Tuesday, October 27, 2009

சாராயம், சர்தார்

டிஸ்கி: இது பக்கா காப்பி - பேஸ்ட் மேட்டருங்க. வாரமலர்ல ஒரு நாள் போட்டிருந்தாங்க. பதிவு போடாத போது உபயோகப்படுத்திக்கலாமேன்னு சேமிச்சது. நன்றி வாரமலர்.

"சாராயத்தில் பலவகை உண்டாம் ஓய்... "அடுகள்'ங்கற பெயருல சங்க காலத்திலேயே சாராயம் புழக்கத்தில் இருந்து தாம். பல வகைப் பழங்கள ஊறலாக்கி, அதை வடிச்சு சாராயம் குடிக்கும் பழக்கம் 17ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்துதாம்... "விறலி விடு தூது'ன்ற புஸ்தகத்துல இத எழுதி இருக்கா... "சாரம்'ங்கறது தான் சாராயம் ஆச்சாம்...


"பிராந்தி, விஸ்கி இதெல்லாம் முதல்ல, நெதர்லாந்து நாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு இறக்குமதி செஞ்சாளாம்... "நாட்டுச் சாராயம், கருப்பட்டி, வெல்லம், பேரீச்சம்பழம், வாழைப்பழம், தேங்காய், பனை - தென்னையிலிருந்து வடிக்கப்படும் கள், அரிசி ஊறல், கரும்புச்சாறு இதெல் லாம் ஊற வெச்சு நம்மூர்ல சாராயம் காய்ச்சினாளாம்...
"பட்டைச் சாரயம்ங்கறது என்ன தெரியுமா? "பழவகை, இனிப்புகள போட்டு, அந்த ஊறல் நாத்தமெடுத்து, சுவை கெட்டுப் போகாம தடுக்க, ஊறலோட, கருவேலம்பட்டை, வேப்பம்பட்டை போன்ற மரப்பட்டைகள் சேர்த்துப் போடுவாளாம்...


"அதனால தான் இது பட்டை சாராயம் ஆனதாம்... தேங்கா சாராயமும், பட்டைச் சாராயமும் உயர்ந்த சரக்குகளாம்... இலுப்பப் பூவை ஊற வைச்சு இலுப்ப சாராயமும் செய்தாளாம்...' என்றார்!


"இத்தோட, இப்பெல்லாம், ஊருக்கு ஊர், சுடுகாட்டிலும், வயற்காட்டிலும் காய்ச்சப்படும் கள்ளச் சாராயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்க... அப்பத் தான் சாராயப் பட்டியல் நிறைவு பெறும்...' என நான் கூற, வீரப்பா சிரிப்பு சிரித்தார் குப்பண்ணா!


சர்தார்:


இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் அது. அப்போது இந்தியாவில் விளைந்த அரிசிக்கு உலகச் சந்தையில் கிராக்கியே இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் பாஸ்மதி அரிசி அதை விடச் சுவைமிக்கது. பிரிவினையின் போது பாஸ்மதி விளைந்த நிலப்பகுதிகள் பாகிஸ்தான் வசம் சென்று விட்டன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் விவசாயத்துக்குப் புகழ் பெற்றது. அவர்களின் அடிப்படைத் தொழிலே விவசாயம்தான். தங்களின் அரிசிக்கு உலக மார்க்கெட்டில் மதிப்பில்லாதது அவர்களை ரொம்பவே பாதித்தது. ஆனால் அவர்களிடம் பாஸ்மதி அரிசியின் விதைகள் கூட இல்லை. என்ன செய்வது? பஞ்சாப் மாநில சர்தார்ஜி விவசாயிகள் ரகசியமாக ஒன்று கூடினார்கள். எல்லை தாண்டி உள்ள பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி விதை நெல்லைக் கொண்டு வருவது என்று முடிவு செய்தார்கள். அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. எல்லையில் உள்ள இருதரப்பு ராணுவத்துக்கும் கொடுக்கக் கூடிய லஞ்சப் பணமே கோடிக்கணக்கில் ஆகும்.

சர்தார்ஜிக்கள் அசரவில்லை. பஞ்சாபின் அனைத்து விவசாய கிராமங்களிலும் இதற்கான நிதி ரகசியமாகத் திரட்டப்பட்டது. தேவைப்பட்ட பணம் வசூலாகச் சில வருடங்கள் பிடித்தன..ஒரு நாள் நள்ளிரவு, பாகிஸ்தானிலிருந்து நாற்பது லாரிகளில் பாஸ்மதி விதை நெல் மூட்டைகள் எல்லை கடந்து பஞ்சாப் வந்தன. பாஸ்மதி விவசாயமும் கோலாகலமாக ஆரம்பித்தது. சர்தார்ஜிக்கள் உடனடி லாபத்தை எண்ணி அறுவடையை சந்தைக்கு அனுப்பவில்லை. எதிர்காலத்தை மனதில் வைத்து விதை நெல்லை சேமிப்பதற்காக அடுத்த சில வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். அடுத்த சில வருடங்களில் அந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்தது. உலக அரிசிச் சந்தையில் இந்திய பாஸ்மதி அரிசி விற்பனையில் பாகிஸ்தானை ஓரம் கட்டியது. ராங் ரூட்டில் சென்றாலும் சர்தார்ஜிக்கள் சாமர்த்தியமாய் செய்துகாட்டிய பெரும் சாதனை இது. அப்படிப்பட்ட புத்திசாலி காரியக்காரர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!

6 comments:

  1. டாஸ்மாக்னு நெட்ல போட்டா அந்த படம் மட்டும் தான் வருது இல்லையா ?

    ஹி ஹி

    ReplyDelete
  2. //டாஸ்மாக்னு நெட்ல போட்டா அந்த படம் மட்டும் தான் வருது இல்லையா ?//
    கண்டிப்பா, TASMAC படம்னு நிறைய மேலேத்தனும். யாராவது ஏத்துங்கப்பா? சரக்கு ஏத்திட்டா மட்டும் போதாது. படமும் ஏத்துங்கப்பா

    ReplyDelete
  3. நல் வணக்கங்கள்...
    “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி...
    மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவினரால், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு முதல் பரிசாக ரூபாய். 2,000/- (இந்திய ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்படும்
    மேலதிக விபரங்களுக்கு
    http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

    ReplyDelete
  4. இளா,

    நான் பதிவுப்பக்கம் எட்டிப்பார்க்காத காலத்தில போட்டப்பதிவு போல, நான் பார்த்திருந்தால் கொஞ்சம் விளையாண்டு இருப்பேன் :-))

    thomas parry என்ற ஐரிஷ்காரர் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்காலத்திலேயே இந்தியாவில் சரக்கு தயாரிக்க ஆரம்பிச்சது தான் "EID parry" =east India Distillaries என்ற நிறுவனம், இந்தியாவின் முதல் சர்க்கரை மற்றும் சாராய ஆலை.வெள்ளையர்களின் மதுபானத்தேவைக்காகவே ஆரம்பிக்கப்பட்டது.

    நீங்க சொல்லும் நெதர்லாந்து இறக்குமதி கொஞ்சகாலத்திற்கு இருந்து இருக்கலாம்.


    நம்ம ஊரு சரக்கு அதனால் நாட்டு சாராயம் எனப்பட்டது.

    நீங்க சொன்னது போல சாராயம் காச்சியது போல தேனை மட்டும் கொண்டு ஒரு உயர்வகை மதுபானம் தயாரித்துள்ளார்கள், அவ்வையார் காலத்திலே தேனை மண்ணுக்குள் புதைத்து ஊரல் போட்டுள்ளார்கள்,

    அவ்வையார் "தேள்கடுப்பதன்ன நாள் படு தேறல்னு" தேன் கொண்டு செய்யும் மதுவின் போதை ஏறுவதை சிலாகித்து சொல்லியுள்ளார்.

    அவ்வையாரும் ,அதியாமனு ஒன்றாக சரக்கு அடித்துள்ளதாக அவரே பாடலில் கூறியுள்ளார், நல்ல மதுவை முதலில் நமக்கு பருக கொடுத்து பின்னரே அதியன் குடிப்பான் என கொடைத்தன்மையை பாடியுள்ளார், யாரேனும் தமிழ்ப்புலவர்கள் வந்தால் சங்கப்பாடலையும் பாடுவார்களாயிருக்கும் :-))

    ------

    டாஸ்மாக்னு போட்டா பெங்களூரூவில் இருக்கும் ஒரு மேலாண்மைகல்லூரியின் தளமே முதலில் வரும் ;-))

    ---------

    பாசுமதி அரிசி பற்றியது வரலாறாக இருக்க வாய்ப்பில்லை, இதற்கு ஆதாரம் இருக்கிறதா?

    ஏன் எனில் பாஸ்மதி இந்தியாவின் நேட்டிவ் அரிசி வகை. பஞ்சாப்பில் மட்டுமில்லாமல் உத்திரப்பிரதேசம், காஷ்மீர், அப்படியே மேற்கு வங்கம் வரைக்கும் கூட விளையும்.

    தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல்லான சீரக சம்பா எல்லாம் பாசுமதிக்கு சொந்தக்காரங்க தான்.

    எனவே பாசுமதி விதைநெல்லே இல்லாமல் பஞ்சாப்பில் கடத்தினார்கள் என்பது நம்ப முடியாத தகவல்.

    ReplyDelete
  5. வவ்வால், நன்றி!...

    உண்மையாவே சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சா சந்திக்கனும்...

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)