Saturday, May 17, 2008

அவியல் - 1

  1. அரிசி விலை எல்லாம் கன்னாபின்னான்னு ஏறிப்போயிருச்சு. இதுக்கு எல்லாம் காரணம் வெளிநாட்டுச்சதிதான்(இந்தியா). ஏன்?
  2. மிதிவண்டி வாங்கப் போறேன். வாழ்க்கை எங்க ஆரம்பிச்சதோ அங்கேயே இருக்கேன். ஆமாங்க மிதிவண்டிதான் எனக்கு அப்பா குடுத்த முதல் வண்டி. அதையே நானே இங்கே வாங்கப்போறேன். முன்னேத்தம் தானுங்களே.
  3. தனியா இருப்பது கொடுமைங்க, எப்படித்தான் எல்லாரும் தனியா இருக்காங்களோ? நண்பர்கள் சூழ வாழ்த்து வந்த எனக்கு இது ரொம்பவும் புதுசு. ரொம்பக் கஷ்டங்க.
  4. எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தாச்சு. techsatishல இருந்து இப்போ TubeTamilக்கு மாறியாச்சு. இடையில aarampamம்.
  5. புதரகத்துல வெயில் காலத்துல கூட குளிருது, இந்த லட்சணத்துல மழை வேற. நம்ம ஊர்ல மழை எப்படா வரும்னு இருக்கு, இங்கேயோ தலைகீழ்.
  6. யாராவது பதிவுகள்பத்தி பேசினா கடுப்பா இருக்கு. பதிவர்கள் என்கிட்ட வேற என்னத்தை பேசுவாங்க. ஏன்?
  7. ஆஹா FM கேட்க ஆரம்பிச்சிருக்கேன். அதுல அடிக்கடி நமீதா நர்ஸரி ஸ்கூல்னு ஒரு வெளம்பரம் வருதே, அது என்னங்க?
  8. குருவி பார்த்துட்டு சேட்ல கிடைக்கிறவங்களை எல்லாம் திட்டிட்டு இருந்தேன்.
  9. புதுசா வந்த எந்தப் பாட்டையுமே கேட்கத் தோணலை, தசாவதாரம் உட்பட. தாம் தூம் பரவாயில்லை. வாரணம் ஆயிரம் பாதி பாட்டுகளும்கூட கடுப்பாவே இருக்கு.
  10. சன் தொலைக்காட்சியில் தமிழ் வெள்ளித்திரை 75வது வருசத்தை முன்னிட்டு போடுற பழைய படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா நடு ராத்தி ஆகிறதனால பாதியிலேயே தூங்கிடறேன்.
  11. எப்படா இந்தியா போலாம்னு இருக்கு. ஏன்?
  12. IPL வெளங்குமா? DIGITALipl.comதான் பார்க்கிறேன்.
  13. ரொம்ப நாளாச்சு ஊர் சுத்தி, அதுதான் கடுப்பா இருக்கு.
  14. பதிவுகளை விட டுவிட்டு பைத்தியம் சீக்கிரம் புடிச்சிருச்சு. பதிவுகளேயே கட்டிட்டி மாறடிக்க முடியல இது டுவிட்டும். அங்கேயும் பதிவர்கள்தான் விதை போட்டு தமிழ் வளர்த்துட்டு இருக்காங்க. வாழ்க தமிழ்!

அவியல் தொடரும்...

Wednesday, May 14, 2008

மூர்த்தி- உங்க போலி பேருதான் என்னங்க?

ஒருத்தர் நல்ல பேரு எடுக்கிறதுக்காக நல்ல உழைப்பாங்க. ஆனா நம்ம நடிகர் நடிகைகளுக்கு அந்தப் பேர்தான் ஆரம்பமே. ஒரு நல்ல பேர் கிடைச்சுட்டா உடனே போட்டுருவாங்க, அட படத்தோட டைட்டில்லதாங்க. அப்புறம் புரட்சி வாழக்காய், இளைய சாம்பிராணின்னு எல்லாம் போ(ட்)டுவாங்க. பாரதிராஜா "ர"வுலதான் நடிகைகளுக்கு அதிகமா பேர் வெப்பாராம்.

ரஜினியோட உண்மையான பேரு சிவாஜி ராவ். ஆனா சிவாஜி ராவ்னு கூப்பிட்டா திரும்பிப் பார்ப்பாராங்கிறது சந்தேகம்தான். ஆனா சொந்தப் பேர் வெச்சு கூப்பிட்டதால தன்னோட எதிர்த்த வீட்டுக்காரருக்கு ஒரு மதிய உணவு அளிச்சு சந்தோசப்பட்டாங்க ரம்பா. (சாப்பிட்டது ஜீரணமாகிருச்சுங்க). அப்போ அவுங்க சொன்னதுதான் இந்தப் பதிவோட சாராம்சமே. என்னதான் ரம்பான்னு லட்ச கணக்குல சொன்னாலும் ஒருத்தர் உண்மையான பேர் சொல்லிக் கூப்பிடும்போது ஒரு இனம்புரியா பாசம் வரும்னாங்க. சாப்பிட்டுகிட்டே ஆமாம்னு சொல்லி வெச்சேன்.

ஒரு புதிர் இவுங்க எல்லாம் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.

உதாரணம்:
சரவணன்=சூர்யா

சிவாஜி ராவ்= ரஜினி காந்த்


  1. மேரி=?
  2. ரேவதி
  3. சுகாசினி
  4. ரிஷி பாலா
  5. டயானா மரியம்
  6. பைரவி
  7. ரங்கராஜ்
  8. வெங்கட் பிரபு
  9. மூர்த்தி
  10. ஸ்வேதா கொன்னூர்
  11. உமா சங்கரி
  12. நக்மா கான்
  13. நக்கத்
  14. ஜோசப்
  15. கருணாநிதி

Sunday, May 11, 2008

சோடி போடலாமா சோடி

முள்ளை முள்ளால் கூட எடுக்கலாம்,
புகையை புகை வைத்து அணைக்க முடியுமா?
இரண்டு வெண்குழல் வத்திகளை வெச்சு புகைத்தல் தப்புன்னு சொல்ல நினைச்சேன்.


எத்தனை நாளைக்குத்தான் வூட்டுக்காரர் நிழலுல நிக்கிறது. அதான் வேலைக்குப் போலாம்னு இருக்கேன்.




காட்சி-1:

பெண்ணீயம்- பாரதி, இதுக்குத்தானா ஆசைப்பட்டாய்.

நீங்க சாண்ட்ரோ வெச்சு இருக்கீங்க, எனக்கு வேகன் ஆர் வாங்கி குடுங்க. அதுதான் சமத்துவம். இல்லாட்டி என்னை அடிமையா வெச்சு இருக்கீங்கன்னு எழுதிடுவேன், ஜாக்கிரதை. வாடி, போடான்னு சொன்னா புகார் குடுத்துருவேன், ஆமா.

காட்சி-2

சமத்துவம்- பாரதியும் காணாத பெண்ணீயம்.

ஏண்டி, கூலிய குடுத்தேனே, அதுலதான பலசரக்கு வாங்கின?


இல்ல மச்சான், உன்னோட சம்பளத்துல உனக்கு வேட்டி எடுத்துட்டேன். எத்தினி நாளிக்கு அத்தையே கட்டுவே? என்னோட கூலில கருவாடு வாங்கி குழம்பு வெச்சிருக்கேன். வந்து துன்னுடா மச்சான்.

ஜோடியில் ஆண் பாதணியில் ஊக்கு போட்டு இருப்பது- ஆண் எவ்வளவோ சிரமத்துக்கு இடையில் பொருளீட்டுகிறான். தன்னை அலங்காரம் செஞ்சுக்க மறந்துட்டு குடும்பத்துக்காக உழைக்கிறாங்க. ஆனால் சில பொண்ணுங்க அதைப் புரிஞ்சிக்காம டாம்பீக வாழ்வு வாழ நினைக்கிறாங்க. இது வரட்டு கெளரவம்தானுங்களே. அதுக்கு அர்த்தம் வர மாதிரி பெண் பாதணி விலையுயர்ந்ததா பக்கத்துல வெச்சேன். அதாவது புது பாதணி, குதி
(high heel) பெரிசா. இது ஆணுக்கும் பொருந்தும், பொண்ணுக்கும் பொருந்தும். அதே போல இந்த ஜோடிய ஆணோ, பெண்ணோ போட்டுக்க முடியாது. இந்தமாதிரி சமமில்லாத ஜோடி உபயோகப்படாது அப்படிங்கிற அர்த்தம் தான் அந்தப் படத்துக்கு. இது என் மனசுல பட்டது. வேற அர்த்தம் கூட இருக்கலாமா?

Monday, May 5, 2008

OPMLம் ஈரவெங்காயமும்

Tamil OPEN OPML குழு - என்ன செஞ்சது? ஒன்னும் கிழிக்கவில்லை. எல்லாப் பதிவுகளையும் முக்கி முக்கித் தேடி எல்லாத்தையும் ஒட்டவெச்சு ஒரு OPMLஆ குடுத்தோம். சிலர் மூக்கைச் சுத்தி சாப்பிடுவாங்க இல்லே, அதுமாதிரிதான் இதுவும்.

நான் தொழில்நுட்பத்தை புரிஞ்சிகிட்டது OPML வெளியிட்ட ஒரு வாரத்துக்குப் பின்னாடிதாங்க. 4000 ஓடையயும் ரீடர்ல போட்டா சாவுது, தொங்குது,அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிட்டு இருந்த நேரத்துல ரவிசங்கர் ஒரு பிட்டை போட்டுட்டு போனாரு. அதாவது எல்லாத் தமிழ்ப் பதிவுகளையும் படிக்க ஒரே ஓடை இருந்தாப் போதும்னு. OPML, 4000 ஓடை எதுவுமே தேவை இல்லை. Google Readerல இந்த ஓடையச் சேர்த்துட்டா எந்தத் திரட்டிக்குமே வரத் தேவை இல்லைங்க. அந்த ஓடை இதோ...

http://www.google.com/blogsearch_feeds?as_q=.&lr=lang_ta&safe=active&q=.&ie=utf-8&output=rss

அடுத்தப் பதிவுல Google readerல எப்படி பின்னூட்டத்தையும் திரட்டுறதுன்னும் சொல்லிடறேன். திரட்டி செய்ய எந்த வழங்கியுமே தேவை இல்லை.. Google Readerஏ போதும்.

கூகில் ரீடர் இல்லாம கூட பதிவ படிக்கலாங்க, அதாவது ஒரு திரட்டி மாதிரி. அதுவும்கூட முடியும் எப்படின்னும் அடுத்தப் பதிவுலேயே சொல்றேன்..

Monday, April 21, 2008

சித்தர்களும் இரண்டும், நீங்க சொல்ற பதிலும்

பொது அறிவு கேள்வி கேட்டு ரொம்ப நாள் ஆச்சுங்க. இந்த மாதிரி பொது அறிவு கேள்வி கேட்கிறது, 3 பேரு. அது நானும், ஓமப்பொடியாரும் கைப்புள்ளையும். ஏன்னா எங்களுக்கு கேள்வி மட்டும்தான் கேட்கத்தெரியும். :)

எங்கேயோ எப்பயோ படிச்ச ஞாபகங்க. அதுக்கு அர்த்தமும் அப்போதான் தெரிஞ்சுகிட்டேன். இப்போ அதைச் சொன்னா சரியா இருக்கும்னு நினைக்கிறேன். வ.வா. ச போட்டிக்குச் சரியான நேரத்துல கேட்டுட்டா ஒரு பரபரப்பு வருமே.

இந்த மாதிரி சரியா பின்பற்றினா வாழ்நாள் கூடும்னு சொல்லி இருக்காங்க சித்தர்கள்(?!)
இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க.
  • தினம் இரண்டு
  • வாரம் இரண்டு
  • மாதம் இரண்டு
  • வருடம் இரண்டு

இப்ப இந்த "இரண்டு"களுக்கு என்ன அர்த்தம்? பதில் சொல்லுங்க, பார்ப்போம்.

வ.வா.ச'வின் - இரண்டு போட்டிக்கு அல்ல..

Tuesday, April 1, 2008

தேடு பொறியும் குறிச் சொற்களும்

தமிழ்ல என்னதான் மாங்கு மாங்குன்னு பதிவு போட்டாலும் தேடு பொறியில நம்ம பதிவு வர மாட்டேங்குதேன்னு புலம்புறீங்களா? அப்போ இந்தப் பதிவ படிக்கலாம். மொதல்ல ப்லொக்கர் பார்ப்போம். ப்லொக்கர்ல தலைப்பை தமிழ்ல வெக்கும்போது அதனோட தலைப்பு உருவாகுறது எப்படின்னு பாருங்க.

ஒரு உதாரணம்: போன பதிவுக்கு நான் வெச்ச தலைப்பு பாருங்க : என்னையே எல்லாரும் பார்க்குறாங்க. அதுக்கு ப்லாக்கர் குடுத்த உரல் பாருங்க -http://vivasaayi.blogspot.com/2008/03/blog-post_31.html

மேலே இருக்கிற உரலில் என்ன குறிச்சொல் இருக்கு?அதாவது உங்க பதிவோட பேரு, வருஷம், மாசம், அப்புறம் உங்க இடுகையின் தலைப்பு அப்படின்னு வரனும். ஆனா தமிழ்ல தலைப்பு வெக்கும்போது ப்லாக்கர்ல நீங்க தர்ற தலைப்பு வரது இல்லே. இப்போதைக்கு இந்த வசதி இல்லே. அதனால blog post-தேதின்னு வந்துரும். தேடு பொறிகள் எல்லாமே இந்த உரலை மையமா வெச்சு தான் தேடுது. அதனால நம்ம இடுகைகள் ஆங்கிலத்துல பேர் குடுத்து தேடினா கிடைக்கிறது இல்லை. தமிழ்ல தேடுற மக்களும் ரொம்ப குறைச்சலாவும் இருக்கு. ஆங்கிலத்துல தலைப்பை வெச்சா மக்கள் தேடும் போது உங்க பதிவுகள் கவனிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அப்போ தமிழ்ல தேடினா கிடைக்காதேன்னு கேட்டா? அதை உங்க பதிவே தேடல்ல சிக்கிக்கும். அதனால மக்கள் ஆங்கிலத்துல தலைப்பு வெச்சு எழுதிட்டு Publish பண்ணிடுங்க. பிற்பாடு தலைப்பை மாத்திருங்க. ஒரு நிமிசத்துல பண்ற வேலை இது.

உதாரணத்துக்கு இந்தப் பதிவோட உரல் பாருங்க. http://vivasaayi.blogspot.com/2008/04/tamil-blogs-easy-search.html.

Tamil Blogs அப்படின்னு தேடினா http://binarywaves.blogspot.com/2007/04/tamil-blogs.html இந்தப் பதிவு முதல் பக்கத்துல வந்துரும். இதுக்கும் இது என்னோட ஆங்கிலப்பதிவு. நேத்துதான் இந்தப்பதிவையும் போட்டேன் அதுவும் 50க்குள்ள இருக்கு. சூட்சுமமே இதுதான்.
இந்த விஷயத்துல Wordpress கொஞ்சம் முன்னேறி இருக்கு. அதாவது தமிழ்ல தேடினா கிடைகிற வசதி ப்லாக்கரை விட wordpressல கொஞ்சம் அதிகம். அந்தக் காரணமாவே wordpressக்கு போற மக்கள் அதிகம். ப்லாக்கர்லயும் இந்த மாதிரி விளையாடினா நிறைய பேர் பார்க்குற வாய்ப்பு அதிகமாகும்.

Monday, March 31, 2008

என்னையே எல்லாரும் பார்க்குறாங்க

ஒடம்பு சரியில்லைன்னு மருத்துவமனைக்கு போனேன். ஒரு 10 நிமிசம் காத்திருங்கன்னு வழக்கம்போல சொல்லிச்சு வரவேற்பாளர்-அம்மணி(வெள்ளைக்காரி மாதிரி பகட்டு பண்ற ஒரு ஆசியப் பொண்ணு).
ஒடம்புக்கு சரியில்லாம ஒருத்தர் கூட வந்து இருக்கோம்னு கூட ஒரு தயவு தாட்சயண்மே இல்லாம தங்கமணி "மாமா, அங்கே பாருங்களேன். அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா நகத்தை வெச்சு(ஒட்டுதான்) இருக்கு?"ன்னு சொல்ல, கட்டாத கண்ணு அப்பத்தான் கட்டுச்சு. இனிமே நின்னா வேலைக்கு ஆவாதுன்னு மூலையில போட்டு இருந்த நாற்காலியில போயி உக்காந்துகிட்டேன்.

கொஞ்ச நேரம் தலை குனிஞ்சுகிட்டே ஆசுவாசப்படுத்திகிட்டேன். பணிவு எல்லாம் இல்லீங்க, நோவுதான். சித்த நேரம் கழிச்சு சுத்தி உக்காந்து இருக்கிறவங்கள பார்த்தேன். 2 இந்தியக் குடும்பங்க, 3 வெள்ளைக் குடும்பங்க,1 கருப்பு பொண்ணு மட்டும். இந்தியக் குடும்பத்துல இருந்தவங்க என்னையே பார்த்துட்டு இருந்தாங்க, லேஸா சிரிக்கவும் செஞ்சாங்க. அம்மணிகிட்ட திரும்பி
"பார்த்தியா, ஐயாவுக்கு என்னிக்குமே மவுசுதான்".


"உலகத்துல முட்டாள்னா அது நான் மட்டும்தான். வேற எல்லாம் இல்லே. இது வேற கதையா இருக்கும். ஆமா இந்த நேரத்துல கூட கிளுகிளுப்பு கேக்குதோ?".

இந்த பன்னு நமக்குத் தேவையா? இந்த ஊரு கலாச்சாரம் ஆச்சே.. அவுங்கள பார்த்து நானும் சிரிச்சேன். அந்த ஆம்பளையும் சரி, பொம்பளையும் சரி என்னை பார்த்துகிட்டே இருக்காங்களே தவிர ஒரு பதில் சிரிப்பும் இல்லே.
"சே, சிங்கத்த சேதாரம் பண்ணிட்டாங்களே"ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு வெள்ளைக்காரியப் பார்த்தேன். அதுவும் என்னையே பார்க்குது, அதுவும் விடாம. எல்லாரும் என்னையே பார்க்குறாங்கன்னா ரெண்டு விஷயம் தான் இதுல இருக்கு. ஒன்னு நான் ரொம்ப அழகா இருக்கனும், இல்லாட்டி போடக்கூடியதை(இருபல் இணை) மறந்து போடாம இருந்து இருக்கனும். அப்படியே சுத்தி பார்க்குற மாதிரி கொஞ்சம் நேரம் ஜன்னலைப் பார்த்தேன், அப்படியே எதிர்த்தாப்புல இருக்கிற படத்தைப் பார்த்தேன், நைஸா குனிஞ்சு பார்த்ததுக்கப்புறம்தான் பெரு மூச்சு விட்டேன். போட வேண்டியதை எல்லாம் சரியாத்தான் போட்டு இருக்கேன்.

அப்புறம் என்ன? சரி ஒரு புத்திசாலிய எல்லாரும் அப்படித்தான் பார்ப்பாங்கன்னு மனச தேத்திகிட்டேன். எவ்வளவு நேரம்தான் உக்காந்தே இருக்கிறது, கொஞ்சம் உலாவலேம்னு எந்திருச்சு மக்களைப் பார்த்தேன். இப்பவும் எல்லாரும் என்னையத்தான் பார்க்கிறாங்க, ஆனா சலிப்பா, கோவமா. நாம அசந்து இருந்த நேரத்துல, நாம புத்திசாலி இல்லீங்கிறத அம்மணி சைகையாலே அவுங்களுக்கு சொல்லிருப்பாங்களோ? இருக்காது.

வேற என்னவா இருக்கும், இப்பவும் அந்த மக்களை பார்த்தேன், அதே கடுப்பு, கோவம்.

"என்னவா இருக்கும்?"

திரும்பி பார்த்தா சத்தமில்லாம ஒரு தொலைக்காட்சி ஓடிட்டு இருக்கு. அடப் பாவிகளா இதைத்தான் இவ்வளவு நேரம் பார்த்துகிட்டு, சிரிச்சுகிட்டு இருந்தீங்களா?
"தலைக்கு மேல இவ்வளவு பெரிசா படம் ஓடிட்டு இருக்கு நமக்கு இது தெரியாம போச்சே. என்னமோ என்னையதான் பார்த்துகிட்டு இருந்தீங்கன்னு இல்லே அம்மணிகிட்ட சவடால் விட்டுகிட்டு இருக்கேன். இதுக்கு மேலையுமா ஒரு கேவலம் வேணும்?"

இப்போ இருக்கிற நோவ விட இந்தக் கேவலம் கடுப்படிக்க மறுபடியும் நான் அவுங்கள பார்க்க ஆரம்பிச்சேன், அவுங்க என்னைய பார்க்க ஆரம்பிச்சாங்க.

Saturday, March 29, 2008

நீ என்னான்ற... ஏய் இப்போ என்னான்ற

செம தாக்கு.. ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு பாட்டு கேட்டு. இதுக்கு யாரு இசை அமைச்சாங்க? பின் புலம் சொல்லுங்களேன். MP3 உரல் கிடைக்குமா?

RC New Boys and Girls - இவுங்க யாரு? எந்த ஊர்ல இருக்காங்க?

Saturday, March 1, 2008

KADHALIKKA NERAMILLAI - Title Song

ஒரு மூணு வாரமா மனசுல இந்தப்பாட்டத் தவிர எதுவுமே ஓட மாட்டேங்குதுங்க. நாடகம் பார்க்கிற பழக்கம் இல்லைன்னாலும் இந்த தலைப்பு பாடல்கள் கலக்கோ கலக்குன்னு கலக்குதுங்க. மெட்டி ஒலி, கங்கா யமுனா சரஸ்வதி, ரயில் ஸ்நேகம் இப்படி நெறைய சொல்லிகிட்டே போவலாம். இப்போ விஜய் ஆண்டனி பாட்டு சின்னத்திரையில கலக்கிட்டு இருக்கிற நேரத்துல அவரை பாராட்டியே ஆவனும். ஏற்கனவே "கனா காணும் காலங்கள்" பாட்டு கலக்கிட்டு இருக்க இப்போ இது கலக்கிட்டு இருக்கு. கூகிள்ல இந்தப்பாட்டை நாந்தான் மொதல்ல தேடுறேனு நினைச்சா 10 ஆயிரம் பேரு அதுக்கு முன்னாடியே தேடி இருக்காங்க. அதான் பதிவுல மக்களுக்கும் இந்தப் பாட்டை குடுக்கலாம்னு ஒரு எண்ணம். பாடல் வரிகள் கூட பாட்டும் இருக்கு. பிரஜன் உனக்கு எங்கேயோ மச்சம்யா...

என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு…ஓஹ்
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதைச் சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்..
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்..
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்..
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)

யாரோ? உன் காதலில் வாழ்வது யாரோ?
உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ?
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ?
ஒரு பகல் என்னை சுடுவது ஏனோ?
என் தனிமையின் அவஸ்த்தைகள் தீராதோ?

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே!
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)


For Download : Here

பாடலைப் பார்க்க




இந்தப் பாடல் தேன்கிண்ணம் குழு மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Thursday, February 28, 2008

எனக்கு இந்தப் பரிசு வேண்டாம்- யாருக்காவது வேணுமா?

Claim Ref. Number: 34V/27N/30H 03NL
Batch Number: EZ90 556 MB-NL 88
SERIAL NO: 289567-09

Sir/Madam,
This email is to notify you that your
Email
Address attached to a Ticket Number(00106912000.00) has won an
Award Sum of Euro 1,000.000.00(One Milliom EURO)In an Email Sweepstakes
program held on the 26th of Febuary 2008. Please contact the claim
officer through the below given contact information for the Claim
CASINO LOTTERY CLAIM AGENCY.
casinoclaim@gmail.com

WINNING
INFORMATIONS
Ref Number (34V/27N/30H 03NL)
Serial Number 78097
lucky
Numbers 4426765
Batch Number: EZ90 556 MB-NL 88
Serial No: 289567-09
Please forward the above stated winning information with your name and
telephone to the Euro Claim Agent.
........................................................................................................................
Congratulations!!!

Mrs Precious Walker.
Reply email: casinoclaim@gmail.
com

Monday, February 11, 2008

காஃபி வித் அனு

வார நாட்கள்ல சன் தொலைக்காட்சி பக்கமே போவ முடியாது. எங்கே, எப்போ பார்த்தாலும் ஒப்பாரியாத்தான் இருக்கும். அப்போதான் நமக்கு புடிச்ச லொள்ளு சபா மாதிரியான நிகழ்ச்சிகள் விஜய்ல கல்லா கட்ட ஆரம்பிச்சது. அதுல ஒன்னுதான் இந்த காபி வித் அனு. காந்த குரலுக்கு சொந்தக்காரின்னு சொன்னா அது சுச்சிதாங்க. அதாங்க ரேடியோ மிர்ச்சி புகழ் சுசித்ரா. (கொசுறு: காக்க காக்க படத்துல உயிரின் உயிரே பாட்டுக்கு முன்னாடி வருமே " ஒம்மாஹ சீய வாஹியாலா" அப்படின்னு பாடினதே சுச்சிதான்.

அலட்டல் இல்லாத பேச்சும், கனிவும்.. சக்கரை பதமா போட்ட காஃபி மாதிரியே ஒரு புதுமையா இருக்கும். நிகழ்ச்சி ஆரம்பிச்சு செம ஓட்டம் ஓடிச்சு. முதல்ல ஒருத்தரு வருவாங்க, அவுங்களுக்கு ஒரு அறிமுகம், அப்படியே ரெண்டாவதா ஒருத்தரை 5 நிமிஷம் கழிச்சு கூப்பிட்டு ரெண்டு பேரின் பொதுவா நடந்தது, அவுங்களைப் பத்தி மத்தவங்க என்ன நினைக்கிறாங்க, Rapid Fire கேள்விங்க, கடேசியா கையெழுத்து போடுறதுன்னு பழைய மாவை நல்லா அரைச்சாங்க. அதுவும் அந்த title இசைக்காகவே ஒக்காந்து பார்ப்பேன். அந்த இசைய ரிங் டோனா எல்லாம் வெச்சு இருந்தது ஒரு காலம். அப்ப எல்லாம் வாரம் தவறாம பார்ப்பேன். அப்பதான் வெச்சாங்க சூன்யம்.


சுச்சி போயி அனு வந்தாங்க. மொத ரெண்டு வாரமுமே கடுப்பா ஒக்காந்து பார்த்தேன். அப்புறம் பழகியிருச்சு. மாத்தம் வேணுமின்னாலும் உடனடியா ஏத்துக்க முடியாதில்லயா. ரெண்டு மாசம் போன பின்னாடி சுச்சி இடத்தை சரியா புடிச்சு கிட்டாங்க, அனு. திரும்பவும் நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமா போச்சு. அப்பப்போ அறிவிப்புக்காக சுச்சி குரல் கேட்கும்போது மட்டும் கவலையா இருக்கும். அவ்ளோதான்.

முதல்ல நண்பர்கள், உறவினர்கள்னு கூட்டி வந்து கலக்குனாங்க. தினேஸ் கார்த்தி (தமிழே வராதா கார்த்தி?), பாலாஜி, பாலு , கங்கை அமரன் &sons, விவேக், பார்த்திபன் கலந்துகிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் மனசுல நிக்குது. சில நிகழ்ச்சிகள் மனச கல்லாக்கியிருக்கு, உஷா உதூப், பாலமுரளி கிருஷ்ணா மாதிரியான நிகழ்ச்சிகள். அதுலயும் விவேக்கு அனுவை ஓட்டு ஓட்டுன்னு ஒட்டின வாரம் செம கலாட்டா.

உடனே சன்னும் அனுவோட மருமவளை வெச்சி "அன்புடன்"னு கமலை பேட்டி காண்கிற மாதிரி அமர்களமா ஆரம்பிச்சி எப்போ நிறுத்தினாங்கன்னே தெரியல. பல நிகழ்ச்சிகளை காப்பி அடிச்சுகிட்டது சன். அதுல ராஜ்குமார் &coவை அப்படியே வெலை பேசி "கலக்கப்போவது யார்?" மொத்த யூனிட்டையும் தூக்கிட்டுப்போனாங்க. பேரைக்கூட "அசத்தப்போவது யாரு?" ன்னு அப்படியே MicroSoft மாதிரியே வெச்சு இன்னும் மதுரை முத்துதான் வராப்ல. ஹ்ம்ம் சரி, மறுபடியும் காப்பியே குடிப்போம் வாங்க...

இப்படி அனு ஆத்துன காப்பியும் போன தீவாளி வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு. அப்புறம் ஆரம்பிச்சாங்க மொக்கைய. படம் ரிலீஸ் ஆவுதா, கூப்புடு இயக்குனரு, நடிகரு, நடிகையன்னு. பழநி படம்- பரத், பேரரசு, காளை படம்- சிம்பு(ரிப்பீட்டு), தருண் கோபி, ஈக்கமாத்து குச்சி வேதிகான்னு நிகழ்ச்சு போவுது. சரி வர்றவங்க வேற ஏதாவது பேசுவாங்கன்னு பார்த்த படம் பத்தியும், அது குப்பையா இருந்தாலும் ஆஸ்கார் ரேஞ்சுக்கு பேசுறதும் செம கடுப்பு. அதுலையும் போன வாரம் சிம்பு "நமக்கு ஏன் இவ்வளவு எதிரிங்கன்னே தெரியல". அதுக்கு அனு "திறமை இருந்தாவே எதிரிங்க இருக்கிறது சகஜம்". அப்ப போட்டாரே சிம்பு "அதுல நமக்கு கொஞ்சம் ஜாஸ்தியா வேற இருக்கா.....". எப்பா திருந்து ராசா.. இப்படி எல்லாம் ஓடுது இந்த நிகழ்ச்சி. எப்படியோ சுச்சி போனாலும், அனு அந்த இடத்தை சரியாப் புடிச்சுட்டாங்க. ஆனா இப்படியே மொக்கையா போச்சுன்னா யாரும் காப்பி குடிக்காம யாருமே இல்லாத கடையில டீ ஆத்துன சிங் மாதிரி ஆயிரும்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)