Friday, May 25, 2007

தமிழ்மணம்-கேள்விகள் பதில்கள்

இதுக்கு முன்னாடியே PKP இப்படி பதிவு போட்டு இருக்காரு. அவருக்கு ஒரு சலாம் போட்டுக்கிறேன். அதை நமக்கு பின்னூட்டம் மூலம் சொன்ன ஸ்ரீதர் வெங்கட்டுக்கு இன்னொரு நன்றி


1. Comments அப்படிங்கிறதுக்கு பின்னூட்டம்னு பேர் வெச்சது யாரு?

காசி என்று நினைக்கிறேன். தமிழ்மணத்துல கிடைக்கும் Templateகளில் பின்னூட்டம்னே வர அதையே மக்கள் தொடர ஆரம்பிச்சுட்டாங்க.

(அண்ணா உங்களை இந்தத் தமிழ்மணம் என்னைக்குமே மறக்காது)


2. தமிழ்ப்பதிவுலகின் முதல் பதிவு எது? கண்டிப்பாக லின்க் தந்தே ஆகனும்.

1.முதல் பதிவர் நவன் . Jan-16-2003
2. முதல் பதிவர் கார்த்திக் ராம்ஸ்- Jan-01-2003. ஆனால் அவர் கில்லியில் எழுதியது கொஞ்சம் நம்மையும் சேர்த்து குழப்புதுங்க.

(சிந்தாநதியும் ஒரு பதிவு போட்டாரு, அப்பவுமே குழப்பம்தான்)


3. தமிழ் பதிவுலகத்துல உருவான முதல் குழுமம் எது?

ஆரம்பத்தில் இருந்த கொஞ்சப் பேர்களுக்குள் அந்தமாதிரிஒன்றும் உருவாகவில்லை. கூட்டுப்பதிவுகள் உருவாகின. முதல் கூட்டுப்பதிவுபெண்கள் குறைவாக இருந்தபடியால் அவர்களை உள்ளே கொண்டு வருவதற்காககூட்டுப்பதிவாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் தனித்தனிப்பதிவுகளாகத்தொடங்கி அல்லல் படத் தேவையில்லையென்று. இப்போது தமிழில் எழுதும் பலபெண்கள் அதில்தான் முதலில் எழுதத் தொடங்கினார்கள். தோழியர் - womankind -http://womankind.yarl.net அடுத்தது அறிவியலுக்காக யாழ்.நெட் தந்த இலவசமூவபிள் டைப் செயலியில் உருவாக்கப்பட்டது. அதுக்கப்புறம் மேல்கைண்ட்'னு ஒரு கூட்டுப்பதிவு.

நன்றி-மதி

4. அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?

அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு வ.வா.ச'வில் இலவச கொத்தனார் எழுதியது. 641 பின்னூட்டம் வாங்கு வாங்குன்னு வாங்கியது.



5. தமிழ்மணத்துல ஒரு முறைக்கும் மேல் நட்சத்திரம் ஆனவங்க எத்தனை பேரு? அவுங்க பேரு?

ராம்கி, டோண்டு, துளசி, பாஸ்டன் பாலா

6. இதுவரைக்கும் அதிகமான பதிவுகள் எழுதியது யாரு?


அதிகமான பதிவுகள் எழுதி இருப்பது பாஸ்டன் பாலா, ஒரு 7 ஆயிரம்னு சொல்றார்.
(அடேங்கப்பா)

7. Hit Counter படி அதிகம் ஹிட் வாங்கிய வலைப்பதிவு எது?

இது நம்ம வலையுலக "துக்ளக்" இட்லிவடைதான். 3 லட்சம் தாண்டியும் ஊசாமல் ஓடிட்டு இருக்கு. (3,76,321 Hits, as of May25-2007)

(எல்லாருமே படிக்கிறாங்க, அப்புறம் ஏன் பின்னூட்டம் அதிகம் வர மாட்டேங்குது)

8. தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் 4 இடத்துல வந்தவங்க யாரு?

சிறில், ராசா, பெனாத்தலார் மற்றும் நான்.

(ஒரு விளம்பரம் தான்)

9. பதிவுலகின் முதல் பெண் பதிவாளர் யாரு?

மதி கந்தசாமி.

( முதல் ஆண் பதிவாளர் யார்ன்னு 2வது கேள்வியிலேயே கேட்டாச்சு. அதனால பெண்'ஈயம்', ஆண் பித்தளைன்னு சண்டைக்கு வர வேணாம்.

மக்களே, இந்தத் தகவல் தப்புன்னா சொல்லுங்க மாத்திரலாம்.

20 comments:

  1. Interesting :-)

    It is better if you or add a disclaimer too...."To my knowledge...." :-)
    This will help for the people who are going to write a step back and think before quoting you as the/a reference ;-)

    The following is to my knowledge.... I may be WRONG

    1. பின்னூட்டம் பதம் பற்றிக் காசியே பின்னூட்டினாலே உண்டு :-)

    3. .அறிவியல் கூட்டுப்பதிவு
    was at http://ariviyal.yarl.net

    9. அருணா ஸ்ரீனிவாஸன்
    http://aruna52.blogspot.com/2003/05/blog-post.html


    -/Ramanitharan, K.

    ReplyDelete
  2. ---ஒரு 7 ஆயிரம்னு சொல்றார்---

    :))

    Probably I will issue the claimer here. Note: This is not a disclaimer :)

    I told, I have more than 10K+ links/bookmarks in snapjudge.blogspot kind of places.

    Moreover, what matters is quality & originality and not quantity ;)

    Hits is another myth. If we write more about porn & sex (with those exact words specified as a tag in wordpress or as a label in blogspot) we are bound to get billion+ search visitors.

    ---அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு வ.வா.ச'வில்---

    I am yet to read that post and feedbacks. But how many were from repeat visitors? How many were from the same author? Should we wonder more about the KB (& underlying substance in the disagreeing enriching opinions) rather the magic number of 1, 2, 3...641

    If I say 'Thanks', Nanri, me firsttu etc, does that count +1, +2, +3 ;)

    more later :)

    ReplyDelete
  3. இலவசக்கொத்தனார் takes 247 :)

    I ahve nothing against this kind of active enrgy in the comments box. This is just another quantitative analysis :)

    more might follow ;)

    ReplyDelete
  4. ILA(a)இளா - 81

    Probably we can do a small FF extension to categorize and sum up by blogger ID :)

    ReplyDelete
  5. தப்புதான். வலையுலகில் அதிகம் ஹிட்ஸ் வாங்கியது தல கைப்ஸ்தான்!!

    ReplyDelete
  6. http://mathyk.blogspot.com/2003/05/this-boys-life-1993.html

    http://mathykandasamy.blogspot.com/2003_05_01_archive.html

    ReplyDelete
  7. பதிவுலகின் முதல் பதிவு எது?

    அந்த குழப்பம் நீங்கி நான் அடுத்த பதிவில் சரியாக சொல்லி விட்டேனே. நீங்க மறுபடி குழம்பறீங்க...

    கார்த்திக் ராமாஸ் தான் முதல் பதிவர் என்று ஆதாரப் பூர்வமாக சொல்லி விட்டார்கள்.

    ReplyDelete
  8. கார்த்திக்ராமாஸ் முதல் தமிழ்ப்பதிவரா? பொத்திக்கிட்டு சிரிக்கணும்போலருக்குப்பா. யூனிகோடு எழுத்துரு இறக்கிறதுல இருந்து எல்லாத்துக்கு தடவிக்கிட்டிருந்த ஆளு மொத வலைப்பதிவராமா? காதுல பூ சுத்துறதுக்கு ஒரு அளவில்லாடா சாமி!

    ReplyDelete
  9. எனக்கென்னமோ பதிவர் உலகம் வரும் முன்னாலேயே பின்னூட்டம்கற வார்த்தை மக்களுக்கு பரிச்சயமானதாக இருந்ததென்றே தோன்றுகிற்து. என்க்குத் தெரிந்து பின்னூட்டம் என்ற பெயரிட்டது பெயரிலி என எண்ணுகிறேன் - அல்லது இராம.கி ஐயாவாகவும் இருக்கலாம்.

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  10. //வலையுலகில் அதிகம் ஹிட்ஸ் வாங்கியது தல கைப்ஸ்தான்//

    இங்கே ஹிட்ஸ்னு கொத்தனார் சொல்லுறது ஆப்புக்களோட எண்ணிக்கையா?

    ReplyDelete
  11. சிபி,

    தமிழில் 'ஹிட்ஸ்' என்பதற்கு என்ன பொருள் என பவீபவை (பக்கத்து வீட்டுப் பாலகன்)கேட்டேன். அவன் சொன்னதை வைத்து என் பதில்.

    ReplyDelete
  12. எக்ஸலண்ட்...அருமையான பதிவு...அப்படியே "முதல் அனானி பின்னூட்டம் போட்டது யாரு" ன்னு ஒரு கேள்விய விட்டுருங்க...

    ReplyDelete
  13. இளா.
    //பின்னூட்டம் பதம் பற்றிக் காசியே பின்னூட்டினாலே உண்டு :-)//ன்னு பெயரிலி என்னை இழுத்துவிட்டதால் மாத்திரம் இந்த *மறுமொழி*. 'கருத்து'ன்னு முதல்ல சொல்லிக்கிட்டிருந்த நான் ஒரு நாள் மதியோ யாரோ பயன்படுத்திய 'மறுமொழி'பிடிச்சுப் போக இன்னி வரைக்கும் மறுமொழிதான்! 'பின்னூட்ட'மெல்லாம் என்னமோ லிட்டரல்னு சொல்வாங்களே அதுமாதிரி தோணுது. சாரி. ஒன்லி மறுமொழி, நோ பின்னூட்டம் ஹியர் : )

    ReplyDelete
  14. காசி அண்ணா, ஒரு உண்மைய சொல்றேன். பதிவர்களின் சொல் எல்லாம் வெளியே சொன்னால் பாதி பேருக்கு மேல புரியறதே இல்லை. தமிழ்மணம் உதவி பக்கத்துல வந்த உதாரண Templateதான் அந்தக்காலங்கள்ல ஓடிட்டு இருந்துச்சு. அதுல மறுமொழின்னு இருந்தது(UPTO MY KNOWLEDGE). அதை தமிழ்மணம் சார்பா நீங்களோ, வேறு யாரோ குடுத்து இருக்கலாம். அதாவது இது 2005 பிற்பகுதியில.

    ReplyDelete
  15. பின்னூட்டங்கள்ல எனக்கும் நம்பிக்கை இல்லீங்க 1K-10K வரைக்கும் பதிவுகள் இருக்கு. ஆனா மூக்கு சுந்தரின் ஈழம் பத்திய பதிவுகளின் பின்னூட்டங்கள் தான் உண்மையாவே கருத்தோட இருந்தவைன்னு "பதிவுலகின் கருவறை" சொல்லி இருக்காங்க.

    ReplyDelete
  16. //5. தமிழ்மணத்துல ஒரு முறைக்கும் மேல் நட்சத்திரம் ஆனவங்க எத்தனை பேரு? அவுங்க பேரு?

    ராம்கி, டோண்டு, துளசி, பாஸ்டன் பாலா//

    இளா,
    உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லை என்பதை கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்!

    எவ்வளவோ பதிவர்கள் இருக்கும் போது மீண்டும் மீண்டும் ஏன் இப்படி ஒன்றுக்கு இரண்டாக நட்சத்திரம் ஆக்குறாங்க இவங்கனு கோக்கு மாக்கா போட்டு வாங்கி சொல்லிட்டிங்களே! :-))

    நான் கூட முதலில் தலைப்பை வைத்து ஏதோ உள்ளுக்குள்ள சமாச்சாரம் இருக்கும்னு வந்தேன், ஆனால் ஏமாத்திப்புட்டிகளே!

    சரி போனது போவட்டும் அப்படியே இந்த கேள்விகளையும் கேட்டு பதில் சொல்லுங்க,

    1)முதல் போலிப்பதிவு போட்டது யார்?
    2)தனக்கு தானே அநாமதேய பின்னூட்டங்களை போடும் தொழில் நுட்பத்தை கண்டு பிடித்தது யார்?
    3)ஹிட்ஸ் கவுண்டரை பதிவில் வைத்தது யார்?(சின்ன கவுண்டர் போல இவரும் குடை பிடிப்பாரா)
    (அனானி பின்னூட்டம் பற்றி ரவி கேட்டாச்சு )

    ReplyDelete
  17. //நான் கூட முதலில் தலைப்பை வைத்து ஏதோ உள்ளுக்குள்ள சமாச்சாரம் இருக்கும்னு வந்தேன், ஆனால் ஏமாத்திப்புட்டிகளே!//
    சமாச்சாரமே இல்லாத பதிவுன்னு சொன்னதுக்கப்புறம் இந்தப் பதிவுல கேள்வி கேட்டா சமாச்சாரம் இல்லாத பதிவுக்குள் சமாச்சாரம் இல்லாத கேள்வி கேட்டா சமாச்சாரம் இல்லைன்னு பதில் சொல்லுவேன்.

    ReplyDelete
  18. //நான் கூட முதலில் தலைப்பை வைத்து ஏதோ உள்ளுக்குள்ள சமாச்சாரம் இருக்கும்னு வந்தேன், ஆனால் ஏமாத்திப்புட்டிகளே!//
    சமாச்சாரமே இல்லாத பதிவுன்னு சொன்னதுக்கப்புறம் இந்தப் பதிவுல கேள்வி கேட்டா சமாச்சாரம் இல்லாத பதிவுக்குள் சமாச்சாரம் இல்லாத கேள்வி கேட்டா சமாச்சாரம் இல்லைன்னு பதில் சொல்லுவேன்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)