வழக்கம் போல அன்றும் 5:45க்கு அலைபேசி அலாரத்துடன்தான் ஆரம்பித்தது. நமக்கு வழக்கமாக ஆரம்பிக்கும் நாட்கள் எல்லாம், எல்லோருக்கும் வழக்கமாக ஆரம்பிப்பதில்லை என்பதுதான் உலக நியதி. இதமான குருவி கீச்சுகளுடன் எழுந்த நாட்கள் எல்லாம் போய்விட்டது. குய்யோ முய்யோ என்ற அலாரம் போடும் சப்தத்துடந்தான் தினமும் விடுகிறது. வேகமான ஓட்டங்கள், ஆச்சுது, 20 நிமிடங்களில் கிளம்பியாயிற்று 15 நிமிட ங்கள் இருக்கிறது, சற்றே செய்திகள் பார்க்கலாம் என்று அலைபேசி பார்த்தால், கொட்டை எழுத்தில் மின்னிற்று “பாகிஸ்தான் பள்ளியில் துப்பாக்கி சூடு, 98 குழந்தைகள் பலி”, சற்றே கலங்கிப் போனேன் நான், அலைபேசியை தவிர்த்துவிட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன், அனைத்து செய்தி சானல்களிலும் இந்தச்சம்பவமே இடம் பிடித்திருந்தது. பலி எண்ணிக்கை மட்டும் உயர்ந்துகொண்டே சென்றது.
10 நிமிடங்கள் கடந்திருந்த போது, அந்தக் குழந்தை இடத்தில் என் மகனும், மகளும் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. இறந்து போன அந்த செல்வங்களுக்கும் என்னைப் போன்ற பெற்றோர்கள் இருப்பார்கள் இல்லையா? அவர்களும் காலையில் டாட்டா காட்டி முத்தம் குடுத்தே அனுப்பி வைத்திருப்பார்கள், மாலையில் குழந்தை வீடு திரும்புவார். அவருக்குப் பிடித்ததைச் செய்து கொடுக்கலாம் என்று எத்தனை தாய்மார்கள் கனவு கண்டிருப்பர்.
அமெரிக்க-கனேட்டிக்கட் நியூட்டனில் பள்ளியில் ஒரு துப்பாக்கி சூடு நடந்த போது இதே போன்ற ஒரு தவிப்பும் சோகமும் என்னைச் சூழ்ந்துகொண்டது ஞாபகத்திற்கு வந்தது. படுக்கையறைக்கு வந்திருந்தேன். இந்தக் கவலை ஏதுமில்லாமல் மகன் காலைக் குறுக்கி தூங்கிக்கொண்டிருந்தார். கவலை ஏதுமில்லாத நேரம் ஆழ்ந்துறங்கும் நேரம்தானே. மகளைப் பார்த்தேன், முகத்தில் பேரமைதி.
வீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப வீடு திரும்புவோம் என்ற உத்தரவு ஏதுமில்லாத அளவுக்கு தீவிரவாதத்தை வளர்த்ததில் என் பங்கு என்ன? ஒரு நடுத்தர குடும்பஸ்தனை பாதிக்குமளவுக்கு தீவிரவாதம் ஏன் தன் கரங்களை நீட்டியிருக்கிறது? தினமும் காலையில் கிளம்பினால் மாலை உயிருடன் வீடு வந்து சேர்ந்துவிடுவதே மிகப்பெரிய சாதனையாக மாற்றியது யார்?
தினமும் மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துவிடாத மாதிரி மென்மையாக முத்தமிட்டுவிட்டு வேலைக்கு கிளம்புவது வழக்கம். அன்று நானிட்ட முத்தத்தில் சற்றே அழுத்தம் இருந்தது.
தொடர்புடைய சுட்டிகள் :

No comments:
Post a Comment