Monday, November 3, 2008

நம்மவர்(1995)

ரொம்ப நாளைக்கப்புறம் விரும்பிப் பார்த்த படம் 'நம்மவர்'. ஒவ்வொரு வசனமும், காட்சியும், பாடல்களும் அர்த்தமுள்ளதாகவே இருந்துச்சுங்க. படம் வெளியானப்ப(1995) பார்க்கும்போது, புடிக்காத இந்தப் படம் இப்போ புடிக்குது. பெரும்பாலான கமல் படங்கள் எல்லாமே இப்படித்தான் போல. காலத்துக்கு ஏத்த மாதிரி படம் எடுக்க கமல் கத்துக்கனும். அதுக்காக பேரரசு ரேஞ்சுக்கு போறதெல்லாம் வேஸ்ட். படத்தின் இசையமைப்பாளர் மகேஸ், இன்னும் உயிரோடு இருந்திருந்தா ரகுமானுக்கு நல்ல சவாலா இருந்திருப்பாரு. கமலின் பல சோதனை முயற்சிகள் இந்தப் படத்துல உண்டுங்க.


  • கரண் அறிமுகம்

  • மகேஸ்சின் அற்புதமான இசை

  • இயக்குனர் சேதுமாதவன்(2வது படமா இருந்தாலும்)

  • நடன இயக்குனர் பிருந்தா. இவுங்களை எப்படி இந்தப் பாத்திரத்துக்கு ஒத்துக்க வெச்சாங்கன்னு தான் தெரியல, ஆனாலும் அற்புதமான தேர்வு.

  • நாகேசின் அற்புதமான நடிப்பு. ரொம்ப நாளைக்கப்புறம் நகைச்சுவை நடிகரை அபூர்வ சகோதரர்கள் படத்துல ஒரு வில்லனாக் கொண்டு வந்தவர் கமல். பின்னாடி மகளிர் மட்டும்ல ஒரு பிணமா நடிக்க வச்சாரு. இப்படி நாகேசின் பல முகத்தைக் கொண்டு வந்த பெருமை கமலையேச் சாரும். National Award Winner for best Support Actor.

  • படத்துல கவுதமி, கமல்.. காதல் காட்சிகள், சூடேத்துற விதம், ம்ம் கமலின் அக்மார்க். நல்லாத்தான் இருக்கு அம்மணியும்... ஹ்ம்ம்ம்ம்.நல்ல ஜோடி(வாழ்க்கையிலும் கூட)
  • செலவு ரொம்ப கம்மி
  • 'சொர்க்கம் என்பது நமக்கு', பாடல் உன்னால் முடியும் தம்பியின் அடுத்த பகுதியின்னாலும் காலத்துக்கேத்தது. இந்தப் பாட்டுக்கு ஏதோ விருது கூட கெடைச்சிதாமே. தெரிஞ்சா என்னான்னு சொல்லுங்க, Plz

படத்துல காட்சிகள், வசனம், அமைப்புகள், இசை, எல்லாம் அற்புதமா இருந்தாலும் இரத்த புத்துநோய் ஒரு சொதப்பல் முதுகெலும்பு. படத்த மட்டுமில்லாம நம்மளையும் நோகடிக்கிற ஒரே விசயம் இதுதாங்க. DVDல பார்க்க படம் அருமையா இருக்கு.

30 comments:

  1. nice movie except cancer & climax. suththam song is now used for property round in all dance reality shows

    ReplyDelete
  2. படத்துல கவுதமி, கமல்.. காதல் காட்சிகள், சூடேத்துற விதம், ம்ம் கமலின் அக்மார்க். நல்லாத்தான் இருக்கு அம்மணியும்... ஹ்ம்ம்ம்ம்.நல்ல ஜோடி(வாழ்க்கையிலும் கூட)
    ஹீஹீஹீ

    ReplyDelete
  3. அட, இது நம்ம 200வது பதிவாம்ல..

    ReplyDelete
  4. இதெல்லாம் நமக்கெதுக்கப்பு:-)))))))))))

    ReplyDelete
  5. 200வது பதிவா....! வாழ்த்துக்கள் இளா...!

    உங்களுக்கு மறந்ததும் நியாயம் தான்... அப்புறம் பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் தாங்கள் எழுதுறத கணக்கு வச்சிக்க மாட்டாங்க தானே... :)

    //பெரும்பாலான கமல் படங்கள் எல்லாமே இப்படித்தான் போல. காலத்துக்கு ஏத்த மாதிரி படம் எடுக்க கமல் கத்துக்கனும். //

    எனக்கும் பல சமயம் இப்படி தோணியிருக்கு..

    ReplyDelete
  6. 200 ஆயிருச்சா? வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. 200 ஆ? நல்ல பரிசுதரனுமே அதுக்கு ம்ம்ம்ம்ம்?

    ReplyDelete
  8. /அட, இது நம்ம 200வது பதிவாம்ல..//

    அட ஜூப்பரு!! வாழ்த்துகள் விவ்ஸ் ;)

    ReplyDelete
  9. நல்ல தகவல்

    /*இது நம்ம 200வது பதிவாம்ல..*/

    200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ILA

    ReplyDelete
  10. நாகேஷ் பிணமாக நடித்தது, ஆங்கிலத்தில் வெளியான "வீக் என்ட் வித் பெர்னி" என்ற படத்தின் அப்பட்டமான காப்பி. ஆனாலும் நாகேஷ் நன்றாகவே நடித்திருந்தார்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள், நீங்களும் நம்மவர்(கமல் ரசிகர்) ஆயிட்டீங்க

    ReplyDelete
  12. 200க்கு இனிய வாழ்த்து(க்)கள் இளா.

    ReplyDelete
  13. //கப்பி | Kappi said...
    /அட, இது நம்ம 200வது பதிவாம்ல..//

    அட ஜூப்பரு!! வாழ்த்துகள் விவ்ஸ் ;)//




    repeat'ee... :))

    ReplyDelete
  14. இளா அண்ணே 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)))

    அண்ணே முடிஞ்ச இந்த படத்தையும் பாருங்கள்...

    http://www.imdb.com/title/tt0097165/posters - Dead Poets Society (1989) - Robin williams -

    நம்மவர் மாதிரியே இருக்கும் இதுவும். இதையே மலையாளத்தில் பாசில் மோகன்லாலை வச்சி எடுத்தாரு..;)

    ReplyDelete
  15. 200 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள் சகோதரர் :)

    ReplyDelete
  16. 200 க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. 200வது பதிவுக்கு வாழ்த்துகள் இளா :-)

    //காலத்துக்கு ஏத்த மாதிரி படம் எடுக்க கமல் கத்துக்கனும்.//

    சிரிப்புதான் வருது நீங்க சொல்றதை பார்த்தா. இது என்ன Back to the future மாதிரி டைம் மெஷின் படமா என்ன?

    முதல்ல பாக்கும் போது பிடிக்காததுக்கு காரணம் சிம்பிள். 'முன் முடிவோட' கமல் படங்களை பார்க்கப் போறது. நீங்க முதல் தடவையிலேயே ரசிச்ச ஒரு 10 படத்தை சொன்னீங்கன்னா அத பிடிக்காத ஒரு 20 பேர் இருக்கத்தான் இருப்பாங்க :-)

    இந்த படத்தின் இன்னொரு அறிமுகம் டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி. பிருந்தாவை காதலிக்கும் கோபக்கார மாணவனா வருவார். பின்னாளில் காதல் கோட்டை 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' பாட்டுக்கு ஆடியவரும் இவரே.

    //நம்மவர் மாதிரியே இருக்கும் இதுவும். இதையே மலையாளத்தில் பாசில் மோகன்லாலை வச்சி எடுத்தாரு..;)//

    கோபிநாத் இதுவும் காப்பின்னு சொல்ல வரலைன்னு நினைக்கிறேன். அந்த படத்துக்கும் நம்மவர்க்கும் 'கல்லூரி' பின்புலத்தை தவிர வேறு எதுவும் பெரிய ஒற்றுமை இல்லை. ஆனா ஹிந்தியில வந்த மொஹப்பதேன் என்ற படம் ரொம்பவுமே 'Dead Poets Society' மாதிரி இருக்கும்.

    சேதுமாதவனோட ரெண்டாவது படம் எல்லாம் இல்லைங்க. அவர் 1960-லிருந்து படங்கள் இயக்கிட்டு இருக்கார். கமல்ஹாசனை மலையாளத்தில் ஹீரோவா அறிமுகப்படுத்தியதும் அவர்தான். கிட்டத்தட்ட 30 படங்களுக்கும் மேலாக மலையாளம், ஒரியா, சிங்கள மொழிகளில் படங்கள் இயக்கியிருக்கிறார்.

    ReplyDelete
  18. நல்ல படம்
    200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. \\Sridhar Narayanan said...

    \\\கோபிநாத் இதுவும் காப்பின்னு சொல்ல வரலைன்னு நினைக்கிறேன்.\\

    சரியாக புரிஞ்சிக்கிட்டிங்க...நன்றி ;)\

    \\அந்த படத்துக்கும் நம்மவர்க்கும் 'கல்லூரி' பின்புலத்தை தவிர வேறு எதுவும் பெரிய ஒற்றுமை இல்லை.\\

    ஆமாம்...ஒரே சாயல் (கல்லூரி) இருக்கும் அதனால தான் அந்த ஆங்கில படத்தை கொடுத்தேன். ;)

    \\\ஆனா ஹிந்தியில வந்த மொஹப்பதேன் என்ற படம் ரொம்பவுமே 'Dead Poets Society' மாதிரி இருக்கும்.\\

    ஆகா...அப்படியா...தேடி பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி அண்ணாச்சி ;)

    ஆனா மலையாள படம் பாதிக்கு மேல காப்பி தான் (மனைவியோட தங்கச்சி மேட்டாரை தவிர)) முடிந்தால் பாருங்கள் ;))

    ReplyDelete
  20. //ஆகா...அப்படியா...தேடி பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி அண்ணாச்சி ;)//

    பாருங்க. அமிதாப் கண்டிப்பான கல்லூரி முதல்வராகவும், ஷாருக்கான் இசை ஆசிரியராகவும் வருவார். இருவரையும் இணைக்கும் பாலமாக அமிதாப்பின் பெண் ஐஸ்வர்யாராய். நிறைய ஹிந்தி ஆடியன்ஸ்காக ட்ரமடைஸ் பண்ணியிருந்தாலும் அடிப்படை கதை அப்படியே இருக்கும்.

    மலையாளப் படம் கண்டிப்பாக பார்க்க முயற்சிக்கிறேன். அறிமுகத்திற்கு நன்றி கோபி! :-)

    ReplyDelete
  21. //சேதுமாதவனோட ரெண்டாவது படம் எல்லாம் இல்லைங்க. //
    தமிழுக்கு ரெண்டாவது படம்ங்க. அப்படிதான் விக்கியும் சொல்லுது.

    ReplyDelete
  22. 200kku வாழ்த்து சொன்னவங்க அத்தனை பேருக்கும் நன்றி! கணக்கு பெரிசா இருந்தாலும் இதுவரைக்கு நல்லதா ஒன்னும் எழுதுன மாதிரி தெரியலைங்க.

    ReplyDelete
  23. இதுல வர்ற திக்குவாய் கேரெக்டர் நல்லா படைக்கப்பட்டிருக்கும். நடிச்சவரும் நல்லாப் பண்ணிருப்பார். ஆனா அவரை அதுக்கப்புறம் படங்களில் பார்த்ததாக நினைவில்லை.

    ReplyDelete
  24. 200-க்கு வாழ்த்துக்கள்:):):)

    ReplyDelete
  25. thala


    200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)))

    ReplyDelete
  26. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

    நாகேஷின் நடிப்பிற்கு எல்லையடங்காதது இந்த திரைப்படத்தில் காண முடியும்.. அதிலும் பிருந்தா இறக்கும் காட்சியில் அவரது தவிப்பு அசர வைத்துவிடும்...

    @ஸ்ரீதர் அண்ணா...

    என்னண்ணே.. மொஹப்பத்தேன் Dead Poets Societyயா!

    ஹிந்தி படத்துல பாட்டு, அய்ஸ் வர்ற சீன்ஸ் தவிர எனக்கு அந்த படம் பயங்கர போராகிடுச்சு :(( ரொம்ப எதிர்பார்ப்புல பார்த்து நொந்த படத்துல அதுவும் ஒண்ணு...

    நான் இன்னமும் அந்த இங்கிலீசு படம் பார்க்கல. கோபி வச்சுருக்கான்னா கண்டிப்பா பார்த்துடுவேன்னு நினைக்குறேன் :))

    ReplyDelete
  27. //ILA said...
    200kku வாழ்த்து சொன்னவங்க அத்தனை பேருக்கும் நன்றி! கணக்கு பெரிசா இருந்தாலும் இதுவரைக்கு நல்லதா ஒன்னும் எழுதுன மாதிரி தெரியலைங்க.
    //

    இன்னமும் பொய் சொல்லத்தெரியாத அப்பிராணியாவே இருக்கியேப்பா :))

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)