Wednesday, August 31, 2011

மங்காத்தா திரை விமர்சனம் - mankatha Movie review

”சார்! படத்துல 5 பேரு, அதுல நாலு பேரு கெட்டவங்க, ஒருத்தர் மட்டும் ரொம்ப கெட்டவரு” இப்படித்தான் Oneline சொல்லி அஜித்திடம் ஒப்புதல் வாங்கினாராம் வெங்கட்பிரபு. ஆனா படமே வேற மாதிரிங்க.

பாஸ்டன்ல, முதல் நாளுக்கு ஒரே காட்சி, அதுவும் ராத்திரி 9:45க்கு, செவ்வாய்கிழமை, இன்னிக்கு எவன் வருவான், அதுவும் ஒரு வேலை நாளுல, அஜித் படத்துக்கு” அப்படின்னு நினைச்சுகிட்டு அரங்கத்துக்குப்போனா ஆச்சர்யம். என்னா கூட்டம் (இங்கேயெல்லாம் 60 பேரே பெரிய கூட்டம்தான்).

அஜித்திக்கு இத்தனை ரசிகர்களான்னு சந்தேகம்தான். வெங்கட்பிரபுவுக்காகவும் வந்திருக்கலாம். “சரக்கடிச்சா இளையராஜா பாட்டு கேட்கத்தோணுதுடா”, சரக்கடிச்சுட்டு அடுத்த நாள் காலையில் “இனிமே சரக்கே அடிக்கக்கூடாதுடா” இப்படி வர்ற வசனங்கள்தான் பலமே. கதையே இல்லாம காட்சி வெக்கிறது இவரோட சாமர்த்தியம். அதேதான் இந்தப் படத்திலேயும். எப்பவுமே ஒரு அணி வெச்சிருப்பாரு, காமெடிக்குனு பிரேம், வைபவ், அரவிந்த்(இப்படி சப்பை பசங்கன்னு இவரே சொல்லிக்கிடுவாரு, நாமளும் சிரிச்சிக்குவோம்).

கெட்டவங்களா, அஜித், வைபவ், மஹத், JP, அர்விந்த் ஆகாஷ், பிரேம், லட்சுமிராய், அஷ்வின். ஆமாங்க படத்தில் எல்லாருமே கெட்டவங்க. படத்தோட கதை, எதையாவது ஒளிச்சி வெச்சி தேடனும்.. அப்ப IPL சூதாட்டம்னு சேர்த்துக்கலாம்- இப்படித்தான் அமைஞ்சிருக்கும் கதை

நாயக சினிமா உலகத்தில் 50 வது படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அஜித்தின் தைரியத்தையும் பாராட்டியே ஆவனும்.
”ஆமாங்க, எனக்கு நாப்பது வயசுதான்,வில்லந்தான். குடிச்சு குடிச்சு தொப்பை வந்துருச்சு, முடியெல்லாம் நரைச்சுப் போயிருச்சு, அதுக்காக பணமும் பொண்ணும் வேண்டாமா?” இதுதான் அஜித்தின் கதாபாத்திரம். இந்தா பார்த்துக்க இதுதான் என் தொப்பைன்னு சட்டையில்லாம நிக்கிறது, ரொம்பவே தைரியம்தான். அதுவும் Interval Block க்குன் முன்னாடி செஸ் போர்ட் வெச்சிருக்கு ஒரு திட்டம் போடுறது காட்சி அப்ளாஸ், வெங்கட் அஜித் மேல நம்பிக்கைக்கு அந்த ஒரு காட்சியே போதும். அதுவும் ரத்தமெல்லாம் பச்சை நிறமாய்..:)

நான் ஆக்சன் கிங்தான், நான் பிரேம்ஜி- காமெடியந்தான், நான் JP, வில்லன் - கதாநாயகியோட அப்பாதான், இப்படி நிறைய தான்கள்.

கதைக்கான களம் கிரிக்கெட்.. ஆமாம் மீண்டும் கிரிக்கெட். இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது போல இது Ocean11/12/13 எல்லாம் இல்லை(வேற எதனாச்சும் இருக்கலாம்) IPLல்கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுகிறது,(எப்படி விட்டார்கள் தணிக்கையில்?)அதற்கான பணத்தை ஒரு அணி கொள்ளையடிக்கிறது, அந்த அணியிடமிருந்தும் கொள்ளையடிக்கிறார்கள் இன்னொரு ’அணி’. அவனைப் போடு, இவனையும் போடு, எல்லாத்தையும் போடுறா, இதுக்கு நடுவுல காவல்துறையும் பணத்தையும் கொள்ளையர்களை தேடுகிறார்கள், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பல திருப்பங்களோடு ஆடுவதுதான் மங்காத்தா.

கதாப்பாத்திரங்களை விம்பார் போட்டு விளக்கவே தேவைப்படுது முதல் பாதி. இரண்டாம் பாதியோ, ஒவ்வொரு காட்சியிலும் திருப்பம். ஒவ்வொருத்தரும் தன் பாணியில் சொல்லி ”முடிக்கை”யில்
முடிந்து போகிறது படம். ஙொக்கா மக்கா, இரண்டாம் பாதியில இயக்குனர்தான் தெரியறாரு.  Example: இரண்டு குழுக்கள் அடிச்சுக்கும். வில்லன் கூட்டமும்,  இன்னொரு வில்லன் கூட்டமும்(அதான் நல்லவங்களே இல்லையே) அஜித் குழுவுல 3 பேரு. அவுங்களுக்கு உள்ளேயும் அடிச்சிக்குவாங்க, எதிர்த்த கும்பலையும் அடிப்பாங்க. எவன் எவனை அடிக்கிறான்னே தெரியாது. ஆனா தெளிவா புரியும்(Yuvan's Cliche RR- returns)- Director's Touch- Stunt Touch. Chasingல அஜித் கலக்கியிருக்காரு(இதெலென்னா ஆச்சர்யம்)

”எவந்தாண்டா நல்லவன்?” அப்படின்னு ரசிகர்கள் உச்சதாபியில் கத்தும் போது ”எவனுமே இல்லைடா” என்று சொல்லிருக்கிறார் இயக்குனர்.

முதல் பாதி அஜித்தின் அதகளம், வைபவ்வை நம்பி வைத்திருக்கிறார்கள் இரண்டாம் பாதியில் முதல் பாதி. ஒரு டூயட்டும் உண்டு. வாழ்கைடா வைபவ். அதுவும் அஞ்சலியொட டூயட்டுல. டேய் வாழ்வுதாண்டா. அஞ்சலி இந்தப் படத்தில் too Sexy. வைபவ், பீமா விக்ரம் மாதிரியே rough and tough. அப்புறம் அழுவாச்சி, அப்ரூவர். இப்படி நிறைய மாற்றம். நீ ஜெயிச்சிட்டடா வைபவ்.


மஹத், நடிக்க ரொம்ப சிரமப்பட்டிருக்கார்(வரலை). ஆனால் ஆட்டம் பாட்டத்தில் balance செஞ்சிக்கிறாரு உண்மையைச் சொல்லப் போனால், பாடல்களில் மஹத்தும், வைபவும்தான் தெரிகிறார்கள். குத்தாட்டத்துக்கு எது அஜித்னு முடிவு பண்ணியே ஆளை இறக்கிருக்காரு வெங்கட், ஊமைக் குசும்பன்யா நீயு) மஹத்திற்கு ஏன் இத்தனை ரசிகைகள்? திரையரங்கில் அவருக்கென தனி ஜொள் ஆறே ஓடுது. கேட்ட இசுமார்டா இருக்கானாம். நடிக்க வரலையேன்னு கேட்ட பொண்ணுங்க சொல்லுது அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்களாம். அரவிந்த் ஆகாசுக்கு பெரிய கதாபாத்திரம், குடுத்த காசுக்கு சரியா கூவியிருக்காருபா. அஷ்வின், பரவாயில்லை ராசா, முன்னேறிடுவே, தனியா தேடுப்பா.

ஜெயப்பிரகாஷ், வழக்கம் போலதான் (ரகுவரன் இல்லையென்ற குறை தீர்ந்தது). திரிசா, வருகிறார், ஆடுகிறார், கொஞ்சுகிறா, அழுகிறார். அவ்வளவுதான். ஆண்டிரியாவுக்கோ அதிலும் பாதிதான்.லட்சுமிராய் ஆரம்பம் முதல் கடைசி வரை, ரொம்ப கொஞ்சம் துணியோட வந்து போறாங்க. ரெண்டு பாட்டுல செம ஆட்டம் (அம்மணி, தோணி ஏன் உங்கிட்ட Boldஆனாருன்னு இப்பத்தான் தெரியுது). சொல்லிக்கொள்ளும்படியான வேடம்தான்.  வழக்கம்போல பிரேம்ஜி நகைச்சுவைக்கு உத்தரவாதம். பல படங்களில் பார்த்து பார்த்து சலிச்சுப் போன கதாபாத்திரம்.வசனங்கள்(அடுத்தவங்களுதுதான்) பேசியே தப்பிச்சிக்கிறாரு.(பெரியப்பா பாட்டும், அடுத்தவங்க வசனமும்தான் பிரேம்ஜி.. போன படத்துல “கண்கள் இரண்டால்” இந்தப் படத்துல “நேத்து ராத்திரி அம்மா”)

குறைகள்: மொக்கையா ஒரு காவல்துறை அதிகாரி இறந்து போவது, அதுக்கு விளக்கம், அதைவிட மொக்கை. பம்பாயில் எல்லாருமே தமிழ் பேசுறது, ஒரே தெருவில் இருந்தாலும் காவல்துறை மெனக்கெட்டுத் தேடுவது, அஜித் என்பதால், காவல்துறை அதிகாரி என்றாலும் மொத்தமாக எல்லாரும் நம்புவது(நாமளும்தான்), பிரேம்ஜியின் Clicheகள்(போதும்யா சலிக்குது). மொக்கை சீனுக்கும், ரத்தத்துக்கும் திரை போட்டு ஏன் மறைக்கிறது.

இசை : யுவன் 30% (Cliche in some scenes from Goa, Saroja). யுவனில்லைன்னா நாறியிருக்கும். அத்தனை chasing, அத்தனை வசனம். fillup பண்ண வேணாமா?

ஒளிப்பதிவு: சக்தி சரவணன் 30% அதுவும் கடைசியா அர்ஜூனை காட்டும் போது ஒரு லோ ஆங்கில் வருமே. ஷ்ஹ். பின்னிட்டீங்க சார். ஏகப்பட்ட கட் ஷாட்ஸ், இல்லாட்டா ரிச்னெஸ் வராதுல்லை.

ரஜினி பாணியில் அஜித். ஆமாங்க, இப்படி இயக்குனரிடம் சரண்டர் ஆவறது நமக்குத்தான் நல்லது. விஜய் சார் கொஞ்சம் யோசிங்க.

அர்ஜூன், கிடைத்த இடத்தில் எல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறார். அதுவும் இறுதிக்காட்சியில். Welcome Back Action King. அர்ஜுன் அஜித்தை “தல” என அழைப்பதும், அஜித் அர்ஜூனை ”வாய்யா ஆக்சன் கிங்கு” என்று கிண்டலாவே கூப்பிட்டுக்கிறதும் ரசிக்க வைக்கிறது. விஜய் படம் கூட வருதுங்க. சந்தானம், ரஜினி, கமல், சாம் ஆண்டர்சன் என எல்லாவிடத்திலேயும் சொல்லியடித்திருக்கிறார்கள். கைத்தட்டல் அள்ளுகிறது. அஜித் திட்டமிடும் போது வீடு முழுக்க அஜித்களும், ”நீ நான்” பாடலில் வரும் Computer Graphicsம் அட போட வைக்கிறது.

அஜித்திற்கு தேவைப்பட்டது ஒரு ஹிட், 50 வது படமும் நல்ல படமா இருக்க வேண்டும். ரெண்டுக்கும் ஒரே டிக் மங்காத்தா.

என்னோட மதிப்பெண் 7.5/10

Pics: Thanks to India Glitz(Online media Partner)

17 comments:

 1. நடு நிலையான சுவாரஸ்யமான விமர்சனமாக இருந்தது... இப்போதான் நானும் கிளம்பிக்கிட்டிருக்கேன்... படம் பார்க்க...

  ReplyDelete
 2. நல்ல விமர்சனம்.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம். //அஜீத்க்கு தேவை ஒரு ஹிட் தான் // ஹா ஹா இது சூப்பர்.

  ReplyDelete
 4. நன்றி அன்பு!
  நன்றி ரத்னவேல்!

  ReplyDelete
 5. மங்காத்தா – THIS IS MY F**CKING REVIEW
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/this-is-my-fcking-review.html

  ReplyDelete
 6. விமர்சனத்திற்கு தாங்ஸ் ப்பா எதுக்கும் படத்தை ஒருவாட்டி பார்த்திடுவோம்

  ReplyDelete
 7. James, Prabha(s)(2),அமுதா நன்றி

  ReplyDelete
 8. So, it is a BIG HIT for Ajit. He and his fans badly needed one! Good!

  ReplyDelete
 9. rakuvaran illatha kurayai jayaprakaash pokkaraar.nalla commentunko....vivasaye sezhippairukkarunko
  by.g.palanisamy.cbe(dt)

  ReplyDelete
 10. மனதில் பட்டதை எழுதுகிறேன் : உலகிலேயே மிகப்பெரிய பதிவுத் தலைப்பு எதுவென்ற உங்கள் தேடல் நிறைவேறியிருக்கிறதா? பதிவு தலைப்பு சிறியதாக வைக்கவேண்டும் என்று அறிவுரை சொன்ன லக்கிக்கி இந்த பதிவு சமப்பணம்.

  PRABHAKARAN.N
  > PH.D.MANGT
  > MA.PUBLIC ADMIN
  > M.COM
  > PGDIPLOMA OFFICE MANGT
  > PGDIPLOMA PUBLIC RELATION
  > DCA
  > AMSPI
  > 9986194654
  > 8951430498

  ReplyDelete
 11. PRABHAKARAN.N
  > PH.D.MANGT
  > MA.PUBLIC ADMIN
  > M.COM
  > PGDIPLOMA OFFICE MANGT
  > PGDIPLOMA PUBLIC RELATION
  > DCA
  > AMSPI
  > 9986194654
  > 8951430498

  ReplyDelete
 12. Prabha
  http://vivasaayi.blogspot.com/2007/08/21.html இது பரவாயில்லைங்களா? தலைப்பு வெச்சிதான் மக்களே படிக்க வராங்க. அது ஆங்கிலத்திலேயும் இருந்தா சுலபம். ஆங்கிலத் தேடல் 90% தமிழ் தேடல் 10%. எது தேவைன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)