Sunday, May 20, 2007

திராவிடம்'ன்னா என்னங்க?

மக்களே,

எனக்கு ஒரு சந்தேகம்ங்க. திராவிடம்ன்னா என்னங்க? திராவிடர்ன்னா யாரு?ஒரு ஜாதி சார்ந்த மக்கள் மட்டுமே திராவிடர்களா? ஏன் திட்டிக்கிறீங்க? எங்களுக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது. இரு சாராருக்கும் என்ன பிரச்சினைன்னு எனக்கு புரியர மாதிரி சொல்லுங்க.

டிஸ்கி எல்லாம் இந்தப் பதிவுக்கு இல்லீங்க. எனக்கு சரியாத்தெரியாத விஷயம் இது, கேட்டு தெரிஞ்சுக்கிறதுல தப்பு ஒன்னும் இல்லை. மரியாதை, ஒருமையின்மை இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். உங்க பின்னூட்டம் வராட்டி நீங்களே புரிஞ்சிக்குங்க. பதில் தெரியாதவங்க பதில் சொல்லத்தேவை இல்லை.

29 comments:

  1. திராவிடம்னா என்னனு தெரியலீங்களே :)

    ReplyDelete
  2. சாகவரம் பெற்ற ட்ராபிக்கல் டாபிக் இது... சரியாக ஒரு வருடத்திற்க்கு முன் வெட்டிப்பயல் யார்ன்னு ஒரு பெரிய பட்டிமன்றம் நடந்தது. இப்போ ஆர்யம் விதைக்கும் விவசாயி திராவிடனா? ன்னு எங்காவது சந்துல இருந்து கிளம்பும் பாருங்களேன்.

    என்னது, எனக்கு சிலையா? (6 அடிக்கு, வெண்கலத்துல. சிமெண்ட் ன்னா ஈசியா உடைக்கப்படலாம்)

    ReplyDelete
  3. இளா,

    இரவீந்திர நாத் தாகூர் எழுதிய தேசிய கீதத்தில் 'திராவிட உச்சல' என்று தென் இந்தியாவை குறிப்பிட்டு இருக்கிறார். அன்றைய வடவர்கள் தென்னிந்தியாவை குறிப்பதற்கு 'திராவிட' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தென்னாட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திராவிடர்கள்.
    :)))


    (டெல்லிக்காரார்கள் தென் இந்தியாவை சேர்ந்தவர்களை மதராசி என்று இன்னாளில் அழைப்பதைப் போலவே )

    மற்ற அரசியல் விளக்கம் / எதிர் விளக்கம் பலபதிவர்கள் ஏற்கனவே கொடுத்துள்ளார்கள்.

    நண்பர் பாலாஜியின் பதிவையும் பார்க்கவும். இதே கேள்விக்கு பல(ர்) பதில்கள் கிடைக்கும்.

    ReplyDelete
  4. கேப்பைன்னா ஆரியம்ன்னும் அதனாலே ஆரியம்ன்னா உவ்வேன்னு பிடிக்காத கேப்பையா திராவிடநாட்டு விவசாயிக்கும், திராவிட நாட்டின் சமானிய சாப்பாட்டு ரசிகனுக்கும் அமைவது ஆரியம் என்பது.

    ஆனால் தன் ரெண்டு இட்லிக்காக வாய்விட்டுக் கேட்டும் கிடைக்காத எக்ஸ்டிரா கெட்டிச் சட்டினிலேர்ந்து ஆரியமே அனைத்தையும் அமுக்கியதுன்னு தினப்படியாக அரசியல் கஞ்சி காச்ச கேப்பையா ஆரியத்தைப் பயன்படுத்தினா அது அரசியல் திரா"விடம்"

    ReplyDelete
  5. ஆரியம் என்பது கடும் வயிற்றுப்போக்குக்கு காரணமான இம் மண்ணில் வந்தேரிய வியாதி கிட்டத் தட்ட காலரா மாதிரி அதை நீக்க மனிதருக்கு பொதுவாக தமிழர்களுக்கு தேவைப்படும் ஒரு அருமருந்து திராவிடம் அதை கொடுக்க பிறந்த நாட்டு வைத்தியர்தான் பெரியார் :

    ReplyDelete
  6. உதய்,
    அவரு சில சம்பவங்களை சரியா தப்பான்னு கேட்டு இருக்காரு. நான் கேக்குறது வேறைங்க. அவரு பதிவை படிச்சுட்டு புரியுதான்னு பார்க்கிறேன்

    ReplyDelete
  7. //கேப்பைன்னா ஆரியம்ன்னும் அதனாலே ஆரியம்ன்னா உவ்வேன்னு பிடிக்காத கேப்பையா திராவிடநாட்டு விவசாயிக்கும், திராவிட நாட்டின் சமானிய சாப்பாட்டு ரசிகனுக்கும் அமைவது ஆரியம் என்பது.//

    வணக்கம் ஹரிஹரன். இன்னும், எங்க ஊர் பக்கம் ஆரியம்னு தான் சொல்லுவாங்க,.... எனக்கு தெரிஞ்சதைதான் சொல்ல முடியும். அது ஒரு வயசு குழந்தை செய்ததை எழுதியது. அதுல என்னங்க தப்பு இருக்கு?


    //திராவிட நாட்டின் சமானிய சாப்பாட்டு ரசிகனுக்கும் அமைவது ஆரியம் என்பது//

    என்னை திட்டுறீங்களா? நான் ஒன்னும் பெரிய இலக்கியவாதி இல்லீங்க. நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலங்க. என்னை மாதிரி சாமான்யனுக்கு புரியற மாதிரி பதில் சொல்லுங்க.

    ReplyDelete
  8. //இமயத்ததிலிருந்து கல்லெடுத்து வந்து நிழல் கீழே விழாத கோபுரத்துடன் தஞ்சைப் பெரிய ( பிரகதீஸ்வரர்) கோவில் கட்டிய சோழ மன்னன் இராஜராஜன், மாமல்லபுரம் குடவறை, மற்றும் கடற்கரைக் கோயில்கள் கட்டிய மகேந்திரவர்மன் இவர்களெல்லாம் -தற்போது கடந்த 80 ஆண்டுகளாக தமிழகத்தைப் பீடித்திருக்கும் “சுயநல அரசியல் திராவிட சித்தாந்தத்தின்” அளவுகோல்படி “காட்டுமிராண்டிகள்” என்றும் ஆகம சாஸ்திரப்படி கோவில்கள் கட்டியதால் “ஆரிய மாயையில்” சிக்குண்டுவிட்ட “பார்ப்பன அடிவருடிகள்” என வகைப்படுத்தப்படும் நிலை தெரியவில்லையா //

    ReplyDelete
  9. ராசா,
    உங்க பின்னூட்டம் சில, பல சிதம்பர ரகசியங்களை வெளிக்கொண்டுவர இருப்பதால், உங்க பின்னூட்ட வெளியீடு சிவாஜி படத்தைப்போல காலவறையற்று தள்ளிவெக்கப்படுகிறது.

    புரிஞ்சிக்கோ மாப்பு

    ReplyDelete
  10. சிதம்பர ரகசியாமா? "ஙே" (நன்றி- ராஜேந்திரகுமார்)

    ReplyDelete
  11. ////திராவிட நாட்டின் சமானிய சாப்பாட்டு ரசிகனுக்கும் அமைவது ஆரியம் என்பது//

    என்னை திட்டுறீங்களா? நான் ஒன்னும் பெரிய இலக்கியவாதி இல்லீங்க. நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலங்க. என்னை மாதிரி சாமான்யனுக்கு புரியற மாதிரி பதில் சொல்லுங்க. //

    திட்டுறமாதிரியா இருக்கு :-((
    சாப்பாட்டு ரசிகனுக்கு பொதுவா கேப்பைன்னா ருசிக்காது உவ்வேம்பார்!


    மகேந்திரன்.பெ.,

    என்னோட பழையபதிவுப் பகுதியை சின்ன பிட்டா எடுத்துப்போட்டுப் பின்னிட்டீங்க! லிங்க் குடுத்தா விளம்பரமானும் ஓசியில கிடைச்சிருக்கும் :-))
    எப்படியோ நல்லா இருங்க சாமி!

    ReplyDelete
  12. இளா,

    பதிவின் தலைப்புக்குத்தான் பதில் தெரியலையே... பின்னூட்டத்துலயாவது யாராவது புண்ணியவான் பதில் சொல்லியிருப்பான்னு வந்தா... "காலவரையற்று தள்ளிவைக்க"ப்படுதா?

    இந்த கருத்துசுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையிலே சரியான பதிலைச் சொன்ன ராசாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்! :)

    சீக்கிரம் வெளியிடும் ஓய்! இல்லைன்னா... அட்டாக் பாண்டியனுக்கு போன் போட வேண்டிவரும்!

    ReplyDelete
  13. :) என்னய்யா..தெரிஞ்சு கேக்கீரா...தெரியாமக் கேக்கீரா....தெரியாமக் கேக்கீருன்னு நெனச்சே சொல்றேன்.

    திராவிடர்கள் என்பவர்கள் பழைய தென்னிந்தியர்கள். வங்காளிகள் கூட அந்த வகையில சொந்தக்காரங்கதான். ஏன்னா அவங்க மங்கோலோ-திராவிடர்களாம்.

    இன்றைய நிலையில் திராவிடர்கள் என்பவர்கள் ஐந்து மாநிலத்துக்காரர்கள் என்று சொல்லலாம். விரும்பியோ விரும்பாமலோ அதை ஒருவிதத்தில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது போலத் தெரியவில்லை.

    தெலுங்கு விஜயகாந்தும், மலையாள எம்.ஜி.ஆரும் திராவிடர்கள். ஆனால் பிடிக்கவில்லையென்றால் தெலுங்கன் மலையாளி என்று திட்டலாம். :) இது பொதுவாக அரசியல் சார்புடையவர்கள் சொல்வது. ஆகையால் இந்தக் கிண்டல்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை.

    என்னைக் கேட்டால் இன்றைக்குத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லாரும் தமிழர்கள்தான். ஆனால் அதைப் பெருமையாக நினைக்கவில்லையென்றால் தமிழர்கள் இல்லை. அந்த வகையில் விஜயகாந்தும், எம்.ஜி.ஆரும் தமிழர்கள்தான். திராவிடர்கள்தான். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால்....இரத்தக்கலப்பு என்பது எக்கச்சக்கமாக நடந்து விட்டது. ஆகையால் அப்படியே கோடு போட்டுப் பிரிப்பது எளிதாகாது. முன்பே சொன்னது போல தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி மக்கள் என்று பொதுவில் சொல்லிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  14. நார்மல் விளக்கம் நம்ம ஜிரா சொல்லிட்டாரு. நம்ம வலைப்பதிவுகள் பொறுத்தவரை நமக்குப் பிடிக்காதவங்க எல்லாரும் (அவங்க யாரா இருந்தாலும் சரி, எவ்வளவு பரம்பரையா எங்க வாழ்ந்தாலும் சரி) ஆரிய வந்தேறிகள். மீதி எல்லாரும் திராவிடர்கள்.

    இப்போ சந்தோஷமா?

    ReplyDelete
  15. கொத்தனார் ரொம்ப கரெக்டா சொல்லிப்புட்டாரு இப்ப தெரிஞ்சுடுச்சு யாரு திராவிடர்கள் யாரு ஆரியர்கள்னு. கொத்தனாருக்கு நன்றி விளக்கம் கொடுத்ததுக்கு :)

    ReplyDelete
  16. ஆஹா.. அப்போ நான் சொன்னது தான் சரியான பதிலா.. :)

    ReplyDelete
  17. தமிழர் அல்லாத பிற தென்னிந்தியர் தமிழ்நாட்டில் அரசியல் நடத்தும் போது உபயோகப்படுத்தும் வார்த்தை.(அண்ணா ஒரு விதிவிலக்கு)

    ReplyDelete
  18. அதுமா,
    உலகத்தின் பழபெரும் வகுப்புகளில்ஒன்று
    திராவிடர் சுறுக்கம் இதான். ஜிரா,விளக்கமா சொல்லி இருக்கார்.

    ReplyDelete
  19. ஆக மொத்தம் திராவிடர்ங்கன்னா தென் இந்தியாவுல பொறந்தவங்க. அப்போ நாம் எல்லாமே திராவிடர்களதான். அம்மா, அய்யா, தாத்தா, பெரியார், மாமா, சித்தப்பா எல்லா கட்சிக்காரங்களும் திராவிடர்கள். இதுல பிராமணர்களும் அடக்கம். அப்புறம் என்ன பிரச்சினை?

    ReplyDelete
  20. பிரச்சனைஒன்னுமில்லமா,பிரச்சனையை உருவாக்கறதுதான் பிரச்சனையே.!!!!

    ReplyDelete
  21. திராவிடம் என்பது ஆரியர்களுக்குப் பிடிகாத, எதிரான ஒன்று. எல்லா இதிகாசதிலும் வரும் அசுரர்கள் எல்லாம் திராவிடர்களே. ந்ல்ல அரசரானாலும் அவன் திராவிடன் என்றாலே கெட்டவனே. உதாரணம் மாகாபலிச் சக்கரவர்த்தி. புராண கதைகளின்படி மக்களுக்கு பிடித்தபடி மக்களுக்காக தான தர்மங்கள் செய்தவன் ம்காப்லி. தர்மத்தின் பலன் கூடி விட்ட்தால் இந்திரனின் சிம்மாசனம் ஆட்டம் கண்டுவிட்டது. அடுத்த இந்திரனாக வரும் நிலை ஏற்பட்டது. ( இந்திரன் தான் மாறுவான் இந்திரானி மாறமாட்டாள்...?). அதனால் தேவர்கள் எல்லோரும் ம்காவிஷ்னுவிடம் முறையிட அவர் வாமன அவதாரம் எடுத்து வந்து 3 அடி நிலம் தர்மமாகக் கேட்டு மகாபலியை கொன்று விடுவார். ம்காபலியின் நினைவாக கேரளாவில் கொண்டாடப்படுவதுதான் ஓணம் பண்டிகை.

    ஆகவே ஆரியருக்கு எதிரானவர்கள் எல்லாம் திராவிடர்கள். ராவணன் திராவிடனே. இந்தியாவின் பூர்வக்குடிகள் திராவிடர்களே. கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் போரிட்டதே தேவசுர யுத்தங்களாகும். (ஆரியர்களின் கதைப்படி).

    உங்களுக்கும், எல்லோருக்கும் இந்த கதை தெரியும் சும்மா பொழுது போகவில்லையென்றால் ஒரு பதிவு இதுபோல் இட்டு தமிழ்மணத்தில் சூட்டை கிளப்ப முடிவு செய்து விட்டீர்கள்.

    இந்த கருத்து நேரு அவர்களின் கருத்து உண்மையும் கூட.

    இனி பார்ப்பண அடிவருடிகளும், திராவிட திம்மிகளும் வந்து போட்டுத் தாக்குங்குள். நான் திராவிடன் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மையான மொழி. இது எனக்கு தெரிந்தது அமெரிககா வந்த பிறகுதான். என் மகனை பள்ளியில் சேர்க்க சென்றபோது உலகின் தொன்மையான மொழிகளில் வரவேற்று ஒரு வரவேற்பு பலகையைக் கண்டேன் (ஒரு 10 மொழிகள் இருக்கும் ) அதில் "வணக்கம்" என்ற சொல் கண்டவுடன் எனக்கு ஒரு நிமிடம் புல்லரித்துப் போய்விட்டது. நம் தமிழின் தொன்மை, பெருமை நமக்குத் தெரியவில்லை அல்லது நமக்கு யாரும் சொல்லவில்லை.

    நாசா புகைப்படத்தினால் ராமர் பாலம் உண்மையென்று கூறும் நண்பர்கள் இதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். ஆதாரம் = அமெரிக்காவில், நியூயார்க் மாகானதில் உள்ள ராக்லாண்ட் கவுண்டியில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இந்த வரவேற்பு பலகை உண்டு (மற்ற இடங்களைப் பற்றி எனக்குத் தெரியாது ).
    எப்படியாயினும் எனக்கு திராவிடத் திம்மி என்ற பட்டம் உண்டு.

    நீங்க பெருந்துறையா?. நான் ஈரோடு தான். நானும் பழைய விவசாயிதான்

    ReplyDelete
  22. என்னா இது சின்னப்புள்ளத்தனமா கேள்வி கேட்டுக்கிட்டு?

    திராவிடம்னாக்க தமிழர்களெல்லாம் தனித்துவமானவர்கள், இந்த வட இந்தியர்கள்தான் மோசம்னு சொல்லிக்கிட்டு கன்னடம் பேசுகிற நாயக்கர்களும், தெலுங்கு பேசுகிற நாயுடுக்களும் தமிழர்களின் தலைவர்களாக தொடர்ந்து இருப்பதுதான் திராவிடம்.

    ReplyDelete
  23. ////இதுல பிராமணர்களும் அடக்கம். அப்புறம் என்ன பிரச்சினை? ////

    இத்தன நாளா வலைப்பதிவுல குப்பைய கொட்டி என்னா நைனா கண்டுக்கின?

    முதல்ல இதத் தெரிஞ்சிக்க. பிராமணர்னு சொல்லக்கூடாது - பாப்பான்னுதான் சொல்லனும்.

    ஆனா, மத்த எந்த சாதியையும் பாப்பானுங்க அதே மாதிரி திட்டக்கூடாது. நாங்க சட்டமன்றத்திலகூட திட்டுவோம்.

    பாப்பானுங்கள தமிளர்கள்னு சொல்லிட்டா எங்க சாதி ஆளுங்க எப்படி ஆட்சிக்கு வரமுடியும்?

    எங்க சாதியைத் தவிர மத்த சாதியெல்லாம் பார்ப்பன அடிவருடி சாதிதான்.

    ReplyDelete
  24. //இலவசக்கொத்தனார் said...
    நம்ம வலைப்பதிவுகள் பொறுத்தவரை நமக்குப் பிடிக்காதவங்க எல்லாரும் (அவங்க யாரா இருந்தாலும் சரி, எவ்வளவு பரம்பரையா எங்க வாழ்ந்தாலும் சரி) ஆரிய வந்தேறிகள். மீதி எல்லாரும் திராவிடர்கள்.//

    அடிக்க முடியாத, அசைக்க முடியாத, ஆணித்தரமான, அட்டகாசமான பதில்.
    இளா ஸார். இது ஒண்ணே போதும்.. பின்னூட்ட பாக்ஸை இத்தோட மூடிருங்க..
    100 முறை ரிப்பீட்டு..
    வாழ்க கொத்ஸ் ஸார்..

    ReplyDelete
  25. சுப்பு சார் வாழ்க.

    திராவிடம் என்ற கருத்து இல்லாட்டி சோத்துக்கே சிங்கி அடிக்கும் நிலைக்கு போயிருக்கக்கூடிய சிலரே அதை நக்கல் அடிப்பது தவறு.இது பதிவாளருக்கும் பொருந்துமா அவரே அவர் மனசாட்சியை கேட்டுக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  26. //நீங்க பெருந்துறையா?. நான் ஈரோடு தான். நானும் பழைய விவசாயிதான் //

    சுப்பு, பவானியிலிருந்து 12 கிமி தூரத்துல ஒரு சின்ன கிராமம்தாங்க நம்ம ஊரு.

    ReplyDelete
  27. //http://binarywaves.blogspot.com/2004/10/tamizh.html

    Subbu, Please have a look at it. I took this pic 3 years before in Uk. So...

    ReplyDelete
  28. //உங்களுக்கும், எல்லோருக்கும் இந்த கதை தெரியும் சும்மா பொழுது போகவில்லையென்றால் ஒரு பதிவு இதுபோல் இட்டு தமிழ்மணத்தில் சூட்டை கிளப்ப முடிவு செய்து விட்டீர்கள்.//

    தெளிவா பதிவுலேயே சொல்லி இருக்கேனே.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)