சாகரன் கல்யாண் கட்டிய தேன்கூட்டை நிர்வகிப்பவர்களே! வாசகர்களே! என்னாயிற்று தேன்கூடு? ஏன் கலைக்கப்பட்டது?
- பல மக்களின் கற்பனாற்றலின் உந்து விசையை அதிகரித்தது தேன்கூடுதான். அதன் போட்டிகளின் மூலம் குவிந்த கதை, கட்டுரை, கவிதைகள் எத்தனை?
- தமிழ்மணத்தின் இன்றைய சூடான இடுகையின் முப்பாட்டன் தேன்கூட்டின் அதிகம் பார்வையிடப்பட்டவைகள்.
- பெட்டகம், வார்த்தைகளுக்கான அர்த்தம் என பல சக்திகளை ஒன்றடக்கியதே தேன்கூடு.
- சாகரன் என்ற மனிதனின் உழைப்பை ஏன் பெட்டியில் வைத்து பூட்டியிருக்கிறீங்கள். காரணத்தைச் சொல்லலாமே.
- தேன்கூடு கலைக்கப்பட்டதா? இல்லை தொடருமா?
தற்போது இருக்கும் நிர்வாகத்தினருக்கு என் வேண்டுகோள். எனக்கும் கல்யாணைத் தெரியாதுங்க. ஆனா அவரோட உழைப்பு மட்டும் எனக்குத் தெரியுது. அதுக்காவது மதிப்பளித்து தேன்கூட்டை மறுபடியும் கொண்டுவாங்க.
சாகரன் மீண்டும் வலைப்பதிவுலகில் வலம் வரட்டும்.
ஒருவேளை ராணி தேனியை யாரவது பிடிச்சுட்டு போய்டாங்களோ என்னவோ!!!
ReplyDelete;(;(;(
ReplyDelete//ஒருவேளை ராணி தேனியை யாரவது பிடிச்சுட்டு போய்டாங்களோ என்னவோ!!!//
ReplyDeleteவரலாறு தெரியாம பேசாதீங்கண்ணாச்சி!
எல்லோர் மனத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு ஒரு உருவம் கொடுத்தீர்கள் இளா.
ReplyDeleteஇப்படிக் கண்ணுக்குப் புலப்படாமல் போக என்னதான் நடந்தது.
நல்ல பதிவு இளா..
ReplyDeleteநானும் முதலில் தேன்கூட்டில் தான் பதிவு இட ஆரம்பித்தேன்.இன்றும் ..பதிவு எழுதியதும் கை தேன்கூட்டையே நாடுகிறது..என்னவாயிற்று? என தெரியவில்லை..உங்களைப்போன்ற மூத்த பதிவர்கள் ஏதாவது செய்யவும்.
யார் இதற்கு சரியான் பதில் தர முடியும்?
ReplyDeleteநான் ஏற்கனவே இது பற்றி கேட்டிருந்தேன். யாரும் சொல்ல வில்லை.
http://balachandar.net/blog275-2008-09-19.html
- பாலச்சந்தர் முருகானந்தம்,
http://balachandar.net சொந்த வலைப்பதிவு
http://ulagam.net
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
தேன்கூடு நிர்வாகம் கவனம் எடுக்க வேண்டிய அவசியத்தை சுருக்கமாக சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம்.
நீண்ட நாட்களாக எல்லோர் மனதிலும் ஒலித்து கொண்டிருக்கும் கேள்வி!
ReplyDeleteயாராவது பதில் சொல்வார்களா என்று பார்ப்போம்
இப்போ தேன்கூடு திரட்டி இல்லையா? :(
ReplyDeleteநியாயமான வேண்டுகோள்..
ReplyDeleteதேன் கூடில் எவ்வாறு எங்கள் பதிவை சேர்ப்பது, அதையும் சொல்லி கொடுங்கள்.
ReplyDeleteஇணையத்தளம் வந்த பிறகு சுய புத்தியை பயன் படுத்தும் பழக்கத்தை நான் மறந்து விட்டேன்.
நன்றியுடன்
குப்பன்_யாஹூ