Monday, May 31, 2010

அலைபேசியும் முதலிரவும்


என்னுடைய அலைபேசியில்
சிணுங்குவதைப் போலிருந்தது ரிங்டோன்,
முதலிரவில் அலைபேசி சிணுங்கியபடியே இருக்க,

சிணுங்க வேண்டியவள்
வெறுத்து, அயர்ந்து தூங்கினாள்
அலைபேசியையும், அவளையும்
ஒருங்கே அணைத்தேன்
விடியும் வரை
அவள் சிணுங்கிக்கொண்டே இருந்தாள்
தூங்கி வடிந்தது அலைபேசி!

-----------------------------------------------------------------------------------




”அலைபேசியும் நானும் ஒன்றா?”
எப்படி என்றாள்
இரண்டையுமே இரவில் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறது
இல்லையெனில்,
அலைபேசி Battery out,
உனக்கு மூட் அவுட்.
’போடா இடியட்’ என்றாள்.



------------------------------------------------------------------------
என்ன கோபமோ தெரியவில்லை,
திட்டியபடியே சாப்பாடு பரிமாறினாள்,
திட்டியபடியே தொலைகாட்சியினை அணைத்தாள்,
திட்டியபடியே படுக்கையை சரிசெய்தாள், பிறகு
என்னைக் கொஞ்சிக்கொண்டே இருந்தாள்!
-----------------------------------------------------------------------




தினமும் திட்டிகொண்டே இருப்பவளுக்கு
'ஒரு விடுமுறை தாயேன்' என்றேன் - சண்டை
முற்றியதும் தாய் போகிறேன் என்றாள்
அவள் பேருந்தில் அமர்ந்தவுடன்,
அவளுக்கு நேரெதிர் திசையை நோக்கியபடி கீழே நான்.
குண்டுமணியாய் கண்ணீர் திரண்டிருந்தது,
திரும்ப அழைத்து வந்துவிட்டேன் வீட்டிற்கு,
தொலைக்காட்சியை உயிர்பித்தேன்,
”எந்நேரமும் அதேதான், நான் ஒருத்தி இங்கே....”
மறுபடியுமா?
--------------------------------------------------------------------------------------

முதலிரவில்,
அரசியல் தெரியுமா? எனக் கேட்டாள்
மேலவையில் ஆரம்பிப்போமா என்றேன்,
அவளுக்குத்தான்
என்னுடைய அரசியல் புரியவில்லை!

Tuesday, May 4, 2010

JakkuBoys-ஜக்கு’பாய்ஸ்

ஒரு காலத்தில் (இப்பவெல்லாம் இல்லீங்க) சிவப்பு துணிக்காரங்க தெருத் தெருவா நாடகம் போடுவாங்க. அவுங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பரப்ப இப்படி அப்படி செய்வாங்க. பிற்காலத்துல தெருமுனையில ரெண்டு பேரு மைக் வெச்சிகிட்டு பேசிட்டு இருப்பாங்க. சைக்கிள்ல போறவங்க எல்லாம் ஒத்தக்கால ஊனி நின்னுகிட்டு ரண்டு நிமிசம் கேப்பாங்க, சினிமாவோ இல்லாட்டி சுவாரஸ்யமா இருந்துச்சுன்னா நாலு நிமிசம் கேப்பாங்க, இல்லாட்டி பெடல ஒரே அழுத்தா அழுத்திக்கிட்டு போயிருவாங்க. ஆனா ரண்டு பசங்க மட்டும் மைக்கு முன்னாடியே உக்காந்துகிட்டு கேட்டுகிட்டே இருப்பாங்க. அவுங்க பிற்காலத்துல ‘தோழரா’ மாறி இருப்பாங்களா? இல்லாட்டி ரண்டு நிமிசம் சைக்கிள் பார்ட்டி மாறிப்போயிருப்பாங்களா? இதெல்லாம் இந்தப் பதிவுக்கு தேவையே இல்லீங்க. சும்மானாச்சுக்கும் எழுதறது, நீங்க ஒன்னு பண்ணுங்க கீழ இருக்கிற படத்தப் பாருங்க. நம்ம கம்யூட்டர் புள்ளைங்க எவ்ளோ கஷ்டப்பட்டு முன்னேறுதுன்னு உங்களுக்கே தெரியும்...

Wednesday, March 31, 2010

சுறா- பாடல் விமர்சனம்

விஜய்க்கு 50 வது படம், ரொம்ம்ப்ப்ப எதிர்பார்ப்பு இருக்கு. ஆனா ஏன் இப்ப கூட தெலுங்குல இருந்து அப்படியே பாட்டுக்களை இறக்கியிருக்காங்கன்னு தெரியல. 50வதுபடம்னா தனியா தெரிய வேணாமா? சரி, வியாபாரம் ஒன்னு இருக்கே, அதுல வரலாறு புவியியல் எல்லாமா பார்க்க முடியும்? விஜய் சார், ரிஸ்க் எடுங்க சார். நேத்து வந்த பொடிப்பசங்க எல்லாம் பின்னி பெடல் எடுக்குறாங்க எவ்ளோ நாளைக்குதான் நீங்க இப்படி பயந்து பயந்து காப்பி அடிப்பிங்க. அங்கே வெற்றியடைஞ்சா இங்கேயுமா ஆவும்? உங்க வரலாறு உங்களுக்குத் தெரியாதா? மக்களே தெலுங்கு பதிப்பின் காணொளியை இணைச்சிருக்கேன், பார்த்துக்குங்க. ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் பாட்டுக்கள் வேட்டைக்காரனைவிட பரவாயில்லை.

விஜய்க்கு
நான் நடந்தால் அதிரடி

Singer: Naveen, Shoba Chandrasekar, Janani Madhan
Lyricist: Kabilan


பில்லாவுக்குப் பின்னாடி Heavy Rock கிதாருல போட்டாவே அது அஜித் கோட் ஒன்ன மாட்டிகிட்டு நடந்து போற மாதிரிதான் மனசுல வருது. இந்தப் பாட்டோட ஆரம்பமும் அப்படித்தான் இருக்கு.”நான் நடந்தால் அதிரடி”, என்ன கொடுமைசார் இது.. இது அஜித் பாட்டா? விஜய் பாட்டா? என்ன பண்ண தெலுங்கு பில்லாவுல மை நேம் இஸ் பில்லா பாட்டு ஆச்சுங்களே. என்ன ஒரு சேலஞ்ச்னா, இதுல விஜய் நடந்ந்ந்ந்ந்ந்தே போவாரா இல்லாட்டி ஆட்டம்போடுவாரான்னு தெரியல. விஜய் கொஞ்சம் கவனிச்சிருக்க வேண்டிய பாட்டு இது. யாரு ஜால்ரா அடிச்சாலும் அதை சமாளிச்சு தன்னோட சபையடைக்கத்தை பார்த்துக்கனும். ”நான் ஜொலிக்கும் நட்சத்திரம்” இந்த வரிய நீக்கியிருக்கலாம். ஏற்கனவே இருக்கிற பேருக்கு இப்படி ஒரு வரி தேவையா? கபிலன் சார், தலைக்கனம் ஏறாத விஜய்க்கு இப்படி ஒரு வரியா? என் கண்டங்கள்.


பொம்மாயி
Singers: Hemachandra and Saindhavi
Lyricist: Na. Muthukumar

கபிலன் பல பாட்டுக்களை எழுதியிருந்தாலும், ஒரே பாட்டுல சிக்ஸர் அடிச்சுட்டு போயிட்டாரு நா.முத்துகுமார். அதுதான் நா.மு. இந்தப் பாட்ட வேட்டைக்காரன்ல அனுஷ்காவுக்கு போட்டிருந்தா செமையா செட் ஆகியிருக்கும். எனக்குப் பிடிச்ச பாட்டும் இதுதான். இதுவரைக்கும் ஒரு 20 முறை கேட்டிருப்பேன். இது டிபிக்கல் விஜய் பாட்டு, இதுதான் விஜய்க்குத் தேவையான பாட்டு. செம, செம, செம, சூப்பர் பேக்கேஜ். சைந்தவிக்கு எப்படித்தான் இப்படியாப்பட்ட நல்ல பாட்டுங்க மாட்டுதோ தெரியல. ஹேமசந்திராவின் குரல் இனிமை. விஜய் இந்தப் பாட்டுக்கு எப்படி ஆடியிருப்பாருன்னு பார்க்க இப்பவே ஆவலா இருக்கேன். துள்ளலான காதல்



வெற்றி கொடியேத்து
Singers: Ranjith and Mukesh
Lyricist: Vaali, S.P. Raajakumar


ஓபனிங் பாட்டு போல, மணி சர்மா, மின்சார கண்ணா பாட்டு பார்த்துட்டு தெலுங்குல போட்டிருப்பாரு போல, அப்படியே தமிழுக்கும் வந்திருச்சுங்க. “இருந்தாக்கா தென்றல் காற்றுதான், எழுந்தாக்கா சூறைக் காற்றுதான். அட போங்கப்பா.





தமிழன் வீரத்தமிழன்
Singer: Rahul Nambiar
Lyricist: Kabilan

கேண்டீன் ஸ்பெசல் பாட்டுங்க. சொல்லிக்கிற மாதிரி இல்லே, என்னமோ பாட்டு வருது போவுது. சிசுவேசன் பாட்டு போல. கண்டிப்பா பாட்டு முடியறதுக்குள்ள கோடீஸ்வரனா ஆகிருவாரு இல்லாட்டி பெரிய போராட்டமோ பண்ணி ஜெயிப்பார் போல. படத்துல இந்தப் பாட்டு வரும் போது தம்மும் டீயும் நல்லா வியாபாரம் ஆவும்ங்கிறது நிச்சயம்.


சிறகடிக்கும் நிலவு
Singers: Karthik and Reeta
Lyrics: Snehan


ஹ்ம்ம், இந்தப் பாட்டை படத்துல பார்த்தாங்க தெரியும். ஆஹா ஓஹோ ந்னு சொல்ற மாதிரி இல்லாத மெட்டு. வர பீட்டும் பழசும், வயலினும், மொட்டை காலத்து ஸ்டைலு. ஆனா என்ன கேட்குற மாதிரி இருக்கு. பல முறை கேட்டாலும் சலிக்கலை. மணிசர்மாவுக்கு சில Template இருக்கு, அதுல இருந்து ஒரு நோட் கூட மாறலை. புதிய ஒயின், பழைய ஜாடியில, ஆனா கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு. புரியாத புதிர்.



வங்க கடல் எல்லை
Singers: Naveen and Maladhi Lakshmanan
Lyricist: Kabilan


குத்து குத்து குத்து, கும்மாங் குத்து. அப்படி இப்படி இல்லே, கொக்கரக்கோ கும்மாங்குத்து. மாலதி பேரைப் பார்த்தவுடனே நினைச்சேன். கபிலன் விஜய்க்கு குத்துப்பாட்டுக்கு நல்லா பொருந்தி வர்றாரு. விஜயோட சிறப்பான இந்தப் பாட்டுலயும் இருந்தா தியேட்டருல ஆட்டம் பின்னும். ரொம்ப நாளைக்கப்புறம், தவில் வெச்சு செம குத்து. கொக்கரக்கோ கும்மாங்குத்து


Thursday, March 11, 2010

மனோஜ் பரமஹம்சா- கேளுங்க கேளுங்க

அது ஒரு மழைக்காலம். உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவருக்கு நண்பனிடமிருந்து அழைப்பு. நண்பன் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளன். அழைத்த நண்பன் கூறினான் “மாப்ளே, இன்னிக்கே கிளம்பி வா, இந்தப் படத்துக்கு நீ ஒளிப்பதிவாளர் ஆக ஒரு வாய்ப்பு இருக்கு”. அடித்துப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தார். படப்பிடிப்பு அடுத்த நாள், நண்பன் இயக்குனரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியாவது அவரை இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக்கிவிடவேண்டும் என்ற வேகம். இயக்குனரின் மனதில் PC ஸ்ரீராம் இருக்க, ”நான் இந்தப் படம் பண்ணத்தான், வந்தேன், படம் பண்ணியேத்தீருவேன்” என்று சொல்ல இயக்குனருக்கு அவரைப்பிடித்துப்போனது. அவர் மனோஜ் பரமஹம்சா.



தரையில் தண்ணீரை ஊற்றுகிறார்கள் பிறகு துடைக்கிறார்கள், இப்படியே ஆறு நாட்கள் ஓட, கடுப்பானது தயாரிப்பு நிர்வாகம். படத்தின் ஒட்டுமொத்த செலவும் இரட்டிப்பாக, நிர்வாகம் கோபத்தின் உச்சிக்கே சென்றது, திரையில் பார்த்தவுடன் தயாரிப்பாளர் சொன்னார் ”செலவு பண்ணினது வீண் போகலை, பேர் சொல்லிக்கிற மாதிரி ஒரு படம்”. இயக்குனரும், ஒளிப்பதிவாரும் நண்பர்களாக இருந்தால், இயக்குனர் நினைத்தது திரையில் வரும். அது ஈரம்.


இதுவரையில் பெளர்ணமி இரவை இவ்வளவு வெளிச்சமாய் காட்டியது இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா’யில் இன்னொரு தூண் என வர்ணிக்கப்பட்டவர். இன்றைய சினிமாவில் The Hot Cameraman என்றழைக்கப்படுபவர். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவிடம் விண்ணைத்தாண்டி வருவாயா பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளை கேளுங்கள். பதில்களை அளிக்க காத்திருக்கிறார். பதில்கள் அடுத்தவாரம் வெளியிடப்படும்.

கேள்விகளை பின்னூட்டமாக இடுங்கள்

Tuesday, February 9, 2010

Feb-14ம் 140ம்

சிற்பங்களைப் பற்றிய
கவிதை எழுதச் சொன்னார்கள்.
உன்னை வரைந்து விட்டுப்போனான்
ஓவியன்!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உன்னைப்பற்றிய கவிதைகளை போட்டுடைத்தோம்,
சிதறி ஓடியது ஒரு கும்பல்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பின்நவீனத்துவ கவிதயொன்றை கேட்டாய்.
நீ என்றேன்.
ஏன் என்றாய்.
எந்தகாலத்தில் உன்னைப்
புரிந்துகொள்ள முடிந்தது!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நல்ல வேளை
தபூசங்கர் உன்னைப்பார்க்கவில்லை-பார்த்திருந்தால்
கவிதை எழுதுவதை மறந்துவிட்டு,
உன்னை காதலிக்க மட்டுமே செய்திருப்பார்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உலர்ந்த ஆடைகளை
எடுக்க வந்தவளை sight அடித்தேன்- என்னைத்
துவைத்து காயவைத்து விட்டு போனான்
உன் அண்ணன்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

சுருட்டு பிடித்தபடி அஜித்,
கேட்டார் அன்புமணி,
என் வாழ்க்கையயே சுருட்டியபடி நீ
கேட்பார் யாருமில்லையே!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

140 எழுத்திற்குள்
உன்னைப்பற்றி கவிதை எழுதவேண்டுமாம்.
I quit twitter!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கண்கள் மூடி கும்பிட்டபடி நீ
ஹ்ம்ம் அம்மனுக்கு ஏனிந்த
Proxy வேலை!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

ஒரு அம்மனே!
இன்னொரு
அம்மனை
தரிசிக்கச்
சென்றதே!
அடடே..
ஆச்சர்யகுறி!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

காதலித்துபார்...
உன்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும்
என்றார் வைரமுத்து.
காதலித்தேன்,
வட்டம் பெரிதாகியது,
ஒளியாக நீ!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

Thursday, December 24, 2009

விஜய் - எனக்காக இத செய்யுங்களேன்

விஜய், சுறா படத்துல இந்தப் பாட்ட சேர்த்துக்குங்க. ஆந்திராவுல கலக்கோ கலக்குன இந்தப் பாட்ட, சரியா திரையில கொண்டுவர முடியலைன்னு எல்லாரும் வருத்தப்படறாங்க. நீங்க ஆடுனா இந்தப் பாட்டு இன்னும் பட்டைய கெளப்பிரும். உங்கள விட்டா சிம்புதான் உண்டு, யாரு முதல்ல தமிழ்ல எடுத்தாலும் ரிங்க ரிங்கா தமிழ்நாட்டுக்கு ரிங் டோனா ஆயிரும். எவ்வளவோ பண்ணிட்டீங்க, இதச் செய்ய முடியாதா?



Stage Performaceல நம்ம இசையமைப்பாளர்கள் எல்லாம் சொதப்பும் போது தேவிஸ்ரீ பிரசாத் மட்டும் செமயா கலக்குவாரு. அநேகமா இந்த விசயத்துல DSPய ரொம்ப புடிக்கும். இதுல இளையராஜா ரொம்ப சுத்தம். நடுவால வர்ற வசனங்கள் எல்லாமே DSP. என்னா ஒரு Voice Modulation



Making of Ringa Ringa

Friday, December 11, 2009

முண்டாசுக் கவி

பல வருடமாச்சு எங்க தேசம் உனை மறந்து!
ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நீ என்ன கட்சியா
ஆரம்பித்தாய்?

பேசினாய் எழுதினாய்,
கரடியாய் கத்தினாய்,
தமிழென்றாய், சுதந்திரமென்றாய்,
சமஉரிமை என்றாய், ஜாதியும் இல்லையென்றாய்,
எவனுக்கு வேணும் உன் வார்த்தை,
இடுப்பு மச்சம் தெரியுதாம்
கிளம்புகிறோம் வெண்திரைக்கு.





உனக்கும் ஜாதிமுலாம் பூசிவிட்டோம்
மறைத்துக்கொள் உன் முகத்தை,
முண்டாசு எதற்கு இருக்கிறது?
அன்பென்றால் கொட்டுவது முரசில்லை பைத்தியக்காரா,
தலைமேலே இடியே விழுகிறது.

உனக்கு இன்று பிறந்தநாளாமே
யாருக்குத் தெரியும்
எதற்கு தெரிய வேண்டும்?
தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?
வாக்களித்தால் காசு கிடைக்கும்,
உனை வாழ்த்தினால் ஒரு சிங்கிள் டீ கிடைக்குமா?

அடைபட்டு போனோம் சிறுவட்டத்தில்
வேண்டாம் உனது கவிதைகள்
மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

உனது படைப்புகள் எல்லாம் வரலாற்றுப்
புத்தகத்தில் வருமென காத்திருப்பவர்கள்.
மனமேற்றி வாந்தியெடுத்தால் ஐந்து மதிப்பெண்ணுக்கு
மட்டுமே யோக்கியப்படும் உனது படைப்புகள்.

பாரதத்தில் பிறந்தாய்,
பாரதியாய் வாழ்ந்தாய்,
பாராமுகமாய் இருக்கிறாய்,
பத்திரமாய் மறக்கப்படுவாய்!

வாழ்க தமிழனும், தமிழும்!

Pic : Thanks http://www.flickr.com/photos/balu/

Monday, November 30, 2009

மகசூல் - 30-11-09

ஒரு சின்ன வேளை விசயமா 3 நாளைக்கு மட்டும் இந்தியா வந்திருந்தேங்க. பெங்களூருல இருந்து எங்க ஊருக்கு 4 மணிநேரத்துல போயிட்டோம். சாலை எல்லாம் அருமை. அமெரிக்காவுல இருக்கிற மாதிரி இருக்குங்க இந்த புது சாலை, ஒன்னும் வித்தியாசமே தெரியலீங்க. என்ன? மரம் எல்லாம் இல்லாம ரோடெல்லாம் மொட்டையா இருக்கு. அதுவுமில்லாம, மரமே சிக்காம எங்கப் பார்த்தாலும் ஊடுங்க. மழை பெய்யலைன்னா, எங்கப் பெய்யும்? வரேன்னு சொல்லிப்புட்டு வரமுடியல, அதனால ஈரோடு பதிவர்கள் எல்லாம் மன்னிச்சுங்கப்பா..

விண்ணைத் தாண்டி வருவாயா, படம் நியூயார்க்/நியூ ஜெர்சின்னு வளைச்சு வளைச்சு எடுத்தாங்க. படம் புடிக்க வந்தவங்க எங்க ஊட்ல இருந்து 1 மைல் தொலைவுலதான் தங்கி இருந்தாங்க. நான் யாரையும் பார்க்கப் போவலை. அந்த சனத்துல ஒருத்தர் மட்டும் எங்கூட 4 நாள் ஊர் சுத்தினாரு.

இந்தப் படத்துக்குப் பேரு வெச்சது ஒளிப்பதிவாளராம். பாட்டெல்லாம் கேட்டேன், ரொம்ப நாள் கழிச்சு ரகுமான் கலக்கி இருக்காரு, கெளதம் மேனன் ஆச்சே. படத்தோட பாட்டு டிசம்பர் 18ம் தேதி, லண்டன்ல வெளியாவுதாம். என்ன காரணமா லண்டன்ல வெளியிடறாங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.

சொந்தப் பேர்ல பதிவு/டிவிட்டர் எழுதறது எவ்வளவு தப்புன்னு இப்போதாங்க தெரியுது. ஒருத்தர வேலைய விட்டுத் தூக்க HR மக்கள் முடிவு பண்றாங்கன்னு வெச்சுக்குங்க, மொதல்ல performance சரியில்லீம்பாங்க, இப்போ? அவரு எங்கே எவ்ளோ ட்விட்டராரு, பதிவு போடறாருன்னு அவரு சொந்தப் பேரைப் போட்டு தேடிப்பார்த்துட்டு “ராசா, நீ வேலை பார்க்கிற லட்சணம் இதுதான், கெளம்பு’ன்னு சொல்றாங்களாம். நாமதான் பதிவு எழுதறது வேலையாவே வெச்சிருக்கோமே, அதுவும் பெரிய கெளரவம் சிவாஜி மாதிரி சொந்தப் பேர்ல வேற எழுதி வெச்சுறோம். மாட்டிக்கிறது சுலமாச்சே. இப்படியுமா HR மக்கள் வேலை பார்ப்பாங்க? இவுங்க எல்லாம் ரூம்ல ஏசி போட்டுத்தான் யோசிக்கிறாங்க..இனிமே சொந்தப் பேர்ல எழுதாதீங்கப்பூ.

வேட்டைக்காரன் - விளம்பரம் எல்லாம் பார்த்தேங்க. ரொம்ப சப்பையான விளம்பரங்கள். ரொம்பத் தெளிவா சன் டிவி செய்யுறாங்க. விஜய், பார்த்து சூதானமா இருந்துக்கோங்க. கவுக்க பெரிய கும்பலே இருக்கு. கோடிய குடுத்து இடம் புடிக்கத் தெரிஞ்சவங்களுக்கு, கோடிய குடுத்து உங்க இடத்தை காலி பண்ணிறப் போறாங்க. எதுக்கும் ஒரு மஞ்சத் துண்ட போர்த்தி பிரச்சினைய முடிச்சுக்குங்க.

Wednesday, November 25, 2009

26/11

நம்ம மக்களுக்கு மறதி ஜாஸ்திங்க..எதுக்கும் இருக்கட்டுமே.




மேலே ஒரு நிகழ்படம் இருக்குங்க. பார்க்க முடியாதவங்க இந்த இடுகையில பாருங்க.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத இந்த மாதிரியான குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறவங்க இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க. இந்துத் தீவிராவாதிங்க பண்றது சரியில்லைன்னு இந்த வன்முறை சரின்னு சொன்னவங்க நிறைய பார்த்திருக்கேன். இரண்டு பேரும் பண்றது தப்புதான். இதுல ’A’ கிரேடு ’பி’ கிரேடு எல்லாம் இல்லீங்க. சுஜாதா எழுதின மாதிரி “தப்பு என்ன பனியன் சைஸா.. தப்பு தப்புதான்”..

அகில இந்திய முஸ்லிம் கட்சிக்கு பாராட்டுக்கள். அப்சல் கசாப் செத்தா இந்தியாவுல புதைக்கவோ, எரிக்கவோ கூடாது சொல்லி இருக்காங்க. இந்த மாதிரி 4 பேர் செய்யுறதால எத்தனை எத்தனை அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படறாங்க??? இந்திய இனிமேலாவது முழிச்சுக்கலாம். அப்சல் கசாப் வெச்சு இந்தியா உலக அளவுல ஒரு மயித்தையும் புடுக்கப்போறதில்லை.. அது மட்டும் நிச்சயம்..

Thursday, November 5, 2009

காதலியைத் தானம் செய்த மணவறை

பத்து விரல்களால் அவளைக் கற்பழிக்கிறேன்,
கீபோர்டில் என் கைகள், மானிட்டரில் அவள்.
கற்புநெறி மறந்தவிட்டிருந்தன
இணைய விடுதிகள்.


அரசியல்வாதிகளின் புரட்டு,
அதிகாரிகளின் அலட்சியம்,
எல்லாம் சேர்ந்த
சமூகத்தின் மீது கோவம்
அனானியாய் திட்டிவிட்டேன்
ஒரு பதிவில்
கோவம் தணிந்திருந்தது.

பார்த்த இடமெல்லாம் காமம்
பார்ப்பதெல்லாம் காமம்
வெந்துத் தணிந்தது காடு
வாழ்க்கை மீது பயம் வந்திருந்தது.

நண்பர்களைத் தொலைத்த தேசம்,
காதலியைத் தானம் செய்த மணவறை,
சத்தியம் செய்த தலைகள்,
மெய் மறுத்த விழிகள்,
எல்லாம் ஞாபகம் வருவதில்லை
மீண்டும் தவறிழைக்கும்போது.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)