பம், இப்படியும் கேரளாவை வர்ணிக்க முடியுமான்னு அசத்துது இந்தப்பதிவு
http://kaalapayani.blogspot.com/2010/06/blog-post_15.html - நாமெல்லாம் வெகு சீக்கிரத்துல நகர வாழ்க்கைக்கும், மறத்தலுக்கும் அடிமையாகும் போது, பல விசயங்களை மறந்துடறோம். அதுல முக்கியமான ஒன்னு தாத்தா பாட்டிங்க. அவுங்க இல்லாம நாம இல்லே. நாம் முதன் முறையா ஒன்னுக்கு ஆய் போவும்போது அம்மாக்கள் லைட்டா முகம் சுழிச்சிருப்பாங்க, அப்போ பாட்டிங்க துடைச்சி சுத்தபத்தமா அம்மா கையில நம்மள குடுத்திருப்பாங்க. எவ்வளவோ சொல்லலாம்.
கதிரின் கடத்த முடியாத நினைவுகள்
//செங்கமாமுனியப்பன் கோவில் /இந்த வார்த்தைய படிக்கும்போது பளீர்னு மனசுல மின்னல் அடிச்சது போல இருந்துச்சுங்க. ஏன்னு சொல்லவும் வேணுமா? அது எங்க ஊர் ஆச்சே :) - சட்னு ஆரம்பிச்சு பட்னு முடிக்கிறதுல இவர் ஒரு முன்மாதிரி பல பதிவுகள் 10 வரிக்குள்ள முடிஞ்சிடும், ஆனா பத்து நாளைக்கு நமக்குள்ள அந்தப் பதிவு சுத்தும். அதுல ஒரு இந்தப் பால பாடம், கே.ரவிஷங்கர்
விழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை - குசும்பனின் கல்லூரி கலாட்டா போட்டோஸ் , சொல்ல ஒன்னுமில்லை ஆனாலும் செம தகிரியம்பா.. அதுல ரெண்டு பின்னூட்டம் செம கல கட்டல் ..
1) கவிதா Kavitha --> ப்ளாகரா இருக்கறது எங்க தப்பா?.... ஏன்ன்ன்ன் இப்படி.??!
2) எம்.எம்.அப்துல்லா-->உங்களை பிளாக்கை நான் திறந்தப்ப பக்கத்துல நின்னு பாத்துகிட்டு இருந்த ரெண்டு பேருக்கு நின்ன இடத்துலேயே டயேரியா ஆயிருச்சு.மூணு பேரு மூக்குல ரெத்தம் வந்து மயக்க மாயிட்டாங்க.இன்னும் ஒருத்தன் கண்ணு அவிஞ்சு போச்சுங்குறான். டாக்டர் எங்கிட்ட இதுக்கெல்லாம் காரணமான அவன் யாரு?? நாடி நரம்பெல்லாம் ரத்தவெறி பிடிச்ச அவன் யாருன்னு கேக்குறாரு.
நீங்க யாரு???
சொல்லுங்க. துபாய்ல நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க??
சொல்லுங்க...சொல்லுங்க...சொல்லுங்க.... - அவியல் 14.06.2010 வழக்கம்போல்தான்.. ஆனாலும் டாப்பு
வாசகர் (சத்தியமாங்க. பெயர் - ஐன்ஸ்டீன், மதுரை) ஒருவர் எஸ்ஸெம்மெஸ்ஸினார்:“Is it parisalkaaran @ luckykrishna?"நான் பதில் சொன்னேன்:-"I'm parisalkaaran, I'm lucky and My name is Krishna. But I'm not luckykrishna" - ரொம்ப நாளைக்கப்புறம் வாத்தி ஜிவாஜி ஸ்டல்ல, முடி போறதுக்கெல்லாம் கவலைப்படாத ஆளுய்யா(பட்டுட்டாலும் முளைச்சிரவாப் போவுது). வாங்க வாத்தி! இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்
- வினையூக்கியோட கதை, நல்லா இருக்கு, என்னமோ சொல்லுது. வர வர ஜெனிய விட இப்படி கலோக்கொயல கலக்குறீங்க வினையூக்கி தெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா - சிறுகதை
- இந்த வாரம் தொடருது ஆதியின் ஆதிக்கம், பதிவோட கதை கவுதம் கதை மாதிரி,.. ஆனாலும் கடைசி வரி நச்,. சூப்பரோ சூப்பர் http://www.aathi-thamira.com/2010/06/blog-post_17.html
- விக்ரம் பத்தி சிலாகிச்சு கருந்தேள் கண்ணாயிரம் http://www.karundhel.com/2010/06/blog-post_16.html
- கார்க்கியின் தேனிலவு நல்லாயிருக்கு http://www.karkibava.com/2010/06/blog-post_17.html.
- கெளதம் மேனனின் காதல் சுரேஷ்கண்ணனின் ரெண்டாவது பதிவும் அருமை. எவ்வளவுதான் ரசிச்சி ரசிச்சு பார்த்திருக்காரு.
- டீலா? நோ டீலா? பெரும்பாலும் பதிவர்களைப் பத்தி பதிவுல பேசுறத நிறுத்திட்டாரு லக்கி(பெரிய எழுத்தாளர் ஆகிட்டாருல்ல). ஆனாலும் கேபிளின் வரிக்கு வரிக்கு கிழிச்சு டீலான்னு கேட்டுபுட்டாரு. ஆமா லக்கி, உங்களுக்கு இந்த மாதிரி விசயகாந்து ஸ்டைலு விவரம் எங்கே கிடைக்குதுன்னு சொன்னா நல்லா இருக்குமே..
- இது ஒரு நல்ல பதிவுகள்ல இதைச் சேர்த்துக்கலாம், அனுபவிச்சு படிங்க. சுகம் தெரியும் அரயத்தி மகன் - டி.அருள் எழிலன்
- ஒருத்தரு கருத்தா கவிதைய எழுதினா இப்படி கலாய்ச்சும் சில பேர் கல்லா கட்டிட்டாங்க. ரொம்ப நாள் ஆச்சு, பதிவுலகத்துல இப்படி ஒரு விளையாட்டி நடந்து http://maniyinpakkam.blogspot.com/2010/06/blog-post_18.html , http://maaruthal.blogspot.com/2010/06/blog-post_18.html , http://vivasaayi.blogspot.com/2010/06/blog-post_18.html
- கொஞ்சம் outof box எழுதுறதுல மருதன் முன்னோடி, இதைப் பத்தி எப்பவாவது உருப்படியா பேசி இருக்கோமா? 'INDIAN ARMY RAPE US!'
- பதிவுகள்னா இப்படித்தான் இருக்கனும்னு ஒரு இலக்கணத்தை இவர் கொண்டுவந்துருவாரு போலிருக்கு. இவரோட எல்லாப் பதிவுகளையுமே சேர்த்துவைக்கனும் போலிருக்கு சில்லறை
- (பிற்சேர்க்கை)
ஹ்ம்ம், என்னாத்த சொல்ல, இப்படியும் ஒரு பக்கம்ஈழத்தில் நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்கு சற்றும் சளைத்தவை அல்ல சத்யமங்கல வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் ,இப்போது தண்டகாரண்யம் வனங்களில் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் போராடும் பழங்குடி இன மக்களுக்கும் நிகழ்த்தப் பட்டிருக்கும் கொடுமைகள் http://mrsdoubt.blogspot.com/2010/06/blog-post_18.html
தண்டகாரண்யமும் ராவண நீதிகளும்- ஒரு வித்தியாசமான பார்வை - இந்த மாதிரிப் பதிவுகள் நிறைய போடுங்க. எந்தக் காலத்துக்கும் படிச்சு தேறிக்கலாம், ரொம்ப அவசியமான பதிவு கூட்டலும் கழித்தலும் . செம கலக்கலா பின்றாங்க. நான் படிக்கிறேன்.
- கடைசியா.. நானும் ராவணன் பார்த்துட்டேன். கிழிச்சு தொங்கப்போடப்பட்ட விமர்சனங்கள், பல சைடுகள்ல இருந்துப் பார்வைகள், திட்டினது, வாழ்த்தினது, இப்படி இராவண வாரத்துல நான் எழுதனும் நினைச்ச மாதிரி எழுதியது சுரேஷ்கண்ணன், ராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்' - Same Pinch. வசனங்கள் வழ வழா கொழ கொழா. “நல்லவங்களை நல்லவங்களா காட்டு, கெட்டவங்களை கெட்டவங்களா காட்டு, ஆனா உண்மையா காட்டிராதேன்னு ஐஸ் ஊனமான சாமிக்கிட்ட கேட்கிற வசனம்(மட்டும்) டாப். நக்ஸல் பிரச்சினைய எடுத்துகிட்டாரோன்னு நினைச்சேன், பிரமிச்சேன், எப்படி சான்று கிடைக்கும்னு யோசிச்சேன். உப்பு சப்பில்லாம முடிஞ்சது, அதுவுமில்லாம படம் வரைஞ்சு பாகம் குறிக்கிற மாதிரி ”குரங்கு, மூக்கறுக்கட்டுமா”. ஷ் அப்பப்பா. கொடுமை.. விக்ரம், ஐசு, ஒளிப்பதிவு, அரங்கம், இசை, பபசுங்காரு, திரைகதைன்னு எல்லாம் நல்லா இருந்தும், கதை வசனத்தால இராவணன் 9தலைய இழந்துட்டான்.
ஏன் இந்தப் பதிவு : சிபஎபா’ன்னா?
Thank You :)
ReplyDelete//ஹ்ம்ம், என்னாத்த சொல்ல, இப்படியும் ஒரு பக்கம் http://mrsdoubt.blogspot.com/2010/06/blog-post_18.html
ReplyDeleteதண்டகாரண்யமும் ராவண நீதிகளும் ://
ஏன் இந்த பக்கத்துக்கு என்ன?! ஹ்ம்ம் இப்படி ஒரு பக்கம் என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு என்ன இருக்கிறது அந்த பக்கத்தில்,பக்கத்தின் பெயரைக் குறித்த அலுப்பா இல்லை அங்கே காணும் எழுத்தைக் குறித்த சலிப்பா!
//போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில, இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.இந்த இடுகையைச் சேர்த்திருக்கேன் //
இப்படித் தான் கருத்துரை இட்டிருந்தீர்கள் எனது பதிவில்,சரி இடுகை நன்றாக இருப்பதாகச் சொல்கிறீர்களாக்கும் என்று உங்கள் சுட்டியை அழுத்தினால் இங்கே இப்படி ஒரு அலுப்பும் சலிப்புமான அறிமுகம்,இதை நகைச்சுவை என்று ஒதுக்க முடியவில்லை.
அவரவர் வலைப்பக்கத்துக்கு என்ன பெயர் தேர்வு செய்வது என்பது அதை எழுதுபவர்களின் விருப்பம் அல்லவா?
//இப்படி ஒரு அலுப்பும் சலிப்புமான அறிமுகம்//
ReplyDeleteஹலோ பக்கம்னா அது பதிவுப்பக்கம் இல்லே. ராவணனைப் பத்தி யாரும் எழுதாத பக்கம். (நாணயத்துக்கு இந்தப் பக்கம் மாதிரி) இதுல எங்கேங்க சலிப்பு வரும். புடிச்சப் பதிவுகளைத்தான் கோர்த்து போட்டிருக்கேன். ஆமா நீங்க சொன்ன மாதிரி சலிச்சுதான் போட்டிருக்கேன், பலதுகளை சலிச்சு நல்லதா வடிச்சு :). ஹ்ம்ம். சோகமா சொல்லாம ஹ்ம்ம்- கார் ஸ்டார்ட் ஆகிர மாதிரி படிக்கனுமாக்கும்.
//அவரவர் வலைப்பக்கத்துக்கு என்ன பெயர் தேர்வு செய்வது என்பது அதை எழுதுபவர்களின் விருப்பம் அல்லவா?/
ReplyDeleteஅது எல்லாம் நம்ம கணக்குக்கே வராதுங்க. தவறான புரிதலுக்கு உட்படுத்தினதுக்கும் மன்னிக்கவும்.
கார்க்கி எழுதிய தேனிலவுன்னு மாத்துங்கண்ணே..
ReplyDeleteகார்க்கியோட தேனிலவு நல்லாயிருக்குன்னு ஏதாவது நினைச்சிட போறாங்க :)
//கார்க்கியோட தேனிலவு //
ReplyDeleteஒரே ஒரு உள்குத்துதான் வெச்சி எழுதியிருக்கேன்,. அதையும் மாத்துங்கன்னா.. தேனில் நிலவும் நிலவு, தேனிலவு..
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி இளா.
ReplyDeleteஎனது வலைப்பக்கம் மற்றும் பெயர் மாற்றங்கள் குறித்து வலையுலகில் சிலர் அவரவர் சொந்தக் கற்பனைகளை சொல்லிக் கொள்கிறார்கள்.அது குறித்தான வெறுப்பே உங்களது பதிவில் எனது பதிவுக்கான அறிமுகத்தை தவறுதலாகப் புரிந்து கொள்ள வைத்து விட்டது.முதல் கருத்துரையில் சொல்லிக் கொள்ள மறந்த விஷயம்.பதிவு அறிமுகத்துக்கு நன்றி .
நன்றி நண்பரே.
ReplyDeleteஇளா...
ReplyDeleteமுனியப்பங்கோவில் சந்தை வழியே செல்லும் பள்ளத்தின் ஊடாக நடந்ததை எப்படி மறக்க முடியும்..
அந்த இடுகை எழுதும் போது அதுவும் செங்கமா முனியப்பன் கோவில் என்று எழுதும் போது உங்கள் நினைவு வந்தது...
உங்கள் அது பின்னூட்டத்தில் நிறைந்தது
டாங்ஸ் இளா :)
ReplyDeleteஎன் வலைப்பதிவுக் கட்டுரை ஒன்றைத் தங்கள் வாசகர்களுக்குப் பரிந்துரை செய்தமைக்கு நன்றி நண்பரே.
ReplyDelete- என். சொக்கன்,
பெங்களூரு.
நேரமில்லாம.. அரைகுறையா எழுதி, விருப்பமில்லாமல் பப்ளிஷ் பண்ணின பதிவு அது. :(
ReplyDeleteஇருந்தாலும்.. ரொம்ப தேங்க்ஸுங்க தல! :)
அண்ணே அல்லாருக்கு பதிவுக்காக லிங் கொடுத்துட்டு எனக்கு பின்னூட்டத்துக்காக லிங்கா அவ்வ்வ்வ்:))))
ReplyDeleteமிக்க நன்றி!
கேரளா பதிவு அருமை!
வந்த சனம் எல்லாருக்கும் நன்றி!
ReplyDeleteநன்றி பாஸ். உங்கள் தொடர் ஆதரவு பெரும் ஊக்கம்.
ReplyDelete(போன வாரம் எழுதப்பட்ட எல்லா பதிவுகளும்னு சிம்பிளா ஒரு வரியில எழுதியிருக்கலாமோ? ஹிஹி.. சும்மனாச்சுக்கும்)
//போன வாரம் எழுதப்பட்ட எல்லா பதிவுகளும்னு சிம்பிளா //
ReplyDeleteSimpleதான் இருந்துச்சு.. போதுமா?
உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை
ReplyDeleteஉங்கள் சேவையும் போற்றுதலுக்கு உரியது..........