"உங்களுக்குப் பிடிச்ச தமிழ்ப் பாடல் ஒன்றைச் சொல்லுங்கள் பார்ப்போம்"
அன்றைய
தமிழ் வகுப்பில் நான் கேட்ட கேள்வி அது. முதல் வகுப்பு என்றால் 7 அல்லது
8 வயது குழந்தைகள் படிப்பார்கள். ஒவ்வொருவராக சொல்ல ஆரம்பித்தார்கள்.
“வாட் அ கர்வாடு"
“கண்டாங்கி கண்டாங்கி"
“டார்லிங் டம்பக்கு"
“செல்ஃபி புள்ள"
“டங்கா மாரி ஊதாரி"
“டண்டணக்கா டண்டணக்கா” - என்ற வரிசையில்
“நான் தமிழ் சினிமா பாடல்கள் பார்க்க மாட்டேன்"
“ஏன்?” - இது நான்
“பாடல்கள்
எல்லாம் ரொம்ப விரசமாக இருக்கும், நடிகர்களின் நடன அசைவுகள் எதுவுமே
குழந்தைங்க பார்க்கிற மாதிரி இருக்காது. முக்கால் வாசி பாடல்கள்
குழந்தைகளுக்கானவை அல்ல” - என்று சொல்லி முடித்தாள் அந்தப் பெண். கடைசி
பந்தில் ஒரு ரன் தேவை என்கையில் சிக்ஸருக்கு அடிப்பாரே தோனி, அந்த
மாதிரி அடித்து முடித்தாள் அந்தச் சிறுமி.
எவ்வளவு
பெரிய உண்மை அது. யோசிச்சிப் பார்த்தீங்கன்னா அமெரிக்காவில்
குழந்தைகளுக்கான படங்கள் என்று வரும். 95% குழந்தைகள் படத்தைப்
பார்த்திடறாங்க. பெரும்பான்மை அரங்கிலும், சிலர் வட்டுக்கள் வாயிலாகவும்,
இன்னும் சொற்பமானவர்கள் வேறு வழியாகவும். வயது வாரியாக நாடகங்கள்,
கார்ட்டூன் தொடர்கள் என்று எல்லாம் உண்டு. அவர்களுக்கான தனி சேனல்களே 10+
தேறும். PG 14 or R rated திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்
எதுவுமே அந்தந்த வயது வரும் வரை குழந்தைகள் பார்ப்பதில்லை, பார்க்கவும்
அவர்கள் விரும்புவதில்லை. இது அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ப்பு முறை
மற்றும் சூழல்களால் என்றே நினைக்கிறேன். அவர்களின் நண்பர்களைச்
சந்திக்கையில் அந்தந்த வயது வாரியாக படங்கள் பார்ப்பதாக அமையும். 9+
மட்டுமே நடிகர்கள் நடித்த படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அதற்கு
குறைவான வயது உடையவர்கள் பார்ப்பது என்னமோ பெரும்பாலும் கார்ட்டூன் சினிமா,
தொடர்களாத்தான் இருக்கும்.
நமது தமிழ் சினிமா குழந்தைகளுக்கானதா? 99.9% சத்தியமாக இல்லை. பசங்க, கோலி சோடா, பூவரசம் பீப்பீ
போன்ற சிறுவர்களுக்கான படங்களில் கூட நிறைய வரம்பு மீறல்கள் இருக்கும்.
குழந்தைகளுக்கு என்று எடுக்கப்படும் படங்களே கம்மி இதுல அவுங்களுக்கான
விசயங்கள் கம்மின்னா எப்படிங்க?
இப்படி பெரியவர்களுக்கான திரைப்படத்தை எடுத்துவிட்டு, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அத்தனை விரசங்களையும், மனதில் பதிய விட்டு விட்டு பிறகு அவர்கள் பதின்ம வயதில் என்னத்தை அறுவடை செய்வதாம்? தமிழ் சினிமா என்பதே வணிக நோக்கில் எடுக்கப்படும் படங்கள்தாம் என்பது இங்கே தெரியவில்லையா? அதற்கு சமூக நலன் எல்லாம் கொஞ்சமும் இல்லை. அதுவுமில்லாமல், சிறுவர்களுக்காக எடுக்கப்படும் படங்களை பெரியவர்கள் பார்ப்பதே இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே வந்தாலும் நம்ம மக்கள் எத்தனை படத்தை ஓட விட்டிருக்கிறார்கள். எத்தனை வந்திருக்கிறது என்பது ஒரு புறம் கேள்வி என்றாலும். மணிரத்னம் எடுத்த அஞ்சலி பரவாயில்லை என்கிற ரகத்தில் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் படத்தில் குழந்தைகள் எல்லாம் வயதுக்கு மீறி பேசும், கதாநாயகிகள்தான் குழந்தைகள் மாதிரி பேசுவார்கள்.
இந்த 5 வருடங்களாத்தான் சோட்டா பீம் வருகிறது, தவிர தமிழில் வரும் 2 சேனல்களை குழந்தைகள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் மொழி பெயர்ப்பில் காது கொடுத்து கேட்க முடியாதளவுக்கு லோக்கல் மொழி என்கிற பெயரில் கொடுமையான மொழியில் வருகிறது. ஒரு நாள் நான் சுட்டி டிவியை எல்லாம் பாதியில் நிறுத்துவதற்கான காரணம் அதன் வசனங்கள் மட்டுமே.
ஒரு புறம் குழந்தைகளை நல்ல வாசகர்களாக, அதாவது புத்தகங்கள் படிக்க வைப்பதில்லை, அது சரி, பெரியவர்களுக்கு அந்தப் பழக்கம் இருந்தால் தானே? பெரியவர்கள் எல்லாம் சினிமா பார்க்கிறார்கள், சினிமா நிகழ்ச்சிகளை கண்டு களிக்கிறார்கள், நடிக நடிகைகளின் கிசுகிசுக்களைப் பேசுகிறார்கள் என்று பெரியவர்களின் பொழுது போக்கு சினிமாவைச் சுற்றியே இருக்கிறது. அப்படி இருக்கும் சினிமா குழந்தைகளுக்கானது அல்ல என்று தெரிந்தும் குழந்தைகளையும் பார்க்க வைக்கிறார்கள். அதில் வரும் அனைத்து கெட்டப்பழங்களையும் மறைமுகமாக பழக வைக்கிறார்கள். பதின்ம வயதில் கற்பழிக்கும் எண்ணத்தை வளர்த்தது யார்? இளம் வயதில் போதைக்கு அடிமையாகும் பழக்கத்தை எங்கிருந்து ஆரம்பிக்கிறார்கள்?
இப்பொழுது அந்தச் சிறுமி சொன்ன விசயத்திற்கே வருகிறேன். சிறுவ சிறுமியர்களுக்கென இல்லாத ஒரு சினிமாவை ஏன் அவர்கள் பார்க்க வேண்டும்? பார்க்க வைக்க வேண்டும்? பார்த்து கெட்டுப் போக வேண்டும்.
என்ன ஆயிற்று உங்களுக்கு Mr. நல்லாத்தான இருந்தீங்க, இவ்ளோ சீரியஸா சிலிப்பிக்கிட்டு ஒரு போஸ்ட்!!
ReplyDeleteஅப்படித்தாங்க அனானி, அப்ப அப்ப பத்திக்கும் :)
Deleteஉண்மை தான்
ReplyDeleteWe should have Indian version of Pixar and WaltDisney ;-)
ReplyDelete