Wednesday, December 29, 2010

இங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமா?

கிறிஸ்துமஸ் தினம்னு 3 நாள் விடுமுறை விட்டுட்டாங்க. வீட்ல இருந்தா கடுப்பா இருக்கும்னு எங்கே போலாம்னு யோசிச்சப்ப, வடிவேலை ’வா வா’னு கூப்பிட்டு கிட்னிய புடுங்கிற பையனாட்டம் “வா வா”னு ரெண்டு குடும்பங்க கூப்பிட்டாங்க. அவுங்க ஊர் இருக்குறதோ 270 கிமீ தள்ளி. சரி, வண்டிய மிதிச்சா போவுதுன்னு கிளம்பும் போதே சொனனாங்க. என்ன சொன்னாங்கன்னு கடைசியில் தெரிஞ்சுக்குவீங்க. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தையும், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் இன்னொரு இந்திய குடும்பத்தையும் சந்திக்கலாம்னு திட்டம் போட்டு கிளம்பி வண்டிய மிதிச்சா, சரியான நேரத்துக்கு போய்ட்டோம். ஒரு காபி/டீ ஹ்ம்ம், உச்சா .. நோஓஒ. ஒரே மிதி. அங்கே போன பின்னாடிதான் தெரிஞ்சது. இனிமே வீரபாகு கணக்கா படிச்சுக்குங்க. போன உடனே பல விதமான சாப்பாட்டோடு போட்டாங்க. சரி, அதான் பகல் முடிஞ்சிருச்சேன்னு நினைச்சா உடனே பலகாரம்.. காபி. அப்பாடா விட்டுட்டாங்கன்னு நினைச்சா உடனே ராத்திரி சாப்பாடு. ஒரு மனுசன் 6 மணிநேரமாவா சாப்புடுவான். அடுத்த நாள் இவர் இன்னொருத்தருக்கு போனைப் போட்டு “மாப்பிள்ளை ஒருத்தன் இங்கே சிக்கியிருக்காண்டா, அனுப்பவா” கேட்க, அவரும் சரியா 11 மணிக்கே வாசப்படிக்கே வந்து கூட்டிகிட்டு போனாரு. அங்கே அவுங்க எவ்வளவு முடியுமோ அவ்வளவும் போட்டாங்க. அதுல ஒரு விசயம்.. பனிப்புயல் 12 மணிக்கு ஆரம்பிக்கும்னு சொல்றத எல்லாம் மறந்துட்டு பாத்திகட்டி தின்னா.. சரியா மாட்டினோம். அன்னிக்குத்தாங்க லேசா உதறலோட வண்டி ஓட்டுனது. டவுசர் எல்லாம் வர்ற வழியிலேயே கழண்டிருச்சு. ஒரே இருட்டு, சாலையும் தெரியல, 4 வழித்தடத்துல 2 தடத்தை பனி பெய்ஞ்சு கிடக்கு, மீதி இருக்குற ரெண்டுலயும் கடற்கரை மணலாட்டம் பனி.. வண்டி லேசான அமுக்கினா சிலுக்காட்டம் தனியா இடுப்ப ஆட்டுது வண்டி.  சுலபமா சொல்லிட்டேன், ஆனா கஷ்டம் அனுபவிச்சாத்தான் தெரியுது. இந்தியாவுல இருக்கும் போது பனியில கதாநாயகி ஆடும்போது.. ‘சே சூப்பர்டா’ அப்படின்னு பனியப்பார்த்து சொல்லுவோம். இங்கே வந்தாதான் தெரியுது கஷ்டமே. ரொம்ப கொடுமைங்க. வெயில்காலம் அருமை இப்போதான் தெரியுது. ஒரு வாய் சோத்துக்கு ஆசைப்பட்டு இவ்வளவு கஷ்டப்படனுமான்னு கேட்டாலும்.. இந்த ஒரு வாய் சோறுதான் ஒரு உலகத்தையே தரும்கிறதை இன்னொரு பதிவுல சொல்றேன். படத்தைப் பாருங்க, இப்படி இருக்கும்போதுதான் வண்டிய ஓட்டிகிட்டு வந்தேன். செவுப்பு வெளிச்சம் பக்கமா வந்தா வண்டி பக்கத்துல வந்துட்டேன்னு அர்த்தம்னு நினைச்சிகிட்டே செவுப்பா பார்த்துகிட்டே தட்டி தடவி வீட்டுக்கு வந்து சேர 6 மணிநேரம் ஆச்சுங்க..
--0--


ஈரோடு சங்கமம். நம்ம ஊர்ல விசேசம், போகாட்டா எப்படி மனசு அடிச்சுக்குமோ அப்படித்தான் அடிச்சுக்கிச்சு. நேரலையில் பார்க்கலாம்னா அதுவும் சரியா இல்லே. போட்ட சாப்பாட்டுல தூக்கம் வந்தாலும் கண்ணை முழிச்சு பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம். இதுல சாப்பாட்டு இலை போட்டு கறி கடுப்புடா.. சே. ரொம்ப மிஸ் பண்றேன். என்ன ஆனாலும் விழா முடிஞ்சப்புறம்தான் கூப்பிடனும், நடுவால கூப்பிடக்கூடாதுன்னு இருந்தேன். அப்படியே முடிஞ்சப்புறம் கூப்புட்டா செல்லா கிட்ட அலைபேசிய குடுத்தாரு கதிர். நான் அவர்கிட்ட பேச, அவர் செமையா டாக்கினாரு, டாக்கினாரு டாக்கிட்டே இருந்தாரு. அத்தனையும் இங்கிலி பீசுல. விளங்கினாப்ல ம்ம் ம்ம்ம் கொட்டியே பொழப்ப ஓட்டினேன். எப்படியோ நல்லபடியா முடிஞ்சது. சந்தோசத்துலயும் என்னால போவ முடியலையேங்கிறதுதான் வருத்தம். சில பேர் என்கிட்ட கேட்டாங்க. சங்கமம் திரட்டிய ஈரோட்டு மக்கள் நடத்துறாங்களான்னு. அது வேற இது வேறைங்க. அசந்தர்ப்பதமாய் ரெண்டுக்கும் ஒரே பேராய் அமைஞ்சிருச்சு. கனிமொழி கூட ஒரு ஆட்டம் நடத்தினாங்களே சங்கமம்னு.. அப்போ ஈரோட்டு மக்களும் கனிமொழிகிட்ட பேசி இருப்பாங்களா? அதுவும் டேப்புல வருமா? அடுத்த வருசமாவது கலந்துக்க சந்தர்ப்பம் கிடைக்கனும், இல்லாட்டி நேரலையாவது சரியா அமையனும். ஆமா சென்னையில பதிவர்கள் சந்திப்பெல்லாம் இல்லியா? பாலபாரதி மாம்ஸ் குடும்பஸ்தான் ஆன பின்னாடி ஒரு பெரிய சந்திப்பையே காணோமே.  ஏன்?  ஏதோ குறையுதே? தமிழேண்டா (ச்சும்மா, இங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமான்னு பார்க்கிறதுதான்)
--0--


அய்யனார் பாடல்கள்: வெயில் காலத்துலேயே வந்த பாட்டுங்க. இப்பத்தான் படம் வெளியாகியிருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை வெளியிட்டு இருக்காங்க போல. இப்போ அது மேட்டர் இல்லே. அப்துல்லா இங்க வரும் போதே சொன்ன விசயம்தாங்க இது. அய்யனார் படத்துல ஒரு பாட்டு, அதுவும் செம குத்து. பாட்டே “குத்து குத்து கும்மாங்குத்து”. கரகாட்டகாரன்ல வருமே ‘ஊரு விட்டு ஊரு வந்து’ அந்தப் பாட்ட அப்படியே உருவி போட்ட பாட்டுதான் இந்தப் பாட்டு. ரெண்டு பாட்டையும் கேட்டுப்பாருங்க புரியும்.

--0--


தமிழ்ப் படங்களைப் பத்தின Curtain Raiserஆ மக்கள் போட்டு அசத்துறாங்க. நான் போனவருசத்தோட சிறந்த ஆங்கிலப் படம்னு ஒரு பத்திரிக்கை போட்ட தை இங்கே தந்திருக்கேன்.

1. The Social Network

2. Inception

3. The Fighter

4. Kick-Ass

5. Black Swan

இதுல எதுவுமே இன்னும் பார்க்கலைங்க, இனிமேதான் பார்க்கனும். நீங்க பார்த்துட்டீங்களா?



அமெரிக்காவுல சிறந்த பாடல்களா அதே பத்திரிக்கை சொன்னது,

1. Kanye West- My Beautiful Dark twisterd fantasy

2. Arcade Fire- The Suburbs

3. Sleigh Bells- Treats

4. The walkman- Lisbon

5. Best Coast- Crazy for you

6. Titus Andronicus- The Monitor

7. Girls Talk- All day

8. Big Boi- Sir Lucious Left Foot

--0--


2010ல இருந்தே அர்த்தாஷ்டமம் நடக்குதாம். ரொம்ப மோசமா இருக்குன்னு சொன்னாங்க. அதே மாதிரி கொஞ்சம் கஷ்டமாத்தான் ஓடுது வாழ்க்கை. கடந்த வருசங்களோட பதிவு எண்ணிக்கையப் பார்த்தா 2008 போட்ட பதிவுகளை விட அதிகம் பதிவுகளை போட்டிருக்கேன்.

► 2010 (54)

► 2009 (39)

► 2008 (54)

► 2007 (80)

► 2006 (92)

► 2005 (15)


இது 2008ன் எண்ணிக்கைய விட அதிகமாக்குற பதிவுங்க இது (55 வது). ஆனாலும் இந்த வருசம் பதிவுல அவ்வளவு திருப்தியில்லை. அடுத்த  வருசமாவது நல்ல பதிவுகளா போடனும்னு நினைக்கிறேன். இப்படித்தான் ஆரம்பகாலத்துலேயே இருந்து நினைச்சுகிட்டு இருக்கேன். பல விசயங்களை ட்விட்டர்ல கொட்டிடறதுனால சரியா பதிவுகள் போட முடியறது இல்லே. ஒரே ஒரு Script மட்டும்தான் இந்த வருசத்துல நான் எழுதினதுல நலலதா சொல்ல முடியும். என்ன கொடுமை, அதையும் பதிவுல போட முடியாது
--0--

Tuesday, December 28, 2010

Cartoonist சங்கர் பிள்ளை

இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியல் கேலிச் சித்திரங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர், பிரபல கார்ட்டூனிஸ்ட் காயங்குளம் சங்கரப்பிள்ளை. சுருக்கமாக சங்கர். சங்கரின் பிரஷ் முனையில் அகப் பட்டுத் தவித்த தலைவர்கள் அநேகம் பேர்.

விடுதலை கிடைப்பதற்கு முன், அதாவது 1932-ம் ஆண்டு இரும்புக் கரம் கொண்டு இந்திய சுதந்திர உணர்வுகளை அடக்கிக்கொண்டி ருந்த பிரிட்டிஷ் வைஸ்ராய் லார்டு வில்லிங்டன் பிரபுவுடன், 'ஹிந்துஸ் தான் டைம்ஸ்' நாளிதழில் கார்ட் டூன்கள் மூலம் மோதிக்கொண்டிருந்தார் சங்கர். ஒரு நாள் வைஸ்ராயிடமிருந்து சங்கருக்கு அழைப்பு வந்தது.

'சரி, வைஸ்ராயுடன் இன்று பயங்கர மோதல்தான்' என்று நினைத்துக்கொண்டு சென்ற சங் கருக்கு, வைஸ்ராயின் மாளிகையில் அதிசயம் காத்திருந்தது. சங்கரை வில்லிங்டன் பாராட்டி, ஆதரவுடன் அணைத்து, தனது மனைவியை அறிமுகப்படுத்தினார். "எல்லாம் சரிதான் சங்கர்... நீங்கள் என் கணவரின் மூக்கை இத்தனை நீளமாகப் போடுவதைத்தான் என்னால் ரசிக்க முடியவில்லை" என்றாராம் வைஸ் ராய் மனைவி சிரித்துக்கொண்டே.

தான் சொந்தமாக 'சங்கர்ஸ் வீக்லி' இதழை நடத்தியது பற்றி, "அது ஒரு கஷ்டமான போராட்டம்! ஆனால், சுவாரஸ்யமான, நான் விரும்பிய போராட்டம்" என்பார்.

சங்கர் வக்கீல் தொழிலை விட்டுவிட்டுத் தூரிகையைப் பிடித்தவர். "பொதுவாக அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நகைச்சுவை உணர்வு குறைவுதான். அதனால் தான் கார்ட்டூன் சொல்லும் செய்தியை உணர்ந்துகொள்ளாமல் பர்சனலாக எடுத்துக் கொள்கிறார்கள்" என்ற சங்கரின் கணிப்பில், நேருஜி மட்டும் விதிவிலக்கு! நேருஜி, சங்கரின் பரம விசிறி.

"தலைவர்களில் பலருக்கு நாளடைவில் தலைக்கனம், கர்வம், ஆடம்பரம், அதிகாரம் வந்துவிடும். அதைக் குறைப்பதற்கு கார்ட்டூன்கள் தேவைதான். உங்களது கார்ட்டூன்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அந்த கார்ட்டூன்கள் மூலம் என்னை நான் அலசிப் பார்த்துக்கொள்கிறேன். அதனால், என்னை விட்டுவைக்காதீர்கள். வரைந்து தள்ளுங்கள்' என்று சங்கருக்கு நேருஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

சங்கருக்குக் குழந்தைகள் மேல் பிரியம் அதிகம். எனவே, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட 'குழந்தைகள் நூல் டிரஸ்ட்' மற்றும் டில்லியில் 'சர்வதேச பொம்மைகள் மியூசியம்' போன்றவை ஏற்பட முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் சங்கர்.



நன்றி: ஆனந்த விகடனிலிருந்து அப்படியே சுட்டதுதாங்க.

Monday, December 27, 2010

புணர்வென்னும் கலவையில்

சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!

இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!



நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!


புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!

மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?

Wednesday, December 22, 2010

Jingle Bells- ஜிங்கிள் பெல்ஸ்


ஜிங்கிள் பெல்ஸ்' என்ற பாடலை எழுதிய, ஜான் பியர்போன்ட் வாழ்க்கையில் தோல்வியடைந்தவராகவே இறந்தார். வாழ்நாள் முழுவதும் தொடர் தோல்விகள் மனதைக் காயப்படுத்த, 1866ல் தன் 81வது வயதில் வாஷிங்டனில் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
அவரது வாழ்க்கை பிரகாசமாகவே ஆரம்பித்தது. புகழ்பெற்ற யேல் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். அவரது தாத்தா யேல் பல்கலைக் கழக ஸ்தாபகர்களில் ஒருவர். பியர்போன்ட், ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தார்.

மாணவர்களை கண்டிக்காமல் தோழமையுடன் பழகியதால் ஆசிரியராக தோல்வியடைந்த அவர், சட்டத்துறையை நோக்கி பயிற்சிக்காக திரும்பினார். வழக்கறிஞராகவும் அவர் தோல்வியடைந்தார். கட்சிக்காரர்களிடம் தாராளமாக நடந்து கொண்டதுடன், அதிக சன்மானம் தரும் வழக்கைவிட நியாயமான வழக்கையே பெரிதும் விரும்பினார். அடுத்ததாக வியாபாரத் துறையை தேர்ந்தெடுத்தார். வியாபாரியாகவும் அவர் தோல்வியடைந்தார். லாபம் வரும் அளவு பொருட்களின் மீது விலை வைத்து விற்க முடியாததுடன், கடன்காரர்களிடமும் தாராளமாக நடந்து கொண்டார். இதனிடையே அவர் கவிதை எழுதினார். அவை வெளியான போதும் வாழ்க்கைக்குத் தேவையான அளவு அவர் ராயல்டி வாங்கவில்லை.
கவிஞராக அவர் தோல்வியடைந்தார். எனவே, ஒரு பாதிரியாராக முடிவெடுத்து ஹார்வர்ட் தெய்வீகப் பள்ளியில் சென்று படித்து, பாஸ்டன் நகர சர்ச்சில் பாதிரியாராக நியமனம் பெற்றார். மதுவிலக்கு ஆதரிப்பு மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிரான நிலை ஆகியவை செல்வாக்கு பெற்ற சபை உறுப்பினர்களின் பாதையில் அவரை குறுக்கிட வைத்ததால் தன் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பாதிரியாராகவும் அவர் தோல்வியடைந்தார். அரசியலில் அவர் சற்று வித்தியாசமாக செயல்பட முடியுமென்று தோன்றியதால் மாஸாசூசெட்ஸ் மாநிலத்தின் கவர்னர் தேர்தலுக்கு நின்றார்; தோல்வியடைந்தார். சற்றும் சளைக்காத அவர், காங்கிரஸ் தேர்தலில் ப்ரீ சாயில் பார்ட்டி சார்பாக நின்றார்; அதிலும் தோற்றார். அரசியல்வாதியாக அவர் தோல்வியடைந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போர் அப்போது துவங்கியது. மாஸாசூசெட்ஸ் வாலண்டியர்களின் 22வது படைப்பிரிவில் மதகுருவாக தொண்டாற்ற முன்வந்தார். வேலை பளு, உடல் ஆரோக்கியத்தை பாதித்ததால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அங்கிருந்து விலகினார். அப்போது அவருக்கு வயது 76.

* *

யாரோ ஒருவர் அவருக்கு வாஷிங்டன் நகர கருவூலத்துறை அலுவலகத்தில் கடைநிலை குமாஸ்தா வேலையைப் பெற்றுத் தந்தார். அவரது வாழ்க்கையின் கடைசி ஐந்து வருடங்களை சாதாரண பைலிங் குமாஸ்தாவாகக் கழித்தார். அந்த வேலையையும் அவர் நன்றாக செய்யவில்லை; ஏனென்றால், அவர் மனம் அதில் லயிக்கவில்லை.
ஜான் பியர்போன்ட் ஒரு தோல்வியாளராகவே இறந்தார். செய்யத் துணிந்த எந்த வேலையையும் அவர் திறம்பட முடிக்கவில்லை. மாஸா சூசெட்ஸ் மாநிலம் கேம்ப்ரிட்ஜ் நகர மவுன்ட் ஓபர்ன் சிமெட்ரியில் உள்ள அவரது சமாதியின் கல்வெட்டில் உள்ள வாசகம்: கவிஞர், சமயபோதகர், தத்துவஞானி, சமுதாயத் தொண்டர் என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வளவு காலத்திற்குப்பிறகு நாம் இப்போது உறுதியாகச் சொல்லலாம் - அவர் ஒரு தோல்வியாளர் இல்லை என்று. சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு, மனித சக்தியின் மீது அவரது அபார நம்பிக்கை - இவையெல்லாம் தோல்வியில்லை. எவையெல்லாம் தோல்வி என்று நினைத்தாரோ, அவையெல்லாம் இன்று வெற்றியாக மாறிவிட்டன. கல்வி சீர்திருத்தப்பட்டது, சட்ட நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன, கடன் சட்டங்கள் மாற்றப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக அடிமைத்தனம் அறவே ஒழிக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நாம் அவரது வெற்றியை கொண்டாடுகிறோம். நம்முடைய இதயத்திலும், நினைவிலும் அவருடைய நினைவுச்சின்னத்தை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறோம்.அது ஒரு பாடல் — அந்தப் பாடல் இயேசுவைப் பற்றியோ, தேவதைகளைப் பற்றியோ அல்லது சாண்டாகிளாஸைப் பற்றியோ பாடுவது அல்ல. பனிக் காலத்தில் குளிர்ந்த இருளில் பனிக்கட்டிகளின் மீது குதிரை ஒன்று இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டியில் பறந்து செல்லும் சுகமான ஆனந்தத்தைப் பற்றி மிகச்சாதாரணமான, ஆனால் அற்புதமான பாடல், நண்பர்கள் சூழ, வழி நெடுக சிரித்துக் கொண்டு, பாடிக் கொண்டும் செல்லும் பாடல். அந்தப் பாடல்தான், "ஜிங்கில் பெல்ஸ்!' பனி பொழியும் குளிர்கால மாலைப்பொழுது ஒன்றில் ஜான் பியர் போன்ட் தன் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறிய அன்பளிப்பாக சில கவிதை வரிகளை எழுதினார். அவ்வாறு அவர் எழுதி விட்டுச் சென்ற அந்தப் பாடல் கிறிஸ்துமஸிற்கு ஒரு நிரந்தரமான, மிகச்சிறந்த அன்பளிப்பானது. அதுதான், "ஜிங்கிள் பெல்ஸ்!' பாடல்


நன்றி: எங்கேயோ படிச்சு, சுட்டது. அவுங்களுக்கு நன்றி

Thursday, December 16, 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்

கமல் ஒரு dating Doctor for Male. ஆண்களின் காதலை கை கூட வெப்பவர்.
இதற்காக அவர் அந்த்ப் பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ள பல கஷ்டப்படனும், அந்தப் பெண்ணுக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எப்படி காதலைச் சொன்னால் ஏத்துக்குவாள் அப்படின்னு விரல் நுனியில் தந்திரத்தை வெச்சிருப்பாரு. அதே சமயம், dating Doctorக்கும் “மாமா”வுக்கும் நூலிழைதான் வித்தியாசம். இப்படித்தான் ரமேஷ் கண்ணா தனக்குப் புடிச்ச ஒரு பெண்ணை “ஆசை”க்கு இணங்க வெக்க கமல்கிட்ட வந்து கேட்க, கமல் ரமேஷ் கண்ணாவோட கைய உடைச்சு அனுப்புவாரு. இதான் கமலின் பாத்திரம். கொஞ்சம் கஷ்டமா இருக்குல்ல, அதனாலதான் கமல் இந்தப் பாத்திரத்தை ஏத்திகிட்டு இருக்காரு.

மாதவன்(கோபால்), ஒரு பக்கா அம்மாஞ்சி. நள தமயந்தில ஏத்துகிட்ட அதே பாத்திரம், ஆனா இதுல நல்லா படிச்ச ஒரு குமாஸ்தா. திரிசா (அம்புஜம்) ஒரு பெரிய நடிகை/பணக்காரி, அவர் சம்பாதிச்ச கோடிக்கணக்கான சொத்துக்கு பாதுகாப்பா இருக்கிறவங்கள்ல மாதவனும் ஒருத்தர். திரிசாவைப் பத்தி தினமும் ஏதாவது ஒரு நாளிதழ் சேதி போட்டுகிட்டே இருக்கும். காரணம், திரிசாவோட கிசு கிசு படிக்கிறதுக்காகவே மக்கள் நாளிதழை வாங்குவாங்கனா பார்த்துக்குங்களேன். சங்கீதா ஒரு பத்திரிக்கை நிருபர், எப்பவாவது ஒரு நல்ல கிசுகிசு கிடைச்சா பதிவி உயர்வு வாங்கிடலாம்னு துடிப்பா துடிக்கிற நிருபர். இவ்வளவுதாங்க அறிமுகமப் படலம்.

மாதவனுக்கு திரிசா மேல காதல், உயிருக்குயிராகக் காதலிக்கிறாரு. இந்தக் காதலை எப்படியாவது திரிசாகிட்ட சொல்லி சம்மதம் வாங்கனும்னு துடிக்கிறாரு. அந்த நேரத்துலதான் கமலைப் பத்தி கேள்விபட்டு, அவர்கிட்ட உதவி கேட்க வர்றாரு. உதவின்னா உதவியேவா. காசு குடுத்துதானே ஐடியா கிடைக்கும், கமல்தான் ஐடியா மணியாச்சே. கமலும் மாதவனுக்கு சரின்னு சொல்ல, கமலோட பின் தொடருதல் ஆரம்பிக்குது. கொஞ்சம் கொஞ்சமா திரிசாவோட குணநலன்களை படிக்கிறாரு. அந்த நேரத்துலதான் திரிசாவுக்கு புதுப்படம் ஒன்னு ஒப்பந்தமாகுது, அதுவும் கப்பல்லேயே படப்பிடிப்பு முழுசும் இருக்கிறா மாதிரி. மாதவனும், இதுதான் சமயம், திரிசாகிட்ட காதலைச் சொல்லிரலாம்னு கமலையும் கூடவே கூட்டிகிட்டு கப்பலுக்கு வர, திரிசா கிசுகிசு கிடைக்குமான்னு சங்கீதாவும் கப்பலுக்கு வர்ற ஆரம்பிக்குது படம். இனிமே படம் முழுசும், தண்ணிலதான். அட கடலுக்கு மேலதாங்க.
Advertisement:



திரட்டி
தை-1 முதல்





முதல் நாள்லயே திரிசாவுக்கு மாதவன் மேலை ஆசை வர்ற மாதிரி சம்பவங்கள் நடக்க, திரிசாவும் மாதவனும் படப்பிடிப்பை இல்லாத நேரங்கள்ல கப்பலுக்குள்ளேயே ஒன்னா சுத்த ஆரம்பிக்கிறாங்க. டைட்டானிக் பட பாணியில எச்சி துப்புற போட்டியெல்லாம் ரெண்டு பேருக்கும் நடக்கிறது செம கலாட்டா. அந்த எச்சை எல்லாம் கமல் மூஞ்சியிலும், சங்கீதா மூஞ்சியிலும் விழ, ரெண்டு பேரு ஒரே நேரத்துல பாத்ரூம் தேடி ஓடும்போது சங்கீதாவும், கமலும் ஆண்கள் toiletக்குள்ள போயிர அங்கேயும் செம கலாட்டா. இங்கே கமலுக்கும் சங்கீதாவுக்கு காதல் பத்திக்க ஆரம்பிக்குது.

அடுத்த நாள் எல்லாரும் email பார்க்க, எல்லாருக்கும் செம அதிர்ச்சி. காரணம் திரிசாவும், மாதவனும் ஒன்னா இருக்கிற மாதிரி படங்கள் போட்டு தமிழ்நாட்டுல சூடான செய்தி வந்திருக்கு. யாரு, இதைச் செஞ்சிருப்பாங்கன்னு எல்லாரும் எல்லாரையுமே சந்தேகப் பட வேண்டியாதாயிருது. படப்புடிப்பும் ரெண்டு நாள் நடக்காமயே போவுது. இப்பத்தான் ரமேஷ் அர்விந்த், சீமான், உசா உதூப் எல்லாம் சேர்ந்து ஒரு விருந்து வெக்கிறாங்க. அதுல கமல் சரக்குல தான் ஒரு dating Doctorனு சங்கீதாகிட்ட உளறி வெக்க, அதுவும் அடுத்த நாள் சூடான செய்தியா படத்தோட வந்துருது. இதனால, கமலும், சங்கீதாவை வெறுக்க ஆரம்பிக்க, சங்கீதா கமல்கிட்ட மன்னிப்பு கேட்க, கமலும் மன்னிச்சு சங்கீதாவோட காதலை ஏற்க, கமல் எப்படி மாதவன், திரிசாவை எப்படி காதலிக்க வெக்கிறாங்கன்னு சொல்றதுதான் இறுதிக்காட்சி.

படத்துல இயக்குனராவே கேஎஸ் ரவிகுமார், நடிகராகவே சூர்யா, பாடகியாகவே உசா உதூப், வில்லனாவே சீமான்.. அதனால குழப்பமே இல்லை.

மக்களே: மன்மதன் அம்பு Hitch படத்தின் தழுவல்னு சொன்னாங்க. நேத்துதான் அந்த DVDபார்த்தேன், அதை அப்படியே மன்மதன் அம்பா விட்டுட்டேன். எல்லாமே கற்பனை, புனைவுதான்.

சக்தி டிரான்ஸ்போர்ட்

(கொஞ்சம் பெரிய பதிவுங்க, ரெண்டு பாகமா போட்டிருக்கலாம், இப்பவெல்லாம் மக்களுக்கு அவ்வளவு பொறுமை இல்லைங்கிறதால ஒரே பதிவா போட்டுட்டேன்)

 
பவானி, 6:38Am, பேருந்து நிலையம்.
சக்தி டிரான்ஸ்போர்ட், பவானிலிருந்து கோவை போற ஒரு ரதம் (திங்கள் காலையிலும், வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து 5:40 PMக்கும்).

ஆமா, 6:40க்கு கிளம்பவேண்டிய வண்டி 5:50க்கே ஃபுல்லாகிடும் . பவானியிலிருந்து போற பலதரப்பட்ட காலேஜ் பசங்க, பொண்ணுங்களுக்கும் அது ஒரு ஃபோரம் மாதிரி. உள்ளே வறுக்கப்படற கடலையினால, வண்டி நிறைய பொகை விட்டுட்டே போவும் . காவேரி ஆத்துக்கும், பவானி ஆத்துக்கும் நடுவால இருக்கிற ஊருதான் பவானி. திங்கள் கிழமை காலையில், இந்த பஸ்ல இருந்து தனியா இன்னொரு ஜொள் ஆறு உற்பத்தியாகி முணாவதா ரோட்டுல ஓடிட்டு இருக்கும்.


ஆவலோட எட்டி பார்த்தா ரதி.

"என்ன இவனை இன்னும் காணோம்? எப்போ சீட் போட்டு வெச்சாலும் லேட்டாதான் வரான், அதுவும் வண்டி எடுக்க சரியா 5 நிமிசத்துக்கு முன்னாடிதான் வரான். பெரிய துரைன்னு நினைப்பு. ஒரு பொண்ணு காலையில் 5:30 மணிக்கு வந்து சீட் போட்டு வெச்சா இவன் ஆடி அசைஞ்சு 6:35 வருவான். இவனை ஒரு நாள் நிக்க விட்டு பார்க்கனும், அப்போதான் என் அருமை தெரியும்".

டென்சன்ல நகத்தை கடிச்ச படியே அவனை எதிர்பார்க்கும் ரதி நம்ம ஹீரோவைவிட ஒரு மாசத்துக்கு பெரியவள், ஸ்கூல் சீனியரும் கூட. இம்ப்ரூவ்மெண்ட் எழுதியும் சரியா மார்க் கிடைக்காம ஆர்ட்ஸ் காலேஜ்ல சீட் வாங்க, ஜூனியரா இருந்த ஹீரோ அவளோடு வந்து சேர்ந்துகிட்டான். ஊர்ப்பாசமோ, ஸ்கூல் பாசமோ தெரியல, இரண்டு பேரும் சீக்கிரம் தோஸ்த் ஆகிட்டாங்க. அதுவும் ஒரே கிளாஸ், ரெண்டு பேரும் ஹாஸ்டல் வேற. ரெண்டு பேருமே ஒன்னாவே போறதும், வரது நிறைய புரளிய கிளப்பி விட்டுருக்கு. இரண்டு பேருமே இப்போ பிஸ்ஜி காலேஜ்ல 3ம் வருஷம் படிக்கிறாங்க.



சரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான். எப்பயுமே டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருக்கிற 2பேர் சீட்தான் அவுங்களுக்கு. ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுத்துட்டு


"உனக்கு என்னடி ராசாத்தி ? எம்புட்டு அழகா இருக்கே.." அப்படின்னு சொல்லிட்டு முணுமுணுக்க ஆரம்பிச்சான்.

ரதிக்கு இப்போ கோவம் போயி அவன் என்ன சொல்றான்னு கேக்குற ஆர்வம் வந்துருச்சு.

"டேய் என்னடா சொல்றே? எதைச் சொன்னாலும் எனக்கு கேக்குற மாதிரி சொல்லு". ஹீரோவுக்கு தெரியும் இவளோட கோவம் எவ்வளவுதூரம்னு.

"ஒன்னும் இல்லே ரதி , நீ செம அழகு. எப்பயுமே நீ என் கூட உக்காந்துட்டு வர்றதை எல்லாரும் பொறாமையா பார்க்குறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இல்லே இருக்கு "ன்னு சொல்ல, அவளுக்கு கோவம் போன இடமே தெரியல "ஏன் உக்காந்துட்டு வந்தா என்ன இப்போ? ஒரு ஒரே காலேஜ், ஒரே கிளாஸ், ஹாஸ்டல் கூட. எரியறவனுக்கு எரியட்டும், நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே".

ஹீரோ, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வந்து, ஷட்டில் பேட்மிண்டன்ல யுனிவர்ஸ்டி பிளேயர், அதுவுமில்லாம பெயிண்டிங்க் கிளப் சேர்மேன், சிந்தனையாளர் மன்றத்துல செயலாளர் போஸ்ட் வேற. ஹீரோ கிளாசுக்கு போறது ரொம்ப கம்மி. ரதியோ லேடிஸ் ஹாஸ்டல் சேர்வுமன். ரெண்டு பேருமே அவுங்க அவுங்க ஏரியாவுல பெரிய ஆளுங்க . ஹீரோவோட அத்தனை அசைன்மெண்ட் பேப்பர்ஸ் எழுதறது ரதிதான். அவனும் என்னாச்சின்னே கேக்கமாட்டான். இவளா எழுதி சம்மிட் பண்ணிருவா. ஆனா பாவிப்பய , பைனல் எக்ஸாம்ல அவளை விட நல்ல மார்க் எடுத்து அவளை மண்டை காய விடுவான். ஹீரோ நிறைய பொண்ணுங்களோட பேசினாலும், லவ் மட்டும் அவனுக்கு வரவே இல்லே. அதைப்பத்தி அவனும் யோசனை பண்ணலை, யோசனை பண்ண நேரமும் இல்லே. அவனைச் சுத்தி எப்போ பார்த்தாலும் பசங்க கூட்டம். அந்த கூட்டமும் அவனை அப்படி நினைக்கவே வெக்கலை.


காலேஜ் கேண்டீன், ஜெய்யும் ஹீரோவும் டீ சாப்பிட்டபடி இருக்க, வடையும் தோசையும் வாங்கிட்டு வந்த அயூப் "மச்சான், ரதிக்கு பெரிய ஃபிகருன்னு நெனப்புடா. அவ கூடவே இருக்கிற ராஜிய பாரேன் எவ்வளவு அமைதியான பொண்ணு. எவனாவது அவளைச் சீண்டறானா? எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும்.? நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேரத்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு? அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா? ஒரு கிளாஸ்மேட்டா அவளுக்கு அந்த ஃபீலிங் வராம பார்த்துக்கனும்டா "

"சரிடா அயூப், எனக்கும் இது தோணும். ஜெய் , நீ தான்டா நம்ம காலேஜ் கமல். நீ அவகிட்டே புரபோஸ் பண்ணு. நான் சாயங்காலம் ஹாஸ்டல்ல ராஜிய பார்த்து உன் புரபோஸலை ரிஜக்ட் பண்றா மாதிரி அவகிட்டே பேசிக்கிறேன் . அப்புறம் அவளுக்கு அந்த ஃபீலிங் வராதுல்லே. என்ன சொல்றே?"

"ஆஹா, என்னை கோட்டிக்காரன் ஆக்கப்பார்க்கிறீங்களேடா. இந்த விஷயம் தெரிஞ்சா, அப்புறம் எவளும் என்னை கண்டுக்க மாட்டாங்க, வேணாம்டா என்னை விட்டுருங்கடா டேய். ப்ளீஸ்டா ", ஜெய் அழற நிலைமைக்கே வந்துட்டான்.

"சரிடா, நானும் புரபோஸ் பண்றேன். என்ன சொல்றான்னு பார்ப்போம் . சரியா? உனக்கு கம்பெனி நானு. என்ன ஆனாலும் பரவாயில்லே"ன்னு ஹீரோ சொல்ல, எங்கேயோ ஒதை விழபோவுது. ஹீரோவும் வரேன்னு சொல்றான், அப்புறம் என்னான்னு "சரிடா, ஆனா நீ பேசக்கூடாது. நீ பேசினா விவரமா என்ன மாட்டி விட்டிருவே, அயூப் பேசட்டும் " சொன்னான் ஜெய்.

ஒரு தம்முக்கு அப்புறம் டீல் மாற்றப்பட்டது. இவங்க ரெண்டு புரபோஸலையும் அயூப்; சங்கீதா மூலம் ராஜீக்கு சொல்றதா முடிவு செஞ்சாங்க. அயூப் மேல ரெண்டு பேருக்கும் அவ்வளவு நம்பிக்கை. 3வது கிளாஸ் 11:15- 12:15க்கு. சாப்பாட்டு நேரம் 45 நிமிஷம் அதாவ்து 12:15-1:00. 11:00-11:15 பிரேக் அந்த நேரத்துல ஜெய்யும் ஹீரோவும் கிளாஸை விட்டு வெளியே போயிட்டு, சாப்பாட்டுக்கு அப்புறம், அதாவது 1 மணிக்குதான் கிளாசுக்கு வரனும். அயூப் சங்கீதாகிட்டே சொல்லி ராஜிக்கிட்டே 11-11:15 பிரேக்லயே சொல்றதா ஏற்பாடு ஆச்சு. 11 மணி ஆச்சு, ஜெய்யும் ஹீரோவும் வெளியே போக , அயூப் சங்கீதாகிட்டே விஷயத்தைச் சொல்ல, சங்கீதா ராஜிய கூப்பிட்டு "ஹீரோவும், ஜெய்யும் உன்னை சின்சியரா லவ் பண்றாங்க. நீ யாரை சூஸ் பண்ணப்போறேன்?"னு கேட்டா. ராஜிக்கு செம கோவம், நோட்ட எடுத்துகிட்டு வேகமா ஹாஸ்டலுக்கு போய்ட்டா. இதைக் கேள்விப்பட்ட ரதியும் அவ பின்னாடியே போய்ட்டா. ராஜி போனதோ, ரதியும் அவ பின்னாடியே போனதோ தெரியாம ஜெய்யும், ஹீரோவும் சினிமா பார்க்க போய்ட்டாங்க. அன்னிக்கு மத்தியானம் அவுங்க காலேஜ்கே வரலே .

அடுத்த நாள் காலையில், 6:15க்கு போன் ஜெய் வீட்டு அயூப் கூப்பிட்டான் "டேய் ஜெய், நேத்து ரெண்டு பேரும் எங்கேடா போய்த்தொலைஞ்சீங்க? ஒரு பெரிய பிரச்சினை ஆகிருச்சு மச்சான். 8 மணிக்கே ராஜியும், ரதியும் கேண்டீனுக்கு வரதா சொல்லி இருக்காங்க. நீ ஹீரோவை கூட்டிகிட்டு சரியா போயிருடா"

"என்னது போயிடாவா? நீ வரலையா?"

"இல்லே மச்சி. எனக்கு உடம்பு சரியில்லே"னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் அயூப். அவன் நல்லாதான் இருக்கான், ஆனா போவலை.

ஹீரோவ கூட்டிக்கிட்டு சரியா 7:55க்கே கேண்டீனுக்கு போய்ட்டான் ஜெய். இரண்டு பேரும் ஒரு தம்மு கூட அடிக்கலை. இப்போ ரெண்டு பேருக்குமே டென்ஷன். எங்கே யாராவது ஒருத்தனுக்கு ராஜி ஓக்கே சொல்லிட்டாள்ன்னா என்ன பண்றதுன்னு பயம்.



"மச்சான் மாட்டிக்கிட்டோம்டா. ஒருத்தனை செலக்ட் பண்ணிட்டாலும் பிரச்சினை, பிரின்சிகிட்டே போட்டு குடுத்தாலும் பிரச்சினை. என்னடா பண்ண? அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல?. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா?"ன்னு ஹீரோ நடுங்கிகிட்டே சொல்ல ஜெய்க்கோ பேச்சே வரலை .



தூரத்துல ராஜியும், ரதியும் வர, "மச்சி, நான் போறேன்டா. நீ சமாளிச்சுகோடா . ஒரு அமைதியான பொண்ணை எப்படி பத்ரகாளியா மாத்தி வெச்சுருக்கான்னு பாரேன். அயோ, நான் எஸ்கேப்புடா " ன்னு சொல்லி பின்னாடி கேட் வழியா கிரவுண்டு ஓடிப்போயிட்டான் ஜெய்.


பில்டிங் ஸ்ட்ராங். ஆனா பேஸ்மட்டம் வீக்குங்குற மாதிரி உள்ளுக்குள்ள நடுங்கிட்டே வெளியே சிரிச்சா மாதிரி ராஜிக்கு "ஹாய் " சொன்னான் ஹீரோ. ரதியோ தனியா வேற டேபிள் போயி உக்காந்துகிட்டா. எதிர்பார்த்த மாதிரி கோவமா இல்லாம, செம கூலா வந்து இருந்தா ராஜி. மஞ்சள் கலரு சுடிதாரு போட்டு, தலைக்கு குளிச்சு, லூஸ் ஹேர் போட்டு, வாசமா முன்னாடி வந்து அழகா ஒரு சிரிப்பை தவற விட்டா. அப்போதான், ஹீரோவுக்கு DTS எஃபக்ட்ல ஆப்பு அடிக்கிற சவுண்ட் கேட்க ஆரம்பிச்சது.

"டேய் ஹீரோ, நீ என்னை ஏமாத்த முயற்சி பண்றேன்னு தெரியும். அதனால நான் உன்னை லவ் பண்ணலே". எஸ்கேப்பு ஆன சந்தோசத்துல அப்படியே ஒரு 100 அடி பறந்தான் ஹீரோ, உடனே கீழே வந்து
"அப்போ ஜெய்ய லவ் பண்றியா ராஜி" ன்னு கேட்டான். அடுத்தவன் நாசமா போறதுல அவ்ளோ சந்தோசம் இந்தப் பசங்களுக்கு.

ராஜியோ "இல்லேடா, நான் எதிர்பார்க்கிற மாதிரி ஜெய் இல்லேடா. சோ, அவன் கிட்டே சொல்லிடுடா. உங்க ரெண்டு பேரையும் நான் லவ் பண்ணலை" அப்படின்னதும் ஹீரோவுக்கு ஒரு பெரிய டிரீட் இருக்குறது கண்ணுல தெரிஞ்சது, அப்படியே ஒரு கும்பல் அயூப்பை தொரத்தி, தொரத்தி வெட்டுறதும் தெரிஞ்சது.

அவ்ளோதான் முடிச்சுட்டாள்னு பார்த்தா, ஹீரோ கழுத்த புடிச்சுட்டு குசுகுசுன்னு சொன்னா
"நீயும் ரதியும் ஸ்கூல் இருந்தே லவ் பண்றீங்களாமே, என் கிட்ட சொல்லி எப்படி அழுதா தெரியுமா?அவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியா? அறிவு இல்லே உனக்கு? அவளைப்பாருடா, பாவமா இல்லே. ஏண்டா இப்படி பொண்ணுங்களை கஷ்டப்படுத்துறீங்க? போயி அவளை சமாதானப்படுத்து".

ஹீரோவுக்கு இப்போ லைட்டா வயித்த கலக்க ஆரம்பிச்சு இருச்சு. இதென்னடா, சூன்யம் மஞ்சள் கலர் சுடிதாரு போட்டு வந்துருக்குன்னு சொல்லி திரும்பி பார்த்தான். இதுவரைக்கும் லவ் பண்ற எண்ணமே இல்லாதவன் ஹீரோ, இவனை பல வருஷம் லவ் பண்ணினதா சொல்றா ரதி. ஹீரோவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. மனசுக்குள்ள் வருத்தம் எதுவும் சொல்லாம் கிளம்பி நேரா ஊருக்கு போய்ட்டான். ரெண்டு பேருமே அந்த வார இறுதியில போன்ல பேசிக்கலை.

ஹோல்டான்ன்ன்ன்.
வண்டி 10 நிமிசம் நிக்கும் சார், காபி, டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டு வந்துருங்க


Advertisement:



திரட்டி
தை-1 முதல்





சக்தி டிரான்ஸ்போர்ட்- போலாம் ரை ரைட்ட்ட்ட்..

அடுத்த வாரம் சீட் போட்டு வெச்சும் ஹீரோ வரவே இல்லே, காலேஜ்க்கும் வரலே. அயூப் கிட்டே கேட்டதுக்கு ஹீரோ மேட்சுக்காக திருச்சி போனதா சொன்னான். ஹீரோ கோச்சுக்கிட்டு இருந்தான்னா "ராஜி சும்மா விளையாட்டுக்குதான் அப்படி சொன்னாள்"னு சொல்லி தப்பிச்சுக்கலாம்னு முடிவு பண்ணினா ரதி. வெட்கத்தை விட்டு அவன்கிட்டே புரபோஸ் பண்ணினா, அடிச்சாலும் அடிப்பான் அந்த காட்டுப்பய. அதனால ரதியும் மனசை தேத்திக்க ஆரம்பிச்சா, ரெண்டு ராத்திரி தூங்காம அழுதிட்டு இருந்தது ராஜிக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். அவளோட காதல் முடிஞ்சு போன விஷயம் நனைஞ்சு போன தலகாணிக்கு மட்டுமே தெரிஞ்சுது.

வெள்ளிக்கிழமை, ஹீரோ ஜெயிச்சுட்டதா நோட்டீஸ் போர்ட்ல போட்டு இருந்தாங்க. அன்னிக்கு சாயங்காலம் தனியா STல ஏறி, பவானி போற வரைக்கும் அழுதிட்டே போனாள் ரதி.

அடுத்த வாரம் திங்கட் கிழமை

பவானி, 6:35Am, பேருந்து நிலையம்.
சரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான்.


ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுப்பான்னு பார்த்தா ஒன்னும் பேசாம் உக்காந்துட்டு தரைய பார்த்துட்டு இருந்தான் ஹீரோ. இனிமே பேசாம இருந்தா இவன் தப்பா நினைச்சுக்குவான்னு நெனச்சு

"டேய், என்னடா என் மேல கோவமா? ராஜிதாண்டா உன்னை கலாய்க்க அப்படி சொன்னா. அதுக்காக என்கிட்ட பேசாம இருக்காதடா, ப்ளீஸ்" னு கெஞ்ச ஆரம்பிச்சா ரதி.

இதுவரைக்கும் சும்மா தரைய பார்த்துட்டு இருந்த ஹீரோ ரதிய பார்த்து கேட்டான் "அப்போ ராஜி சொன்னது பொய்தானே?"

"ஆமாண்டா" எச்சில் விழுங்கியபடி ரதி சொல்லும் போது தொண்டை அடைச்சுக்கிச்சு.

ரதிக்கு சந்தோசமா இருந்த ஹீரோவ பார்க்க கோவமாவும் இருந்துச்சு, அழுகை வர மாதிரியும் இருந்துச்சு.

"அப்போ ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே ரதி?"

"சொல்லுடா"

"இனிமே நான் கேரா மில்க் சாக்லெட் எல்லாம் தரமாட்டேன். infact பிரண்ட்ஸா பழகுறதையும் நிறுத்திக்குவோம், சரியா?"

"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே?"

அதுக்குள்ள ஹீரோவை டிரைவர் வரச்சொன்னாரு

"இரு, ஆனந்து வரேன் ஒரு நிமிஷம்"னு சொல்லிட்டு

"என்ன ரதி சொன்னே?"

"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே?"

"எவன் அப்படி சொன்னான்?"

"நீதான்"

"லூஸூ, காதலர்களா பழகுவோம்னு சொன்னேன்"ன்னு சொல்ல, ரதிக்கு அவன் என்ன சொன்னான்னு புரியவே கொஞ்சம் நேரம் ஆச்சு. அதுக்குள்ள டிரைவர் பக்கத்துல போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுட்டான் ஹீரோ.

ரதிக்கு, இப்போ அவன் கைய கோர்த்துட்டு இருக்கனும் போல இருந்துச்சு. யோசனை பண்ணாம, யாரைப்பத்தியும் கவலைப்படாம சத்தம் போட்டு சந்தோசமா கூப்பிட்டா

"டேய் இளா, இங்கே வரப்போறியா இல்லியா?"

Tuesday, December 14, 2010

கிட்டாத கில்லி

வாங்கினால் கட்டமுடியாதென
தெரிந்தே நண்பனின்
கியாரண்டியோடு வாங்குகிறோம்
கடன்!

-0-


நிதமும் அடித்தே பழகிய சரக்கு
எப்படியும் வீடு போய்விடுவோம்
என்றே நினைத்து அடிக்கிறேன்
ஆனாலும் தினமும்
தெருவிலேயே ஃப்ளாட்டு!

-0-


பக்கத்து டேபிளில்
கிட்டாத சைட்டிஷ்
ஏக்கப் போதையாய்!
தள்ளாடுகிறது
நாவிலும் மனதிலும்

-0-

சரக்கடித்து சண்டை போடும்போது
உற்றுப் பார்க்கிறேன்
பக்கத்து வீட்டிலிருந்து எல்லாம்
என்னை எட்டிப் பார்க்கின்றன
நானே அறிந்திராத ஃபிகர்கள்!

--00--
ஈரோட்டு கதிரின் வரையாத புள்ளிக்கு எதிர்வினை

Monday, December 13, 2010

நேர்முகத்தேர்வு - Interview Tips

ராமு, சோமு இருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்தப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

"உங்கள் வாழ்க்கையின் லட்சியமென்ன?" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.

சோமு சொன்னான் "மாப்பிள்ளே கவலைய விடுடா, இது ஒன்னுதான் வேலையா. Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம். அப்பத்தான் அடுத்தமுறை நல்லா செய்யமுடியும்"

ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.

போனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், சோமு.

பதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராமு.

வெளியே ஏமாற்றத்துடன் வந்த சோமு.

"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே?"

"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. இந்த வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராமு.

அதனால நேர்முகத்தேர்வோ, தொலைபேசித்தேர்வோ.. கேள்விகளை மறக்காதீங்க. அது காலத்துக்கும் உதவும். ”உங்க வாழ்க்கையின் லட்சியம் என்ன?” இதுதான் என்கிட்டையும் முதல் முறையா நேர்முகத்தேர்வுல கேட்டப்பட்ட கேள்வி. நானும் சோமுமாதிரிதான் சொதப்பிட்டு ‘பல்பு’ வாங்கிட்டு வந்தேன். இது கோவையில BPL Customer Careக்கு வேலைக்கு. அடுத்தது புளியங்குளம் ஆசுபத்திரியிலும் ஒரு கேள்வி. வாழ்க்கைக்கும் மறக்கவே முடியாது.

நெசமாலுமே வாழ்க்கையின் லட்சியம் என்னான்னு இன்னிக்கு வரைக்கும் எனக்குத்தெரியாது. அப்ப உங்களுக்கு?

Friday, December 10, 2010

காவலன் - பாடல்கள் விமர்சனம்

பாடல் - விண்ணைக் காப்பான் ஒருவன்..
பாடியவர்கள்: திப்பு, ஸ்வேதா
எழுதியவர்: பா.விஜய்


கொஞ்ச வருசமாவே கபிலன்தான் விஜய் படங்களுக்கு ஆரம்ப பாடல் எழுதிட்டிருந்தார், ஆச்சர்யமா இந்த முறை பா.விஜய்க்கு குடுத்திருக்காங்க. ஆனாலும், வழக்கம் போலவே வரும் ஒரு ஆரம்ப பாடல். ட்ரம்பெட்டில் ஆரம்பம், சரணத்தில் வயலின்கள் என அதே மொட்டையின் பழைய டெம்ப்ளேட். என்ன கொஞ்சம் புதுசா செஞ்சிருககாங்க. ஆரம்ப பாடல் எடுத்து முடிச்சவுடன், கொஞ்ச நாளைக்காவது விஜய் ஓய்வு எடுக்கப் போயாகனும். காடு மேடெல்லாம் உருண்டு புரண்டு பேயாட்டம் ஆடுவாரு. இந்தப் பாட்டும் கொஞ்சமும் குறைச்சலில்லாத ஆட்டத்தைத் தரும். ரசிகர்களை மனசுல வெச்சிகிட்டு எழுதின பாட்டுபோல, விஜயையும் புகழ கூடாது, அதே சமயம் ரசிகர்கனையும் புகழக்கூடாது, பின்னே எத்தனை வருசம்தான் அதையே பண்றதுன்னு வித்தியாசமா ஆண்டவனைப் பாட போயிட்டாங்க. ஆரம்பத்துல இருந்து வரும் ஒரே மாதிரியான தாளம் சலிக்க வெக்குது. ரெண்டாவது சரணத்துக்கு அப்புறம் வரும் குத்துல விஜய் எப்படி ஆடுவாருங்கிற எதிர்பார்ப்பு எகிற வைக்குது. அதே பழைய கள்ளு, பழைய சட்டி, புதுமணம்.

பாடல் : யாரது.. யாரது
பாடியவர்கள்: கார்த்திக் , சுசித்ரா
எழுதியவர்: யுகபாரதி
”ஒரு படத்துக்கு ஒரு மெலடியாவது வெக்கனும், அது வாழ்நாளைக்கும் பேசப்படற பாட்டா இருக்கனும்” இதுதான் வித்யாசாகரிடம் பழகியவர்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை. பாடியது கார்த்திக் வேற. சொல்லவும் வேணுமா? அட காந்த குரலழகி சுசித்ராவும் சேர்ந்தா.. ஆனா சுசித்ராவின் குரல் சும்மா ஹலோமட்டும் சொல்லிட்டுப் போயிடறாங்க :( ரெண்டாவது சரணத்துக்கு முன்னாடி தன்னோட ஹஸ்ஸி குரலில் ஒரு ஹம்மிங். காதல் தாபத்துல பாடுற மாதிரியான பாடல். ஐயா சித்திக், இதுல விஜய ஆடவெச்சிராங்க. நல்ல மெலடி.. மோனிஷா என் மோனலிசா படத்தில் டீ ஆரின் “ஹலோ ஹலோ” பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்கத்தான் முடியவில்லை.



பாடல் : ஸ்டெப் ஸ்டெப்
பாடியவர்கள்: பென்னி தயாள் , மேகா
எழுதியவர்: விவேகா


இந்தப் பாட்டுக்கு இசையமைச்சது விஜய் ஆண்டனியோன்னு சந்தேகப்படுற அளவுக்கு ஆரம்ப இசையும், இசைக் கோர்வையும். ”நிலாவே வா”அஃதே அஃதே வில ஆரம்பிச்ச ஆட்டம் இந்தப் பாட்டிலும் தொடருது. மேற்கத்திய இசையில் ஒரு களோபரமே நடந்திருக்கு. விஜய் ஆட்டத்தை மட்டுமே எதிர்பார்த்த பாடல். வித்தியாசம் பண்ணியிருக்காரு விதயாசாகர். வழக்கமா விஜய் பாட்டுன்னாவே போற்றித்தான் பாடனுமா? யூ டூ விவேகா?

பார்க்கதான் சிறுபுள்ள..கலக்குற பயபுள்ள..
இளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை
ஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.
என்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை

பாடல் : சடசட சடசட
பாடியவர்: கார்த்திக்
எழுதியவர்: யுகபாரதி

மீண்டும் கார்த்திக், யுகபாரதி. டிபிகல் கார்த்திக், வித்யாசாகர் பாடல். இதென்ன யுவன் பாட்டு மாதியிருக்கேன்னு கேட்கத் தோணுது. மீண்டும் மேற்கத்திய சாம்ராஜ்ஜியம். புல்லாங்குழல் வரவேண்டிய இடத்தில் கூட கீபோர்ட். ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் அதே துள்ளல், வேகம் உள்ள பாட்டு. கோவில் படத்துல ஹாரிஸ் போட்ட “சிலுசிலுவென தென்றல் அடிக்குது” சாயல் ரொம்பவே பல்லவியில தெரியுது. அதுதான் மனசுல நெருடுது.

”காதல் தெருவிலே என் ஆசை அலையுதே நீங்க நினைவினிலே நிழல் கூட வெளுக்குதே”
”குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை குத்துதே”

யுகம், வேகம், வித்யாசாகரின் துள்ளல். நல்லதொரு பாடல்.


பாடல் : பட்டாம்பூச்சி
பாடியவர்: கே.கே, ரீட்டா
எழுதியவர்: கபிலன்

ஆரம்ப பாடல் இல்லைன்னா என்ன, எனக்கும் ஒரு வாய்ப்பு வருமென கபிலன் காத்திருந்திருப்பார் போல. semi beatல் ஒரு காதல் பாடல். மீண்டும் 90களில் பாட்டமைத்தது போலவே இந்தப் பாட்டும். இந்தப் பாட்டி பண்பலைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காதலர்களின் தேர்வா இருக்கும் பாடல். அரசியலுக்கு உள்குத்து வெச்சும் ஒரு வரி. தெரிஞ்சே செஞ்சிருப்பாங்களோ?  இந்தப் பாட்டே எனக்கும் புடிச்ச பாட்டு, திரும்ப திரும்ப ஓடிட்டு இருக்கு.

”அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..”


ஒட்டுமொத்தமாக பார்க்கும்பொழுது, 4 வருடங்களாக விஜய்க்கு முன்னுரிமை தந்தே வந்த பாடல்களைக் கேட்டு கேட்டு சலிச்சுப் போன நேரத்துல நல்லவிதமாய், வித்தியாசமாய் அமைந்த பாடலகள். இது விஜய்க்கும், வித்யாசாகருக்கும் மிக முக்கியமான படம். ரெண்டு பேருக்குமே ஒரு hit தேவைப்படற நேரத்துல வித்யாசாகர் தனக்கு குடுத்த வேலையை திருப்திகரமா முடிச்சுட்டாரு. அப்ப விஜய்?

Rating : 3.5/5

தமிழோவியத்துக்காக எழுதியது

Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, December 8, 2010

சுவாரஸ்யமில்லாத கவிதைகள்

தலைக்குளித்து பொட்டிட்டு,
சாமி கும்பிட்டு அவள் வருகையில்
கேட்காத வரம் எனக்கே கிடைக்கிறது,
சாமிக்கு ஏனிந்த ஓரவஞ்சனை?
----00----


பூக்களெல்லாம் ஒன்றுகூடி
வண்ணத்துப்பூச்சி மேலமர்ந்து
தேன் குடித்தது
பூச்சூடி வருகிறாள் காதலி

----00----

அவசர அவசரமாய் நீ
ஒப்பனை செய்துகொள்வதை
உள்வாங்கி வெட்கம் கொப்பளிக்க
பிரதிபலித்தது ஸ்கூட்டியின் கண்ணாடி!

----00----


க்ரேயான் கொண்டு படம் வரையவும்,
கிதார் பழகவும், கராத்தேவும் கற்றுக்கொள்ள
ஆரம்பித்திருக்கிறேன்,
சின்னவயதில் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறியது
நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்ததும்
கேலியும் கிண்டலும் சரியாகவே காதில் விழுகிறது,
என்ன செய்ய இப்பவும் செய்யவில்லையெனில்
எப்பொழுது ஆசைப்பட்டதை செய்ய?

----00----



ஸ்கூட்டியில் நீ!
நான் உன்னைத் தொடர
கண்ணாடியில்,
நானறியாமல் நீயும்
நீயறியாமல் நானும் பார்த்துக்கொள்ள
இருவரையும் ஒருங்கே பார்த்து சிரித்தது கண்ணாடி

----00----

Monday, December 6, 2010

இசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி?

கொஞ்ச காலம் இந்தத் துறையில் இருந்ததால எனக்கு கொஞ்சம் இதைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருந்தேன்.

இசையமைப்பாளருங்க எல்லாம் முழுமையான இசை தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாது. அதாவது எல்லா வாத்தியத்துக்கும் Notes எழுதி குடுக்க. கார்த்திக் ராஜாவுக்குதான் தமிழ்ல அதிகமான வாத்தியத்துக்கு குறிப்பு(Notes) எழுதித்தர முடியும். இசையமைப்பாளருங்களே குறிப்ப எழுதிக் குடுத்தாதான் அவுங்க அனுபவிச்ச உணர்வு கிடைக்கும்.

சில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க. உதாரணம் ஆதித்யன், இமான். இவுங்களுக்குத்தான் இந்த மாதிரி காப்பி விளையாட்ட விவரமா பண்ணத்தெரியும். Sound Eng இல்லாட்டி காப்பி அடிக்கிறது 'ஈ அடிச்சான் காப்பி' மாதிரி ஆகிரும். அதுக்கு உதாரணம் தேவா. அப்படியே சுட்டுப் போடுறது. சரி, எப்படி எல்லாம் மெட்டுக்களைச் சுடுவாங்க (என் அறிவுக்கு எட்டிய வரையில)
  • பழைய பாட்டுக்களை கேட்டு அப்படியே சரணத்தை பல்லவியா போடுறது(Vice Versa). இதுக்கு காரணம் தமிழ் Nativity கெடைக்கும்னு சொல்லிக்கிறது (திருடா திருடி- வண்டார் குழலி)
  • ஆங்கிலப் பாட்டுக்களை கேட்டு அப்படியே தமிழ்ல சுட்டுப்போடுறது. ஆதாரத்தோட கேட்டா Inspirationனு சொல்லிடறது, இது பக்கா குழந்தைத் தனம்(முகவரி- ஆண்டே நூற்றாண்டே..)
  • இதுக்கு மேல ஒரு புத்திசாலித்தனம் இருக்கு. அதாவது ஸ்பானிஸ், சீனா, அல்ஜீரியா, இப்படி நம்ம ஊர் மக்கள் கேட்காத பாட்டுக்களை சுட்டுத்தர்றது. இதுக்கு ஒரு தனி கலை வேணும். இது பெரும்பாலும் உதவியாளருங்கத்தான் பண்ணுவாங்க. சீக்கிரம் பண்ணிடலாம், காசும்தான். நான் இதுல செம கில்லாடி, பல பாட்டுக்களை அள்ளித்தந்திருக்கேன். MP3 தேட மட்டும் திறமை வேணும். நாம தான் கூகிளு, யாஹூ, அல்டாவிஸ்டா எல்லாத்துலேயும் U டர்ன் அடிச்சவங்களாச்சே. FYI, altavista is the best of mp3 search.
  • அடுத்தது உதவியாளருங்ககிட்டே இருந்து வாங்கிக்கிறது/புடிங்கிக்கிறது. இதுதான் நம்ம ஊர்ல ஜாஸ்தி, காரணம் புதுசாவும் இருக்கும், மாட்டிக்கவும் மாட்டோம். என்ன அந்த நாசமா போன மெட்டு போட்டவங்களுக்கு கொஞ்சம் பணம் தரனும், யார்கிட்டேயும் சொல்லிடாம பார்த்துக்கனும். (ஹாரிஸ் உருவான காரணம் இது)
  • Freelanceஆ தரவங்க கிட்ட காசு குடுத்து வாங்கிக்கிறது. அதாவது ஒரு குப்பன் நல்ல மெட்டு வெச்சிருந்தாருன்னா 5 ஆயிரத்தை குடுத்து வாங்கிக்கிறது. அவ்ளோதான். குப்பனும் பேச முடியாது, copy rights பிரச்சினையுமில்ல. இதுல காசு குடுக்காம ஏமாத்தினா சங்கர்(கணேஸ்) மாதிரி சில சம்பவங்கள் நடக்கும், கலீஜ் கூட ஆவும், குப்பனுக்கு காசு குடுக்கலைன்னா கோவம் வரத்தானே செய்யும்?
  • இப்போ Sound Eng வெச்சிகிட்டே மெட்டு போடுறது. அதாவது ஒரு பாட்டை எடுத்து ரிவர்ஸுல ஒட விடறது, அப்புறமா ஒட்டு போட்டு ரெடி பண்ணிட வேண்டியது. இது ரொம்ப நல்லா வர மேட்டரு. அதான் Sound Eng சீக்கிரமா இசையமைப்பாளருங்க ஆகுற ரகசியம். (முத்து-ஒருவன் ஒருவன் முதலாளி- சன் டிவி theme music , relatedஆம். பசங்க சொன்னாங்க)
  • கடைசியா இருக்கிறது ரொம்பச் சுலபம், வேத்து மொழியில ஹிட் ஆன பாட்டுகளோட மெட்டை இங்கே போட்டுக்கிறது. Globalisationல சீக்கிரம் கண்டு புடிச்சிடறாங்க.
இது எல்லாம் நான் அங்கன இருக்கும் போது இருந்துச்சு. Technology has improved very much இல்லீங்களா. உங்களுக்கு இது மாதிரி் ஏதாவது தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க.

Thursday, December 2, 2010

பேப்பருல வந்த என் போட்டா

(inspired by காணமல் போனவனை பற்றிய அறிவிப்பு by இராமசாமி)
நான் வீட்டை விட்டு ஓடிவந்து
பல மாசம் ஆகிப்போச்சு
குடிச்சுப்புட்டு அப்பா அடிச்சானேன்னு
கட்டையெடுத்து நொங்கிப்போட்டு
திருட்டு ரயிலேறி இங்க வந்தேன்
நானிருக்கும் ஊரில்
என்னைத் தெரிஞ்சவங்க யாருமில்லை
எனக்குத் தெரிஞ்சவங்களும் யாருமில்லை
ஊர்திரும்பிப் போகவும் ஆசைதான் எனக்கு!

எச்ச எலை எடுத்தாலும் கூப்பிடாம போவ
பாலாப் போன கெளரவம் தடுக்குது.
மாட்டுத் தரகன் சித்தப்பா இந்த ஊருக்கு
அடிக்கடி சந்தைக்கு வருவாராம்
சந்தையன்னைக்கு நானும் போய்பார்த்துகிட்டுதானிருக்கேன்


லாரி கிளீனர் தங்கராசுவாச்சும் வருவான்னு
பாத்துகிடக்கேன், பாவி மவன்
இந்த ஊருக்கு எப்ப வருவானோ தெரியல.
யாராவது என்னைப் பார்த்து ஊரில்
என்னைப் பத்தி சொன்னால் கோவத்தோட அப்பாவோ,
கண்ணீரோட அம்மாவோ வருவாங்கன்னு பார்த்தேன்.

அறிஞ்சவரும் ஆருமில்லை, தெரிஞ்சவங்களும் ஆருமில்லை
கண்டவனெல்லாம் ஏசறாங்க இங்கே
இதுக்கு அப்பன்கிட்ட படிக்காததுக்கு மிதி வாங்கி சாவலாம்.
துரைக் கடையில படிய வாருன தலையோட, திருநீறு வெச்சி
எடுத்தப் போட்டா கண்ணாடி மூலையில சொறுகியிருக்கும்
பேப்பருல காணாம போன பக்கத்துல
அந்தப் போட்டோ வருமான்னு தெனமும் பார்ப்பேன்..

அந்தா நாளும் வந்திச்சு அப்பன் செல்போன் கூட போட்டிருந்துச்சு
பாவி மவன் ஒருத்தன் பஜ்ஜி எண்ணெயெடுக்க அதையும் கிழிச்சுபுட்டான்.
அப்பனுக்கு நானே போன் பண்ணி சொல்லிபுட்டேன்,
வந்த அப்பன் நேரா மொதலாளிகிட்ட போனான்
“சம்பளத்தன்னிக்கு வந்து காச வாங்கிக்கிறேன்”ன்னு சொல்லிபுட்டு
என் கணக்குல பஜ்ஜி தின்னுட்டு போனான்.
தீவாளிக்கு வீட்டுக்கு வரச் சொன்னான் வக்காளி,
மொதல்ல அந்தப் போட்டாவை கிழிச்சுப் போடனும்..

ManMadhan Ambu Songs review

இடம் : recording Theater
கமல் உள்ளே வேகமா வருகிறார்,DSP அதைவிட வேகமா எழுந்திருச்சு நின்னு
DSP :வணக்கம் சார்.

கமல்:ஆங், நமஸ்காரம் தேவிபிரசாத் காரு, பாகுன்னாரா?

DSP :நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க.

கமல்:பாகுன்னாமு. மஞ்ச்சு....

DSP :சார், தமிழ்லயே பேசிக்கலாமே.

கமல்:yes, we will. எந்த மாதிரி பாட்டு கேட்டாரு, கேஎஸ் ரவிக்குமார்?

DSP : இன்னும் கேட்கலை சார், நீங்க வர்ற வரைக்கும் காத்திருக்கனும்னார். அதான். நீங்க எப்படி எப்படி சொல்றீங்களோ அப்படியே போட்டிரலாம் சார். ஏன்னா நான் உங்களைப் பார்த்து வளர்ந்தவன்.

கமல்:ஹ்ஹ்ம். ரவி நீங்க Situation சொல்லுங்க.

கேஎஸ்ரவிக்குமார் situation சொல்ல.

DSP : தந்தானானா நே. தாஅனானானா

கமல்: தந்தானானா நே. தாஅனா ந்னு இருந்தா நல்லா இருக்கும். அதுக்கு பதிலா தானானா தானானா வெச்சிக்கலாம். அப்படியே நானே பாட்டும் எழுதி பாடிடரேன், நீங்க ரெண்டு பேரும் வெளியே வெயிட் பண்ணுங்க.

இப்படிதானாயிருக்கும் மன்மதன் அம்பு பாட்டு வாங்கின லட்சணம்.
Same Kamal and Same DSP. இரண்டு பேரும் சேர்ந்து பால் கறக்கப் போன கதை கடைசி வரியில இருக்கு படிச்சுப் பாருங்க.


------------------------000----------------------
பாடல்: தகிடு தத்தோம்
எழுதிப் பாடியது: கமல்

ஒரே தத்துவம்தான் போங்க இந்தப் பாட்டுல. "போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா, வேணுமின்னா போயி நின்னீன்னா காக்க வெப்பாண்டா", "சாம, பேத, தான தண்டம் நாலும் சேர்ந்து தோத்துப் போகும் போது தகிடு தத்தோம்", "நல்லவன்னு யாரைச் சொல்ல, கெட்டவன்னு யாரைச் சொல்ல, நல்லவனைக் கெட்டவனா மாத்துறவந்தான் கெட்டவன்" இப்படி பாட்டு முழுக்க ஒரே தத்துவம்தான். பாட்டுல ரெண்டாவது சரணத்துல கம்யூனிஸமும் வந்துருது. ஷ்ஷ் ஷ் அப்பா தாங்க முடியல.

Who's the hero…
பாடியது: ஆண்ட்ரியா
எழுதியது: கமல்ஹாசன்

தமிழில் இப்படி ராக் & ரோல் பாட்டு கேட்டு வெகு காலமாச்சுங்க, ஒரு காலத்துல கலக்கோ கலக்குனாங்களே உஷா உதூப் (அவுங்க படத்துல நடிச்சிருக்காங்க) பாடின மாதிரியே இருக்கு. அருமையான குரல், இசை கோர்வையும் அருமை. rock and rollக்கு Pipe மிக முக்கியம், DSPன் கோர்வை பிரமிக்க வெக்குது. அசத்தல் DSP & Andrea கூட்டணி. உஷா உதூப் இந்தப் பாட்டுக்கு உதட்டசைக்க கமலின் ஆட்டத்தை எதிர்பார்க்கனும். ரசிகர்களுக்கு விருந்து தருவாரா கமல்?

பாடல் கவிதை:
எழுதியது: கமல்
கவிதை (பாடியது): த்ரிஷா, கமல்


ஒரு விபச்சாரப் பெண் தன்னோட வாடிக்கையாளரிடம் பேசுவது போல அமைந்திருக்கும் இந்தக் கவிதை(ப்) பாடலில் புரிவது ஆச்சர்யமான விசயம். முதலில் கவிதைச் சொல்லும் த்ரிஷா வாடிக்கையாளர்களிடம் மனசளவுல தள்ளி இருக்கிறது, அவுங்க நடவடிக்களைச் சொல்ல, கவிதைப்போடு வருது. இதுக்கு நடுவுல

"ஓ..நீங்க பக்திமானா ?
ஆ…அதெல்லாம் இல்லீங்க, நான் புத்திமானாங்கிறங்கிறதே கேள்விகுறியா இருக்கு.."

இப்படி தன்னோட செருகலையும் கமல் வெச்சிருப்பது ச்சும்மா ச்சும்மா எல்லா படத்திலேயும் சொல்றது ஒரே அலுப்பாவும், அயர்ச்சியாவும் இருக்கு. கமலும் சொல்லும் கவிதை, ஒரு பெண் கடவுளிடம் தனக்கு வரும் கணவன் எப்படி இருக்கனும் வேண்டி விரும்பி வரம் கேட்கிறா மாதிரி இருக்குங்க. இருவரில் ரஹ்மான் செய்த அதே Bass வெச்சி இதற்கு இசையமைச்சதும் கொஞ்சம் பழைய நெடியும் கூட.
கவிதை வரிகளை ஏற்கனவே பதிவா போட்டாச்சு. படிக்க இங்கே க்ளிக்கவும்
ஒரு நல்ல கவிதை, இல்லே சுமாரான கவிதை, இல்லை கவிதை..கவிதை கவிதை..

பாடல்: நீல வானம்
எழுதிப் பாடியது: கமலஹாசன்




ஒரு பியானோ, ஒரு வயலின், ஒரு கோரஸ், ஒரு கமல், ஒரு கிதார் போதும்னு நினைச்சு பாட்டு எழுதி இசையமைச்சிருக்காங்க. மெட்டில் சரியா உக்காராத வார்த்தைகளும், கமல் பாடிய பழைய பாடல்களும் ஏதோ ஞாபகத்துக்கு வந்துட்டு போகுது. ஹ்ம்ம்.. இதுவும் ஒரு பாட்டு படத்துல இருக்கு.

பாடல்: ஒய்யாலே
பாடியது: முகேஷ், சுசித்ரா
எழுதியது: விவேகா

B&Cயில இந்தப் பாட்டுக்கு ஆட்டம், பாட்டமா விசில் பறக்கும். ஆச்சர்யமான விசயம் DSP ஆர்மோனியத்தை சரியானபடி உபயோக படுத்தியிருப்பது. நல்ல ஒரு குத்துப் பாட்டு, DSPக்கு புடிச்ச முறையில விட்டு பாட்டை வாங்கியிருக்காங்க. இந்தப் பாட்டுல கமலோட செருகல் எதுவுமில்லாததே வித்தியாசமா இருக்கு. DSPன் குத்துகளின் வரிசையில் இந்தப் பாட்டும் இடம் புடிக்கும்.


பாடல்: மன்மதன் அம்பு
பாடியது: DSP
எழுதியது: கமல்

வழக்கமா, இசையமைப்பாளர்கள் பாடுற பாட்டு எப்பவுமே ஹிட்டாகும், வேற மாதிரி சொல்லனும்னா ஹிட் ஆகுற பாடல்களை இசையமைப்பாளர்களே பாடிருவாங்க. இதுவும் விதிவிலக்கில்லாத பாட்டு. வழக்கமான DSP, வழக்கமான beats.. சேம் ஓல்ட் DSP. மேடைகளில் DSP செய்யும் அதே குறும்பும் இதுல அடங்குது. very lively Song.







------------------------000----------------------
படம் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டதினால கொஞ்சம் வயலின் எல்லாம் அதே பாணிக்கு மாத்தி செஞ்சிருப்பது அருமை. கமல் படங்களில் கமலின் ஆதிக்கமிருக்கும்னு எல்லாருமே தெரியும். இந்தப் படத்தின் பாடல்கள்ல அது ரொம்பவே அதிகமா தெரியவதே அயர்ச்சி.


DSP & கமலஹாசன் என்னும் ரெண்டு புலிங்க சேர்ந்து பூனைப் பால் கறந்த கதைதான் 'மன்மதன் அம்பு' பாடல்கள்.


Rating: 2.5/5

தமிழோவியத்துக்காக எழுதியது - அசல் இங்கே

Wednesday, December 1, 2010

Aids Day- பதிவர்களின் பங்கு?

இன்னிக்கு உலக எயிட்ஸ் தினம்.


நண்பர்களே,


இது ஒரு ச்சும்மா முயற்சி. எயிட்ஸுக்காக நம்ம (பதிவர்கள் சார்பா) ஒரு வாக்கியம் ( Slogan) கொண்டுவரலாமா?. நாம ஏற்கனவே “புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா” ” எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”, ”தில்லு துரை” இதெல்லாம் பார்த்திருக்கோம். சரி, நம்ம சார்பா ஒரு நல்ல வாக்கியம் சொல்லுங்கப்பா. அரசுக்கு அனுப்பி வைக்கலாம். கற்பனை பண்ணிப்பாருங்க உங்களோட வாக்கியம் ஊர் ஊரா, அரசாங்க செலவுல விளம்பரம் பண்ணும்போது ஏற்படப் போற சந்தோசம்? அடுத்து யாராவது விளம்பர நிறுவனம் உங்களை கொத்திட்டு போயி பெரிய வேலை குடுக்கலாம்(இப்படியெல்லாம் கூட நடக்காலாமே..:)).





சங்கை நாம ஊத ஆரம்பிக்கலாம். நாட்டுக்கு நம்மாளான ஒரு தொண்டா இருக்கட்டுமே. சும்மா ‘நச்’னு மக்களுக்கு சுலபமா மண்டையில அடிச்சா மாதிரி இருக்கனும்.


சரி, என் பங்குக்கு


”மாட்டலைன்னா மாட்டிக்குவீங்க”

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)