ஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மேலாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக சொத்து பத்திரம் வேண்டும், என்னோட சம்பள சான்றிதழ் வேண்டும், என் வீட்டுக்காரம்மா கையெழுத்து வேண்டும், அப்புறம் இருவரின் கியாரண்டி கையெழுத்து வேண்டும் என்று ஏகப்பட்ட வேண்டும்கள், அனைத்தையும் அளித்து அப்படி இப்படியாக பத்து நாட்களில் கடன் வந்து சேர்ந்தது.
கடன் வாங்கிய தேதியிலிருந்து சரியாக வட்டியும் முதலுமாக கட்டிக் கொண்டே வந்தேன், இடையே ஒரு சேமிப்பு கணக்கையும் ஒன்றைத் துவக்கி சிறிய பணத்தை மாதா மாதம் சேர்க்க ஆரம்பித்தேன். கடன் சரியாக 3 வருடத்தில் முடிந்தது, கடன் கட்டி முடித்த சான்றிதழ் வாங்க வங்கிக்கு வரச் சொன்னார் மேலாளர்.
அன்று மேலாளரைச் சந்திக்க சிரமம் ஏதுமில்லை, வங்கியின் முழு வருட கணக்கு இந்த மாதம் இறுதியில் வருகிறது, ஏதாவது ஒரு பெரிய
தொகையை எங்க வங்கியில் வைப்புத் தொகையாக போட்டால்
உதவியாக இருக்கும் என்று நேரடியாகவே கேட்டார் மேலாளர்.
எனக்கும் இது தானே சந்தர்ப்பம், உடனே நானும் அவரிடம் "ஓ, தாரளமாக டெபாசிட் பண்ணுறேன். ஆனால் அதுக்கு நீங்க உங்களோட அல்லது உங்க பாங்க்கோட சொத்துப்
பத்திரம், உங்க சம்பள சர்டிபிகேட், உங்க வீட்டுக்காரம்மா கையெழுத்து, அப்புறம் உங்களை விட பெரிய ஆபீசர் ரெண்டுபேரோட கியாரண்டி கையெழுத்து எல்லாம் வேணும், இதெல்லாம் கொடுத்தா நான் உங்க பாங்க்கில டெபாசிட் போடறேன்" என்றேன்.
அவர் கேட்டதைத்தான் கேட்டேன், அதற்கு ஏன் என்னை முறைத்தார் என்று தெரியவில்லை.
நாங்க கேட்டால் மட்டும் கடன்,
நீங்க கேட்டா டெபாசிட்டா ??? என்னங்க..??
நம்பிக்கை, நாணயமுங்குறது
ரெண்டு பக்கமும் இருக்கணுமில்லீங்களா...???
இந்த நாட்டில் அவருக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா?
Img Courtesy http://clipartview.com

ஹா ஹா
ReplyDeleteEnter சyour comment...சே கற்பனை யா
ReplyDeleteஉண்மையா இருந்தாலும் கற்பனைன்னுதான் போடனுங்க :)
Deleteஇந்த பதிவு உண்மையாக நடந்து நீங்கள் கேட்டு இருந்தாலும் அல்லது கற்பனையாக இருந்தாலும் மிக அருமை
ReplyDeleteநீங்க கேட்ட எல்லாத்தையும் மானேஜர் கொடுத்திருப்பார் ஆனால் அவர் வூட்டுகாரியின் கையெழுத்து கேட்டீங்க பாருங்க அதற்காகத்தான் அவர் உங்களை முறைத்து இருக்கனும் ஏன்னா அவரு 2 வூட்டுகாரி அதுல எந்த வூட்டுகாரியிடம் போய் வாங்குவது என்று தெரியாமல் முழித்திருக்கிறார் அதை நீங்கள் முறைப்பாக எடுத்து கொண்டீர்கள்.
ReplyDeleteவணக்கம்,
ReplyDeletewww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.
நன்றி..
தமிழ்US
Thank you for a great post.
ReplyDelete