இந்தப் படத்துல இருக்கிற பெரிய லாடு லபக்குத்தான். யாருன்னு தெரியலைன்னா நமக்கு கேவலம்..தெரியாட்டின்னா தெரிஞ்சுக்குங்க. ஏன்னா நம்மோட பாதி நேரத்தை கடத்துற வித்தைய கண்டுபுடிச்சவரு இவருதான்.
உச்சா, மூச்சா- இது எல்லாம்தான் பதிவுல எழுதுறதுக்கு சுலபமான வார்த்தைங்க. வேற எல்லாம் எழுதினா ஆபாசம், கிளர்ச்சி, அதிகாரா கோஷமின்னுருவாங்க.
உச்சா: கல்லூரியில 3 மணிநேரம் பரிட்சை இருக்கும். அதுவும் கோயமுத்தூருல டிசம்பர் மாச குளுருக்கு 3 மணி நேரம் அடக்கிக்கிட்டு பரிட்சை எழுதறது எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா? பரிட்சைக்கு நடுவாலயும் எந்திருச்சு போவ முடியாது? பிட் எடுத்துட்டு வந்துருவோமாம்? இப்போ மட்டும் இல்லாமையா இருக்கோம்?. பரிட்சை முடிச்சுட்டு வெளியே வரும்போது "பரிட்சை எப்படிடா மாப்ளே?"ன்னு கேட்கிற பசங்களுக்கு பதில் கூட சொல்லாம ஒரே ஒட்டமா ஓடிப்போயி 'போவோம்'.
"மாப்ளே! இப்படி 3 மணி நேரம் அடக்கிக்கிட்டு, அப்புறம் போற சொகம், **க** அடிக்கிறத விட சுகம்டா" அப்படின்னு சொன்னது இன்னமும் ஞாபகத்துக்கு இருக்குங்க.
ஒரு தடவை ஒருத்தரு மூணு மணி நேரம் அடக்கிக்கிட்டு இருந்து 'போயி'ட்டு இருந்தாரு. இன்னொருத்தன் வந்தான், வந்தவன் சும்மா இல்லாம "மாப்ளே மாப்ளே, இங்கே பாருடா"ன்னு பொறத்திக்காண்ட தட்டி தட்டி ஒரே தொந்தரவு வேற. பார்த்தாரு 'அடிச்சுட்டு இருந்தவரு' நிறுத்தவும் முடியல, இவன் தொல்லையும் தாங்க முடியல. ஒரு கையால **அ புடிச்சுகிட்டு, இன்னொரு கையால மூச்சாவ புடிச்சு, பொறத்திக்காண்ட நோண்டுனவன் மூஞ்சியில சலீர்னு அடிச்சாரு. அப்புறம் அவன் ரொம்பநாள் அவன்கிட்ட பேசவே இல்லே.
ஒருத்தருக்கு வந்தாமட்டும் கூட இருக்கிற எல்லாருக்கும் வந்துருதே ஏன்?
சின்ன வயசில எலிமெண்டரி பள்ளிகூடத்துல விதவிதமா வாய்க்கா எல்லாம் போட்டு வுடுவாங்க. விவரம் தெரியாத வயசு.
போன வருசம் உச்சா போவையில இன்னொருத்தன் கூடவே வந்தான். அமெரிக்காவுலதான் தெரியுங்களே, உச்சா போறதுக்கும் ஆய் போறதுக்கு ஒரே ரூம்புதான், சின்னதா சின்னதா தடுப்பு மட்டும் உள்ளே இருக்கும். சோத்தாங்கை பக்கம் இருக்குறாப்ல. வந்தவன் சும்மா இல்லாம மேனஜரை மேல இருந்த கோவத்தை 'போயி'கிட்டே என்கிட்ட சொல்லிட்டு வந்தான். கெட்ட வார்த்தை எல்லாம் போட்டு திட்டு திட்டுன்னு திட்டிட்கிட்டே இருந்தான். ஒரு அஞ்சு நிமுசம் வுடாம திட்டிப்புட்டான். அப்புறம் நிறுத்திப்புட்டான். சாயங்காலம் ஒரு மீட்டிங் வெச்சாரு. நாசுக்கா சொன்னாரு மானேஜரு "ஒன்னுக்கு போனோம்னா.. போறதுக்கு மட்டும் போங்க.. கண்டமேனிக்கு பேசவேணாம்.. உள்ளுக்குள்ள உக்காந்து போயிட்டு.. இருப்பாங்க. அவுங்களுக்கும் கேட்கும்"னாரு. அப்போதான் அவனுக்கு வெளங்குச்சு, அவன் திட்டிகிட்டு இருக்கும் போது, அவரு உள்ளாரு ஒரு தடுப்புக்குள்ள உக்காந்தகிட்டு, போயிட்டு இருந்திருக்காரு. சாக்கிரதை மக்களே அப்புரைசல் நேரத்துல ஆப்பு வெச்சிரப் போறாங்க.
நமக்கு ரொம்ப நாடக பைத்தியங்க. எங்க ஊர்லயும்தான் நாடகம் போடுவாங்க. கிட்டதட்ட ஒரு காபரே ரேஞ்சுக்கு இருக்கும். விடலைப் பசங்க தகிரியமா மேடையில நடிகைங்கள கட்டிப் புடிக்கிற கருமம் எல்லாம் எங்க ஊர்லதான். ஆனாலும் நமக்கு வானொலியில் போடுற நாடகங்கள் ரொம்ப புடிக்கும். அப்புறம் DDல வந்த பஞ்சு பட்டு பீதாம்பரம், Flight 172 இதெல்லாம் நாடக உலகத்துக்கு நம்மள லைட்டா இழுத்துச்சு(பார்க்க மட்டும்தாங்க). சரி என்னாத்துக்கு நம்ம வரலாறு.. நேரா மேட்டருக்கு வரலாமே.
மூணு வாரத்துக்கு முன்னாடி இந்த ஊர்ல(இந்த ஊர்லன்னா 50 மைல் தள்ளி, நாக்குத் தள்ள... தள்ள கார் ஓட்டிட்டு போவனும்) Stage Friendsன்னு ஒரு குழு நாடகம் போட்டாங்க. இந்த ஊர்ல என்ன கூட்டம் வரப்போவுதுன்னு போனா திருவிழாவாட்டம் இருந்துச்சுங்க கூட்டம். இந்த நாடகம் போட்டவங்களைப் பத்தி எங்க சொந்தக்காரர் சொன்னது ஒரு வருசத்துக்கு முன்னாடி சொன்னாரு "தமிழுக்கு பாடுபடற சில மக்கள் இருக்காங்க. அவுங்க நாடகம் எல்லாம் போடுவாங்க"ன்னு சொன்னாரு.
கிரேஸி மோகனுடைய நாடகத்துல இவுங்க நடிச்சாங்க. Tenant Commandments. நாடகம் ஆரம்பமே அசத்தல். அதிலேயும் மோகன்னு ஒருத்தர் பின்னி பெடலெடுத்தாரு. அங்கே நிமிந்து உக்காந்தவங்க, பின்னாடி இருக்கவங்க குனிஞ்சு உக்காருடா பனைமரம்னு சொன்னப்புறம்தான் இறங்கினேன். வழக்கமான நாடகத்துல வர்ற இசை மட்டும் மிஸ்ஸிங்(BGM). மத்தபடி அருமை. நாடகத்தோட ஹைலைட்டே ஒரு வசனம் கூட தப்பில்லாம பிசிறு தட்டாம நடிச்சதுதான். யாரும் திரைக்குப் பின்னாடி திரும்பி பார்த்து வசனம் மறந்துருச்சுன்னு சொல்லல. அவ்ளோ ஒத்திகைப் பார்த்திருக்காங்கன்னு தெரியுது. ஒருத்தர் கூட ஒரு தப்பும் பண்ணாம நாடகம் நடிச்சது அவுங்களோட உழைப்பை காட்டுது. அதிலேயும் குரு, சாமியாரா நடிச்ச அம்மா, நாரதமுனி வேசத்துல நடிச்சவரு, வீட்டு முதலாளி(ஆர் எஸ் மனோகரை ஞாபகப் படுத்தாரு) சீனிவாசன், வாடகைக்கு வர்ற குடும்பத்தலைவரு ரமணி , கனீர் குரல்ல நடிச்ச வீடு புரோக்கர் எல்லாரும் பட்டைய கெளப்பிட்டாங்க. நாடகத்துக்காக மொட்டை போடுறவரோட தியாகத்தை என்னான்னு சொல்ல.. அவ்ளோ dedication.
மோஹன்கிறவரு ஒரு வசனம் பேசினது செம நச். அதுவும் கோவை நெல்லை slangல அடுத்தடுத்து பேசின வசனம் எந்தக்காலத்துக்கும் மறக்காது. கொஞ்சம் Current topic சேர்த்துட்டா செமையா இருக்கும். Intervalல பஜ்ஜி, போண்டா, புதினா சட்னின்னு பழக்கப்பட்ட நமக்கு 2 மணிநேரம் ஒரே இடத்துல உக்காந்து கொஞ்சம் கஷ்டம் கூட. ஒரு இடைவேளை தரலாம். பொடிப்பசங்க தொல்லைதான் கொஞ்சம் கஷ்டம். அவுங்கள பார்த்துக்கிறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணினா இன்னும் செளகரியமா இருக்கும்.
ஊரா ஊரா போயி நாடகம் போடுறாங்க. கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு வர்ற கலைகள்ல நாடகமும் ஒன்னு (TV Serial எல்லாம் நாடகம்னா ..தா நாடகம் அழிஞ்சே போவலாம்டா). பிராமணர்களோட ராஜ்ஜியம் நாடகம்னு சொல்றது எல்லாம் சென்னை மக்களுக்குத்தான். எங்க ஊர்ல வருசா வருசா நாடகம் போடுவாங்க. இயக்குனர்க்கு 350ரூபாய் குடுப்பாங்க. 2 குயர் நோட்டுல வசனம் எழுத வேண்டியது அவரோட முதல் கடமை, கதை செம மொக்கையாத்தான் இருக்கும். ஆனா நேர்ல பார்கும்போது அது வேற மாதிரி போவும்.
எப்படியோ அமெரிக்காவோ, முனியப்பன் கோவிலோ அவுங்க அவுங்க ரேஞ்சுக்கு நாடகம் போட்டாத்தான் இந்தக் கலை தப்பிக்கும், அப்படி தப்பிக்க வெக்கிற Stage Friendsமக்களுக்கு என்னோட நன்றி. அமெரிக்காவுல நாடகம் போடுறது ரொம்ப சுலபம் இல்லே. 30 மைலாவது ஓட்டிட்டி போயி குளுரோ, வெயிலோ ஒரு இடத்துல சேர்ந்து ஒத்திகை பார்த்து.. விளம்பரம் பண்ணி.. டிக்கெட் வித்து..கூட்டம் வந்து... மேடையேறி ஒழுங்கா வசனம் மறக்காம நடிச்சு.. இத்தனை விசயத்தையும் சரியாப் பண்றாங்க இவுங்க, அதுவும் வெற்றிகரமா. நாடகம் மூலம் வர்ற பணத்தை இலங்கை வாழ் தமிழருக்கு தந்திருக்காங்க. இப்படி பல சேவைகள் இவுங்க செய்யறாங்க. ஒரு கலையா மட்டும் நினைச்சு இதை சிறப்பா செய்யறாங்கன்னு நினைக்கும் போதே இவுங்கள மாதிரி ஒன்னு இருந்தாவேப் போதும் நாடகம் செழிக்கும் நினைச்சுகிட்டேன்.
ரொம்ப நாள் ஆச்சுங்க குவிஜு வெச்சு. மக்கள் எல்லாமே வேலை இருந்தாப்போதும்னு நினைக்கிற நிலைமை. அப்பவாச்சும் சேத்துவைப்பாங்க.
இந்த முறை, நாம பலரும் தெனமும் இல்லாட்டி ஒரு முறையாவது சந்திக்க/ அனுபவிக்க/பேசப்படற சங்கதிதாங்க இந்த முறை குவிஜூல முதல் 3 கேள்விங்க, மீதியெல்லாம் வழக்கம்போலதாங்க. சரிங்க நேரா கேள்விகளை பார்ப்போமா?
1) SWITCH ன்னு கேள்விப்பட்டிருப்போம். ஆனா இது இந்திய IT துறைகள்ல ஒரு acronym இருக்கு. அது(?) என்ன? Ans: Satyam, Wipro. Infosys, TCS, CTS, HCL
2) அப்பா ஒரு முஸ்லிம், அம்மா நாத்திகவாதி. பையன் கிறிஸ்துவன். யாருங்க அந்தப் பையன் அது? Ans: Barack Obama
3) இவர் இசையமைச்சதை பல முறை கேட்டிருப்போம். அதுதாங்க சன் தொலைக்காட்சியில ஒரு மணிக்கு ஒருதபா போடுவாங்களே "நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ்மாலை"ன்னு. சன் டிவியின் அறிமுக(Singature) இசையை கோர்த்தவர் யாரு? Ans: 'நம்மவர்'Mahesh
4) இடது சாரி கொள்கைகளை கொண்டவர். மாணவரா இருந்தப்பவே புகழடைஞ்சாரு. இவரைத் தீவிரவாதின்னு சொன்னாங்க. கொல்லப்பட்டார். மாணவ்ர்களுக்காக ஒரு இயக்கம் கூட ஆரம்பிச்சாரு. இவரை அடித்தளமா வெச்சு இந்தி, தமிழ்னு திரைப்படம் கூட வந்திருக்கு. நடிச்சவங்க எல்லாம் பெரிய நடிகர்கள். அந்த மாணவன் யாரு? Ans: George Reddy- http://en.wikipedia.org/wiki/George_Reddy
5) இவர் ஒரு நடிகர், ஒரு வருசத்துல அதிகமான படங்களை நடிச்சவர்னு பேரிருக்கு. ஈரோட்டுல, புரோட்டா கடையில வேலை பார்த்தவர். அம்மா, அப்பா இல்லாதவர். நமக்கு எல்லாம் தெரிஞ்ச அந்த நடிகர் யாரு?
ஆஸ்திரேலியா அவுஸ்திரேலியாவுல இந்தியர்களுக்கு எல்லாம் பிரச்சினையாம். அடிக்கிறாங்களாம். ஆமாம் தன் மாநிலத்தை தாண்டின எல்லாத் தமிழனுக்கு நடக்கிறதுதானே. 80 கிமீ தாண்டி இருக்குற பெங்களூருலயே சாத்து சாத்துன்னு சாத்துறாங்க. அங்கே நடக்குறது தெரிஞ்ச விசயம்தான், இன்னிக்கு தண்ணிக்கு வெளியே வந்திருக்கு. இங்கிலாந்துல சில்பாவுக்கு ஆனப் பொறவு தானே தெரிஞ்சது.
தனித்தன்மையை இழந்துவரும் தமிழ்மணம் தமிழ்மணம்-இது ஒரு சுகந்தம் மாதிரி இருந்துச்சுங்க. அலுவலவத்துக்கு போனோமா தமிழ்மணத்தை திறந்தோமான்னு காலத்தைத் தள்ளிட்டு இருந்தோம். சாப்பாடு மறந்து தமிழ்மணம் பார்த்த காலம் எல்லாம் உண்டு. தமிழ்மணத்த ஒரு தொழில்நுட்பம் சார்ந்த இடமா இல்லாம உணர்வுபூர்வமாத்தான் இன்னிக்கும் பார்க்குறேன். காரணம், அதனால கிடைச்ச உறவுகள். தமிழிஸை பார்த்து சூடு போட்டுகிட்டே போறாங்க. வேணாங்க மக்களே, தமிழ்மணம் தமிழ்மணமாவே இருக்கட்டும்.
கந்தசாமி: எனக்கு என்னமோ கந்தசாமி பாட்டு எல்லாம் புடிச்சது. 3 நாள் விடுமுறையில கந்தசாமி, முத்திரை, தோரணை பாட்டு மட்டுமே காருல கேட்கிட்டே போனோம், 1000 மைலுதூரம். என்ன ஸ்பானிஸ் கொஞ்சம் தூக்கலா இருக்கு. மெக்சிகோன்னு முடிவு பண்ணியாச்சி இல்லே.. ரஜினி மன்னன்ல பாடின மாதிரி இல்லாம கொஞ்சம் சுமார் ரகம், விக்ரம். இத்தோடு நிறுத்திக்குங்க சீயான் சார், வேணாம். அழுதுறுவோம். "கந்தசாமிதான் டாப்பு" பாட்டு செம டாப்பு. கட்டுடைத்தல்ன்னு சொல்ற ரகம். பல்லவி, சரணம்னு இல்லாம சும்மா கலக்கலா ஒரு பாட்டு.
இன்னொரு மேட்டரையும் இங்கே சொல்லிப்புடுறேன். வேட்டைக்காரன் பாட்டு ரெண்டு நெட்டுல வந்திருச்சு. கேட்காதவங்க கீழே படமா இருக்கு கேட்டுக்கங்க. ஒரு தடவை டேய்'னு சொன்னதுக்கு மக்கள் கொதிச்சீங்கன்னு.. ஒரு நூறு முறையாவது டேய்'னு டோய்'னு சொல்றாப்ல.அதுவுமில்லாம எல்லா வரிகளும் "டா"வுலதான் முடியுது. சரி, நாம தான் கமல் சொல்றாப்ல "டேய்.. டோய்" குடும்பமாச்சே..
எம்ஜிஆர், ரஜினிக்கு அப்புறம் இப்படி நம்மள பழிவாங்குறாரு விஜய். இந்தப் பாட்டக் கேட்டப்புறம் விஜய் ஆண்டனி மேல மரியாதையும் போயிருச்சுங்க. அட டோய்ன்னு சொல்றதுக்கு இல்லீங்க. பாட்டையே கேட்க முடியல. மகா மட்டமா இருக்கு பாட்டுங்க.
வெற்றி! எதிரிகள் ஆர்ப்பரித்தார்கள், கொண்டாடுகிறார்கள், இனி என்ன செய்யும் தமிழனம்?
உரிமை கேட்டதற்காக உயிரிழப்புகள், நாடு விட்டு நாடு சென்றும், அனாதைகளாக்கப்பட்டும், உணர்விழந்தவர்களாகவும், ஏன் மொழியையும் இழந்தவர்களாகவும்.
இனி உயிர் இழப்பு இல்லை, கொடுமை, சித்திரவதை எல்லாம் இல்லை, சம்பாதித்த சொத்து, நகை நட்டு ஏதுமில்லை.. ஆனாலும் நம்பிக்கை உண்டு.. வை நண்பா- உன் மீது நம்பிக்கை வை.
உனக்காக போராட தலைவன் இல்லை, அப்படியே இருந்தாலும் - இனி இரண்டு தலைமுறைக்கு ஏதும் செய்ய இயலாது, நயவஞ்சக கூட்டம் அப்படி. போராட்டத்தை மனதில் வை..
இது உழைப்பதற்கான நேரம்.. அடிமையாக்க ஒரு அரசும், இனமும் காத்திருக்கிறது, உழை.. உழைத்துக்காட்டு. பழையதை மற.. புது வேகம் கொள், நீயே இனி தலைவன்.. மற்றவர்களை உன் சொல் கேட்க வை.. உன்னை வெல்ல யாருமில்லை.. ஒற்றுமை பழகு. இல்லாவிடின் - துண்டாட நினைக்கும் அரக்கர்கள் உன்னை வெல்வார்கள்.
அடிமையாக்க ஓநாய் கும்பல் காத்திருக்கு அடிமையாய் மட்டும் இராதே..
மேலே இருக்கிற கவிதை ஒரு உணர்வு வேகத்துல விழுந்ததுங்க. இனி என்ன செய்யலாம்?
எந்தக் களவாணிகளையும் ஆபத்து நேரத்துல கூப்பிட வேண்டாம். ஒருத்தரும் வரப் போறதில்லை.
மகிந்தா, அவருக்கு தேவையான உயிர்களை வாங்கிட்டாரு. இனி சம உரிமை தருவாருங்கிற நம்பிக்கை எனக்கில்லை. தந்தா சந்தோசம். இல்லாட்டா அடிமையாகும் தமிழனம்.
இதுக்கு மறுபடியும் போராட்டம் வருமா? வராது. என் ஜென்மத்துல வராது. காரணம் அதற்கான கட்டமைப்பு இப்போ இல்லை. அதை அமைக்க இன்னும் இரண்டு தலைமுறையாவது ஆகும்.
ரணம் பட்ட இனத்துக்கு இப்போ தேவை அடிப்படை வசதி. அதாவது உடுத்த உடை, இருக்க இடம், திங்க சோறு. இதுவே இந்த ஜென்மத்தைத் தாண்டிரும்.
சிங்களவர்களுக்கு இனி இனவெறி அதிகமாகாம இருக்க அரசு பார்த்துக்கனும். ஏன்னா மக்கள் மட்டுமே மக்களை காப்பாத்த முடியும்.
உலக அரங்குல இது ஒரு உதாரணம். தீவிரவாதம் அழிக்கப் படலாம், உரிமைக்குரல் நசுக்கப்படலாமா? உயிர்கள் இரு பக்கமும் போயிருக்கு. கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான். ஞாபகம் எல்லாருக்கும் இருக்கட்டும், மகிந்தா உங்களுக்கும்தான்.
பிரபாகரனுக்கு ஏற்பட்ட வலி , ஒரு இயக்கம் உண்டாச்சு. அந்த வலி இப்போ பல்லாயிரம் மக்களுக்கு இருக்கு. ஆலமரம் பல விதைகளை போட்டிருக்கு. கத்தி பல இடங்களை இனி கூர்பார்க்கப்படும். அதை எல்லாம் நசுக்க முடியாது..
இருந்த இடத்துல மக்கள் போய் மறுபடியும் வாழ் ஆரம்பித்தால் சுகம். உழைக்க தமிழினம் காத்திருக்கும். அவர்கள் இடத்துல சிங்களவர்கள் வந்தால்..கஷ்டம். தமிழினம் கத்தியத்தான் நம்ப வேண்டி இருக்கும்.
நம்மினத்துக்கு தேவை நம்பிக்கை. அதைக்குடுங்க. தேத்துங்க, சாய்ஞ்சுக்க தோள் குடுங்க. முடிஞ்ச வரைக்கும் பொருளாதார உதவிகள்தான் மக்களுக்குத் தேவை. அதை செய்வோம்.
வெளிநாட்டுல இருக்கிற மக்களே. சொந்த பந்தத்தைப் பார்க்க வாங்க. செலவு ஆகும்தான். இதுக்கு கூட செலவு செய்யாம வேறெதுக்கு செலவு செய்யப்போறீங்க?
வாழ்வாதாரம் ஆட்டம் கண்டிருக்கு, மனதளவுல உடைஞ்ச மக்களுக்கு நல்லதா நாலு வார்த்தை தொலைபேசியிலாவது பேசுங்க.
தமிழினத்துக்கு வாய்ப்பு, உரிமை இரண்டு மட்டும் இப்போதைக்கு இருந்தாப் போதும். தமிழினம் செழித்து வளரும். காரணம் தமிழர்கள் உழைக்கப் பிறந்தவர்கள்.. முன்னேறுவாங்க.
We thank you for your speech on the White House lawn yesterday. It is important to acknowledge that bloodbath (as the U.N. calls it) is taking place.
The carnage in Sri Lanka goes on. The government forces continue to shell and bomb civilians in what the Sri Lankan government calls the “safe zone.” Hundreds (nobody knows yet just how many) were killed in the “Mother’s Day Massacre,” said the U.N., but medical sources in the “safe zone” say the number was in the thousands. A month ago the U.N. said that 6500 civilians had been killed by the government in the prior 90 days, with another 10,000 injured.
That this is just the latest phase of the Sri Lankan government’s sixty-one year campaign of ethnic cleansing of the Sri Lankan Tamils is obvious to us.
During your presidential campaign—when moderator Tom Brokaw asked during the debate, for instance--you seemed to promise that the only compelling reason for the U.S. to intervene militarily in a foreign conflict (with no security threat to the U.S.) was genocide. Tamils everywhere in the world heard you and believed you.
When you appointed Samantha Power and Susan Rice—both of them familiar with the modern problem of genocide—to positions of visibility and influence, our sprits soared.
Now, we Tamils are dismayed and disappointed that genocide is going on in Sri Lanka and ask why you are doing nothing about it.
Tamils have written to us here at Tamils for Obama not only asking the above question but also suggesting three ways that the U.S. can take effective steps that are short of American military actions. These are:
1. Use American diplomatic influence to isolate Sri Lanka internationally, cutting Sri Lanka off from its arms, trade, and financial support.
2. Persuade the U.N. or regional good actors to serve as peace keepers (or peace bringers), while the U.S. provides moral and logistical support.
3. Remove the “Terrorist” stigma that the U.S. glued to the Tamil Tigers. This was a policy of the Clinton and Bush administrations which gave the Sri Lankan government a moral legitimacy in carrying out the Sri Lankan campaign of genocide. We Tamils consider the Tigers a legitimate resistance group; armed resistance (i.e. the Tigers) did not arise until 1983, when the government’s ant-Tamil ethnic cleansing program was already 35 years old.
Ms. Rice “swore to myself that if I ever faced [mass killings] again, I would come down on the side of dramatic action, going down in flames if that was required,” as she was quoted in The Atlantic Monthly in 2001. We have to agree. Dramatic action is required, and the mass killing in Sri Lanka justifies it.