Thursday, January 23, 2020

WhatsApp DP - சிறுகதை

காலை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பார்ட்மெண்டில், வெவ்வேறு ப்ளாக்கில் வசிப்பவர்கள், ஒரே அலுவலகத்தில் பணி புரிபவர்கள், முப்பதுகளின் மத்தியில் இருப்பவர்கள். இருவருக்கும் திருமணமாகி 2 பையன்கள் உண்டு. அடிக்கடி குடும்ப சகிதமாக சந்தித்துக்கொள்வோம். பையன்கள் எல்லாம் ஒரே வயதாக இருந்த காரணத்தினால், Potluck அடிக்கடி நடக்கும். வாரயிறுதியும், தீபாவளி, பொங்கல் மாதிரியான கொண்டாட்டங்கள் எல்லாம் இப்படியே ஓடும்.



சுந்தரி WhatsApp DPயை  அடிக்கடி மாற்றுவது வழக்கமாக வைத்திருந்தாள். புதுப் புடவை உடுத்தினால் அதைப் படமெடுத்து அதை WhatsApp DPயாக சில நாட்கள் வைத்திருப்பாள், சில நாட்கள் பூக்கள் மட்டும் வைத்திருப்பாள். இப்படியாக இருந்த அவளது WhatsApp DPக்கள், ஒரு மாதத்திற்கு முன்பு வேறு
பரிமாணம் எடுக்க ஆரம்பித்தது. Private Chatல் குறைந்த பட்சம் 30 நிமிடங்ளாக தினமும் எதையாவது Chat செய்து கொள்வோம். அப்படித்தான் WhatsApp DPயை கவனிக்க ஆரம்பித்தேன். திடீரென சோகமாக இருக்கும் குழந்தை படம் வைத்திருப்பாள். அன்று அவள் சோகமாகத்தான் இருப்பாள். ஒரு நாள் சம்பந்தமே இல்லாமல் முள் படம் வைத்திருப்பாள், ஒரு நாள் கல்யாண மோதிர படம் வைத்திருப்பாள். ஆனால் அன்று அவளது கல்யாண நாளாக இருக்காது. ஒரு நாள் புன்னகை மன்னன் ரேவதி படம் வைத்திருந்தாள், ஒரு நாள் காதல் கோட்டை தேவையாணி படம் வைத்திருந்தாள்.


ப்படியாக WhatsApp DPயிலேயே சுவாரஸ்யம் கூட்டிக்கொண்டே சென்றாள். அவள் WhatsApp DP மூலம் எழுதும் கதை மீது பித்துப் பிடித்துப்போனது எனக்கு..நேரடியாக ஒரு நாள் அவளிடம் கேட்டே விட்டேன். அதற்கு சுந்தரியோ "போடீ, நானே வேலை பொழப்பு இல்லாம மாத்திட்டு இருக்கேன், நீ பெருசா கேட்க வந்துட்டே, போய் வேலையைப் பாரு" என்று நகர்ந்து விட்டாள்.  ஆனாலும் எனக்கு என்னமோ ஒரு எண்ணம். அதை குரூர புத்தி என்றும் சொல்லலாம். ஒரு நாள் அந்த குரூர புத்தி தோன்றியது. அவளது மொபைலைத் திருடி WhatsApp படித்தால் என்ன என்று தோன்றியது. அன்று முழுவதும் எனக்கு வேலையே ஓடவில்லை. அவளது Lock Patternஐ கண்டுபிடிப்பது முதல் வேலையாக இருந்தது,  ஒரு நாள் அவளது சீட்டிற்கு பின்னாடி உட்கார்ந்தேன். என்ன chat செய்கிறாள் என்று எட்டி பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு முறை Unlock செய்யும் பொழுது கண்டு பிடித்துவிட்டேன். சரி, இப்போ அவளது மொபைல் மட்டும் கிடைத்தால் போதும், அவளது WhatsApp எல்லாம் படித்துவிடலாம். என்னவாகவோ இருக்கட்டும், ஆனால் படம் மாற்றுவது மட்டும் என்னவென்று தெரிந்துகொண்டால் போதும்.

ப்படியாகவே இரு வாரம் சென்றது. சனிக்கிழமை காலை ஒரு நாள் வீட்டிற்கு வந்தாள், எதையோ பேசிக்கொண்டிருந்தவள், அவளது மொபைலை ஹாலிலிருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு சமையலறைக்கு வந்தாள். இதுதான் சமயம் என்று அவள் சமையல் அறையில் இருக்கையிலேயே வெளிவே வந்து சட்டென்று அவளது மொபைலை ஆஃப் செய்து சோபாவின் அடியில் சொருகி வைத்துவிட்டு பிறகு சமையலறைக்குச் சென்றேன்.மிகவும் படபடப்பாக இருந்தது.  படபடப்பை காட்டிக்கொள்ளாமலே வழக்கம் போல பேச ஆரம்பித்தேன்..
"சரி, நான் கிளம்புறேன். துவைக்கனும், அப்புறமா வீட்டுக்கு வா" என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தவள், "என் ஃபோனை பார்த்தியா? " என்று கேட்டாள்.

"நீ ஃபோனை கொண்டு வந்தியா? நான் பார்க்கவே இல்லையே, வீட்டுல வெச்சிட்டு வந்திருப்பே.. எதுக்கும் வீட்டுக்குப் போய் பார்த்துட்டு சொல்லு" என்றேன்.

டபடப்பாக நடந்து போனாள் சுந்தரி. நானும் படபடப்பாக ஃபோனை எடுத்து அவளது On செய்து, pattern lock போட்டு, AeroPlane மோடை ஆன் செய்தேன். WhatsApp போனேன். நேற்று அவள் இதயம் ஹீரா படம் வைத்திருந்தாள். அவளது Chat முழுவதையும் Scroll செய்ய ஆரம்பித்தேன். இதயம் முரளி படம் பார்த்ததும் சட்டென அந்த Chatஐ Open செய்தேன்.எனக்கோ விரல்கள் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. வாசலுக்கு வந்து வராண்டாவை பார்த்தேன், அநேகமாக சுந்தரி வீட்டில் ஃபோனைத் தேடிக்கொண்டிருக்கலாம். இரண்டும் நிமிடத்தில் படிக்க முடியுமா எனப் பார்த்தேன். பெரிய பெரிய Chatகளாக இருந்தது. வராண்டாவில்  திரும்பி என் அப்பார்ட்மெண்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தாள் சுந்தரி. "போச்சு.. போச்சு.. மாட்டிக்கப் போறோம்" என வாசற் கதவைச் சாத்தி பூட்டிவிட்டு வேகமாக சமையலறைக்கு வந்து அந்த Chatஐ scroll செய்து செய்து Photoக்கள் எடுத்தேன்.  30 விநாடிகளில் சுந்தரி வந்துவிடுவாள். அந்த Phone numberஐயும் photo எடுத்தேன்.  காலிங் பெல் அடித்தது. சட்டென அவளது ஃபோனை ஆஃப் செய்து ஹாலின் டிவிக்கு முன்பு வைத்தேன். கதவைத் திறந்தேன்.

'என்னாச்சு கிடைச்சதா?'

"இல்லை, இங்கேதான் கொண்டு வந்தேன், ஞாபகமிருக்கு, இப்போ ஃபோன் பண்ணினால் Switched Off அப்படின்னு வருது"

"அப்படியா இரு" என்று சமையலறைக்கு வந்து எனது ஃபோனை எடுத்து அவளது எண்ணுக்கு அழைத்தேன்,  Switched Off என்று வந்தது. வராதா பின்னே, நாந்தானே ஆஃப் செய்து வைத்தேன்..

'ஆமா எங்கே வெச்சே, ஞாபகமிருக்கா?'

'ஹால் சோஃபா டேபில் மேலதான் வெச்ச ஞாபகம்'

'வெச்சா எங்கே போயிரும்' என்று தேடுவதைப் போல நானும் பாவலா காட்ட ஆரம்பிச்சேன்.

தேடிக்கொண்டே வந்தவள் டிவிக்கு முன்னாடி இருந்த ஃபோனைப் பார்த்ததும் . "அட இங்க பாரு, டிவிக்கு முன்னாடி வெச்சிருக்கேன். பேட்டரி காலி போல, அதான்  Switched Off அப்படின்னு வந்திருக்கு. 10 நிமிசம், கலக்கிருச்சு போ" என்று சொல்லி கிளம்பியவளை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்து அந்த போட்டோக்களை பார்த்தேன்.

காதல் காதல்  காதல் .. அத்தனை Messageகளிலும் காதல் சொட்ட சொட்ட பேசியிருக்கிறார்கள். அடிப்பாவி சுந்தரி நீயா இப்படி? இத்தனைக் காதலா உனக்குள்ள இருக்கு? காதல்காரிடீ என்று மனசுக்குள் நினைத்தேன். இப்படியெல்லாம் கூட சுந்தரிக்கு பேச வருமா என ஆச்சர்யப்பட்டேன். சரி, யாரு இவளுடைய ஆள் என்று பார்த்தேன். John USA என்று save செய்து வைத்திருந்தாள். ஆனால் +91 என்று ஆரம்பித்த எண் அது. அடிப்பாவி என்னா தில்லாலங்கடிடீ என்று நினைத்து அந்த எண்ணை என் ஃபோனில் அடித்து தேடினேன். "HUSBAND-OFFICE PHONE" என மின்னியது 

No comments:

Post a Comment

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)