Saturday, May 24, 2008

Google Readerல் பின்னூட்டங்கள் திரட்டல்

இந்தப் பதிவை படிக்கிறதுக்கு முன்னாடி எல்லாப் பதிவுகளையும் திரட்டி இல்லாம எப்படி படிக்கிறதுன்னு படிச்சுட்டு வந்துருங்க

முதல்ல ஒன்னு சொல்றேங்க. மாங்கு மாங்குன்னு பொட்டியத் தட்டி, விடிய விடிய கண்ணு முழிச்சி உருவாக்கின திரட்டியில இருக்கிற வசதிகளை எல்லாம் சுலபமா ரெண்டு நிமிஷத்துல பண்ணிட முடியாதுங்க. அதுக்கான வசதி இன்னும் வரலை. பிற்காலத்துல வரலாம்.

எல்லாருடைய பின்னூட்டங்களையும் படிப்பீங்க அப்படிங்கிறதுல எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்குன்னு சில பதிவர்களை பிடிச்சு இருக்கும். அவுங்க பின்னூட்டங்களை தொடர்ந்து படிச்சுட்டு வருவீங்க. அவுங்க பதிவுகளின் ஓடைகளை எடுத்து திரட்டலாம். உதாரணத்துக்கு நீங்க தொடர்ந்து 10 பதிவர்களின் பதிவுகளை படிச்சுட்டு வர்றீங்கன்னு வெச்சுக்கலாம். அவுங்க பின்னூட்ட ஓடையை சேர்த்துக்குங்க.

உதாரணத்துக்கு http://vivasaayi.blogspot.com/feeds/comments/default. இது என்னோட பின்னூட்ட ஓடை. http://*********.blogspot.com/feeds/comments/default இப்படி எந்த blogspotக்கும் பின்னூட்ட ஓடை இருக்கும். இதுல என்ன ஒரு வசதின்னா பின்னூட்டம் முழுசாவே படிச்சுக்கலாம்.

wordpressக்கு http://*******.wordpress.com/comments/feed/. திரட்டிகளை அலுவலகத்துல தடுத்து இருந்தாலும் ரீடர் மூலமாவே படிச்சுக்கலாம்.

8 comments:

  1. அண்ணா

    இரண்டு சந்தேகங்கள்.

    1) இதில் பதிவுப்படி பிரிக்கமுடியாது என்று தோன்றுகிறது. ஒருவரின் வலைப்பூவில் எந்த இடுகைக்கான பின்னூட்டமாக இருந்தாலும் அவை அனைத்தும் மொத்தமாகத் தெரிகிறது. இதனை இடுகைகளின் படி பிரிக்க முடியுமா?

    2) ஒரு பதிவர் பல பதிவுகளில் சென்று இடும் பின்னூட்டங்களை படிக்க வகை உண்டா?

    3) எனது ரீடரில் சில பதிவுகளுக்கு மட்டும் அப்பதிவிலேயே அதற்கான பின்னூட்டங்களின் எண்ணிக்கை தெரிகிறதே. (உதாரணம் : பாபாவின் ஸ்னாப்ஜட்ஜ்) அதற்குப் பதிவர்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அது வேர்ட்ப்ரஸ் தரும் மேலதிக சேவையா?

    (இரண்டு சந்தேகங்கள் எனச் சொல்லி மூன்று கேட்கிறேனே எனப் பார்க்கிறீர்களா? இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்பதைக் கூடச் செய்யாமல் அப்புறம் நம்ம பெயரை எப்படிக் காப்பாத்திக்கறது...)

    ReplyDelete
  2. மேலும் ஒன்று

    நெருப்பு நரியில் சரியாகத் தெரியும் பதிவுகள் சில கூகிள் ரீடரில் உடைந்தே தெரிகின்றன. (உதாரணம் - http://poothoorigai.blogspot.com). ஏன் இப்படி?

    இதை ஏன் சரி செய்வது?

    ReplyDelete
  3. இளா, பதிவுகளைத் திரட்டுவதற்கு இருப்பது போல ஏதாச்சும் மந்திர URL கொடுக்கப் போறீங்களோன்னு பார்த்தேன் :)

    **

    1. இடுகை படி மறுமொழிகளைப் படிக்க முடியும். ஆனால், ஒவ்வொரு இடுகைக்கான ஓடையையும் தனித்தனியாகச் சேர்க்க வேண்டி வரும். எடுத்துக்காட்டுக்கு, இந்த இடுகையின் மறுமொழி ஓடை. இந்தத் தொடுப்பை ஒவ்வொரு இடுகையின் கீழும் மறுமொழிகள் எல்லாம் முடிந்த பிறகு Subscribe to: Post Comments (Atom) என்று பார்க்கலாம். இந்தத் தொடுப்பில் வரும் எண் இடுகைக்கு இடுகை மாறும் என்பதால் இந்த ஓடைகளை முகவரிகளை ஊகிக்க இயலாது.

    2. இப்போதைக்கு தமிழ்மணம் மறுமொழித் திரட்டி தான் வழி. ஆனால், இன்னும் எல்லா பதிவர்களின் எல்லா மறுமொழிகளையும் எல்லா வலைப்பதிவுச் சேவைகளிலும் இருந்து பெற்றுத் தரத் தொடங்கி இருப்பதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டுக்கு, ILA எழுதிய மறுமொழிகள் -
    http://tamilmanam.net/comments/ILA

    3. வேர்ட்பிரெசு.காம்-ல் தானாக வரும். பிளாகரில் நீங்கள் சேர்த்துக் கொள்ள இயலும். பார்க்க - FeedBurner Feedflare for Blogger

    ReplyDelete
  4. இ.கொ - Firefox 3 RC 1பயன்படுத்துங்கள். எந்த வித தமிழ் எழுத்துரு பிரச்சினைகளும் இல்லை. நீங்கள் சொன்ன பூத்தூரிகை பதிவும் ரீடரில் நல்லா தெரியுது.

    ReplyDelete
  5. //மறுமொழித் திரட்டி //
    co.mments.com இருக்குங்க... இதுல இன்னும் பல வசதிகள் இருக்குங்க. ஆனாலும் தமிழ்மணத்துல எல்லாத்தையும் படிக்கும் வசதி இருப்பதால் தமிழ்மணம் சிறந்ததே.

    ReplyDelete
  6. co.mments.com ல் இணைந்து நாம் இட்ட மறுமொழிகளை மட்டும் தொகுக்கலாம். ஒருவேளை நிறைய தமிழ்ப் பதிவர்கள் அதில் இணைந்து கொண்டால் அவர்களுடையதையும் பார்க்கலாம். ஆனால், யாரும் எங்கும் இணையாமல் தானியக்கமாகத் தெரிய தற்போது, தமிழ்மணம் மறுமொழித் திரட்டி மட்டுமே வழி.

    ReplyDelete
  7. ஐயா
    7000 தமிழ் தளங்களின் மறுமொழிகளை திரட்டவும் செய்தியோடையாக தொடருவும் எனது முயற்சியில் ஒரு இயக்கி செய்துள்ளேன். எனக்கு சிறப்பாகத் திரட்டுகிறது.

    http://tamilpoint.blogspot.com/p/comments.html

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)