எதையும் வித்தியாசமா செஞ்சே பழகிட்டோமா? அதையே சமையலில் செய்யலாம் அப்படின்னு நினைச்சாலும் நமக்கு ருசி அப்படியே வேணும். கொத்து பரோட்டான்னா நம்மூர் தெருவோர பரோட்டா கடை ருசி வேணும், அதுவும் சால்னா அதிகம் விட்டு, வெங்காயம் தூக்கலா வேணும். நியூ ஜெர்சி எடிசன் மற்றும் சுற்று வட்டாரத்தில் சரியான ஹைதராபாத் பிரியாணி கிடைக்கலைன்னு புலம்பிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பல பேர் ”ஏன் வீட்ல செஞ்சிக்க கூடாதா?” அப்படின்னு உசுப்பேத்த நானும் தயாராகிட்டேன்.
சமையல் குறிப்பெல்லாம் அங்கே இங்கே தேடி கிடைச்சது, அப்புறம் வெட்டுறது, நறுக்குவது, தாளிப்பது வேக வைப்பது எல்லாம் சரியா நடந்துச்சு. அளவு பார்த்து பார்த்து எல்லாம் சரியா செஞ்சேன். நமக்கு ருசி அப்படியே வேணும் பாருங்க. குக்கர்ல விசில் விட்டு பக்குவமான நேரத்துல சொன்னபடியே இறக்கிட்டேன்.
நமக்கு ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிக்கிறதும் புடிக்கும். இந்த மூடி வைச்சதுக்கு அப்புறம் மூடி திறக்கிறதுக்கு இடையில் பிரியாணிக்கு தொட்டுக்க அதிகமா வெங்காயம் நறுக்கிப் போட்டு தயிர் பச்சடி செஞ்சாச்சு. ஆங், சொல்ல மறந்துட்டேன் பாருங்க,. ஒரே கல்லுல இரண்டு மாங்கா ஞாபகம் வெச்சிக்குங்க.
குக்கர் திறந்து பார்க்கிறேன், அபாரமான வாசம், ருசி பார்க்கிறேன்..ஹ்ம்ம்ம்ம் அபாரம்ம்ம். அப்படியே என்னைக் கிள்ளிப் பார்த்துட்டேன். நளபாகன் நான் அப்படின்னு மனசுக்குள்ள பெருமிதம்.
இன்னொன்னு சொல்ல மறந்துட்டா இந்தப் பதிவு முடியாது. பிரியாணி கொஞ்சமா பொங்கல் மாதிரி கொழ கொழன்னு இருந்துச்சு. என்ன பண்ணியும் இனி இதை காப்பாத்த முடியாதுன்னு முடிவு செஞ்சி, தட்டுல போட்டு கரைச்சி குடிச்சிட்டேன். ருசி அபாரம். ஒரே கல்லுல இரண்டு மாங்கா பாருங்க, பொங்கல் + பிரியாணி இரண்டையும் ஒரே சமையலில் முடிச்சாச்சு. கண்டிப்பா இது பிரியாணி மாதிரி ருசி இருந்தாலும் பிரியாணி பதத்துல இல்லவே இல்லை, பொங்கல் பதத்துல இருந்ததால பொங்கிரியாணி அப்படின்னு பேர் வெச்சிட்டேன்.
பின் குறிப்பு:

- வாசகர்கள் காறி துப்புவதைத் தவிர்க்க நான் செய்த பிரியாணி படங்களைப் பகிரவில்லை.
- இங்கே இருக்கும் படங்கள், இணையத்திலிருது எடுத்து வறுத்தவை
No comments:
Post a Comment