Thursday, May 17, 2007

தமிழ் பதிவுலகம் பத்தின கேள்விகள்

எந்தத் திரட்டியில பதிவு புதுசா வந்தாலும் ஓடி போய் படிக்கிறோம். நமக்கு புடிச்ச மக்கள் பதிவு போட்டு இருந்தா அது மொக்கையாவே இருந்தாலும், நாந்தான் முதல், ஒரு ஸ்மைலி அப்படின்னு வெக்கமில்லாம ஒரு பின்னூட்டம் போட்டுட்டு எஸ்கேப் ஆகிறோம். புடிச்சு இருந்தா ஏதாவது எழுதிட்டு அவுங்க எப்படா அத பப்ளிஷ் பண்ணுவாங்கன்னு காத்து, ஒரு பத்து முறை அந்த பதிவை திரும்ப திரும்ப பார்த்து ஹிட் கணக்கை ஏத்தி விடறோம். கெட்ட வார்த்தையிலோ, பிடிக்காம இருந்தாலோ எஸ்கேப் ஆகிடறோம். சரி, இது தினம் நடக்கிற கூத்து. இது பீட்டரு.


இனி மேட்டரு. பதிவுலகமே கதின்னு கிடக்குற மக்களே! உங்க பதிவுலக அறிவை சோதிச்சா என்னான்னு ஒரு ஞானம்.பதிவுலகத்தைப் பத்தி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரிஞ்சிருக்குன்னு தெரிய வேணாம்? அதான் இந்த குயிஜூ.


1. Comments அப்படிங்கிறதுக்கு பின்னூட்டம்னு பேர் வெச்சது யாரு?

2. தமிழ்ப்பதிவுலகின் முதல் பதிவு எது? கண்டிப்பாக லின்க் தந்தே ஆகனும்.

3. தமிழ் பதிவுலகத்துல உருவான முதல் குழுமம் எது?

4. அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?

5. தமிழ்மணத்துல ஒரு முறைக்கும் மேல் நட்சத்திரம் ஆனவங்க எத்தனை பேரு? அவுங்க பேரு?

6. இதுவரைக்கும் அதிகமான பதிவுகள் எழுதியது யாரு?

7. Hit Counter படி அதிகம் ஹிட் வாங்கிய வலைப்பதிவு எது?

8. தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் 4 இடத்துல வந்தவங்க யாரு?

9. பதிவுலகின் முதல் பெண் பதிவாளர் யாரு?

Disc: இதுல ஒரு கேள்விக்கூட பதில் தெரியலைன்னா அறவழியில தமிழ்ப் பதிவுலகத்தை விட்டே போயிடலாம்

33 comments:

  1. //அது மொக்கையாவே இருந்தாலும், நாந்தான் முதல், ஒரு ஸ்மைலி அப்படின்னு வெக்கமில்லாம ஒரு பின்னூட்டம் போட்டுட்டு எஸ்கேப் ஆகிறோம். //

    நாந்தான் பர்ஸ்ட்!!

    ReplyDelete
  2. ஹய்யா நான் தான் பர்ஸ்டு. :)). கொத்ஸ் உங்க கமெண்டு ஒத்துக்கப்படாது நீங்க விவசாயி சொல்லி இருக்குற மாதிரி ஸ்மைலி போடல.இது போங்கு ஆட்டம்.

    //இதுல ஒரு கேள்விக்கூட பதில் தெரியலைன்னா அறவழியில தமிழ்ப் பதிவுலகத்தை விட்டே போயிடலாம்//
    எப்படியாவது என்னைய தமிழ் தொண்டு ஆற்றுவதில் இருந்து தடுக்கணும் அப்படின்னு நினைக்கிறே. முடியாதுல்ல முடியாதுல்ல. மேட்டரே இல்லாம பதிவு போடுற அளவுக்கு திறமைசாலி நாங்க இதுக்கு எல்லாம் பயப்படமாட்டோம்.

    ReplyDelete
  3. //இதுல ஒரு கேள்விக்கூட பதில் தெரியலைன்னா அறவழியில தமிழ்ப் பதிவுலகத்தை விட்டே போயிடலாம்//

    அப்ப.நான் போயித்தான் ஆகணுமா? (-:

    ReplyDelete
  4. //அப்ப.நான் போயித்தான் ஆகணுமா? (-://

    டீச்சர், நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க. ஒரு கேள்விக்காவது பதில் தெரியாம இருக்காதே!!

    ReplyDelete
  5. யோவ் இன்னும் ரெண்டு கேள்வி.

    தமிழ் வலையுலகில் மிகப் பெரிய பதிவு எது? மிகச் சிறிய பதிவு எது?

    இதுக்கும் பதில் வரட்டும்.

    ReplyDelete
  6. என்ன கொடுமைங்க இது... நீங்க கஷ்டபட்டு ஒரு குவிஜு வைக்கறீங்க... யாரும் விடை சொல்லாம ஸ்மைலி போடறதுல ஆர்வமா இருக்காங்க. சரி விடுங்க நான் முயற்சிக்கிறேன்...

    1. நானும் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன். அது மட்டுமல்ல இந்த அமீரகம், புதரகம் இப்படியெல்லாம் யாரு பெயர் வச்சாங்கன்னு கூட தெர்ஞ்சிக்க ஆசை...

    2. நவன் அப்படின்னு PKP சொல்லியிருக்கார்.

    3. எனக்கு தெரிஞ்ச முதல் குழுமம் - மரத்தடி

    4. PKP இத சொல்லல. அங்க பின்னூட்டமிட்டவங்களும் இதப்பத்தி சொல்ல்ல... ஹ்ம்ம்ம்... பதிவு சார்ந்த பின்னூட்டங்கள்-னு பார்த்தா தங்கமணியோட இந்து மதத்த பத்தின ஒரு பதிவு 300 மேல பின்னூட்டம் வாங்கியிருந்தது நினவிருக்கு. இ.கொ. 500 வர அடிச்சிருக்காரு.

    5. தெரியல

    6. அதிக பதிவுகள்-னா தற்போது சற்றுமுன் குழுவினர் 1000 தாண்டிட்டாங்க.

    7. டோண்டு அவரோட ஹிட் கௌண்டர் 1 லட்சம் தாண்டிடுச்சு அப்படினு பதிந்திருந்தார்.

    8. தெரியல

    9. முதல் பெண் பதிவாளர் - மதி கந்தசாமி. சரியா? தப்பா இருந்தா PKP கிட்ட சொல்லிருவோம். அவர் உடனே அப்டேட் செஞ்சிருவார் :-)

    ரைட்டா?

    ReplyDelete
  7. நிறைய கேள்விக்கு சரியா பதில் சொல்லி இருக்கீங்க Sridhar Venkat. PKP' வேற கூப்பிட்டு இருக்கீங்க. அவரே வந்து பதில் சொன்னால்தாங்க ஆச்சு. தமிழ்ப்பதிவுகளைப்பத்தி தெரிஞ்சிக்காம பதியற பதிவர்கள அதிகம் போல தெரியுதே

    ReplyDelete
  8. ஹய்யா விவசாயி.. 8 ஆவது கேள்விலே விளம்பரம் பண்றதுக்கு மிச்ச கேள்வியெல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங் மாதிரி தெரியுது?

    இப்படியெல்லாம் போச்சுன்னா அந்த "1" மேட்டரை வெளியே சொல்லிடுவேன்! அந்தக் கட்டாயத்துக்கு என்னை ஆளாக்கிடாதீங்க!

    ReplyDelete
  9. ///நமக்கு புடிச்ச மக்கள் பதிவு போட்டு இருந்தா அது மொக்கையாவே இருந்தாலும், நாந்தான் முதல், ஒரு ஸ்மைலி அப்படின்னு வெக்கமில்லாம ஒரு பின்னூட்டம் போட்டுட்டு எஸ்கேப் ஆகிறோம்//

    ஹைய்யா.. நாந்தான் பத்தாவது..

    அடுத்து ஒரு ஸ்மைலி.. :-)

    ReplyDelete
  10. //புடிச்சு இருந்தா ஏதாவது எழுதிட்டு அவுங்க எப்படா அத பப்ளிஷ் பண்ணுவாங்கன்னு காத்து, ஒரு பத்து முறை அந்த பதிவை திரும்ப திரும்ப பார்த்து ஹிட் கணக்கை ஏத்தி விடறோம். //

    எப்படிங்க பக்கத்திலே இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க? ;-)

    ReplyDelete
  11. 1. //Comments அப்படிங்கிறதுக்கு பின்னூட்டம்னு பேர் வெச்சது யாரு?//

    கண்டிப்பாக நான் இல்லைங்கோ.. :-P

    2. //தமிழ்ப்பதிவுலகின் முதல் பதிவு எது? கண்டிப்பாக லின்க் தந்தே ஆகனும்.//

    நிச்சயமாக http://engineer2207.blogspot.com இல்லைங்கோ.. :-P

    3. //தமிழ் பதிவுலகத்துல உருவான முதல் குழுமம் எது?//

    ப.பா.சன்னு நான் சொல்வேன்னு நெனச்சீங்களா? அதுவும் இல்லைங்கோ! :-P

    4. //அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?//

    எனக்கு தெரிஞ்சு தேவ் அண்ணன் பதிவுல நாங்க அடிச்ச கும்மிதான்.. ஆனால் கொத்ஸ் நிறைய வாங்கி குவிச்சிருக்கார்ன்னு வெளியே சொல்லிக்கிறாங்களே! உண்மையா? ;-)

    5.// தமிழ்மணத்துல ஒரு முறைக்கும் மேல் நட்சத்திரம் ஆனவங்க எத்தனை பேரு? அவுங்க பேரு?//

    நான் கணக்குல வீக்குங்கோ. :-P

    6. //இதுவரைக்கும் அதிகமான பதிவுகள் எழுதியது யாரு?//

    இது கண்டிப்பா நான் இல்ல இல்ல இல்ல.. :-P

    7. //Hit Counter படி அதிகம் ஹிட் வாங்கிய வலைப்பதிவு எது?//

    இது கண்டிப்பா ஜில்லென்று ஒரு மலேசியா இல்ல. :-P

    8. //தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் 4 இடத்துல வந்தவங்க யாரு?//

    நான் வந்த பிறகு தேன்கூடு ஒரு போட்டியும் நடத்தலை. :-P

    9. //பதிவுலகின் முதல் பெண் பதிவாளர் யாரு?//

    இதுக்கும் எனக்கு பதில் தெரியாதுன்னுதான் சொல்ல வந்தேன். ;-)

    ReplyDelete
  12. //Disc: இதுல ஒரு கேள்விக்கூட பதில் தெரியலைன்னா அறவழியில தமிழ்ப் பதிவுலகத்தை விட்டே போயிடலாம்//

    எங்களையெல்லாம் துரத்தியடிக்க நினைக்கும் விவசாயியை வன்மையாக கண்டிக்கிறோம். அதுக்காகவே உங்க கேள்விக்கு மிக சரியான பதிலை பின்னூட்டமிட்டிருக்கிறோம். :-P:-P:-P

    ReplyDelete
  13. பதிவுலகத்தை விட்டு போறேன்னு நிறைய பேர் கிளம்பிருவாங்க போல இருக்கே. சீனியர் மக்களெ வந்து பதில் சொல்லுங்க.

    ReplyDelete
  14. என்ன அண்ணே, மொத மொத உங்க பக்கத்துக்கு வந்தா.. கேள்வியா போட்டு தாக்குரீங்க....?

    ReplyDelete
  15. என்னங்க இது கூட தெரியாதா?

    மூணாவது கேள்விய தவிர, மத்த கேள்விக்கெல்லாம் பதிலு,

    'ஏதோ ஒரு தமிழ் பதிவர்/பதிவோ தான்'

    ReplyDelete
  16. இன்னொரு கேள்வியை விட்டுட்டீங்க

    இதுவரை விடை தெரியாத வினாக்களை அதிகம் பதிவில் இட்ட பதிவாளர் யார்?

    ReplyDelete
  17. 1. Comments அப்படிங்கிறதுக்கு பின்னூட்டம்னு பேர் வெச்சது யாரு?
    - தெரியல.. காசியா?

    2. தமிழ்ப்பதிவுலகின் முதல் பதிவு எது? கண்டிப்பாக லின்க் தந்தே ஆகனும்.
    - ஒவ்வொரு கணத்திலும்

    3. தமிழ் பதிவுலகத்துல உருவான முதல் குழுமம் எது?
    - மரத்தடி?

    4. அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?
    - பொட்டீக்கடையோட ஏதோ ஒரு பதிவு (பொன்ஸ் டேட்டாபேஸ் அப்புறம் அப்டேட் செய்யலை ;) )

    5. தமிழ்மணத்துல ஒரு முறைக்கும் மேல் நட்சத்திரம் ஆனவங்க எத்தனை பேரு? அவுங்க பேரு?
    - துளசியக்கா, டோண்டு, கார்த்திக் ராமாஸ், ... ?

    6. இதுவரைக்கும் அதிகமான பதிவுகள் எழுதியது யாரு?
    - துளசியக்கா ?

    7. Hit Counter படி அதிகம் ஹிட் வாங்கிய வலைப்பதிவு எது?
    - same துளசியக்கா?

    8. தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் 4 இடத்துல வந்தவங்க யாரு?
    - பினாத்தலார், நிலா, இளா?

    9. பதிவுலகின் முதல் பெண் பதிவாளர் யாரு?
    - சந்திரவதனா? அல்லது மதி..

    ReplyDelete
  18. 2.

    http://www.blogger.com/profile/01620791841276990606

    ???????????????

    ReplyDelete
  19. பொன்ஸ் உங்க பதிவுலக அறிவு.. ஹ்ம்ம்ம் என்னே சொல்ல.

    ReplyDelete
  20. //8. தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் 4 இடத்துல வந்தவங்க யாரு?//

    பொன்ஸ் ஹிண்ட் வேணுமா?

    ReplyDelete
  21. //4. அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?//


    இளா,

    அது நம்ம சங்கத்துக்காக கொத்தனார் போட்ட பதிவுன்னு நான் வேற தனியா சொல்லணுமா என்ன?

    http://vavaasangam.blogspot.com/2006/07/blog-post_31.html

    கொத்தனாரை யாராவது அடிச்சிக்கத்தான் முடியுமா?

    ReplyDelete
  22. யப்பா நம்மளை தமிழ் தொண்டு ஆற்றுவதில் இருந்து தடுக்க நினைத்த சக்திகளை முறியடித்து ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டோம் இல்ல
    நாலாவது கேள்விக்கான பதில்

    http://vavaasangam.blogspot.com/2006/07/blog-post_31.html

    இது.

    ReplyDelete
  23. இதெல்லாம் என்ன கேள்விகள். இதுக்கெல்லாம் விடை தெரியலைன்னா....வலைப்பதிவுகள் மேல கோவிச்சுக்கிருவீங்களா...கேள்வின்னா எப்படி இருக்கனும் தெரியுமா? நல்லா விண்ணுன்னு....ஒரு கணக்கா...கில்பான்சா இருக்கனும். அத விட்டுட்டு....நூத்துல எழுவத்தெட்டே முக்கால் போச்சுன்னா மிச்சத்துல கால்வாசி எவ்வளவுன்னு கேட்டா? என்னவோ போங்க இளா...நமக்கும் பொதுஅறிவுக்கும் அவ்வளவு தூரம். :-(

    ReplyDelete
  24. விவ்
    குயிஜூ
    சீக்கிரம் போடு
    கை பரபரங்குது
    ...:)

    ReplyDelete
  25. இராமனுக்கு சேவைசெய்ய வாய்த்த அணிலைப் போல எனக்கும் தமிழ் வலையுலக பின்னூட்டங்களின் முடிசூடா மன்னன் எங்கள் அண்ணன் திரு. இலவசக்கொத்தனார் அவர்களின் சாதனைக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த இறைவனுக்கும், என் சுற்றத்தவருக்கும், திரு. கொத்தனாருக்கும் நன்றியைக் கூறி அமர்கிறேன்!!!

    நன்றி! வணக்கம்!

    ReplyDelete
  26. நம்மளை தமிழ் தொண்டு ஆற்றுவதில் இருந்து தடுக்க நினைத்த சக்திகளை முறியடித்து ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டோம்
    சந்தோஷ் அறிக்கையை வழி மொழிகிறேன்

    ReplyDelete
  27. ஏங்க விவசாயி, நான் இனிமேலே பதிவுகள் போடாலாங்களா?

    ReplyDelete
  28. இது யாருங்க ஸ்ரீதர் வெங்கட், புதுசா, புதரகம்னு பேரு வச்சது நம்ம முகமூடிதான்னு கூடத் தெரிஞ்சுக்காம இருக்காரே? ஆமா, அமீரகம்னு பேரு வச்சது யாரு? பெனாத்தலா? :D

    ReplyDelete
  29. //இது யாருங்க ஸ்ரீதர் வெங்கட், புதுசா, புதரகம்னு பேரு வச்சது நம்ம முகமூடிதான்னு கூடத் தெரிஞ்சுக்காம இருக்காரே? ஆமா, அமீரகம்னு பேரு வச்சது யாரு? பெனாத்தலா? :D
    //

    அமீரகம்னா புரியுது... அமீர் + அகம். புதர் யாரு? புஷ்ஷர்-ஆ???

    எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கறீங்க...

    ReplyDelete
  30. கேள்விகள் கேட்ட விவசாயியே, பதில்கள் எங்கே!!!

    ReplyDelete
  31. [URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/3_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/3_viagra1.png[/IMG][/URL]


    [URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/6_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/6_buygenericviagra.png[/IMG][/URL]


    [URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/11_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/11_buygenericviagra1.png[/IMG][/URL]

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)