வலைப்பதிவர் பெயர்:இளமுருகு, யாருமே இப்படி கூப்புடறது இல்லை, சுருக்கி "இளா"ன்னு மாத்திபுட்டாங்க. எல்லாரும் செல்லமா கூப்பிடுற இன்னொரு பேர் ராஜா. ஊர்ல "வாத்தியார் வீட்டு ராஜா"ன்னும் ஒரு பேர் இருக்கு.இன்னும் சில பேர் "சின்ன வாத்தி"ன்னுதான் கூப்பிடறாங்க.
வலைப்பூ பெயர் :விவசாயி
சுட்டி(url) :http://vivasaayi.blogspot.com/
http://binarywaves.blogspot.com
ஊர்:யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு சொன்னாலும், செங்கை-பவானி அருகில்
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்:அப்படியெல்லாம் யாரும் இல்லீங்க, 3 ராஜாக்கள் தான் தமிழ்ல பதிவு எழுத தூண்டினாங்க(கே.வி.ராஜா, நாமக்கல் ராஜா, ராசா). நாம ப்லாக் ஆரம்பிச்ச காலத்திலேயே இங்க்லீஷ்ல பீட்டு விட்டவங்க.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :24-Aug-2005-தமிழ்
இது எத்தனையாவது பதிவு:55
இப்பதிவின் சுட்டி(url):http://vivasaayi.blogspot.com/2006/05/blog-post_28.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:வேலை வெட்டி இல்லாம இருக்கிறப்போ வேலை செய்ய
சந்தித்த அனுபவங்கள்: வாழ்க்கை ஒரு நாடக மேடை, நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்.
பெற்ற நண்பர்கள்: எல்லாருமே நண்பர்கள்ன்னு நினைக்கிற அப்பாவி இந்த விவசாயி
கற்றவை: கைமண்தான் (விவசாயத்த பத்தி பேசலைங்க)
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:கொஞ்சம் கம்மிதான்
இனி செய்ய நினைப்பவை: செய்வதை திருந்தச் செய்ன்னு எங்க அப்பாரு சொன்னதை தெளிவா செய்யபோறேன். (தந்தை சொல் தட்டாத பிள்ளை நாம)
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சாதாரண விவசாயி. அவ்வளவுதானுங்க. நமக்கு வெளம்பரமெல்லாம் வேணாமுங்க.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:தோட்டம் இருக்கிறவங்க எங்க வேல பார்த்தாலும் சனி ஞாயிறாவது விவசாயம் பாருங்க.