Wednesday, July 20, 2011

மூனு - சஙகிலித் தொடர்

ரொம்ப வருசம் ஆச்சு இப்படி கேள்வி பதில் பதிவு போட்டு. முன்னொரு காலத்துல ஆறு, எட்டு, நாலுன்னு போயி இப்ப மூனுன்னு வந்திருக்கு. சிறுமுயற்சி முத்துக்கா ஒரு open invitation வெக்க, அட எழுதுவோமேன்னு தோணிச்சு. பார்த்திபன் சொல்றா மாதிரி கேள்வி கேட்குறது ரொம்ப புடிக்கும், ஆனா கேட்குறது நானா இருக்கனும்’ இதான் நம்ம கொளுகை(உனக்குமா?)





சரி ஆரம்பிப்போமா?

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
* பயணம். வகை தொகையில்லாம வண்டி ஓட்டுறது,அதுவும் தூரமா போயிட்டு வர்றது, காரணமே இல்லாம பயணிக்கிறது இப்படி. இதுக்காக கார், பைக்குன்னு நினைச்சிறாதீங்க. சைக்கிள்ல ஆரம்பிச்சு, சும்மானாச்சுக்கும் 3-5 மைல் வரைக்கும் நடக்குறது கூட எனக்கு புடிக்கும். ஆனா ஜிம்ல treadmilல நடக்கறது மட்டும் ஆவாது.

* பாட்டு கேட்குறது. திருச்சி, கோவை, இலங்கை வானொலியில ஆரம்பிச்ச பழக்கம்., இப்ப செல்பேசியில ஒரு FM விடாம கேட்டுகிட்டு இருக்கேன்.

* வாசிப்பது. புஸ்தகம், பதிவு, ட்விட், buzz, அட இவ்வளவு ஏங்க, மொக்கையா இருக்கிற நேரத்துல விளம்பரம், ஸ்பாம் மெயில் கூட விடறதில்லை.


2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

* நண்பர்களை நம்பும் போது சரியா நம்மள ஏமாத்துறது. அது விளையாட்டா இருந்தாலும் எனக்கு புடிக்காது. நேத்து மாயவரத்தான் அப்படித்தான் செஞ்சாரு. இன்னிக்கு எலியும் பூனையுமா ஆக்கிட்டேன். சும்மா இருக்கேன், தொலைபேசி எண் குடுங்க மொக்கை போடலாம்னு ட்விட் ஒன்னு போட்டேன். சும்மா இருக்காம எவனோ வெளங்கா வெட்டி பேசுற தொலைக்காட்சி நிகழ்ச்சியோட எண்ணைத் தந்தாரு. நானும் யோசிக்காம பேசிட்டேன். மவனே, வந்துச்சே கோவம், பொதுவுல அப்படி யாரையுமே பேசினது இல்லே. வயசு மரியாதை இல்லாம கூட பேசிட்டேன். அப்புறமா யோசிச்சேன். சிறுபுள்ளைத்தனமா அந்தாளுதான் பண்றாருன்னா நாமளுமா, கொஞ்சம் பெரிய மனுசனாட்டம் இருக்கலாம்னு மன்னிப்பும் கேட்டுட்டேன். பெரியவர் இல்லையா வயசுக்காவது மரியாதை குடுத்திருக்கலாம். ப்ச்.

* திட்டு. திட்டுறது எனக்கு புடிக்கவே புடிக்காது. எங்கம்மா சின்னவயசுல (இன்னும் சின்ன வயசு தானேடா) என்னை நிறைய திட்டிட்டாங்க போல. அதான் புடிக்கிறது இல்லே. அன்பா சொன்னாவே நடந்துரும்ங்கிறது என்னோட எண்ணம்

* தமிழில் ஆங்கிலம். தமிழ் தெரியும் ஆனா பேசமாட்டாங்க. சும்மா கலாய்க்கவோ, தொழில் முறைக்கோ பேசிக்கலாம்,. வீட்ல கூடவா? நாம தமிழ்ல பேசினா பொடணிக்கு பின்னாடி போயி பெரிய இவன்னு பேசுறது. நீங்க என்னா ஆக்ஸ்போர்ட்க்கு பக்கத்துலயா பொறந்தீங்க? தமிழ்நாட்டுலதானேடா

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

*ப்ப்ப்ப்பாஆம்பு. பார்க்கக்கூட புடிக்காத ஒரு ஜந்து. ஐயோ. அடுத்த விசயத்துக்கு போயிருவோம்
*Snakes
*நாகராஜன்னு பேர் வெச்சிருந்தா கூட பயம்தான். ஆல் பயம் ஒன்லி பாம்ப்ரூஊ.நோமோர் பயம்ஸ்

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
* பெண்கள்
* Girls
* ladies
(மேலே இருக்கிறவங்க யாரையாவது ஒருத்தரை புரிஞ்சிகிட்டேன்னு சொல்லுங்க பார்க்கலாம். முத்தக்கா, இதை சாய்ஸ்ல வேற விட்டிருந்தாங்க :))

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

* இப்ப இருக்கிறது. கழுவாத தேநீர் குவளை(டீ கப்னு தமிழ்ல சொல்லுவாங்க)
* என்னோட செல்பேசி, அலுவலக தொ(ல்)லைபேசி
* கணினி(சோறு போடுற ஆத்தா)

6) உங்களை சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?
இப்போதைக்கு
*சிவகார்த்திகேயன்
*வடிவேலு
* கவுண்டர்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

* இந்த வருசம் 100 பதிவாவது போடனும்னு எல்லாத்தையும் Draftல போட்டுட்டிருக்கேன்

* ஒரு குறும்படம் (வரும் ஆனா வராது ஆனா வரும்)

* தவிர, சும்மாதான் இருக்கேன்னு ஒத்துகிறேன்

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

ஓஹ் சீரியஸான கேள்வி,

* முதியோர்களுக்கான இல்லம்

* சொந்த வீட்ல குடியிருக்கிறது

* இசையமைக்கிறது

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
* பல் விளக்குதல்

* குளித்தல்

* சாப்பிடுதல்

(இந்த மூன்றையுமே முடிக்க எத்தனை லட்சகணக்கான பேர் கஷ்டப்படறாங்க தெரியுங்களா? என்ன அவுங்களுக்கெல்லாம் வயசு 6க்குள்ள இருக்கும்)

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

* இந்த மாசம் சம்பளம் இல்லே

* நீயெல்லாம் பதிவு போடலைன்னு யார் அழுதா?

* மத்தவங்க என்கிட்ட கடன்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
* பதிவு போட்டவுடனே 100 பின்னூட்டம் வர மாதிரி எழுதறதுக்கு கத்துக்கனும்

* விசில் அடிக்க - சே, தொண்டை வறண்டு, தலை வலி வந்ததுதான் மிச்சம். அஸின் மாதிரி யாராவது சொல்லிகுடுக்க சொல்லி கேட்டா சீக்கிரமா கத்துக்குவேன்(நானென்னா விஜயான்னு கேட்க கூடாது)

* இந்த அமெரிக்கன் மாதிரி இங்கிலி பீசு பேசனும் (முனியப்பன் கோவில் மேல் பள்ளிகூடத்துல படிச்சதுக்கு இங்கிலீசுல பேசுறதே ஓவரு, இதுல அமெரிக்கன் மாதிரியா. கொஞ்சம் ஓவராத்தான் போறேனோ?)

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
* மனைவி சமைக்கிறது
* அம்மா சமைக்கிறது
*  வேற யாராவது சமைக்கிறது
(’யாரு சமைச்சாலும் ரவுண்டு கட்டுவேன்’ அப்படிங்கிறதைதான் இப்படி சொல்றேன். அன்லிமிட்டட் மீல்ஸ்னா ரெண்டே ரெண்டு மட்டும் சாப்பிடுவேன்)

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

அது மாசம் மாசம் மாறுமே. இந்த மாசம்

* டூ படத்துல இருந்து நதியிலே

* 180- நீ கோரினால்

* யுவன் யுவதி - Oh my angel

14) அழைக்க விரும்பும் 3 பேர்
* புதுகை அப்துல்லா

* ஜாக்கி சேகர்

* இந்த வார நட்சத்திரம் சிபி செந்தில்குமார்

Monday, July 18, 2011

தொட்ட போதெல்லாம் சிணுங்கினாள்


அவளுக்கெல்லாம் வயதே ஆவதில்லை!
தொட்ட போதெல்லாம் சிணுங்கினாள்
தொடுதிரையும்,
தொட்ட திரையில் அவளும்!

---------------------------------------------------------------------------









அடடே,
ஆச்சர்ய குறி
ரெண்டையும் கையில்
வைத்துக்கொண்டு அலைகிறேன்..

ஜூஜூபி!
கவிதை மட்டும்தான் மிச்சம்..
நிரப்ப எழுத்துக்களை
மாற்றியமைத்து முயற்சிக்கிறேன்!

ஆங்,
சொல்ல மறந்துவிட்டேனே!
வார்த்தைகளை
ஒன்றன்
கீழ்
ஒன்றாகவும்
அடுக்கவும்
எனக்குத்
தெரியும்!

-------------------------------------------------------------------------------------------

அனாதையின் கையில்
விண்ணப்பப் படிவம்!
அம்மா, அப்பா பெயரை நிரப்புமிடத்தில்
தடுமாறுகிறது பேனா!
----------------------------------------------------------------------------------------------

நடுத்தெருவில் ,
குற்றவாளியைச் சுட்டுக்கொன்றது
காவல்துறை...
தெருவோரக் கடையில்
“ஸ்டாராங்கா ஒரு டீ”
என்றான் குற்றவாளி

Sunday, July 17, 2011

ஆடி - 1 - தேங்காய் சுடுற நோன்பி


இன்னைக்கு ஆடி-1.

அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. இதையெல்லாம் பார்த்தா ஆடி மாசம் ஒரு பெரிய வில்லத்தனமான் மாசம்'ன்னு தான் நமக்கு தோணுதுங்க.

சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம். ஹ்ம்ம். சனிக்கிழமையே எல்லா கூட்டாளிங்களுக்கு சொல்லிவிட்டோம். திங்கள் காலையில தேங்காய் சுடறதா. இப்ப பசங்க கழுதமாதிரி ஆகி, தொப்பைய வெச்சுக்கிட்டு வந்துட்டாங்க. கையில ஒண்ணு, ரெண்டுன்னு குழந்தைங்க வேற. என்ன பண்ண காலம் வேகமா உருண்டு ஓடுது.

அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.

Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு தேங்காயால இருக்கிற அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)