Wednesday, August 8, 2007

அமெரிக்காவும் கொல்டியும்

இந்த மக்களைப் பத்தி நிறைய சொல்லலாங்க. அதுவும் ITல இருக்கிற கொல்டிக்களைப் பத்தி. இவுங்க ITக்கு வந்துட்டா இவுங்க கனவு, வாழ்க்கை எல்லாமே அமெரிக்காதான். வேற எந்த நாட்டுக்கு போனாலும், அமெரிக்கா, பச்சை அட்டை கனவு மட்டும் அவுங்களுக்கு போகவே போகாது. எங்கம்பெனியில இருந்த நண்பன் 3 வருசமா ப்ராக்(Czech Republic) இருந்தாரு. ஆனாலும் அமெரிக்கா போயே ஆகனும்னு சொந்த காசைப் போட்டு அமெரிக்கா போய்ட்டாரு. அது என்னமோ இவுங்களுக்கு மட்டும் எப்படித் தான் விசா கிடைக்குதோ தெரியல. இவுங்களுக்கு இருக்கிற மொழிப்பற்று, சினிமாப் பற்று, மாநிலப்பற்று, கொல்டிங்க பற்று என்னை ரொம்பவே சிலிர்க்க வெச்ச விஷயம்.

இதுல ஒரு Spreadsheet மெயில வந்துச்சு. அமெரிக்க வாழ் கொல்டி மக்களின் வரதட்சணை பட்டியல் அது. கொல்டி மக்கள் அமெரிக்காவுல இருந்த காலத்தைப் பொறுத்தே வரதட்சணை நிர்ணயமாகுதாம். அந்த Spreadsheetல கடைசி வரிதான் அருமை. வயது: 27-32, இருப்பு:பச்சை அட்டை, படிப்பு: இஞ்சினியரிங், வரதட்சணை: Unlimited. அடங்கொக்க மக்கா இது என்ன சரவணபவன் மீல்ஸா?

Grand Canyon போயிருந்த சமயம், அந்த ஊர்ல சின்னதா இருக்கிற பேருந்துல தான் சுத்தி பார்க்க முடியும். அப்படி போய்ட்டு இருக்கும் போது ஓட்டுனர்கிட்டே பேசிட்டே வந்தேன். அப்போ அவர் கேட்ட கேள்வில எனக்கு சிரிப்பு தாங்கவே முடியல. "இந்தியாவுல யாருமே இல்லியே, எல்லாரும் இங்கே வந்துட்டாங்களா?"ன்னு கேட்டாரு. ஏன்னா? பேருந்துல இருந்த அத்தனை மக்களுமே இந்தியர்கள். ஆனா நமக்குதானே தெரியும், அங்கே இருந்தவங்க யாருன்னு. நான் சிரிக்கிறதை பார்த்துட்டு நம்ம கூட வந்த கூட்டாளி "என்னப்பா சிரிக்கிறே?"ன்னு கேட்டாரு. அதுக்கு அவர்கிட்டே"ஆந்திராவுல யாருமே இல்லியே, எல்லாரும் இங்கே வந்துட்டிங்களா?"ன்னு நான் கேட்டேன், ஏன்னா அவரும் ஒரு கொல்டிதான்.


இனி துணுக்குகள்:

1) "மாப்ளே இந்தியா போறே எங்களை எல்லாம் மறந்துடாதடா? ஹ்ம்ம் ஹ்ம்ம் கிளம்பு"

"Hello Excuse me, could you please....."

"மாப்ளே என்னடா? இப்படி சொன்னா முன்னாடி போவாங்களா? அவுங்களுக்கு புரியற மாதிரி சொல்லு. இப்போ பாரு, ஜருகண்டி, ஜருகண்டி, ஜருகண்டி ஜருகண்டி"

2) அமெரிக்கா போவாம நீ படிச்சு என்ன ஆவப்போவுது, கம்னு விவசாயம் பார்க்க வந்துரு.

3) "ஏழுமலைவாடா வெங்கட் ரமணா, கோவிந்தா, கோவிந்தா" லாஸ் வேகாஸ் ஹோட்டலில் தங்கி இருந்த போது பக்கத்து அறையில் பூசை சத்தம் :). அட அநியாய ஆபிசர்களா, இங்கே வந்துமா?

4) "எத்தனை லட்சம் செலவு பண்ணியாவது அமெரிக்கா போயிடனும். அப்புறம் அதை ரிட்டர்னா கல்யாணத்துல வாங்கிக்கலாம்" ஒரு ரெட்டிகாரு "தம்" பிரேக்ல சொன்னது.

5) அமெரிக்காவுல் இருக்கிற எல்லா Consultantsம் அவுங்கதான்.

6)SAP-ன்னா என்ன அர்த்தம் தெரியுங்களா? Systemanalyse und Programmentwicklung அப்படின்னு சொன்னா அது தப்பாம். State of Andrapradeshதான் சரியாம் அவ்ளோ மக்கள் SAPல வேலை பார்க்கிறாங்க. காரணம்?

7) நம்ம ஊர்ல பெரிய Software, pirated கிடைக்காதுன்னு சொல்ற விசயம் அங்கே 30 ரூபாய்க்கு கிடைக்கும்னு சொல்லி நம்மள கதி கலங்க வெப்பாங்க? எப்படீய்யா?

8) ஆந்திரான்னாவே Consulateல ஒரு முடிவோடதான் இப்பவெல்லாம் application பார்ர்கிறாங்க.

9) அதுசரி, தெலுங்கு மக்களுக்கு கொலுட்டின்னு எப்படி பேர் வந்துச்சு? தெலுகுவை திருப்பிபோடு, கமுத்திப் போடுன்னு கதை விடாதீங்க. உண்மையான காரணம் தெரிஞ்சா சொல்லுங்க.

இது நமக்கு தெரிஞ்ச விசயம்தான், இன்னும் இருந்தா "செப்பண்டி"

31 comments:

  1. தெலுகு படமெல்லாம் இங்க கண்டிப்பா ரிலீஸாகும். அது எப்பேர்பட்ட கேவலமான படமா இருந்தாலும் சரி...

    ReplyDelete
  2. ஹைதிராபாத்ல வீசா பாலாஜி கோவில் ஒண்ணு இருக்கு. இங்க போனா அமெரிக்காக்கு வீசா கிடைக்கும்னு தீவிரமா நம்பறாங்க...

    ReplyDelete
  3. நம்ம ஊர்ல 50,000, ஒரு லட்சம்னு சொல்ற கோர்ஸ் எல்லாம் ஹைத்ரா பாத்ல 3000, 4000ம்ல படிச்சிடலாம்...

    ReplyDelete
  4. அடுத்து ஹைத்ராபாத்ல ஒரு US Consulate திறக்க போறாங்க

    ReplyDelete
  5. ஆனா ஹைத்ராபாதி பிரியாணி மட்டும் இந்தியன் ரெஸ்டாரண்டில் கிடைக்க மாட்டேங்குது :-(

    ReplyDelete
  6. கண்டிப்பா இந்தியா போயிட்டு வரும் போது ஊருகாய் எடுத்துட்டு வருவாங்க. சூப்பரா இருக்கும்...

    ReplyDelete
  7. இளா,

    ஆந்திர மணவாடுலாம் தமிழ் பதிவு படிக்காதுனு நினைப்புல போட்டிங்களா, இங்கே
    நிறைய தமிழ் தெரிஞ்ச கொல்டிஸ் உண்டுங்கோ! கண்டிப்பா வரும் வாரம் உமக்கு லட்சார்ச்சனை தான்!

    உங்க கிட்டே மட்டும் சொல்றேன், ஒரு தடவை தண்ணி அடிச்சிட்டு இருக்கும் போது ஒரு தெலுங்கு பையனைப்பார்த்து ஏன்டா உங்களை எல்லாம் கொல்டி சொல்றாங்கனு கேட்டு அவன் என் சொக்காயைப் புடிச்சுட்டான்!அதுக்கு அப்பறம் கொல்டிக்கு அர்த்தம் தெரிஞ்சுக்கிற ஆசையே போய்டுச்சு!

    ReplyDelete
  8. Golti Telugu speaker.
    Can be derogatory.
    By reversing the consonants in "te-lu-gu" to give "gulti" or "golti"

    Ref : http://en.wikipedia.org/wiki/Madras_Bashai

    ReplyDelete
  9. வெட்டிப்பயல் காரு, இட்லண்ட மாட்லாட கூடுது.(எனக்கு தெரிஞ்ச ஒரே தெலுங்கு வரி) ஹஹ//தெலுகு படமெல்லாம் இங்க கண்டிப்பா ரிலீஸாகும். அது எப்பேர்பட்ட கேவலமான படமா இருந்தாலும் சரி... //
    போக்கிரி, மழையெல்லாம் தெலுங்கில இருந்துதான் தமிழுக்கு வந்துச்சாக்கும்.

    ReplyDelete
  10. //வெட்டிப்பயல் said...

    ஆனா ஹைத்ராபாதி பிரியாணி மட்டும் இந்தியன் ரெஸ்டாரண்டில் கிடைக்க மாட்டேங்குது :-(
    //

    வெட்டி, அடுத்த முறை நம்ம ஊருக்கு வரும் பொழுது இந்த குறையைத் தீர்த்து வைக்கிறேன். இந்தியாவின் 29ஆம் மாநிலமாம் நியூஜெர்ஸியில் கிடைக்காத ஹைத்ராபாத் பிரியாணியா? நல்லாவே இருக்குமைய்யா.

    ReplyDelete
  11. //சின்ன அம்மிணி said...

    வெட்டிப்பயல் காரு, இட்லண்ட மாட்லாட கூடுது.(எனக்கு தெரிஞ்ச ஒரே தெலுங்கு வரி) ஹஹ//தெலுகு படமெல்லாம் இங்க கண்டிப்பா ரிலீஸாகும். அது எப்பேர்பட்ட கேவலமான படமா இருந்தாலும் சரி... //
    போக்கிரி, மழையெல்லாம் தெலுங்கில இருந்துதான் தமிழுக்கு வந்துச்சாக்கும்.
    //

    ஓ!!! அப்படிங்களா?

    எனக்கு அது தெரியாம போயிடுச்சே :-(

    ReplyDelete
  12. எனக்கு இங்கே தமிழ் நண்பர்களைவிட தெலுங்கு நண்பர்கள் அதிகம்! ஆனால், பொதுவாக அவர்கள் கஞ்சர்கள், அல்பங்கள், ஏமாற்றுபவர்கள் என்ற ஒரு பார்வை இருக்கிறது. எனக்குத் தெரிந்து, ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு கால்நடை மருத்துவர் இங்கு கணிணித் துறையில் வேலை செய்கின்றனர்!! அவர்களுடைய வரதட்சிணை மோகம்தான் அதிர வைக்கிறது.

    மற்றபடி மோசமானவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள்தானே?

    ReplyDelete
  13. அண்ணா..

    கொல்டின்னா...தெலுங்குக்காரங்களா?...

    அய்யோ...அப்பா நானும் கொல்டிதான்
    :-)))))

    ReplyDelete
  14. புரியுதுங்க வெட்டி. அடடா, ஊறு காய் மேட்டரை மறந்துட்டேனே.
    //ஹைதிராபாத்ல வீசா பாலாஜி கோவில் ஒண்ணு இருக்கு//
    இதையும்தான், மறந்துட்டேன்.

    கொத்ஸ், பிரியாணியில வாய்க்கா கட்டி தயிர் பச்சடி போட்டு அடிச்சு ஆட நாங்க ரெடி., நீங்க ரெடியா?

    அவந்திகா, நான் ஒன்னும் தப்பா சொல்லமா, இருக்கிறததான் சொல்லி இருக்கேன். :)

    மோசமானவங்கன்னு யாரையும் சொல்லலை Mr. தஞ்சாவூர்.

    ReplyDelete
  15. //பொதுவாக அவர்கள் கஞ்சர்கள், அல்பங்கள், ஏமாற்றுபவர்கள் என்ற ஒரு பார்வை இருக்கிறது.//

    இதெல்லாம் ரொம்ப ஓவர்...

    ஹைத்ராபாத்ல தங்கி வேலை செய்யறவங்களை கொஞ்சம் கேட்டு பாருங்க.

    ReplyDelete
  16. கொல்ட்டினதும் வெட்டி அண்ணன் இப்படி அடிச்சு ஆடியிருக்காரு :)))

    ReplyDelete
  17. தஞ்சாவூர்காரரே, நீங்க நினைக்கிற மாதிரி இல்லே. நம்மைப்போலதான் அவுங்களும். நமக்கு சிங்கப்பூர்,மலேசியா மோகம் மாதிரி அவுங்களுக்கு அமெரிக்கா. அவ்ளோதான். இந்தப்பதிவு அவுங்க அமெரிக்கா மோகத்தை சுட்டும் விதமாத்தான் எழுதினேன். திசை திருப்ப வேணாங்க.

    ReplyDelete
  18. அடடா, வெட்டி/இளா.. நான் தப்பான பொருள் வரும்படி சொல்லி இருந்தா... மாப்பூ!

    இங்கே,(அமெரிக்காவில) பொதுவா மத்தவங்க எப்படி அவங்களப் பத்தி நினைக்கிறாங்கனுதான் சொல்ல வந்தேன். நான் சொன்னபடி, எனக்கு தமிழ் நண்பர்களை விட தெலுங்கு பேசும் நண்பர்கள்தான் அதிகம்.

    அப்படி பொதுவா நினைக்கக் கூடாதுனுதான், மோசமானவங்க எல்லா இனத்துலயும் இருக்காங்கனு எழுதினேன்.

    மத்தபடி, பதிவை திசை திருப்பும் எண்ணமெல்லாம் இல்லீங்கோ!!

    ReplyDelete
  19. paaraddappada veeNdiya oru nalla vishayam - avarkaLin oRRumai.

    ReplyDelete
  20. இளா விவசாயியாகி டிராக்டர்தான் ஓட்டுவேன் அடம்பிடிச்சாலும் கொல்டி உங்ககிட்ட பேசும் முதல் வார்த்தையிலேயே இளாவுக்கு காரைத் தந்து விடுவார் "இளாகாரு" ஆகிடுவீங்க!

    கொல்டிங்களோட இந்த காரு தரும் பெருந்தன்மை தெரியாம திரு.தஞ்சாவூர் கஞ்சன், அல்பம்னு சொல்லியிருக்காரு.


    //பிரியாணியில வாய்க்கா கட்டி தயிர் பச்சடி போட்டு அடிச்சு ஆட நாங்க ரெடி., நீங்க ரெடியா? //

    வெஜிடபிள் பிரியாணின்னா அடிச்சு ஆட நான் எப்பவுமே ரெடி:-))

    சென்னையில் தி.நகரில் கொல்டிங்க மெஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். வஞ்சம் இல்லாம பாத்தி கட்டி சாப்பிடலாம். கொல்டிங்களை சாப்பிட்டு ஜெயிக்க முடியாது! :-))

    ReplyDelete
  21. //paaraddappada veeNdiya oru nalla vishayam - avarkaLin oRRumai.//
    கண்டிப்பாங்க அனானி. நம்ம மக்களுக்கு கொஞ்சம் இது குறைச்சல்தான் அப்படிங்கிறது என் அனுபவம்.

    ReplyDelete
  22. ///கொல்ட்டினதும் வெட்டி அண்ணன் இப்படி அடிச்சு ஆடியிருக்காரு :)))//

    இருக்காதா பின்னே?

    ReplyDelete
  23. மத்தபடி, பதிவை திசை திருப்பும் எண்ணமெல்லாம் இல்லீங்கோ!!//
    விளக்கத்துக்கு நன்றீங்க.

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இருக்கு உங்க பதிவு )

    ReplyDelete
  24. ஹைதிராபாத்ல வீசா பாலாஜி கோவில் ஒண்ணு இருக்க
    நங்கநல்லூரில் "விசா விநாயகர்/ஹனுமார்" இருக்கார் தெரியுமா? :-))
    வீட்டுக்கு ஒரு ஆளாவது வெளிநாட்டில் உள்ளார்கள்.
    சுமார் 8 வருடங்கள் ஆந்திராவில் வேலை செய்திருந்தாலும் இப்படி கேட்கனும் தோணவில்லை,நான் கேட்டாலும் அவர்களுக்கு புரியப்போவதில்லை.ஆனால் என்னை ஏன் "அரவாடு" என்று சொல்கிறீர்கள் என்று கேட்டிருக்கலாம்.மறந்துவிட்டேன். :-))

    ReplyDelete
  25. //லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இருக்கு உங்க பதிவு //

    நன்றி இளா.... இந்த 'உள்குத்து' ன்னு ஏதோ சொல்றாங்களே, அப்டி ஏதும் இல்லையே? (நெசமாலுமே அப்பாவியாத்தான் கேக்குறேன்)

    :-)

    ReplyDelete
  26. //வெட்டிப்பயல் said...
    Golti Telugu speaker.
    Can be derogatory.
    By reversing the consonants in "te-lu-gu" to give "gulti" or "golti"//

    ஏமிரா வெட்டி
    டயலாக்...கப்பி சேஸாவா?...சாரி
    காப்பி சேஸாவா?

    கொல்டி = te-lu-gu ulta senju go-lu-teன்னு பஞ்ச தந்திரத்தில் காதல் நாயகன் கமல் அப்பவே definition எல்லாம் கொடுத்திட்டாரு!
    ஏமி அர்த்தம் ஆயிந்தா? :-)

    ReplyDelete
  27. அடச்சே, நல்லதுக்கே காலம் இல்லீங்க. பாராட்டினா கூடவா உள்குத்து. உமக்கு சரியான நேரத்துல ஒரு வெளி குத்து ரெடி பண்ணி வெச்சிருக்கேன் வாங்க :)

    ReplyDelete
  28. சுவையான விவாதம். தெலுங்கு நன்பர்களோடு தங்கியிருந்த அனுபவத்தில்...

    - ஆவக்காய், பருப்பு பொடி, கோங்குரா, பெசரட்டு தோசை, மோர் மிளகாய் போன்ற சமாச்சாரங்கள் தெலுங்கு நண்பர்களை எப்பொழுதும் மறக்க விடுவதில்லை.

    - திருமணம். ஒரே மாதத்தில் பல பெண்களை பார்த்து, நிச்சயம் செய்து, திருமணம் முடித்து, H4-ம் எடுத்து புதரகத்திற்க்கு திரும்பி விடுவார்கள். Remarkable சாதனைதான்.

    - அவர்கள் பார்க்கும் வேலைக்கும், பயோடேட்டாவிற்க்கும் ஆறு ஒற்றுமைகளை கண்டு பிடிப்பது சில சமயம் கடினம்தான் :-)). சந்தர்ப்பங்களை சரியாக உபயோகித்து தாவிச் சென்று கொண்டே இருப்பார்கள். ஒருமுறை ஒரு தெலுங்கு (அதிகம் அறிமுகமில்லாத) நண்பரை நம்பி வேலைக்கு எடுத்து, ஒரு project-ல் இறங்கி சரியாக ஆப்பு வாங்கியது மறக்க முடியாத அனுபவம்.

    - எந்த சான்றிதழும் ஒரு பொருட்டே இல்லை. எதற்க்கும் ஒரு விலை உண்டு என்பதில் அபார நம்பிக்கை :-))

    - SAP மற்றும் இல்லை. Oracle-ல்ம்தான். அவர்களின் nexus பிரமிக்க வைப்பது. ஆச்சர்யமாக இருக்கும். பார்க்க ஒன்றும் தெரியாத அப்பாவி போல் இருப்பார்கள். வேலை கிடைத்தால் (அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தோடு) நண்பர்களின் உதவியோடு எப்பாடுபட்டாவது முடித்து விடுவார்கள். go-getters.

    - பெண்கள் குறிப்பிடதக்க வகையில் முன்னேறி வருகிறார்கள்.

    இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மேலே குறிப்பிட்ட பல விஷயங்களை மற்ற மாநிலத்தவர் தமிழர்களுக்கு அடையாளமாக சொல்வதும் உண்டு. வடமாநிலத்தவர்களுக்கு, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் எல்லாம் பொத்தாம் பொதுவாக 'south indians' :-)).

    இதே போல் புதரகத்தின் இன்னொரு வியத்தகு கூட்டம் - மராத்தியர்கள். வடிவேலு பாணியில் - 'ஒரு குரூப்பாத்தான்யா அலையறாய்ங்க...' :-)))

    ReplyDelete
  29. ///ஹைதிராபாத்ல வீசா பாலாஜி கோவில் ஒண்ணு இருக்கு. இங்க போனா அமெரிக்காக்கு வீசா கிடைக்கும்னு தீவிரமா நம்பறாங்க...///


    அது சில்கூர் பாலாஜி கோவில். ஹைதராபாத்தில் இருந்து 30 கிலோ மீட்டர்கள்.

    ரூல்ஸ் என்னன்னா முதலில் 11 ரவுண்டு சுத்தனும்.
    விசா கிடைத்ததுக்கு அப்புறம் 108 ரவுண்டு சுத்தனும்.
    சின்ன கோவில் தான். ஆனாலும் ரெம்ப விஷேசம்ன்னு சொல்றாங்க.

    இந்த கோவிலில் உண்டியல் கிடையாது.

    ReplyDelete
  30. //இந்தியாவின் 29ஆம் மாநிலமாம் நியூஜெர்ஸியில் கிடைக்காத ஹைத்ராபாத் பிரியாணியா? நல்லாவே இருக்குமைய்யா//

    நீங்க இப்படி சொல்றீங்க ஆனா அவிங்க அமெரிக்காவின் 51வது மாநிலம் ஆந்திரா என்று சொல்லி வருகிறார்களே!!

    ReplyDelete
  31. //நீங்க இப்படி சொல்றீங்க ஆனா அவிங்க அமெரிக்காவின் 51வது மாநிலம் ஆந்திரா என்று சொல்லி வருகிறார்களே!!//

    :-)

    இன்னொரு விஷயம்.. ஃபீனிக்ஸ் ல உள்ள ASU - Andhra State University அப்டினு செல்லமா சொல்வாங்களாம். அங்கே நிறைய தெலுகு பேசும் மாணவர்கள் இருப்பதாக கேள்வி!

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)