Friday, August 3, 2007

* 2:1

முனியப்பன் கோவில் பொங்கலுக்காக சென்னையில இருந்து வந்து சகாக்களை பார்க்க கிளம்பினான்.

"அடிச்சேன்னா பாரு, அதுக்கு அது அர்த்தம் இல்லே. அறிவு இல்லே உனக்கு? சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா? எவ்ளோ நாளா சுத்திட்டு இருக்கேன். என் காதல் தெய்வீகமானது இல்லே. ஆனா நிசம், நல்லா வெச்சு காப்பாத்துவேன்" நெற்றி நரம்பு புடைக்க பேசுவதை கை கட்டியபடி அமைதியாக பார்த்தாள்.

"டேய், வேணாம்டா சொன்னா கேளுங்கடா, இது எல்லாம் தப்புடா, அதுவும் நம்ம ஊர்ல நம்ம சாதி சனத்துக்கு தெரிஞ்சா என் மானம் போயிரும்டா"

"அப்போ என்னை என்ன பண்ண சொல்றே. ஒரு முடிவை சொல்லிட்டு போ. 5 வருஷ நினைப்பு இது. இப்படி பட்டும் படாம போனா எனக்கு கஷ்டமா இருக்காதா?"

"அட போடா, இதெல்லாம் நடக்காமயா இருக்கு. மக்களுக்கு தெரியட்டுமே, நாம என்ன சின்ன குழந்தைகளா சொல்லு? வயாசாகிட்டே போவுதில்லே?"

"சரி, இப்போ என்ன பண்ணனும்னு சொல்லு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. ஆமாவா இல்லியா?"

"இல்லேடா, வேணாம், நமக்கு இது சரிப்பட்டு வராது. விட்டுரு. நான் வீட்டுக்கு போறேன்"

"வீட்டுக்கு போவ விடமாட்டேன். எனக்கு பதில் சொல்லு. தினமும் உசுரு போற மாதிரி இருக்கு. ப்ளீஸ்" கெஞ்ச ஆரம்பித்தான்.

"நீ என்ன சொன்னாலும் விடப்போறதா இல்லே"

"நான் எப்பவாவது உன்னை காதலிக்கலைன்னு சொன்னேனா? நீயா முடிவு பண்ணாத. இது புரிஞ்சிக்கிற விஷயம். உனக்கு புரியுதா? சும்மா சீன் போடாத. உன்னையும் நான் காதலிக்க வேண்டியதா போச்சே கருமம்" அஞ்சு வருஷமாக பின்னாடியே அலைபவனை சந்தோசத்தில் ஆழ்த்திவிட்டு வீட்டுக்கு போனாள் ரதி.

"ஊரு விட்டு ஊர் போய் நல்ல பேர் எடுக்கலாம்னா இவுனுங்க உள் ஊர்லேயே பேரை கெடுத்துருவாங்க போல இருக்கே"ன்னு மனசுல நெனைச்சுகிட்டு சொல்ல சொல்ல தண்ணி அடிக்காமல், இவனுக்காவே காத்திருந்த நண்பர்களை பரிதவிக்கவிட்டு வீட்டுக்கு போனான் இளா.

14 comments:

  1. அட!!
    டூ இன் ஒன் கதையா???

    முதன் முறை படிக்கும்போது ஒன்னுமே புரியல!!!
    நடத்துங்க!! :-D

    ReplyDelete
  2. இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க? தண்ணியடிக்காம வீட்டுக்குப் போன சோகத்தைச் சொல்ல வர்ரீங்க. சரிதான? சரியாப் புரிஞ்சிக்கிட்டேன்னு நெனைக்கிறேன். :)

    ReplyDelete
  3. ஜிரா டூ இன் ஒன் counter முறையில் பாட்டைப் போட்டாரு இசை அரசி பதிவில்.

    இப்ப டூ இன் ஒன் counter முறையில் கதையா???
    கலக்கறீங்க, இளா!

    ReplyDelete
  4. சின்ன புள்ளைக்கு ஒன்னும் புரியலீங்க. இன்னொருக்கா படிச்சுட்டு வரேன்

    ReplyDelete
  5. யாரு உங்கள என்ன சொன்னாங்க.

    ஏன் இவ்வளவு கொல வெறி.

    எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். இப்படியே எழுதினா......

    சொல்றதுக்கு ஒன்னுமில்ல...

    ReplyDelete
  6. அண்ணே...முதல்ல படிக்கும் போது ஒன்னும் புரியல....மீண்டும் படிச்ச பிறகு தான் புரியுது...

    கலக்கல் ;-))

    ReplyDelete
  7. //ஜிரா டூ இன் ஒன் counter முறையில் பாட்டைப் போட்டாரு இசை அரசி பதிவில்.

    இப்ப டூ இன் ஒன் counter முறையில் கதையா???
    கலக்கறீங்க, இளா!//

    ரிப்பீட்டேய்!!!

    ஆனா என்ன நமக்குத்தான் எழவு இதெல்லாம் ஒண்ணும் புரியறது இல்ல!! :))

    ReplyDelete
  8. பலே.பலே..ஆகட்டும்..ஆகட்டும்...

    ReplyDelete
  9. அனுசுயா said...
    சின்ன புள்ளைக்கு ஒன்னும் புரியலீங்க. இன்னொருக்கா படிச்சுட்டு வரேன் .

    ரிப்பிட்டே:)))

    (எனக்கும் புரியலைங்க)

    ReplyDelete
  10. எதோ ராகவன் பதிவ முன்னாடியே படிச்சிருந்ததால என் மண்டைக்கும் ஏதோ புரியுது.. இல்லாட்டி இதையும் சாய்ஸ்ல விட்டிருப்பேன்... அவ்வளவுதானா நட்சத்திரப் பதிவுகள்???

    ReplyDelete
  11. இளா, என்னை 3 தடவை படிக்க வைச்சுட்டீங்க :-)

    ஒத்துக்கறேன், நான் ஒத்துக்கறேன்...

    ReplyDelete
  12. இளா,

    நீங்க சொன்னது கரக்ட்டு தான்.'இரண்டாவது' முறை படிக்கும் போது தான் புரிஞ்சுது.

    இது 2007 பதிவு. எனக்கு pioneer நீங்க.சேம் ப்லட்.:-)

    pattern ரொம்ப நல்லா இருக்கு இளா.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)