Tuesday, December 2, 2008

NJ Bloggers Meet-2008

டிஸ்கி: தமிழ்மணத்திற்காக வெச்ச தலைப்பு : லக்கியும் செந்தழலும்தான் காரணமா?

வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணினது இதுதானுங் மொதோ முறை. இதுக்கு முன்னாடி ஒரு போனைப் போட்டு இங்கே வந்துருங்க, சாப்பாடு ரெடி அப்படின்னு சொன்னாப் போதும். ஆனா இந்த முறை பல முகங்களை பார்த்ததே இல்லே. அதனாலயே கொஞ்சம் நெருடல்.

முதல்ல நன்றியுரை:
'தமிழோவியம்' கணேஷ் சந்திரா, சத்யராஜ் குமார், ஜெய். இந்த மூணு பேருக்குமே எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அப்புறம் சஹானாவும் அவுங்க அம்மாவுக்கும். என்ன பேசினாலும் கேட்டுகிட்டு பொறுமையா இருந்தாங்க. (ச்சின்னப்பையன், உங்க வீட்டுல புதுசா பூரிக்கட்டை வாங்கியிருக்கீங்களாமே. உண்மையா?)

ஏற்கனவே படம், பதிவெல்லாம் எல்லாம் போட்டுட்டாங்க. இனிமே நான் என்னத்த எழுதறது? .

  • பாபாவின் அரசியல் அன்னிக்கும் அரங்கேறுச்சு, அவர் வரலை. கார் படிக்கட்டுல இடிச்சுக்கிட்டாரோ தெரியலை.
  • சங்கத்து சிங்கம் கப்பி வழக்கம்போல பொய் பேசி ஏமாத்துனாரு, அவரும் வரலை.
  • இனியா, அமரபாரதி ரெண்டு பேரும் வரலை, ஏன்னும் தெரிஞ்சிக்க முடியல. தொடர்பு எல்லைக்கு அப்பாலோ இப்பாலோ.... ஆனா தொடர்பே இல்லே :(
  • மும்பை, ஈழம்-உயிரிழந்த மக்களுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தலாம்னு மோகன் சொன்ன போது ஒரு மாதிரியா.(Uncomfortable) இருந்துச்சு. ஆனா அது எவ்வளவு பெரிய விசயம்னு இப்போதான் தோணுது. HatsOff Mohan.
  • பொதுவா இருக்கிற பதிவர் சந்திப்பு மாதிரி இல்லீங்க இது. அதாவது ரொம்ப மொக்கை கம்மியா இருந்தது. பல விஷயங்களை ஆராய ஆட்களும் இருந்தாங்க. மூத்தப் பதிவர்கள்தான் ஆராய்வாங்களோ?. இதுல நான் மூத்தப் பதிவர் இல்லே முத்தப் பதிவர்தான் அடம்புடிச்சாரு கேஆர்எஸ். தொலஞ்சு போவட்டும்.
  • குழுப்பதிவுகள் வெற்றியடையாம போனதுக்கான காரணம் (Stop - இங்கே செவுப்புச்சட்டை மக்கள் நல்லா கவனிங்க), முதலாளித்துவம் இல்லாதததுதான் சொல்லிட்டாங்க.அதாவது ownership,. அதாவது ஒரு காரணத்துக்காக ஆரம்பிச்சு வேகமா மக்கள் ஒன்னு சேர்ந்து, பிறகு அவுங்க அவுங்க பதிவுலயே எழுதிக்கலாம்னு போயிடறதாலயும், தன்னோட பதிவுக்கு lime light தேவைங்கிறதுக்கும், admins எல்லாம் சீக்கிரமே ஆர்வம் இழந்திடறதும் காரணம். உண்மைதாங்க 2006ல எத்தனை குழுப்பதிவுகள் ஆரம்பிச்சாங்க. அதுல எத்தனை இப்போ செயல்ல இருக்கு?
  • சேவைகள் பதிவுகள் மூலமா செய்யலாமேன்னு மொக்கைச்சாமி கேட்க, ஒரு குழுவா இருந்து செய்ய பதிவுகள் தேவை இல்லை, குழுதான் தேவை. அதுக்கு மக்களே போதும்னு சொல்ல எல்லாரும் கப்சிப். அதுவுமில்லாம எதிர்வினைகள்தாங்க பதிவுகள்ல நல்ல விஷயம் செய்ய விடாம தடுக்குதுன்னும் காரணம் சொன்னாங்க. (பேரை மாத்துங்க மொக்கைச்சாமி ஐயா, பழைய போலி பேருதான் மொக்கைச்சாமி. உங்கப் பேரைக் கேட்டாவே ச்சும்மா உதறுதுல்ல)
  • செந்தழல், லக்கி entry க்கு அப்புறம்தான் நேரடித்தாக்குதல் அதிகமாச்சுன்னு சொல்ல அறையில் ஒரே நிசப்தம். இன்னும் காண்டு கஜேந்திரன் வந்திட்டுதான் இருக்குன்னு மனசுல நெனச்சுக்கிட்டு நானும் மண்டையா ஆட்டிக்கிட்டேன். ஆனா லக்கியோட பார்வையும் Graphம் இதை கண்டிப்பா மாத்திப்போட்டுரும். ஆனா இன்னிக்கு ரவியும், லக்கியும் வேற பாதையில ஜரூர போய்ட்டு இருக்காங்க, மத்தவங்க? ரவி கிட்டேயாவது தாக்குறதுக்கு சமமமா ஹாஸ்யப்பதிவுகள் வந்துச்சு. ஆனா இப்போ அப்படியா இருக்கு? நேரடித்தாக்குதல் பதிவு போடுறவங்களுக்கு- மக்களை நேராப் பார்த்தா எப்படி பேசமுடியும்னு யோசனை பண்ணி பதிவு போடுங்க.
  • மொக்கைக்கான காரணம், பலதும் அலசுனாங்க, காயப்போட்டாங்க. கடைசியில சுலுவா முடிச்சாரு கொத்ஸ். அதாவது செய்திய copy-paste பண்றதுதான் காரணம்னு சொன்னாரு. நானோ அதை விமர்சனம் பண்றதுதான் மொக்கைக்கு காரணம்னு சொன்னேன். செய்திய எல்லாரும் விமர்சனம் பண்ணப்போகவே மொக்கையாகிருதுங்களே. (பஞ்ச் பாலா செளக்கியங்களா கொத்ஸ்). போலியப் பத்தி பல புது மக்களுக்குத் தெரியவே இல்லே. எ.கொ.இ.ச. மொக்கைக்கு கொத்ஸ் சொன்ன உதாரணம், பதிவ படிச்சதும் பதிவு போட்டவனோட செவுனிய காட்டி அப்பலாம்னு தோணிச்சுதுன்னா அது மொக்கைப் பதிவு. அதுக்கு கணேசின் பெருத்த ஆதரவு வேற. மொக்க பதிவுக்கு மட்டுமா அப்பலாம்னு தோணுது?
  • ’பதிவை எழுதினதுக்கு உடனே வெளியிட்டா அதனோட தரம் இல்லே, ரெண்டு மூணு நாள் கழிச்சு நீங்களே ஒரு முறை நிதானமா படிச்சு, திருத்தி வெளியிடுங்க, அப்போ அந்தப் பதிவு கண்டிப்பா நல்லா வரும்’னு சொன்னாரு ஜெய். இப்படி பண்ணினா, நானெல்லாம் பதிவே போடமுடியாது. ஆனாலும் நல்ல யோசனைதான். இந்தப் பதிவும் அந்த முறையிலே போட்டு இருக்கேன், வித்தியாசம் தெரியுது.இனிமேலும் பின்பற்ற போறேன்.
  • மருதநாயகத்த காய்ச்ச பல வருசம் காத்திருந்தது, அன்னிக்குத்தான் நிறைவேறுச்சு. பல சமயம் அவரோட பதிவுகளை வாரினேன். நல்ல பதிவுகள் போட்டா படிக்க மாட்டேங்குறாங்க, அதனாலயே மொக்கை பதிவுகள் போடுறேன்'னு வாக்குமூலம் வேற குடுத்தாரு.
  • ச்சின்னப்பையன் பேர்க்காரணமே கலாய்ச்ச மாதிரி ஆகிருச்சு. 'இச்'சின்னப்பையனா எல்லார் கண்ணுக்கும் தெரிஞ்சாரு. மனுசன் பதிவுலதான் அடிச்சு ஆடுறாரு, நேருல.. சத்தமே இல்லே. (இனிப்பு நல்லா இருந்துச்சுங்க Mrs. இச்சின்னப்பையன்)
  • தன்னோட பதிவுகள விமர்சனம் பண்ணுங்கன்னு மோகன் அடம் பிடிக்க, பொதுவுல நிறை/குறை சொன்னா அவரோட எழுத்தோட வீரியத்தையும், வேகத்தையும் குறைக்கும்னு மனசுல நினைச்சுகிட்டு, அவரோட பதிவுகளைப் படிச்சதே இல்லைன்னு 'டகால்டியா' உண்மையச் சொன்னேன். இனிமே இப்படி பொதுவுல கேக்காதீங்க. தவறுகளை மட்டுமே பார்க்கும் சமூகம் இது. கசக்கும் உமிழ்நீர் சுரப்பதில் தவறில்லை, ஆனா அது மருந்தாகவும் இருக்கலாம்.
  • நசரேயன், சத்தமே இல்லாம சிரிச்சுகிட்டே போனாரு, ஒன்னும் விசேசம் இல்லே.
  • ஜெய்-யார்யா இது? ராயர் கிளப்ல இருந்து இன்னி வரைக்கும் இருக்கிற மேட்டரை உள்ளங்கையில் வெச்சுகிட்டு இருக்காரு. எழுதறது இல்லே, படிக்கிறதோட சரின்னாரு.. இவர்தான் அன்னிக்கு ஆட்ட நாயகன். ஏகப்பட்ட சிக்ஸர் அடிச்சாரு(இட்லி வடையா இருப்பாரோ?)
  • ரோஹன் இவரை பத்தி நிச்சயம் சொல்லி ஆகணும்,சென்னை எல்லை கோட்டை தாண்டிய வுடனே எலிசபெத் ராணி பேரன்/பேத்தி மாதிரி பேசும் தமிழ் மக்கள் மத்தியிலே,தமிழ் நாட்டு வாடை கொஞ்சம் ௬ட இல்லனாலும், தமிழ் படிக்கணும்,தமிழ் பேசனுமுன்னு அவர் சொல்லும் போது மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது, அவர் தமிழிலும் பேசிக்காட்டினார், நமிதாவை விட நல்லா தமிழ் பேசுகிறார்-நன்றி நசரேயன். இவரோட உற்சாகத்துக்கு, பலே பேஷ் நன்றி (இப்படித்தான் பேசனும்னு கொத்ஸ் முன்னாடியே சொல்லி கூட்டிட்டு வந்திருப்பாருங்கிறது நுண்ணரசியல்)
  • எல்லா இடத்துலேயும் சந்திப்பு முடிஞ்சு வெளியே வந்து ஒரு சந்திப்பு நடக்கும். அதாவது தம்மரே தம், இங்கே தம்தான் இல்லே. கூட்டமா இருந்ததைப் பார்த்து ஒரு மாமா காருல வந்துட்டு, நோட்டம் விட்டாரு பின்னாடி தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி சும்மாவே திரும்பிப் போனாரு.

ஆக மொத்தம் ஒரு வித்தியாசமான படம் சொல்ற டைரக்டருங்க மாதிரி நானும் சொல்லிக்கிறேன், இதுவும் ஒரு வித்தியாசமான சந்திப்புதான்.

25 comments:

  1. /*நசரேயன், சத்தமே இல்லாம சிரிச்சுகிட்டே போனாரு, ஒன்னும் விசேசம் இல்லே.
    */
    தலை இருக்கும் போது வால் ஆடக் ௬டாது அதுக்குதான்

    ReplyDelete
  2. /*இவர்தான் அன்னிக்கு ஆட்ட நாயகன்*/
    உண்மை

    ReplyDelete
  3. //மொக்கைக்கு கொத்ஸ் சொன்ன உதாரணம், பதிவ படிச்சதும் பதிவு போட்டவனோட செவுனிய காட்டி அப்பலாம்னு தோணிச்சுதுன்னா அது மொக்கைப் பதிவு//

    ஐயோ, இந்தப் பதிவைப் படிக்கும் போது அப்படியெல்லாம் எனக்கு ஒன்னுமே தோனைலைப்பா தோனலை! நம்புங்க! :)

    கொத்ஸ்,
    இளா சொல்றாரு நீங்க வன்முறையாளர்! அப்படியா? :)

    ReplyDelete
  4. தளபதி நசரேயன், அமைதியாக் கச்சேரி செய்யுற இரகம்!! சிரிப்புக்கு பின்னாடி பல அர்த்தம் இருக்கும்!!!

    ReplyDelete
  5. உள்ளேன் ஐயா...
    //ஆக மொத்தம் ஒரு வித்தியாசமான படம் சொல்ற டைரக்டருங்க மாதிரி நானும் சொல்லிக்கிறேன், இதுவும் ஒரு வித்தியாசமான சந்திப்புதான்.//
    வழிமொழிகிறேன்...

    ReplyDelete
  6. இது மொக்கைப்பதிவா இல்ல எங்களோடது மாதிரி தரமானதா?

    நானும் எல்லா பதிவுலயும் பின்னூட்டம் போட்டுட்டேன்.

    ReplyDelete
  7. //இது மொக்கைப்பதிவா இல்ல எங்களோடது மாதிரி தரமானதா?//
    நம்மாள முடிஞ்சது இவ்வளவுதாங்க.உங்க லெவலுக்கு எல்லாம் நாங்க வர முடியுங்களா?

    ReplyDelete
  8. அன்னிக்கு ஜிபிஎஸ் பிலெடெல்ஃபியாப்பட்டிணத்துக்கு வடக்கால வழி சொல்ல மாட்டேன்னு மக்காராயிடுச்சு அண்ணாச்சி :))

    ReplyDelete
  9. //ஒரு மாமா காருல வந்துட்டு, நோட்டம் விட்டாரு பின்னாடி தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி சும்மாவே திரும்பிப் போனாரு.//

    இது வேறேயா!!!

    அப்போ நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தேன்னா, பெரிய கலாட்டாவே ஆகியிருக்கும்னு சொல்லுங்க...

    ReplyDelete
  10. //இப்படி பண்ணினா, நானெல்லாம் பதிவே போடமுடியாது.//

    ;-))))

    ReplyDelete
  11. சில விஷயங்கள் புரியவில்லை என்றாலும் சுவாரஸ்யமான பதிவு.

    அனுஜன்யா

    ReplyDelete
  12. சில விஷயங்கள் புரியவில்லை என்றாலும் சுவாரஸ்யமான பதிவு.

    அனுஜன்யா

    ReplyDelete
  13. //குழுப்பதிவுகள் வெற்றியடையாம போனதுக்கான காரணம் (Stop - இங்கே செவுப்புச்சட்டை மக்கள் நல்லா கவனிங்க), முதலாளித்துவம் இல்லாதததுதான் சொல்லிட்டாங்க.அதாவது ownership//

    அமெரிக்காவுல இருந்துட்டு இப்படி பேச நல்ல நகைச்சுவை உணர்வு வேனும்பா...அங்க பெயிலவுட் பிச்ச எடுக்குற மொதலாளிங்களோட ownership உலக்ம் பூர சிறிப்பா சிறிக்குதே! :-)

    ReplyDelete
  14. அரடிக்கெட்டு வெவரம் தெரிஞ்சா பேசானும் இல்லாட்டி சும்மா இருங்க. Ownershipக்கும் bailoutக்கும் சம்பந்தமே இல்லே. மொதல்ல குழுப்பதிவு தோத்துபோறதுக்கு ஒரு காரணத்தைச் சொல்லிட்டு மேலேச் சொல்லுங்க. பேருக்கேத்த பின்னூட்டம்

    ReplyDelete
  15. வீட்டுல சோத்த பொங்கிபோட அப்பா போனா அம்மா அதைத் தடுத்து அவுங்க செய்ய ஆரம்பிப்பாங்க. அதுக்குப் பேர்தான் ownership. சும்மா நூல் விட்டா ஏன் நீங்களா வந்து மாட்டிக்கிறீங்க?

    ReplyDelete
  16. //வீட்டுல சோத்த பொங்கிபோட அப்பா போனா அம்மா அதைத் தடுத்து அவுங்க செய்ய ஆரம்பிப்பாங்க. அதுக்குப் பேர்தான் ownership//

    அட இது தெறியாதே எனக்கு! ஒரு பிரச்சனை வந்தா பொறுப்பெடுத்து கொள்வதுதான் ownership ன்னு நான் நினைச்சேன்..பரவாயில்லை நீங்க சொல்லுறபடி பார்த்தா கூட முதலாளி அப்பா சோத்த பொங்கி போட வரலையே...கவருமென்டு அம்மாவ பாத்து மவளே நீ பெயில் அவுட்ட உலையில போடறியா இல்ல கிச்சன கொளுத்தவான்னு இல்ல கேட்டாங்க ;-)

    ReplyDelete
  17. இளா, எனக்கு இந்த பதிவுலகம் 3 மாசமாத்தான் பழக்கம். அதனால நீங்க சொல்லும் குழுப்பதிவுகளை வாசிச்சதில்லை ஆனா அது செயலிழந்து போனதற்கான காரணங்களா நீங்க சொல்வது சரிதான். அந்த சிவப்பு சட்ட நூல தவிற :-)

    ReplyDelete
  18. oh..I missed a great opportunity to meet you all. Sorry, I had to prepare for an interview the next day. ( as I lost my current job)

    ReplyDelete
  19. இனியா, பரவாயில்லை விடுங்க. என்ன புதரகத்துல இனிமே இது மாதிரி நடக்க பல மாசம் ஆகலாம். ஆனாலும் சின்ன சின்னதா பல சந்திப்புகள் நடக்கும், அப்போ பார்த்துக்கலாம். All the Best for to get a Job to Soon!.

    ReplyDelete
  20. ILA said...

    //இது மொக்கைப்பதிவா இல்ல எங்களோடது மாதிரி தரமானதா?//
    நம்மாள முடிஞ்சது இவ்வளவுதாங்க.உங்க லெவலுக்கு எல்லாம் நாங்க வர முடியுங்களா?

    //

    ஆஹா இப்படி கவுரவமாவும் திட்டலாமா.:)

    ReplyDelete
  21. இளாவின் எழுத்துக்கள் இப்போ மாறி போச்சோ... ;)))

    ReplyDelete
  22. //இளாவின் எழுத்துக்கள் இப்போ மாறி போச்சோ... ;)))//
    இல்லீங்களே, அதே ஈ-கலைப்பைதான்.

    ReplyDelete
  23. இந்த பதிவையும் நான் முழுசா படிச்சேன்.. நம்பலாம்.. :)

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)