Friday, November 7, 2008

ராமனைத் தேடும் தமிழர்கள்

தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
இராமாயணம்.
இராவணன் உருவில்
பக்க்ஷே இருக்க
ராமனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள்

15 comments:

  1. அப்போ நம்ம ஊர் அரசியல்வாதிங்க சொல்லிக் குடுத்த பாடத்தின்படி நாம (நாமன்னா தமிழர்கள் நீங்க நினைக்கும் அந்த முத்திரை இல்லை) எல்லாம் ராஜபக்‌ஷேவுக்குத்தான் சப்போர்ட் செய்யணமுன்னு சொல்லறீங்க. இல்லையா?!

    அப்புறம் இது கவுஜன்னா சரியா டிஸ்கி போட்டு சொல்லுங்க. இந்த பின்னூட்டத்தை வாபஸ் வாங்கிக்கறேன்.

    ReplyDelete
  2. குடுகுடுப்பைFriday, November 7, 2008 at 4:32:00 PM EST

    ராவணன் இனப்படுகொலை செய்தாரா என்ன?
    ராமன்,ராவணன் காவிய நாயகர்கள் அவர்களை இக்கால அரசியலோடு ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    ReplyDelete
  3. என்னை விட வீரமுள்ளவர்கள் வரட்டும்னு தலைவர் சொல்லிருக்காரு... நீங்க இப்படி சொல்றீங்க:-)

    என்னை கேட்டா, ஹ‌னுமான் இருந்தா கூட போதும்.

    ReplyDelete
  4. கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
  5. ராமனைத் தேடிக்கொண்டு எப்போதும் தமிழர்கள் இருந்ததில்லை. எல்லா கால ராமன்களும் தமிழனுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறார்கள். ராமாயணம் பெண்ணுக்கான போர். இலங்கையில் நடப்பது மண்ணுக்கான போர். மேலும் ராமயணம் கதை, இலங்கையில் நடப்பது எதார்த்தம். ராவணன் மரியாதைக்குரியவனாக வணங்கப்பட வேண்டியவன். ஏனென்றால் ராமராஜ்ய/ராமபக்தர்களின் தாயான சீதையின் கற்பிற்கு கடைசிவரை களங்கம் ஏற்படுத்தாதவன்.

    வார்த்தைப் படிக்கட்டு நன்றாக இருக்கிறது.களைகள் அதிகமிருப்பதால் உண்மைதான் இல்லை.

    ReplyDelete
  6. //ராமனைத் தேடிக்கொண்டு எப்போதும் தமிழர்கள் இருந்ததில்லை//

    அப்போ இப்போ இருக்குற மக்கள் உதவி கேட்கலைன்னு சொல்றீங்களா??


    இதுக்கான என் அர்த்தம்.
    -------------------------

    சீதையா இருக்கிற தமிழ் மக்கள், ராமனா இருக்கிற இந்தியாவை எதிர்பாத்து காப்பாத்துவாங்கன்னு காத்துட்டு இருக்காங்க. இராவணன்னு தெளிவா இலங்கை அரசைச் சொல்லியாச்சு. இதுல களை எங்கே இருக்கு??

    ReplyDelete
  7. //ராவணன் இனப்படுகொலை செய்தாரா என்ன? //
    :) ஒப்பீட்டை நான் சரியாச் சொல்லலன்னு நினைக்கிறேங்க.

    ReplyDelete
  8. //இதுக்கான என் அர்த்தம்//
    உங்களுக்கான அர்த்தத்தோடு மட்டும் கவிதை நின்றுவிடுவதில்லை.

    சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் கோணத்தில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் ராமயணக் கதைப்படி அயோத்தியின் சீதை கடத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறாள். ஆனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் பூர்வகுடிகள்.ஒப்பீடுகளுக்கள் அரசியலின்/ஆளுமைகளின் செல்வாக்கை புறக்கணிக்க இயலாது. வரலாறுகளின்படி முன்பு தாங்கள் ஆண்ட, தங்களுக்கு உரிமையான தங்களது நிலத்தை மீட்க இப்போது போராடிக் கொண்டிருக்க்கிறார்கள். ஒரு சில காட்சி ஒத்தமைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு மொத்தத்தையும் அதே சட்டகத்திற்குள் வைக்கும் அர்த்தத்தோடு உங்கள் கவிதை அமைந்திருக்க்கிறது. நுட்பமான அந்த பிரச்சனைக்குள் பன்முகத் தன்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அதன் மீதான பார்வைகள் இல்லாதிருப்பதாக நான் உணர்ந்ததாலே களை என்று சொன்னேன். இது உங்கள் கவிதைக்கான எனது புரிதலே! அதற்கான உங்கள் மறுப்பை நான் நிராகரிக்கவில்லை. ஏற்கவும் இல்லை

    //இந்தியாவை எதிர்பாத்து காப்பாத்துவாங்கன்னு காத்துட்டு இருக்காங்க. //
    இந்தியாவை எதிர்பார்த்தல்ல! தமிழகத்தை எதிர்பார்த்த்தே! நீளமாக இதை விளக்க முனைந்தால் அது நமது இறையாண்மையின் மீதான உரசலாக அமையக் கூடும்.

    ReplyDelete
  9. //அப்புறம் இது கவுஜன்னா சரியா டிஸ்கி போட்டு சொல்லுங்க. இந்த பின்னூட்டத்தை வாபஸ் வாங்கிக்கறேன்//
    இது கவிதை?????யா??

    ReplyDelete
  10. //என்னை கேட்டா, ஹ‌னுமான் இருந்தா கூட போதும்.//
    அதுதாங்க மேட்டரே?ஹனுமன் போனாலும் வாலுக்கு கண்டிப்பா தீ உண்டே.

    ReplyDelete
  11. //என்னை கேட்டா, ஹ‌னுமான் இருந்தா கூட போதும்.//
    அதுதாங்க மேட்டரே?ஹனுமன் போனாலும் வாலுக்கு கண்டிப்பா தீ உண்டே.

    ReplyDelete
  12. //"ராமனைத் தேடும் தமிழர்கள்"//

    ஆமாங்க, தமிழர்களுக்கு யாருமே உதவக்கூடாதுன்னு சொல்கிற எல்லோருமே 'ராமன்' வந்து காப்பாத்துவான் என்று நினைக்கிறாங்களோ ?
    :(

    ReplyDelete
  13. இளா,

    தமிழர்கள் அனைவருமே ஒருவகையில் ராமர்கள் தானே?சாப்பாட்டு ராமர்கள்.

    ReplyDelete
  14. இனி இங்கே இருந்து
    போகும் ராமர்கள்
    ராவணனுடன் சேர்ந்து
    விருந்துதான்
    சாப்பிடுவார்கள்!!!!
    தேவா.

    ReplyDelete
  15. hai frnd, i saw ur blog id in divya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur blog.

    http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/1.html

    divya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.

    plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.

    plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.

    http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/

    indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.

    PLEASE CONSIDER OUR REQUEST

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)