Monday, June 4, 2012

தரம் கெட்ட சி.பி. செந்தில்குமார்

கொஞ்சம் பெரிய பதிவு, வேலையிருந்தா போய் அதைப் பாருங்க.இதைப் படிக்க ரொம்ம்ம்ப நேரம் ஆகலாம். 

2008ல், BlogOGraphy பதிவுகளின் மூலம் சுமாராக 3 மாதம் காலம் கொந்தளித்தது பதிவுலகம். அந்த நிம்மதியைக் கெடுத்தப் பழி என்மீதுதான் இருந்தது. அப்ப செய்த முடிவுதான் இனிமே பதிவுலகம் சார்ந்து எழுதுவது இல்லையென முடிவெடுத்தேன், இதுவரை கடைபிடித்தும் வருகிறேன். சரி, விசயத்துக்கு வருவோம்.

2010-11லியே எழுதவேண்டிய பதிவு ஒன்னு இருந்துச்சு. அதை சுருக்கமா  சொல்லிடறேன். பத்திரிக்கைகளில் சில பக்கங்களைப் படித்துவிட்டு சிலரை கண்டிப்பா சந்திக்க வேண்டும் என்று நினைக்கிற சிலரை பட்டியலில் வெச்சிருந்தேன். அது 1) விகடன் - மூங்கில் மூச்சு - சுகா 2) விகடன் - ஓவியர் - இளையராஜா 3) துணுக்கு எழுத்தாளர் சி.பி. செந்தில்குமார்.

முதல் இருக்கிற ரெண்டுபேரைப் பத்தி இன்னொரு பதிவுல பார்ப்போம், சி.பி. செந்தில்குமாரை (இனிமே சி.பி) பத்தி மட்டும் இப்போ. பல பத்திரிக்கை நகைச்சுவைத்துணுக்குகள் படிச்சவுடனே சிரிச்சிருக்கேன். யாரு எழுதினதுன்னு பார்த்தா அது சென்னிமலை சி.பி.செந்தில்குமார் என்று இருக்கும். அவரை சந்திக்கனும் முகவரி வேணும் அப்படின்னு சில பத்திரிக்கைகளுக்கு கடுதாசி போட்டுமிருக்கேன். [பதில் வரலைங்கிறது வேற விசயம்]

அப்புறமா பதிவுலகுல அவரைப் பார்த்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டு பின்னூட்டம் எல்லாம் கூட போட்டேன். அப்போ அவர் அலைபேசி எண்ணை எல்லாம் பதிவுல போடலை. நாமளும் தூரமா இருந்ததால ஊருக்குப் போவும்போது பார்த்து பேசிக்கலாம்னு விட்டுட்டேன்.  ஆரம்பத்துல இப்படியில்லை,  கொஞ்சம் நாகரிகமான படங்களையே ரெண்டு மாசமா போட்டுகிட்டிருந்தாரு. உதாரணத்துக்கு ஒன்னு ரெண்டு இங்கே..

[ 1 ]

[ 2 ]

என்னுடைய (அடுத்த) குறும்படத்துக்கு வசனம் எழுத பேச்சு வந்தபோது பாஸ்டன் ஸ்ரீராமிடம் நான் பரிந்துரைத்த முதல் ஆள் இந்த சி.பி. தான். வ.வா.சங்கத்துல அட்லாஸா கூப்பிடலாமெனவும் சி.பி. செந்திலை ஒரு மரியாதையுடன் வைத்திருந்தேன்.

அப்புறமா அண்ணன் அடிச்சாரு ஒரு U turn. தொப்புளையும், மாரையும் இருக்கிற படங்களை கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்து பத்திரிக்கைகள் நிராகரிச்ச அத்தனை துணுக்குகளையும் போட ஆரம்பிச்சாரு. தரம் குறைஞ்சதாலதான் பத்திரிக்கைகள் நிராகரிக்குது, அதை பதிவுல போட்டு ஹிட் கணக்கை ஏத்த ஆரம்பிச்சாரு. அப்புறமா என்னடா மானசீகமா புடிச்சவரு இப்படி பண்றாரேன்னு மனசுக்கு வருத்தமா இருந்துச்சு. அப்புறம் அவருடைய பதிவுகளை படிக்கிறதை நிறுத்திட்டேன். அவரோட வாசகர் வட்டம் வேற பெரிய லெவல்ல இருந்தாங்க. சரி, அவரோட கும்பல் பெரிய இலக்கியவாதிங்க, அப்படின்னு அவர் பதிவுகளை பார்க்கிறதையே விட்டுட்டேன். அதுக்கான ஒரு சின்ன உதாரணம் இது. இவரு பழுத்த மரமாம் அடிக்கிறாங்களாம், இவுங்க வாசகர்கள் கும்முறாங்க. நன்றி, வாசகர்களே, பழுத்த மரம் மட்டுமில்லை புழுத்த மரம்கூட அடிதான் வாங்க செய்யும்.

அதுவுமில்லாம ஈரோடு சங்கமம் குழுவுக்கும் இவருக்கும் ஆகலை. சரி, இவரு எதுக்கு சரிப்பட மாட்டாருன்னு முடிவு அதாவது உண்மையான குழுவா இருக்க இவருக்கு விருப்பமில்லை, புகழ்ச்சிக்கு மயங்குற ஆள்னு அப்பவே தெரிஞ்சிபோச்சு. 2010ல இந்தியாவுக்குப் போனபோதும், 2011ல் போன போதும் நான் அவரை கூப்பிடவுமில்லை, விருப்பமுமில்லை.

டிவிட்டர்ல, சி.பி. யோட நடவடிக்கைகள் வேற மாதிரி, அதாவது  கொஞ்சம் நாகரிகமாகவும் இருந்துச்சு. சரின்னு அவரை தொடர ஆரம்பித்தேன். நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. அப்பத்தான் சென்னை TNMegaTweetup ஆரம்பிச்சது, நடந்துச்சு, முடிஞ்சது. அதுவரைக்கும் எனக்கும் அவருக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. பிறகு அவர் ஒரு ட்விட்டர் பெண்ணோட படத்தை அவருடைய பதிவுல இணைச்சிக்கிறதுக்காக கேட்டிருக்காரு. அந்தப் பெண் சொன்னது “ஒரு குறிப்பிட்ட”, அதாவது ஒரே ஒரு குறிப்பிட்ட படத்தை மட்டும் எடுத்து உபயோகிக்க அனுமதி கொடுத்திருக்காங்க. அந்தப் பெண் சென்னை ட்விட் சந்திப்புக்கு எல்லாம் வரலை, இதுதான் உண்மை.

சி.பி. செந்தில்குமார், அந்தப் பெண்ணின் படங்களை எடுத்து பதிவு முழுக்க ரொப்பிட்டாரு. சரி, தொடையும், தொப்புளும் இருக்கிற படங்களா இணையத்துல தேடி எடுத்துட்டு வருகிறவருக்கு, ஒரு இடத்துல இருந்து படங்கள் கிடைச்சா சும்மா விடுவாரா? படங்களை எடுத்து தன்னோட பதிவுக்கு இஷ்டம் போல பயன்படுத்திக்கிட்டாரு. இதைப் பார்த்த அந்தப் பெண்ணோட நண்பர்,(நானும் அவுங்க குடும்ப உறுப்பினர் என்கிறது வேற கதை)  அவுங்க வீட்டுக்குச் சொல்ல, அது என் காதுக்கு வந்ததும், முதலில் படங்களை அந்தப் பெண்ணை விட்டே எடுக்கச் சொன்னேன், சி.பி. செந்தில்குமாரும், முதல்ல ரெண்டு படங்களை எடுத்தாரு, பிறகு எல்லாப் படங்களையும் எடுத்துட்டாரு. சரி, சொன்னதும் எடுத்துட்டாரேன்னு அவருக்கு நன்றி சொல்லி ஒரு ட்விட் கூட போட்டேன். பதில் மரியாதை செய்யனும்னு கூட அண்ணனுக்குத் தெரியலை. சரி, அவருக்குத் தெரிந்த மரியாதை அவ்வளவுதான்னு நினைச்சிட்டு விட்டுடேன்.

அடுத்த நாள்ல எனக்கும் அந்தப் பொண்ணுக்குமான சண்டை ட்விட்டர்ல நடந்துச்சு. (எங்களுக்கு இடையேயான சண்டையில் இவருடைய பதிவுகளைப் பத்தியதாக மட்டுமே இருந்ததே ஒழிய, இவரை எந்த இடத்திலும் கேள்வி கேட்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை). http://www.adrasaka.com/2012/05/6.html இதுல முதல் 5 , எனக்கும் அந்தப் பெண்ணுக்குமான உரையாடல். நாங்க பேசிக்கிட்டதை எடுத்துப்போட உனக்கு யாருய்யா உரிமை குடுத்தது?(ஒருமைக்கு மன்னிக்கவும்) நான் எடுத்துக்கச் சொன்னேனா?


மேலே இருக்கும் படத்துல, உரையாடலை உங்கப் பதிவுல சேர்த்துக்க நான் ஒப்புதல் தரவே இல்லை. 


அதுவுமில்லாம என்னைக் கேள்வி கேட்குறாராம். நீ யாரு எங்களுக்கு நடந்த உரையாடல்ல கேள்வி கேட்குறது? ட்விட்டுல பேசினா அங்கேயே பேசிக்க வேண்டியதுதானே? அது பதிவுக்கு எதுக்கு வருது? உங்களுக்கு பதிவு வேணுமின்னா வேற எதையாவது செஞ்சிக்குங்க. அங்கே நடக்கிறதை, இங்கே சொல்ற பழக்க தரமானதா? உங்க மரியாதை அங்கேயே கெட்டுருச்சு.

789 பதிவுல அவரோட குடும்பத்து படம் போட்டாராம், 1000 பதிவுல அவுங்க அம்மா படம் போட்டாராம், நடுவுல இருந்த 200 பதிவுகள்ல நடிகைங்கதானே மாரையும் தொப்புளையும் காட்டிகிட்டு இருந்தாங்க, சரி, விடுங்க அவரோட பதிவு, கந்தசஷ்டி பதிவுதான் நாம கேள்வி கேட்கக்கூடாது, சாமி கண்ணைக் குத்திருமில்லை? 

சி.பி. செந்தில்குமார், எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடந்த உரையாடலைத்தான் தன்னுடைய பதிவுகள்ல போட்டுக்கிட்டாரு. அதுவும் எப்படி இருண்ட பக்கங்களாம்? நீங்க வந்து பார்த்தீங்களா சார்? பொதுவா பேசிக்கிட்டிருக்கிறதை இவர் சொல்றாரு, இருண்ட பக்கங்களாம். இவரு, ட்விட்டர்ல இருக்கிற பெண்களையே ஃபிகருன்னுதான் மருவாதையா சொல்லுவாரு. அப்படிப்பட்டவரு, எங்களோட இருண்ட பக்கங்களை பார்த்தாராம். கேள்வி கேட்கிறாராம். என்ன கொடுமை சார் இது?

அவரு என்னைக் கேள்வி கேட்கிறாரு, அக்கா, தங்கை படங்களைப் போட்டிருந்தா இப்படி கேள்வி கேட்பீங்களான்னு. நான் கேட்கிறேன். உங்களோட குடும்பத்துல இருக்கிறவஙக் படத்தை அப்படி அலங்காரம் பண்ணுவீங்களா? இந்தக் கோவத்தை எல்லாம் மனசுல வெச்சிக்கிட்டுதான் மரியாதையா படத்தை எடுக்கவும் சொன்னேன். எடுத்ததுக்கு நன்றியும் சொன்னேன்.

இவரு பண்ணினதுக்கு போன் பண்ணி பேசனுமாம்? அந்தளவுக்கான மரியாதை எல்லாம் இப்ப இல்லை, என்னிக்கு ட்விட்டர்ல பேசிக்கிட்டதை பதிவா போட்டு 4 பேருக்கு தெரியனும்னு நினைச்சிங்களோ அன்னிக்கே உங்க தரம் தாழ்ந்து போயிடுச்சு. விகடன் பத்திர்க்கையையும் உங்கப் பதிவையும்  ஒப்பீடு பண்ணிக்காதீங்க, விகடன் இன்னும் மஞ்சப் பத்திரிக்கை அளவுக்கு வரலை.

உரையாடலில் நீங்க சம்பந்தப்பட்டுத்தான் இருக்கீங்க. ஆனா, அதுல வந்த கேள்விகள் எல்லாம் உங்களைக்கேட்டது இல்லை. நம்மூர்ல சொல்ற மாதிரி சம்மன் இல்லாம ஆஜர் ஆகாதீங்க. அப்புறம் பதிவு போட்டு என்னிடத்தில் கேள்வி கேட்குறது , பதில் சொல்றது எல்லாம் இதோட நிறுத்திக்கொள்வது நலம். அந்தக் கட்டத்தை எல்லாம் நான் எப்பவோ கடந்துட்டேன்.

உங்களுக்குன்னு ஒரு தரமிருக்கு செந்தில் சார், அதை இன்னும் கெடுத்துக்காதீங்க....

16 comments:

  1. Sorry if i hurted you.when you thank me for removing that picture i thought u kindaling me.so.i will avoid glamour pictures in my blog.thanks for yr advice

    ReplyDelete
  2. சி.பி பற்றிய விமர்சனங்கள் பல விதமாக இருக்கலாம்.பதிவில் உள்ள மென்மை தலைப்பில் இல்லை.பதிவின் தலைப்பும் கூடத்தான் தரமிழக்கிறதென நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. அதுவுமில்லாம ஈரோடு சங்கமம் குழுவுக்கும் இவருக்கும் ஆகலை. சரி, இவரு எதுக்கு சரிப்பட மாட்டாருன்னு முடிவு
    /////////////////////////////
    ஆமா....!ஆமா.....!இவர மாதிரி தினம் மூனு பதிவு போடுறவங்க....புதுசா பதிவு எழுதுறவங்க இவங்க எல்லாம் சரிப்பட்டு வரமாட்டாங்க....வருடத்துக்கு நாலு பதிவு, பேஸ்புக்குல மொக்கை, ஜொள்ளு விடுவது அடுத்தவன் கவிதைய தன் கவிதையா போடுறவங்க......சமூகசேவைய தம்பட்டம் அடிக்கறவங்க இவங்கதான் சரிபட்டு வருவாங்க....நான் சிபிக்கு ஜால்ரா இல்லை! ஈரோடு சங்கமம் பற்றி சொன்னீங்களே சிரிப்பு...சிரிப்பா வருது!

    ReplyDelete
  4. எப்படி இப்படி ரொம்ப நல்லவன் மாதிரியே சீன் போடுற.
    உன்னோட வண்டவாளம் எல்லாம் எங்களுக்கு நல்லா தெரியும்..நீ யாரு எப்படிபட்டவன். என்ன என்ன கேப்மாரி தனம் பண்ணுனேன். ட்விட்டர்ல நீ பொண்ணுங்க கிட்ட பண்ணுற மொள்ளமாரி தனம் பண்ணி செருப்படி வாங்குனது.
    All Details we know.
    உனக்கு இருக்குடீ சங்கு

    ReplyDelete
  5. Senthil- இதை எல்லாம் நாம் ட்விட்டரிலேயே முடித்திருக்கலாம். நீங்க பதிவுக்கு இழுத்து வந்ததாலேயே நானும் பதிவிட வேண்டியதாகிருச்சு. ஊருக்கு வருகையில் சந்திப்போம்!

    ராஜ நடராஜன் - உண்மையாவே செந்திலின் தரம் கெட்டுப் போவ/னது பதிவில்தான். அதனைச் சுட்டிக்காட்டவே இப்படி ஒரு தலைப்பு. அவர் மனதை காயப்படுத்திருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்.

    ReplyDelete
  6. நன்றி விடியலை நோக்கி

    DrunKen Monkey - விளக்குப் புடிக்கிற உங்களுக்குத் தெரியாததுங்களா?

    ReplyDelete
  7. ***அப்புறமா அண்ணன் அடிச்சாரு ஒரு U turn. தொப்புளையும், மாரையும் இருக்கிற படங்களை கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்து பத்திரிக்கைகள் நிராகரிச்ச அத்தனை துணுக்குகளையும் போட ஆரம்பிச்சாரு. தரம் குறைஞ்சதாலதான் பத்திரிக்கைகள் நிராகரிக்குது, அதை பதிவுல போட்டு ஹிட் கணக்கை ஏத்த ஆரம்பிச்சாரு. அப்புறமா என்னடா மானசீகமா புடிச்சவரு இப்படி பண்றாரேன்னு மனசுக்கு வருத்தமா இருந்துச்சு. அப்புறம் அவருடைய பதிவுகளை படிக்கிறதை நிறுத்திட்டேன். அவரோட வாசகர் வட்டம் வேற பெரிய லெவல்ல இருந்தாங்க. சரி, அவரோட கும்பல் பெரிய இலக்கியவாதிங்க, அப்படின்னு அவர் பதிவுகளை பார்க்கிறதையே விட்டுட்டேன். அதுக்கான ஒரு சின்ன உதாரணம் இது. இவரு பழுத்த மரமாம் அடிக்கிறாங்களாம், இவுங்க வாசகர்கள் கும்முறாங்க. நன்றி, வாசகர்களே, பழுத்த மரம் மட்டுமில்லை புழுத்த மரம்கூட அடிதான் வாங்க செய்யும்.***

    இளா: நீங்க, சி பி எல்லாம் ஈரோட்டுக்காரங்க. ஒண்ணுக்குள்ள ஒண்ணு. நான் எல்லாம் ஏதோ ஒரு அனானி.:)

    என் பதிவுக்கு அப்புறம் இந்தப் பதிவு வந்ததால ஒரு விளக்கம். நான் ராஜன் பதிவுக்குப் போயி எனக்கு தோணியதை சொல்லிட்டு ஒரு மைனஸ் மதிப்பெண்ணை குத்திப்புட்டு வந்துட்டேன் (என்னுடையதுதான் முதல் ஒண்ணு).

    அப்புறம் வந்த பதிவர்கள் ராஜனை தாக்கி பின்னூட்டமிட்டாங்க. உடனே அவரு காமெண்ட் மாடெரேஷனை ஆரம்பிச்சாரு. அதுக்குறம் இந்த "அக்க்ப்போருனு" ஒரு "பதிவுலக சண்டியர்" ஒருத்தன் இஷ்டத்துக்கு மைனஸ் மதிப்பெண்கள் போட்டவனை திட்டிய ஒரு கேவலமான பின்னூட்டத்தை ராஜன் வெளியிட்டது பயங்கர எரிச்சலைக் கிளப்பியது.

    மாடெரேசன் என்கிற பெயரில் பதிவர்கள் பின்னூட்டமிடுபவர்களை "abuse" பண்ணுறாங்கனு காட்ட ஒரு அழகான/அசிங்கமான உதாரணம் அது. அதைப்பத்தி விமர்சிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

    -------------

    மற்றபடி, இந்த ட்விட்டர், அப்புறம் ஒரு பெண்ணின் படம் வெளியிடப்பட்டது போன்ற பிரச்சினைகளெல்லாம் எனக்குத் தெரியாது. இதைப்பற்றி என்னுடைய "அனாலிஸிஸை" மற்ரும் "தீர்ப்பு" க் கொடுக்க தகுதியும்/அறிவும் எனக்கில்லை! :)

    ReplyDelete
  8. வருண், பதிவுலகத்துல நாகரிகம்ன்னா என்னான்னு கேட்பாங்க போல. வேற பேர்ல வந்துட்டா என்ன வேணுமின்னாலும் எழுதனாலும் நினைக்கிற இந்தக் கீழ்த்தரமான புத்தி எங்கே இருந்து வருதுன்னே தெரியல. மனசாட்சி அப்படின்னு நம்ம மக்களுக்கு இல்லவே இல்லையா?

    ReplyDelete
  9. அன்று வந்ததும் அதே நிலா...இன்று வருவதும் அதே நிலா...

    இப்படிக்கூட நடக்குமா?


    அச்சச்சோ....

    ReplyDelete
  10. *** வேற பேர்ல வந்துட்டா என்ன வேணுமின்னாலும் எழுதனாலும் நினைக்கிற இந்தக் கீழ்த்தரமான புத்தி எங்கே இருந்து வருதுன்னே தெரியல***

    ஒரு ஆளே பலவேடங்களில் வர்றது, வேடத்துக்கு ஏத்தாப்பிலே தரத்தை காட்டுறது என்பதெல்லாம் பதிவுலகில் பெரிய தலைவலிதான். மனசாட்சிதான் ரொம்ப முக்கியம், குருட்டுப் பதிவுலகம் அல்ல! :)

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Satish- //தரம் கேட்டவர் யாரென்று/
    தரமா கேட்டது நாந்தானுங். செந்தில் அதுக்கு முயற்சிக்கிறேன்னு பின்னூட்டத்துல சொல்லியிருக்காரே படிக்கலையா? அது சரி, பதிவும் படிக்கிறதில்லை, பின்னூட்டமும் படிக்கிறது இல்லை.. வெளங்கிரும்

    ReplyDelete
  13. http://www.etakkumatakku.com/2012/06/blog-post_05.html

    இங்க வர்றது.

    ReplyDelete
  14. இளா,

    விடுங்க , உங்க அனுபவத்துக்கு இதுக்கு எல்லாம் டென்சன் ஆகலாமா? (அப்புறம் வேற எதுக்கு டென்சன் ஆகணும்னு கேட்டுறாதிங்க நான் அம்பேல்)

    துவித்தர் பக்கம் நான் வருவதில்லை என்பதால் சரியா தெரியாமல் எதுவும் பேச வேண்டாம்னு ஒதுங்கியே இருக்கேன்.

    ஆனால் மேட்டர் கொஞ்சம் சூடாகிடுச்சுனு நினைக்கிறேன்.

    ஒரு படம் ஹிட் ஆனதும் அடுத்த சூப்பர்ஸ்டார்னு கனவுல மிதப்பது போல கூகிள் பேஜ் ரேங், ஹிட்ஸ் வைத்து கிடைக்கும் தரவரிசைக்கு சிலர் மயங்கி அடிமை ஆகிடுறாங்க, அதன் விளைவு நாளுக்கு 3 போஸ்ட் ,னு என்னமோ கக்கிவச்சு , கடசியில் இப்படி வந்து நிக்குறாங்க.பிரபல பதிவர்னு மற்றவங்க உசுப்பேத்துனதுல இப்படில்லாம் செய்கிறார்.காலப்போக்கில் சரியாகிடுவார்.

    இப்படி எத்தனைப்பேரு ஆரம்ப ஜோரில ஆடிட்டு இருந்த இடம் தெரியாம போயிருக்காங்க என்பது உங்களுக்கே தெரியும்.

    எல்லாம் தெரிஞ்ச நீங்களும் அவர்களை பெருசா எடுத்துக்கிட்டு , பதில் சொல்லிக்கிட்டு இருக்கீகளே.

    விட்டுட்டு வாங்க வந்து விதைக்கிற வேலைய பார்க்கலாம்.

    ----
    பின் குறிப்பு:

    என் மனதில் பட்டதை சொல்கிறேன், உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என நினைத்துவிட வேண்டாம்.இப்பின்னூட்டம் பொறுத்தமானதாக இல்லை என நினைத்தால் நீக்கிவிடலாம்.no hard feelings!

    ReplyDelete
  15. பதிவில் உள்ள மென்மை தலைப்பில் இல்லை.பதிவின் தலைப்பும் கூடத்தான் தரமிழக்கிறதென நினைக்கிறேன். I agree... Like me, there will be new visiters to your blog. That should not demotivate your quality

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)